நம்முடைய இரட்சகர் வருவதற்காகக் காத்திருப்பது நெடுங்காலமாகத் தோன்றினால், வேதனையால் துவண்டு, கடும்பிரயாசத் தால் களைத்து, நம் வேலை எப்போது முடியுமோ, போராட்டத்திலிருந்து எப்போது மேலான விடுதலை கிடைக்குமோ என்று பொறுமையிழந்த நிலை காணப்பட்டால் ஒன்றை நினைவில் கொள்ளுவோம்; அவ்வாறு நினைவில் கொள்ளுவது நம் ஒவ்வொரு முறு முறுப்பையும் அடக்க வேண்டும். அதாவது, நாம் பெரும்புயல்களையும் சச்சரவுகளையும் சந்தித்து கிறிஸ்தவக் குணத்தைப் பூரணப் படுத்தவேண்டும்; நம் பிதாவாகிய தேவனோடும் நம் மூத்த சகோதரராகிய இயேசு கிறிஸ்துவோடும் நெருங்கிப் பழகவேண்டும்; “நல்லது, உத்தமமும் உண்மையுமான ஊழியக்காரனே. உன் எஜமானுடைய சந்தோஷத்திற்குள் பிரவேசி” என்கிற வார்த்தைகளை மகிழ்ச்சிமிக்க இருதயத்தோடு கேட்கவேண்டும்; அதற்காகவே, அவர் நம்மை இப்பூமியில் விட்டுச் சென்றிருக்கிறார். 1RH, Oct. 25, 1881 TamChS 358.2
பொறுமைமிக்க, கிறிஸ்தவ வீரராயிருங்கள். இன்னும் கொஞ்சப்பொழுதுதான்; வருவேன் என்றவர் வருவார். களைப்போடு விழித்திருந்து, காத்து, புலம்பிக்கொண்டிருந்த இராத்திரி வேளை முடியப்போகிறது. சீக்கிரம் பிரதிபலன் கொடுக்கப்படும்; நித்திய வாழ்வின் நாள் விடியும். இப்போது தூங்குவதற்கு நேரமில்லை; தேவையற்ற மனத்தாங்கால்களில் திளைக்கவும் நேரமில்லை. தூங்குவதற்கான முயற்சிகளில் ஈடுபடுகிறவன் நன்மை செய்வதற்கான மகத்தான வாய்ப்புகளை இழந்துபோவான். மாபெரும் அறுவடையில் அரிக்கட்டுகளைச் சேர்க்கிற பாக்கியமிக்க சிலாக்கியம் நமக்குக் கொடுக்கப்பட்டுள்ளது. இரட்சிக்கப்பட்ட ஒவ்வோர் ஆத்துமாவும் நம் தொழுகைக்குரிய மீட்பரான இயேசுவின் கிரீடத்தில் கூடுதலாகச் சேர்க்கப்படும் ஒரு நட்சத்திரமாக இருப்பார்கள். யுத்தம் இன்னும் சிறிதுகாலம் தொடரட்டுமென்று தன் போர்க் கவசத்தை தூரேவைக்க ஆவலோடு இருப்பவன் நித்தியத்திற்காக புதிய வெற்றிகளைப் பெறுவானா? பரிசுக்கோப்பைகளைப் பெறுவானா? 2 RH, Oct. 25, 1881 TamChS 359.1