நம்பிக்கை இழப்போருக்கு நிச்சயமருந்து விசுவாசமும் ஜெபமும் பணியுமேயாகும். விசுவாசமும் பணியும் நிச்சயத்தையும் நிம் மதியையும் அனுதினமும் பெருகச்செய்கிறது. முற்றிலும் நம்பிக்கை இழக்கவோ, தீமை நிகழப்போவதாக கவலைப்படவோ தூண்டப்படுகிறீர்களா? சோதனை மிக்க நாட்களில், அதிக தீமை ஏதாவது நிகழப்போவதுபோலத் தோன்றும்போது பயப்படாதிருங்கள். தேவன்மேல் விசுவாசமாயிருங்கள். தேவன் உங்கள் தேவைகளை அறிவார். அவர் சர்வ வல்லமை படைத்தவர். அளவில்லா அவரது அன்பும் உருக்கமும் ஒருபோதும் குறையாது. தமது வாக்குத்தத்தத்தை நிறைவேற்றுவதில் அவர் தோற்றுப்போவாரோ என்று அஞ்சவேண்டாம். அவர் நித்திய சத்தியர். தம்மில் அன்புகூருகிறவர்களோடு தாம் செய்த உடன்படிக்கையை ஒருபோதும் மாற்ற மாட்டார். தமது உண்மை ஊழியர்களின் தேவைக்கேற்ப அவர்களுக்கு அருளுகிறார். 1PK, 164,165 TamChS 143.4
ஆவிக்குரிய சோம்பேறித்தனத்துக்கு ஒரே மெய்யான தீர்வு தான் உண்டு. அது வேலை செய்வது. அதாவது, உங்களுடைய உதவி தேவைப்படுகிற ஆத்துமாக்களுக்கு உதவி செய்வது. 24T, 236 TamChS 144.1
தைரியமற்ற, சந்தேகிக்கிற, நடுங்குகிற ஆத்துமாவுக்கு கிறிஸ்து எழுதி வைத்துள்ள செய்முறை இதுதான். தேவனுக்குமுன் புலம்பி, துக்கத்தில் இருப்பவர்கள் எழுந்து, உதவி தேவைப்படுகிற ஒருவருக்கு உதவி செய்யட்டும். 36T, 266 TamChS 144.2
ஊக்கத்திலும் வைராக்கியத்திலும் தீவிர வாஞ்சையிலும் அன்பிலும் தொடர்ந்து பெருகுகிற கிறிஸ்தவர்கள் ஒருபோதும் பின் வாங்கிப் போவதில்லை. 4RH, June 7, 1887 TamChS 144.3
தன்னலமற்ற சேவையில் ஈடுபடாதவர்கள் வலிமை இல்லாத நிலையில் இருக்கிறார்கள். போராட்டம், சந்தேகம், முறுமுறுப்பு, பாவம், வருத்தம் போன்றவற்றின் ஆதிக்கத்தால் சோர்ந்து போகிறார்கள். அவற்றின் விளைவாக, உண்மையான மார்க்கம் எது என்பதைப்பற்றிய உணர்வை முற்றிலும் இழந்து விடுகிறார்கள். தங்களால் உலகத்திற்குள் திரும்பவும் செல்ல முடியாதென நினைக்கிறார்கள்; எனவே, சீயோனின் வஸ்திர ஓரங்களைப் பிடித்துத் தொங்கிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், அற்பத்தனமான பொறாமைகளோடும் எரிச்சல்களோடும் ஏமாற்றங்களோடும் மனஸ்தாபத்தோடும் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். தங்கள் சகோதரர்கள்மேல் எல்லாவற்றிலும் குறை கண்டுபிடித்து, மற்றவர்களுடைய குற்றங்களையும் குறைகளையும் பற்றியே யோசித்துக் கொண்டிருக்கிறார்கள். தங்கள் ஆவிக்குரிய வாழ்வில் நம்பிக்கை யற்ற, உண்மையற்ற, வெளிச்சமற்ற அனுபவத்தைமட்டுமே பெறுகிறார்கள். 1RH, Sept. 2, 1890 TamChS 144.4