Go to full page →

இருபதில் ஒருவர்கூட ஆயத்தமாக இல்லை TamChS 58

சபைக்கு நான் கொடுக்கிற ஒரு முக்கிய அறிவிப்பு இதுதான். அதாவது, சபைப்புத்தகங்களில் பதிவுசெய்யப்பட்டுள்ளவர்களில் இருபதில் ஒருவர் கூட இவ்வுலகில் தாங்கள் வாழவேண்டிய பிரகாரம் வாழ ஆயத்தமாக இல்லை; ஒரு சாதாரண பாவியைப்போல நம்பிக்கையின்றி, உண்மையில் தேவனை அறியாதவர்களாகக் காணப்படுகிறார்கள். தேவனைச் சேவிப்பதாகச் சொல்லுகிறார்கள். ஆனால், மிகமும்முரமாக உலகத்தைச் சேவிக்கிறார்கள். இத்தகைய அரைகுறைப் போக்கு கிறிஸ்துவை அறிக்கையிடுவதாக இல்லாமல், அவரை தொடர்ந்து மறுதலிப்பதாக உள்ளது. கீழ்ப்படியாததும் சுத்திகரிக்கப்படாததுமான ஆவியை சபைக்குள் பலர் கொண்டுவருகிறார்கள்.அவர்களுடைய ஒழுக்கங்கெட்டதும் மோசமானதுமான சீர்கேடுகள் அவர்களுடைய ஆன்மிகருசியைக் கெடுக்கின்றன; ஆவியிலும் இருதயத்திலும் நோக்கத்திலும் உலகத்தின் அறிகுறிகள் காணப்படச்செய்கின்றன ; இச்சையான நடவடிக்கைகளுக்கு அவர்களை ஒத்துப்போகச் செய்கின்றன; கிறிஸ்தவ வாழ்க்கை முழுவதிலும் வஞ்சகத்தால் நிறையச்செய்கின்றன. கிறிஸ்தவர்களெனச் சொன்னாலும், பாவிகளாகவே வாழ்கிறார்கள்! கிறிஸ்தவர்களெனச் சொல்பவர்களும், கிறிஸ்துவை அறிக்கையிடுபவர்களும் அவர்கள் மத்தியிலிருந்து வெளியே வர வேண்டும்; அசுத்தமானதைத் தொடாமல், பிரிந்திருக்கவேண்டும். TamChS 58.4

பின்வாங்கிப்போய், உலர்ந்த எலும்புகளைப்போலக் காணப்படும் தம் மக்கள்மேல் தேவன் தம் சுவாசத்தை ஊதி, அவர்களை உயிர்ப்பெறச் செய்யவேண்டும்; எனவே நான் எழுதுவதை நிறுத்தி, என் ஆத்துமாவை ஜெபத்தில் உயர்த்துகிறேன். முடிவு சமீபித்திருக்கிறது; நித்திரை செய்பவர்கள் ஆயத்தமும் காவலுமின்றி இருக்கும் போது, இரவில் திருடன் சத்தமில்லாமல் நடந்துவருவதைப்போல இரகசியமாக, சத்தமில்லாமல், புலப்படாதவிதத்தில் அது நம்மை நெருங்குகிறது. விழிப்பில்லாமல் இருக்கும் இருதயங்கள்மேல் தேவன்தம் ஆவியானவரை ஊற்றுவாராக! மற்றவர்களைப் போல அவர்கள் தூங்காமல் விழிப்போடும் தெளிவோடும் இருக்கதேவன் அருள்செய்வாராரக. 1GCB, 1893, p 132, 133 TamChS 59.1