Go to full page →

சந்திக்கவேண்டிய சோதனை TamChS 69

பரிசுத்தமான இறுதிப்பணியில் சில பெரிய மனிதர்கள் ஈடுபடுவார்கள். அவர்கள் தன்னிறைவோடும், தேவனைச் சாராமலும் இருப்பதால், அவர்களை அவர் பயன்படுத்த முடியாது. ஆண்ட வருக்கு உண்மையான ஊழியர்கள் இருக்கிறார்கள். சபையில் ‘அசைவு’ ஏற்படுகிற காலக்கட்டத்தில், அவர்கள் எப்படிப்பட்டவர்களென்பது தெரிய வரும். பாகாலுக்கு முழங்காலை முடக்காத விலைமதிப்புமிக்கவர்கள் இப்போது வெளியே தெரியாமல் இருக்கிறார்கள். உங்கள்மேல் பிரகாசமாக வீசுகிற வெளிச்சத்தை அவர்கள் பெற்றிருக்கவில்லை. ஆனால் எதிர்பாராத, மோசமான ஒரு சூழ்நிலையில்தான் மெய்யான கிறிஸ்தவ குணத்தின் மெய்த்தன்மை பளீரெனப்புலப்படும். பகல் நேரத்தில் வானத்தைப் பார்க்கிறோம், ஆனால், நட்சத்திரங்கள் தெரிவதில்லை. அவை ஆகாய மண்டலத்தில் அதே இடத்தில்தாம் இருக்கின்றன; கண்களால் அவற்றைக் காணமுடிவதில்லை. ஆனால், இரவுநேரத்தில் அவற்றின் மெய்யான ஜொலிப்பைப் பார்க்கிறோம். TamChS 69.3

ஒவ்வோர் ஆத்துமாவும் சோதிக்கப்படுகிற காலம் வெகு தொலைவில் இல்லை. சோதிக்கப்படும்போது சபையிலுள்ள களிம்பிலிருந்து பொன் பிரிக்கப்படும். மெய்யான தேவபக்தியானது அதன் தோற்றத்தையும் பளபளப்பையும் வைத்தே பிரித்துக் காட்டப்படும். மிகப் பிரகாசமாக ஜொலித்ததாக நாம் நினைத்த நட்சத்திரங்கள் பல, அப்போது இருளடையலாம். பதரானது பெரும் மேகம்போல காற்றில் அடித்துச் செல்லப்படும். நாம் இருக்கிற இடத்தில் கோதுமை மணிகளை மட்டுமே பார்க்கமுடியும். ஆலயத்தின் அலங்கரிப்புகளாக தங்களைக் கருதுகிறவர்கள், கிறிஸ்துவின் நீதியைத் தரிக்காமலிருந்தால், தங்களுடைய நிர்வாணத்தைக் கண்டு வெட்கப்படுவார்கள். 15T, pp 80,81 TamChS 70.1