Go to full page →

சந்தோஷம் TamChS 356

கிறிஸ்துவின் சந்தோஷத்திற்குள் பிரவேசிப்பது, அவருடைய ஊழியர்களுக்கு வழங்கப்படுகிற பிரதிபலன். அந்த சந்தோஷத்தைத்தான் கிறிஸ்துதாமே ஆவலோடு வாஞ்சித்தார்; பிதாவிடம் தாம் வேண்டிக்கொண்டபோது அந்த வாஞ்சையை வெளிப் படுத்தவும் செய்தார்: “நான் எங்கே இருக்கிறேனோ, அங்கே அவர்களும் என்னுடனேகூட இருக்கவிரும்புகிறேன்” என்றார். 16T, 309 TamChS 356.1

இங்கு நம் வாழ்க்கை பூலோகத்திற்குரியதாக உள்ளது; பாவத்தால் கட்டுப்பட்டதாக உள்ளது; ஆனாலும், சேவையில்தான் மிகப்பெரிய சந்தோஷமும் உச்சக்கட்டக் கல்வியும் உள்ளது. பாவ மனித இனத்தின் வரம்புகளால் பாதிக்கப்படாத மறுமை வாழ்விலும்கூட, சேவையில் தான் மிகப்பெரிய சந்தோஷத்தையும் உச்சக் கட்டக் கல்வியையும் காணமுடியும். அங்கே, இதுவரையிலும் நாம் கண்டதைவிட, ‘கிறிஸ்துவானவர் மகிமையின் நம்பிக்கையாக’ நமக்குள் இருப்பதின்’ இரகசியத்திலுள்ள மகிமையின் ஐசுவரியத்தை’ அதிகமாகக் கண்டுகொள்வோம். 2Ed, 309 TamChS 356.2

கிறிஸ்துவின் பாடுகளில் அவர்கள் பங்கெடுக்கிறார்கள், மேலும், இனி வெளிப்படப்போகிற மகிமையிலும் அவர்கள் பங்கு கொள்வார்கள். அவருடைய ஊழியத்தில் அவரோடுகூட இருந்து, இக்கட்டின் பாத்திரத்தில் அவரோடு கூட குடித்து, அவருடைய சந்தோஷத்திலும் பங்குகொள்கிறார்கள். 3MB, 12 TamChS 356.3