வேலையை முடிக்கவேண்டிய நாள் நெருங்கி வருகிறது, எல்லாப் பக்கங்களிலும் தீமை பெருகுகிறது. நாம் வேலைசெய்ய குறைந்த காலமே உள்ளது. ஆவிக்குரிய நித்திரையிலிருந்து எழும்புவோம். நம்மையும் நம்மிடமுள்ள அனைத்தையும் ஆண்டவருக்குப் ரிசுத்தப்படுத்துவோம். பரிசுத்தப்ப்டுத்துவோம். உண்மையான நற்செய்தியாளர்களிடம் அவருடைய ஆவியானவர் தங்குவார்; சேவை செய்வதற்கான வல்லமையைக் கொடுப்பார். 1SW,Apr 9, 1903 TamChS 110.9
எழும்புங்கள், சகோதர சகோதரிகளே, எழும்புங்கள். இனியும் நித்திரை செய்யாதீர்கள். நீங்கள் பகல் முழுவதும் இங்கே சும்மா நிற்கிறதென்ன?’ ‘இன்றைக்கு என் திராட்சத்தோட்டத்தில் வேலைசெய்யுங்கள்’ என்று இயேசு உங்களை அழைக்கிறார். பரிசுத்த ஆவியானவரைப் பெற்றவர், அவரை தன் வாழ்க்கையில் வெளிப்படுத்துவார்; தீவிரமாகச் சேவை செய்ய, தன் ஆற்றல்களை எல்லாம் செலவிடுவார். விசுவாசத்தால் மெய்யாகவே கிறிஸ்துவை ஏற்றுக்கொள்கிற அனைவரும் பணிசெய்ய வேண்டும். ஆத்துமாக்கள் குறித்த பாரத்தை அவர்கள் உணருவார்கள். சத்தியத்தை அறிந்தவர்களையும், பரிசுத்த சத்தியம் ஒப்படைக்கப்பட்டவர்களையும் எழுந்து, பரலோகவெளிச்சத்தை பிறருக்குக்கொடுக்கும்படி தேவன் இப்போது அழைக்கிறார். 2RH, Dec. 6, 1893 TamChS 111.1
எழும்புங்கள், சகோதரரே; உங்களுடைய ஆத்தும் நன்மைக்காக எழும்புங்கள். கிறிஸ்துவின் கிருபை இல்லாமல் உங்களால் ஒன்றும் செய்யமுடியாது. இயலும்போது தானே பணிசெய்யுங்கள். 3SW, Jul 17, 1906 TamChS 111.2
வேலையே செய்யாமல், தாங்கள் பாதுகாப்புடன் இருப்பதாக நினைப்பவர்கள் மூலம் தீயதூதர்கள் செயல்படுவதைக் காணும்படி நம் கண்கள் திறக்கப்பட்டால், நாம் பாதுகாப்பாக இருப்பதாக நினைக்கமாட்டோம். தீயதூதர்கள் ஒவ்வொரு கணமும் நம்மைப் பின்தொடருகிறார்கள். 41T,302 TamChS 111.3
பிரசங்கிமார்களும் சபைமக்களுமாகிய அனைவருமே விழித்துக் கொள்ளும்படி தேவன் அழைக்கிறார். பரலோகம் முழுவதுமே சுறு சுறுப்புடன் இயங்கி வருகிறது. பூலோக வரலாற்றின் இறுதி நிகழ்வுகள் வேகமாக நிறைவேறிவருகின்றன. கடைசி நாட்களின் அழிவுகளுக்கு மத்தியில் வாழ்கிறோம். மிகப்பெரிய அழிவுகளைப் பார்த்தும்கூட நாம் விழிப்பதில்லை. தேவனுடைய நோக்கத்தில் செயல்படாமலும், ஊக்கமில்லாமலும் இருப்பது மிகப்பயங்கரமானது. இந்த மரண மயக்கத்தைக் கொடுப்பவன் சாத்தான். 51T, 260, 261 TamChS 111.4
தேவனுடைய மீதமானவர்களை விழிக்கச்செய்ய நான் என்ன செய்வது? மிகக்கொடிய காட்சிகள் எனக்குக் காட்டப்பட்டன; சாத்தானும் அவனுடைய தூதர்களும் தேவனுடைய மக்களைத் தாக்கு வதற்கு தங்களுடைய வல்லமைகளை எல்லாம் பிரயோகித்தனர். இன்னும் கொஞ்சக்காலம் அவர்கள் தூங்கினால், அவர்களுடைய அழிவு நிச்சயம் என்பது அவர்களுக்குத் தெரியும். 1 T, 263 TamChS 111.5
மனுபுத்திரருக்கான தவணையின் காலம் முடியப்போகிறது; இத்தருவாயில், ஒவ்வோர் ஆத்துமாவின் நித்திய எதிர்காலமும் சீக்கிரத்தில் தீர்மானிக்கப்பட இருக்கிறது; இப்படிப்பட்ட சமயத்தில், எப்போதும் இல்லாத அளவிற்கு இப்போது தம்முடைய சபையானது செயலில் இறங்க வேண்டுமென்று வானத்திற்கும் பூமிக்கும் தேவனானவர் எதிர்பார்க்கிறார். விலையேறப்பெற்ற சத்தியத்தை அறிந்து, கிறிஸ்துவில் விடுதலை பெற்றவர்களே தெரிந்துகொள்ளப்பட்ட மக்கள்: பூமியின் சகல ஜனங்களிலும் தயவு பெற்றவர்கள். இது இயேசுவின் பார்வை. இருளிலிருந்து ஆச்சரியமான ஒளிக்குள் தங்களை அழைத்தவருக்கு அவர்கள் நன்றி காட்டவேண்டுமென்று விரும்புகிறார். தேவன் தாராளமாக அருளிய ஆசீர்வாதங்களை அவர்கள் மற்றவர்களோடு பகிர்ந்துகொள்ள வேண்டும். இரட்சிப்பின் நற்செய்தி சகல தேசத்தாருக்கும் ஜாதிக்காரருக்கும் பாஷைக்காரருக்கும் மக்களுக்கும் சென்று சேரவேண்டும். 2PK, 716, 717 TamChS 112.1
