தீமோத்தேயு விசுவாசமும் உறுதியும் உண்மையும் உள்ளவ னெனக் கண்டு, தன்னோடு சேர்ந்து பயணிக்கவும் பணியில் துணை நிற்கவும் பவுல் அவனைத் தெரிந்துகொண்டான். சிறுவயதில் தீமோத்தேயுவுக்குப் போதித்தவர்கள் அந்த மகன்மேல் தாங்கள் காட்டின அக்கறைக்கேற்றபலனானது, மாபெரும் அப்போஸ்தலனுக்கு அவன் நெருங்கிய கூட்டாளியானபோது கிடைத்ததைக் கண்டார்கள். தீமோத்தேயுவின் இளம்பிராயத்திலேயே தேவன் அவனைப் போதகராகதெரிந்துகொண்டார்; ஆனால் அவனுடைய ஆரம்பகாலக் கல்விதான் நல்ல நியதிகளை அவனுக்குள் உறுதிப் படுத்தியது; பவுலின் உதவியாளனாகிற தகுதியைக் கொடுத்தது. வாலிபனாக இருந்தாலும், கிறிஸ்தவ சாந்தத்துடன் தன் பொறுப்புகளை ஏற்றுக்கொண்டான். 1AA, p 203,204 TamChS 46.4