Go to full page →

விதைவிதைப்பின் பலன் TamChS 356

மனிதர்களை நன்மைக்கும் தேவனிடமும் வழிநடத்துகிற பரிசுத்த ஆவியானவருடைய ஒவ்வொரு தூண்டுதலும் பரலோகப் புத்தகங்களில் குறிக்கப்படுகின்றன. பரிசுத்த ஆவியானவருடைய கிரியைக்கு தங்களை ஒப்புக்கொடுத்திருக்கிற ஒவ்வொருவரும் தங்கள் வாழ்க்கையால் என்னென்ன விளைந்தது என்பதை கர்த்தருடைய நாளில் காணும்படிச் செய்வார். 46T, 310 TamChS 356.4

மீட்கப்பட்டவர்கள் தேவனுக்கு முன்பாக நிற்கும்போது, தங்கள்நிமித்தம் பொறுமையோடும் உண்மையோடும் முயற்சிகளை எடுத்து, அரனான கோட்டையை நோக்கி ஓடும்படி மன்றாடின, ஊக்கத்தோடு தூண்டினவர்களுடைய பெயர்களைச் சொல்லுவார்கள். எனவே, இந்த உலகத்தில் தேவனுடனேகூட உடன் வேலையாட்களாக இருந்தவர்கள் தங்களுடைய பிரதிபலனைப் பெறுவார்கள். 58T, 196, 197 தங்களுக்காகப்பாரப்பட்டவர்களை மீட்கப்பட்டவர்கள் சந்தித்து வாழ்த்தும்போது, அங்கே எவ்வளவு மகிழ்ச்சி உண்டாகும்! தங்களைத் திருப்திப்படுத்தும்படி வாழாமல், மிகச் சொற்ப ஆசீர்வாதங்களையே பெற்று, மோசமான நிலையில் இருந்தவர்களுக்காக வாழ்ந்தவர்களின் இருதயங்கள் எவ்வளவுக்கு திருப்தியால் பூரிக்கும்! ‘நீ பாக்கியவானாயிருப்பாய்; அவர்கள் உனக்குப் பதில் செய்யமாட்டார்கள்; நீதிமான்களின் உயிர்த்தெழுதலில் உனக்குப் பதில் செய்யப்படும்’ என்கிற வாக்குறுதியின் நிறைவேறுதலை உணருவார்கள். 1GW, 519 TamChS 356.5

நாம் உதவிசெய்த வாலிபர்களையும், நம் வீடுகளுக்கு நாம் வரவேற்றவர்களையும், சோதனையிலிருந்து நாம் வழி நடத்தியவர்களையும் பரலோகத்தில் நாம் காண்போம். 26T, 348 TamChS 357.1

இரட்சிப்பின் மாபெரும் திட்டத்தில் கிறிஸ்துவோடும் பரலோகத் தூதர்களோடும் சக ஊழியர்களாக இருக்கவேண்டும்! வேறு எந்தப் பணியையாவது இதோடு ஒப்பிடமுடியுமா? இரட்சிக்கப்பட்ட ஒவ்வோர் ஆத்துமாவும் தேவனுக்கே ஒட்டுமொத்த மகிமையையும் செலுத்தும்; அது இரட்சிக்கப்பட்டோர் மேலும், அவருடைய இரட்சிப்புக்கு கருவியாக இருந்தோர் மேலும் பிரதி பலிக்கும். 32T, 232 TamChS 357.2

