Go to full page →

பரலோகச் சூழல் TamChS 355

இப்போது சபை போராடிக்கொண்டிருக்கிறது. அந்தகாரத்தில் உள்ளதும் முற்றிலும் சிலைவழிபாட்டில் விடப்பட்டதுமான ஓர் உலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஆனால், போர்முடிந்து, வெற்றியை நம் வசமாக்கியிருக்கும் நாள் ஒன்று வரப்போகிறது. தேவனுடைய சித்தம்பர லோகத்தில் செய்யப்படுவதுபோல,அதன் பிறகு பூலோகத்திலும் தேவனுடைய சித்தம் செய்யப்படும். இரட்சிக்கப்பட்ட ஜாதியார் பரலோகத்தின் சட்டத்தைத்தவிர வேறு எந்தச் சட்டத்தையும் அறியாதிருப்பார்கள். சந்தோஷமான, ஐக்கியப்பட்ட ஒரு குடும்பத்தில், துதியின் வஸ்திரங்களையும், ஸ்தோத்திரத்தின் வஸ்திரங்களையும் தரித்தவர்களாக, அதாவது, கிறிஸ்துவின் நீதியெனும் வஸ்திரத்தைத் தரித்தவர்களாக சந்தோஷமும் ஐக்கியமும் நிறைந்தவர்களாக அனைவரும் காணப்படுவார்கள். இயற்கை முழுவதும், தன் மிகையான அழகோடு தேவனுக்குத் துதியையும் ஸ்தோத்திரத்தையும் ஏறெடுக்கும். சந்திரனின் வெளிச்சம் சூரியனுடைய வெளிச்சத்திற்கு ஒப்பாயிருக்கும்; சூரியனுடைய வெளிச்சம், இப்போதிருப்பதைக்காட்டிலும் ஏழுமடங்கு அதிகமாக இருக்கும். வருடங்கள் மகிழ்ச்சிமிகுதியோடு கடந்துசெல்லும். அங்கே விடிவெள்ளி நட்சத்திரங்கள் கூடிப்பாடும்; தேவபுத்திரர்கள் சந்தோஷத்தோடு ஆர்ப்பரிப்பார்கள்; அப்போது, தேவனும் கிறிஸ்துவும் சேர்ந்து, “இனி பாவமுமில்லை, மரணமுமில்லை ” என்று அறிவிப்பார்கள். 3MH, 504 TamChS 355.2