Go to full page →

தெய்வீக அளவீடு TamChS 117

குணத்தை அளவிடுகிற பணி தொடர்ந்து நடைபெற்று வரு கிறது. தேவதூதர்கள் உங்களுடைய ஒழுக்க விழுமியங்களை மதிப்பிட்டு, உங்களுடைய தேவைகளைக் கணக்கெடுத்து, உங்கள் வழக்கை தேவனிடம் தெரிவிக்கிறார்கள். 5RH, April 2, 1889 TamChS 117.4

நமக்குள்ள திறமையிலிருந்து இம்மியளவேனும் குறைவாகச் செயல்பட்டால், அதற்கு நாம் ஒவ்வொருவரும் கணக்கு கொடுத்தாக வேண்டும். சேவைக்கான ஒவ்வொரு சாத்தியத்தையும் மிகச் சரியாகதேவன் அளவிடுகிறார். மேம்படுத்தப்பட்ட தாலந்துகளைப் பற்றி கணக்கு வைப்பதுபோல, பயன்படுத்தாத தாலந்துகள் குறித்தும் கணக்குவைக்கப்படுகிறது. நம் தாலந்துகளைச் சரியாகப் பயன்படுத்துவன்மூலம் நாம் எவ்வாறெல்லாம் மாறமுடியுமோ அதுகுறித்து தேவன் கணக்குகேட்பார். நாம் செய்திருக்கவேண்டிய, ஆனால் தேவனுக்கு மகிமையாக ஆற்றல்களைச் செலவிடாததால் செய்யத்தவறிப் போனவை குறித்து தேவன் நம்மை நியாயந்தீர்ப்பார். நம் ஆத்துமாவை நாம் இழக்காமல் இருந்தாலும்கூட, நம் தாலந்துகளைப் பயன்படுத்தாததின் விளைவை நித்தியத்தில் உணருவோம். நாம் பெற்றிருக்கவேண்டிய, ஆனால் பெறாமல்போன அறிவும், திறமைகளும் நித்தியமாக நமக்குக் கிடைக்காமலே போகும். 1COL, 363 TamChS 117.5