ஆண்டவர் தம் வருகையின்போது ஒவ்வொரு தாலந்தையும் கூர்ந்து ஆராய்வார். தாம் ஒப்படைத்த மூலத்தனத்திற்கேற்ற வட்டியைக் கேட்பார். கிறிஸ்துவின் நாமத்தைத் தரித்து, அவருடைய ஊழியர்களெனச் சொல்லிக்கொள்கிற அனைவருக்காகவும் நிந்தையும் வேதனையும் அடைந்து, பிராயசம் நிறைந்த வாழ்க்கையாலும் அவமான மரணத்தாலும் கிறிஸ்து ஏற்கனவே விலை செலுத்தியிருக்கிறார். 39T, 104 TamChS 146.2
அவருக்காக ஆத்துமாக்களை ஆதாயப்படுத்துவதற்கான தங்கள் திறன்களை மேம்படுத்துகிற மேலான கடமை ஒவ்வொருவருக்கும் உள்ளது. “நீங்கள் உங்களுடையவர்களல்ல; கிரயத் துக்குக் கொள்ளப்பட்டீர்கள்” என்று அவர் சொல்கிறார். ஆகவே, ஆண்களையும் பெண்களையும் பாவத்திலிருந்து நீதிக்கு மீட்கிற சேவை செய்கிற வாழ்க்கை வாழ்ந்து, தேவனை மகிமைப்படுத்துங்கள். கிறிஸ்துவின் உயிரையே விலையாகக் கொடுத்து, வாங்கப்பட்டவர்கள் நாம்; உண்மையான சேவையால் தேவனுக்குரியதை அவரிடமே கொடுப்பதற்கு நாம் வாங்கப்பட்டுள்ளோம். 19T, 104 TamChS 146.3
தம் மக்களிடம் சொல்லும்படி தேவன் ஒரு செய்தியை எனக்குக் கொடுத்திருக்கிறார். அவர்கள் விழித்துக்கொள்ள வேண்டும்; தங்களுடைய கூடாரங்களைப் போட்டு, தங்கள் எல்லைகளைப் பெரிதாக்க வேண்டும். என் சகோதர சகோதரிகளே, நீங்கள் விலை கொடுத்து வாங்கப்பட்டுள்ளீர்கள். உங்களிடமுள்ள அனைத்தையும், தேவமகிமைக்காகவும், சகமனிதர்களுடைய நன்மைக்காகவும் நீங்கள் பயன்படுத்தவேண்டும். பாவத்தில் அழிகிற மக்களைக் இரட்சிக்கவே கிறிஸ்து சிலுவையில் மரித்தார். இந்தப் பணியில் உங்கள் ஒத்துழைப்பையும் கேட்கிறார். ஊக்கமும் களைப்பற்றதுமான முயற்சியால், தொலைந்து போனோரைத் தேடுவதற்கு நீங்கள் முயலவேண்டும். உங்களுடைய பாவங்களால்தான் அவர் சிலுவையில் மரிக்க வேண்டியதாயிற்று என்பதை நினைவுகூரவேண்டும். 27T, 9 TamChS 147.1
கிறிஸ்துவைப்பின்பற்றுகிறவர்கள் அவருக்குச் சேவை செய்ய மீட்கப்பட்டுள்ளார்கள். ‘வாழ்க்கையின் மெய்யான நோக்கம் ஊழியம்’ என்று நம் ஆண்டவர் கற்றுக்கொடுக்கிறார். கிறிஸ்து தாமே ஊழியம் செய்கிறவராக இருந்தார். தம்மைப் பின்பற்றுகிற அனைவருக்கும் ஊழியக்கட்டளையைக் கொடுத்திருக்கிறார்; அதாவது தேவனுக்கும் சகமனிதர்களுக்கும் சேவை செய்ய வேண்டுமென்கிற கட்டளையைக் கொடுத்திருக்கிறார். தேவனோடும் மனிதனோடும் நம்மை இணைக்கிற சங்கிலியாக ஊழியக்கட்டளை இருக்கிறது. 3COL, 326 TamChS 147.2