உயர்த்தப்பட்ட இரட்சகரை நோக்கி தங்களுடைய கவனத்தைத் திருப்பியவர்களை மீட்கப்பட்டவர்கள் சந்தித்து, அடையாளங் காண்பார்கள். அந்த ஆத்துமாக்களோடு அவர்களுடைய உரையாடல்கள் எவ்வளவு பாக்கியமானதாக இருக்கும்! “பூலோகத்தில் தேவனை அறியாமல், நம்பிக்கை இல்லாமல் நான் ஒரு பாவியாக இருந்தேன்; அப்போது நீங்கள் என்னிடம் வந்து, ஈடு இணையற்ற இரட்சகருக்கு நேராக என் கவனத்தைத் திருப்பி, அவரே என்னுடைய ஒரே நம்பிக்கை என்று சொன்னீர்கள். நான் அவரை நம்பினேன். என் பாவங்களிலிருந்து மனந்திரும்பினேன். இயேசு கிறிஸ்துவுக்குள் உன்னதங்களில் அவருடைய பரிசுத்தவான்களோடு என்னை உட்காரவைத்தார்” என்று ஒருவர் சொல்லுவார். வேறொருவர், “அஞ்ஞான தேசங்களில் ஓர் அஞ்ஞானியாக நான் இருந்தேன். நீங்கள் உங்களுடைய நண்பர்களையும், வசதியான வீட்டையும் விட்டு, என்னிடம் வந்து, இயேசுவை நான் கண்டு கொள்ளவும், ஒரே மெய்யான தேவனாகிய அவரை நம்பவும் உதவினீர்கள். நான் என் விக்கிரகங்களை உடைத்துப் போட்டு, தேவனைத் தொழுதுகொண்டேன். இப்போது நான் அவரை முகமுகமாகப் பார்க்கிறேன். நான் இரட்சிக்கப்பட்டிருக்கிறேன். நித்திய இரட்சிப்பைப் பெற்று, நான் நேசிக்கிற அவரை என்றென்றும் பார்த்துக்கொண்டே இருப்பேன். முன்பு விசுவாசக் கண்ணால் கண்டேன்; இப்போது அவர் இருக்கிறவண்ணமாகவே காண்கிறேன். என்மேல் அன்புகூர்ந்து, தம் சொந்த இரத்தத்தால் என் பாவங்களிலிருந்து என்னைக் கழுவியவருடைய மீட்கும் கிருபைக்காக என் நன்றியை இப்போது ஏறெடுக்கிறேன்” என்று சொல்லுவார். 1GW, 518 TamChS 357.3

பசியுள்ளோருக்குப் போஜனங்கொடுத்து, வஸ்திரமில்லாதோரை உடுத்துவித்தவர்களுக்கு வேறு சிலர் தங்கள் நன்றியை ஏறெடுப்பார்கள். “அவ நம்பிக்கையால் என் ஆத்துமாவை மனச் சோர்வு கட்டிய போது, நம்பிக்கையும் ஆறுதலுமான வார்த்தைகளைப் பேசும்படிக்கு ஆண்டவர் உங்களை என்னிடத்திற்கு அனுப்பினார். என் சரீரத்தேவைகளைச் சந்திக்கும்படி எனக்கு உணவு கொடுத்தீர்கள்; வேத வசனங்களை எனக்கு விவரித்துக் கூறி, என் ஆவிக்குரிய தேவைகளைக் குறித்து விழிப்படையச் செய்தீர்கள். என்னை ஒரு சகோதரன் போல நடத்தினீர்கள். என்னை இரட்சிக்கும்படிக்கு எனக்கு நேராக நீட்டப்பட்டிருந்த கிறிஸ்துவின் கரத்தை நான் பிடித்துக்கொள்ளும்படிக்கு என் துக்கங்களில் என்னோடு துக்கப்பட்டீர்கள். புண்பட்டுச் சிதைந்திருந்த ஆத்துமாவைத் தேற்றினீர்கள். நான் அறியாமையில் இருந்தபோது, என்மேல் அக்கறை காட்டுகிற ஒரு பிதா பரலோகத்தில் இருக்கிறாரென பொறுமையோடு எனக்குப் போதித்தீர்கள்.தேவனுடைய வார்த்தையின் ஈடு இணையற்ற வாக்குறுதிகளை எனக்கு வாசித்துக் காண்பித்தீர்கள். அவர் என்னை இரட்சிப்பாரென என் விசுவாசத்தை ஊக்கப்படுத்தினீர்கள். எனக்காக கிறிஸ்து செய்த தியாகத்தை நான் தியானித்தபோது, என் ஆத்துமா மிருதுவாகி, உருகி, நொறுங்கியது. ஜீவ அப்பத்தின்மேல் பசிகொண்டேன். சத்தியம் என் ஆத்துமாவுக்கு விலையேறப்பெற்றதாக இருந்தது. எப்போதும் அவருடைய பிரசன்னத்தில் வாழும்படியும், எனக்காக தம் ஜீவனையே கொடுத்தவரைப் போற்றும்படியும் இப்போது நித்திய இரட்சிப்பைப் பெற்றவனாக இருக்கிறேன்” என்பார்கள். 2GW, 518,519 TamChS 358.1