உலகம் ஒரு திரையரங்கம்; அதின் குடிமக்கள் நடிகர்கள்; இறுதி மாபெரும் நாடகத்தில் தங்களுடைய பங்கைச் செய்ய அவர்கள் தயாராகி வருகிறார்கள். மக்கள் எண்ணிக்கை கணக்கிலடங்காமல் இருந்தாலும், ஒற்றுமை இல்லை; ஆனால், தங்கள் சுயநல நோக்கங்களை நிறைவேற்றத்தான் மக்கள் கூட்டணி சேருகிறார்கள். தேவன் பார்த்துக்கொண்டிருக்கிறார். தம்முடைய கலகக்கார குடிமக்கள் குறித்த அவருடைய நோக்கங்கள் நிறைவேறும். உலகத்தில் குழப்பத்தையும் சீர்குலைவையும் உண்டாக்குகிற விஷயங்களை அவர் சிலகாலத்திற்கு அனுமதித்தாலும், உலகத்தை மனிதர்களுடைய கரங்களில் அவர் ஒப்படைக்கவில்லை . நாடகத்தின் இறுதி முக்கியக் காட்சிகளை அரங்கேற்ற பாதாளத்திலிருந்து ஒரு வல்லமை கிரியை செய்து வருகிறது. அதாவது, கிறிஸ்துபோல சாத்தான் வந்து, இரகசியக்கூட்டணிகளால் இணைந்துள்ளவர்களில் அநீதியான சகல வஞ்சகங்களோடும் கிரியை செய்வான். அந்தக் கூட்டணியின் உணர்ச்சிவெறிக்கு தங்களை ஒப்புக்கொடுப்பவர்கள் சத்துருவின் திட்டங்களை நிறைவேற்றுவார்கள். செயலுக்கேற்ற விளைவு உண்டாகும். 18T 27, 28 72 TamChS 71.1