Go to full page →

ஒழுக்கத் தற்பெருமையாளர் TamChS 63

கிறிஸ்தவர்களெனச்சொல்லும் அநேகர் வெறுமனே ஒழுக்கத் தற்பெருமையாளர்களாக இருக்கிறார்கள். கிறிஸ்துவை உலகத்திற்குப் பிரதிபலித்து, அதன்மூலம் அவரைக்கனப்படுத்த உதவுகிற தேவ ஈவை ஏற்க மறுக்கிறார்கள். பரிசுத்த ஆவியானவரின் கிரியை அவர்களுக்கு விசித்திரமாக இருக்கிறது. வார்த்தையின்படி செய்வதில்லை. கிறிஸ்துவோடு இசைந்திருப்பவர்களையும் உலகத்தோடு இசைந்திருப்பவர்களையும் வேறுபடுத்திக் காட்டுகிற பரலோகக் கொள்கைகளின் தாக்கம் மங்கிவருகின்றது. கிறிஸ்துவைப் பின் பற்றுவதாகச் சொல்வோர் அவருக்கென வாழ்கிற, விசேஷித்த மக்களாக இல்லை. அவர்களை வேறுபடுத்திக் காட்டும் கோடு தெளிவாகத் தெரிவதில்லை. மக்கள் தங்களை உலகத்தின் நடத்தை களுக்கும், பழக்கவழக்கங்களுக்கும் சுயநலத்திற்கும் கீழ்ப்படுத்துகிறார்கள். நியாயப்பிரமாணத்திற்குக் கீழ்ப்படிகிற செயல்பாட்டில் திருச்சபையைப் போல உலகம் மாறவேண்டும்; அதற்குப் பதிலாக, நியாயப்பிரமாணத்தை மீறுவதில் உலகத்தைப்போல திருச்சபை மாறிவிட்டது. அனுதினமும் உலகத்தைப் போல திருச்சபை மாறி வருகிறது. 1COL, pp 315,316 TamChS 63.3