பயிற்சியால் பெலன் உண்டாகிறது. தேவன் தங்களுக்குக் கொடுத்திருக்கிற திறனைப் பயன்படுத்துகிற அனைவரும் அவருடைய சேவைக்கு தங்களை அர்ப்பணிக்க அதிக திறனைப் பெறுவார்கள். தேவ நோக்கத்திற்காக எதுவுமே செய்யாதவர்கள், சத்தியத்தின் அறிவிலும் கிருபையிலும் வளரத் தவறுகிறார்கள். படுத்துக் கொண்டு, தன் கைகால்களைப் பயன்படுத்த மறுக்கிறவன் சீக்கிரமே அவற்றைப் பயன்படுத்தும் திறனையெல்லாம் இழந்து போவான்.அவ்வாறு தான் கிறிஸ்தவனும். தேவன் கொடுத்திருக்கிற திறன்களைப் பயன்படுத்தாவிட்டால், கிறிஸ்துவில் வளர முடியாமல் போவது தவிர, தான் ஏற்கனவே பெற்றுள்ள பெலனையும் இழக்கிறான். அவன் ஆவிக்குரிய முடவனாகிறான். தேவன் மேலும் தங்களுடைய சகமனிதர்கள்மேலுமுள்ள அன்பால் பிறருக்கு உதவி செய்ய கடுமையாக முயல்கிறவர்கள் தாம் சத்தியத்தில் நிலைப்பட்டு, பெலப்பட்டு, உறுதியாகிறார்கள். மெய்யான கிறிஸ்தவன் உணர்ச்சித் தூண்டலால் அல்ல, நியதியால் ஊழியம் செய்கிறான். ஒரு நாளோ, ஒரு மாதமோ அல்ல; தன் வாழ்நாள் முழுதும் ஊழியம் செய்கிறான். 35T, 393 TamChS 143.3