கடைசிக்கால சத்தியத்தை விசுவாசிப்பதாகச் சொல்கிற அநேகர், உண்மையிலேயே விசுவாசமில்லாதவர்களாகக் காணப்படுவார்கள். முக்கியமான விஷயங்களைப் புறக்கணித்திருப்பார்கள். அவர்களுடைய பேச்சு ஆழமானதாக, ஊக்கமுள்ளதாக, உண்மை யுள்ளதாக இல்லாமல் மேலோட்டமானதாக இருக்கும். சத்தியத்தை விசுவாசிப்பதற்கான காரணம் தெரியாது, மற்றவர்கள் விசுவாசிப்பதற்காக விசுவாசிப்பார்கள், அது சத்தியம் தானே என்று மெத்தனமாக இருப்பார்கள். எதற்காக விசுவாசிக்கிறோம் என்பதற்கு அறிவுப்பூர்வமான காரணம் சொல்லத் தெரியாது... அவர்களுடைய அனுபவத்தாலும் அல்லது எந்த அறிவைப் பெறுவது அவர்களுடைய கடமையாகவும் சிலாக்கியமாகவும் இருந்ததோ அதால் மற்றவர்கள் வெளிச்சம் பெறவோ பயனடையவோ மாட்டார்கள். உண்மையுள்ளம் கொண்டவர்களிடம் தான் பெலமும் ஸ்திரத்தன்மையும் இருக்கும். 12T, p 634 TamChS 65.1