ஊழியத்தை எவ்வாறு ஆரம்பிக்கவேண்டும் என்று கற்றுக் கொடுத்தால், அதன்படி செய்வதற்கு அநேகர் ஆயத்தமாக இருப்பார்கள்.அவர்களுக்கு அறிவுரையும் ஊக்கமும் வழங்கவேண்டும். ஒவ்வொரு சபையும் கிறிஸ்தவ ஊழியர்களுக்கான பயிற்சிப்பள்ளியாக இருக்கவேண்டும். சபை அங்கத்தினர்களுக்குப் பின்வரும் பயிற்சிகளைக் கொடுக்கவேண்டும். எவ்வாறு வேதபாடங்கள் நடத்தவேண்டும்? எவ்வாறு ஓய்வுநாள் பள்ளியைத் தலைமைதாங்கி நடத்தவேண்டும்? எவ்வாறு ஓய்வுநாள் பள்ளிப் பாடம் நடத்த வேண்டும்? எவ்வாறு ஏழைகளுக்கு உதவவேண்டும்? எவ்வாறு வியாதியஸ்தர்களைக் கவனிக்கவேண்டும்? மனந்திருந்தாதவர்களுக்காக எவ்வாறு பிரயாசப்பட வேண்டும்? சுகாதாரப் பள்ளிகளையும், சமையல் பள்ளிகளையும், கிறிஸ்தவ உதவிப்பணி வகுப்புகளையும் எவ்வாறு நிறுவவேண்டும். அங்கே போதனை மட்டுமல்ல, அனுபவமிக்க ஆசிரியர்கள் அவற்றைச் செய்தும் காட்ட வேண்டும். மக்கள் மத்தியில் வேலைசெய்கிற ஆசிரியர்கள் முன்மாதிரிகளாக இருக்கவேண்டும். மற்றவர்களும் அவர்களோடு சேர்ந்து, அவர்களுடைய முன்மாதிரியிலிருந்து கற்றுக்கொள்வார்கள். ஏராளமாகப் போதிப்பதைவிட ஒரு முன்மாதிரி மிகவும் மேலானது. 1MH, 149 TamChS 84.1