நம் மத்தியிலிருக்கும் சுமைதாங்கிகள் மரித்துக்கொண்டிருக்கிறார்கள். ஒரு சபையாக முன்னெடுத்த சீர்திருத்தங்களைத் தொடர்வதில் முன்னணியில் நின்றவர்கள் இப்போது வாழ் நாளின் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளார்கள்; சரீர-மன பெலத்திலும் குன்றி வருகிறார்கள். அவர்கள் இடத்தை நிரப்பப்போவது யார்? “இன்று கொடியேந்தி நிற்பவர்கள் மடியும்போது திருச்சபையின் நலன்களுக்காக தங்களை அர்ப்பணிக்கப்போவது யார்?” என்று மிகுந்த கவலையோடு கேட்கப்படுகிறது. இந்தப் பாரங்களைச் சுமக்க வேண்டும்; இந்தப் பொறுப்புகளை அவர்களுக்குக்கொடுக்கவேண்டும் என்று இன்றைய வாலிபர்களை அல்லாமல் யாரை நாம் ஆவலோடு நோக்கமுடியும்! மற்றவர்கள் விட்டுச் சென்ற பணியை இவர்கள்தாம் தொடரவேண்டும்; ஒழுக்கமும் சத்தியமும் மெய்யான தேவபக்தியும் மேலோங்கப் போகின்றனவா? அல்லது, ஒழுக்கமின்மையும் உண்மையின்மையும் மேலோங்கி மெய்யானதைச் சீர்கெடுத்து, அழிக்கப்போகின்றனவா? இதனை இவர்களுடைய போக்குதான் தீர்மானிக்கும். 2GW, p 68 TamChS 47.1