சுகாதர சீர்திருத்த நியதிகள் பற்றி மக்களுக்குக் கற்றுக்கொடுப்பதற்கு பொதுவான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். சமையல் பள்ளிகளை நிறுவவேண்டும். ஆரோக்கியமான உணவுகளைச் சமைக்கிற கலையை வீடுவீடாகச் சென்று கற்றுக்கொடுக்க வேண்டும். எளிய உணவுகளைச் சமைப்பதற்கு வாலிபர்களும் வயோதிபர்களும் கற்றுக்கொள்ளவேண்டும். எங்கெல்லாம் சத்தியம் அறி விக்கப்படுகிறதோ, அங்கே ருசியான, எளிய உணவுகளைச் சமைக்கிற விதம் பற்றி மக்களுக்குக் கற்றுக்கொடுக்கவேண்டும். மாம்ச உணவுகள் இல்லாமலேயே சத்தான உணவுகளைச் சமைக்கலாமென அவர்களுக்குக் காட்டவேண்டும். 29T, 161 TamChS 84.2
எங்கெல்லாம் சபை இருக்கிறதோ அங்கே எளிய, ஆரோக்கியமான உணவுகளைச் சமைப்பது குறித்துக் கற்றுக்கொடுக்க வேண்டும்; ஆரோக்கிய நியதிகளின்படி வாழ விரும்புகிறவர் களுக்கு அது பயனுள்ளதாக இருக்கும். இந்த விஷயத்தில் தாங்கள் பெறுகிற வெளிச்சத்தை சபை அங்கத்தினர்கள் சுற்றுப்புறத்தில் உள்ள மக்களுக்கும் வழங்கவேண்டும். 1GW, 362 TamChS 84.3