சாதாரண, உலகப்பிரகாரமான முயற்சிகளில் ஈடுபடுவதைக் காட்டிலும் அதிகமானதை நம்மில் நூறில் ஒருவர் கூட செய்வதில்லை. கிறிஸ்து யாருக்காக மரித்தாரோ, அந்த ஆத்துமாக்களின் மதிப்பை பாதியளவுகூட நாம் உணரவில்லை. 38T, 148 TamChS 112.2
கிறிஸ்துவின் அடியார்கள் தங்கள் கடமையை உணர்ந்தால், இருண்ட நாடுகளில் இன்று ஒருவர் நற்செய்தி அறிவிக்கிற இடத்தில் ஆயிரம் பேர் வேலைசெய்து கொண்டிருப்பார்கள். கிறிஸ்தவ நாடுகளில் ஆத்துமாக்களுக்காக அதிக ஊக்கத்துடன் பிரயாசப்பட்டிருப்பார்கள். இந்தப்பணியை நேரடியாகச் செய்யமுடியாதவர்கள் தங்கள் பொருட்களாலும் உதவிகளாலும் ஜெபங்களினாலும் அதைத் தாங்கலாம். கிறிஸ்தவ நாடுகளில் ஆத்துமாக்களுக்காக இன்னும் அதிக ஊக்கமாகப் பிரயாசப்பட்டிருப்பார்கள். 4SC, 81 TamChS 112.3
அதிகமான வெளிச்சத்தையும் ஒப்பற்ற வாய்ப்புகளையும் பெற்று அனுபவிப்பவர்கள் ஆயிரக்கணக்கானோர்; ஆனால், பிறருக்கு வெளிச்சம் கொடுக்க தங்களுடைய செல்வாக்காலும் பணத்தாலும் அவர்கள் எதுவுமே செய்வதில்லை. திருச்சபைக்கு பாரமாக இருந்துவிடாதபடி, தேவ அன்பில் நிலைத்திருக்க வேண்டு மென்கிற பொறுப்புணர்வு இருப்பதில்லை. அப்படிப்பட்டவர்கள் பரலோகத்திற்கு பாரமாகவும் தடையாகவும் இருப்பார்கள். அவர்கள் கிறிஸ்துவின் நிமித்தமும், சத்தியத்தின் நிமித்தமும், தங்களுடைய சொந்த நலனினிமித்தமும் விழித்துக்கொண்டு, நித்தியத்திற்காகக் கருத்தோடு பிரயாசப்படவேண்டும். 1RH, March 1, 1887 TamChS 112.4
கிறிஸ்துவின் சபையை இராணுவத்திற்கு ஒப்பிடலாம். ஒவ்வொரு வீரனுடைய வாழ்க்கையும் கடினமானதாக, கடும் உழைப்பு மிக்கதாக, ஆபத்து நிறைந்ததாக இருக்கும். கொஞ்சமும் கண்ணயராத எதிரிகள் எங்கும் இருக்கிறார்கள்.அந்தகார வல்லமைகளின் அதிபதி தலைமை தாங்குகிறான். அவன் தூங்குவதுமில்லை, தன் நிலையிலிருந்து மாறுவதும் இல்லை. எப்போதெல்லாம் ஒரு கிறிஸ்தவன் பாதுகாப்பில்லாமல் நிற்கிறானோ, உடனே ஆற்றல்மிக்க இந்த எதிரி கடுமையாகத் தாக்குகிறான். திருச்சபையின் அங்கத்தினர்கள் விழிப்போடும் கருத்தோடும் இல்லாத பட்சத்தில் அவனுடைய உபாயங்களில் வீழ்வார்கள். TamChS 113.1
கடமையாற்ற கட்டளைபெற்ற இராணுவ வீரர்களில் பாதிபேர் தூங்கிக் கொண்டும் சோம்பேறிகளாகவும் இருந்தால் நன்றாக இருக்குமா! அதனால் தோல்வியும் சிறையிருப்பும் மரணமும் தானே மிஞ்சும். எதிரியிடமிருந்து தப்பினால் போதுமென நினைப்பவர் பிரதிபலனை எதிர்பார்க்க முடியுமா? முடியாது; உடனே அவர்கள் மரணதண்டனை பெறுவார்கள். முக்கியமான விளைவுகள் சம்பந்தப்பட்டிருக்கிற விஷயத்தில், கிறிஸ்துவின் திருச்சபை அக்கறையின்றி, உண்மையின்றி இருக்கிறதா? கிறிஸ்தவ வீரர்கள் நித்திரையிலா? இதைவிட பயங்கரமான நிலை இருக்குமா? அந்தகார அதிபதியின் கட்டுப்பாட்டில் இருக்கிற உலகத்தாருக்கு எதிராக ஏதாவது சாதிக்கமுடியுமா? போராட்டத்தில் விருப்பமின்றி இருப்பவர்களும் எந்தப் பொறுப்பும் இல்லையென நினைப்பவர்களும் ஒன்று தங்களுடைய போக்கை மாற்றவேண்டும்; அல்லது, உடனடியாக தங்கள் பதவியிலிருந்து விலகவேண்டும். 225T, 394 TamChS 113.2