Go to full page →

நேர்மறையான சத்தியத்தைச் சொல்லுங்கள் TamChS 167

சத்தியத்தை அறிவிக்க முயலும்போது பெரும்பாலும் எதிர்ப்பு உண்டாகும்; ஆனால் அந்த எதிர்ப்பை வாக்குவாதம் மூலம் சந்தித்தால், அது அதிகரிக்கவே செய்யும், அதற்கு நீங்கள் வழிவகுக்கக் கூடாது. நேர்மறையான சத்தியத்தைச் சொல்லுங்கள். தேவதூதர்கள் உங்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்; உங்களை எதிர்க்கிறவர்களோடு நீங்கள் வாக்குவாதம் செய்யாவிட்டால், அவர்களில் எவ்வாறு தாக்கத்தை ஏற்படுத்த வேண்டுமென்பது தூதர்களுக்குத் தெரியும். எழுப்பப்படும் கேள்விகளிலுள்ள எதிர்மறை விஷயங்கள் பற்றியே சிந்திக்கவேண்டாம். நேர்மறை சத்தியங்களையே சிந்தியுங்கள்; ஊக்கமான ஜெபத்தாலும் அர்ப்பணிப்பாலும் அவற்றை இறுகப்பற்றிக்கொள்ளுங்கள். 29T, 147,148 TamChS 167.1