Go to full page →

பயண வழிகளில் தேவனுடைய பிரதிநிதிகள் TamChS 167

இக்காலத்திற்கான அழைப்பிற்கு இணங்கி, தலைமைப் பணியாளரின் சேவையில் ஈடுபடுகிறவர், அவருடைய ஊழியப்பாணிகளை நன்கு கற்றுக்கொள்வது நல்லது. இரட்சகர் தமது பூலோக ஊழியத்தின்போது, நீண்டதூர பயண வழிகளின் ஊடே கிடைத்த வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொண்டார். இயேசு அங்குமிங்குமாகப் பயணம் செய்த சமயங்களில் அவ்வப்போது கப்பர்நகூமில் தங்குவார்; அது அவருடைய ‘பட்டணமாக’ அறியப்பட்டது. இரட்சகருடைய ஊழியத்தின் மையமாக விளங்குவதற்கேற்ற சூழல்கள் அந்நகரத்தில் இருந்தன. தமஸ்குவிலிருந்து எருசலேமுக்கும் எகிப்திற்கும், மத்திய தரைகடலுக்கும் செல்கிற பாதையில் அந்நகரம் இருந்ததால், ஒரு முக்கியப் பயணத்தடமாக அந்நகரம் இருந்தது. பல தேசங்களைச் சேர்ந்தவர்கள் அந்நகரத்தின் வழியே கடந்துசெல்வார்கள்; அல்லது பயணங்களின் ஊடே இளைப்பாறும்படி அங்கே தங்குவார்கள். சகல தேசங்களையும் வகுப்புகளையும் சேர்ந்தவர்களை இயேசு அங்கே சந்திக்கமுடிந்தது; பணக்காரர் - உயர்ந்தவர், ஏழை -தாழ்ந்தவர் என அனைவரையும் இயேசு அங்கே சந்திக்க முடிந்தது. இதனால் அவருடைய போதனைகள் பிற நாடுகளுக்கும், பல குடும்பத்தினருக்கும் சென்றது. தீர்க்கதரிசனங்களை ஆராய்வது இவ்வாறு உற்சாகம் ஏற்பட்டது; இரட்கரின்மேல் கவனம் திரும்பினது; அவருடைய ஊழியப்பணிகுறித்து உலகம் அறிந்து கொண்டது. 19T, 121 TamChS 167.2

உலகப்புகழ்பெற்ற சுகாதார சொகுசு விடுதிகளிலும் சுற்றுலா போக்குவரத்து மையங்களிலும் ஆரோக்கியத்தையும் மகிழ்ச்சியையும் தேடி ஆயிரக்கணக்கானோர் குவிகிறார்கள்; அந்தக் கூட்டத்தாரின் கவனத்தை ஈர்க்கிற திறமையுடைய ஊழியர்களும் பிரச்சாரகர்களும் அங்கே நியமிக்கப்பட வேண்டும். இக்காலத்திற்கான செய்தியை அறிவிப்பதற்கான வாய்ப்பை இந்த ஊழியர்கள் எதிர்நோக்கியிருக்க வேண்டும்; வாய்ப்பு கிடைக்கும்போது கூட்டங்கள் நடத்த வேண்டும். மக்களிடம் பேசுவதற்கான வாய்ப்புகளை நழுவ விடாமல் பிடிக்கவேண்டும். பரிசுத்த ஆவியானவருடைய வல்லமையின் துணையோடு கூட, யோவான் ஸ்நானன் சொன்ன செய்தியைப்போல,“மனந்திரும்புங்கள், பரலோகராஜ்யம் சமீபித்திருக்கிறது” என்று சொல்லி, மக்களைச் சந்திப்பார்களாக. மத்தேயு 3:2. வேத வசனத்தை காதுள்ளவர்கள் கேட்கும்படிக்கு தெளிவோடும் வல்லமையோடும் அறிவிக்க வேண்டும். தற்காலச் சத்தியத்தை அறியாதோரின் பாதையில் இவ்வாறு அது வைக்கப்படும்; இதை ஏற்றுக்கொள்கிறவர்கள் ஒரு சிலராக இருக்கமாட்டார்கள்; உலகின் சகலபகுதிகளிலும் தாங்கள் வசிக்கிற இடங்களுக்கு அதைக் கொண்டு செல்வார்கள். 29T, 122 TamChS 168.1

‘குணமாக்குதலின் ஊழியம்’, கிறிஸ்துவின் உவமைப் பாடங்கள்’ ஆகிய புத்தகங்கள் சுற்றுலா மையங்களில் பயன்படுத்துவதற்காகவே தழுவி எழுதப்பட்டுள்ளன. சாவகாசமாக இருப்போர், அல்லது வாசிப்பதற்கு விருப்பத்தோடு இருப்போரின் கரங்களில் இப்புத்கங்களின் பிரதிகள் கிடைப்பதற்கு முடிந்த அனைத்தையும் செய்யவேண்டும். 19T, 85 TamChS 168.2

சுகாதார உணவகங்களையும் சிகிச்சை அறைகளையும் நிறுவ வேண்டும். இத்தகைய நம் ஊழியங்களில் கடற்கரையோர பிர மாண்ட சொகுசு விடுதிகளருகே இவற்றை அமைக்கவேண்டும். “கர்த்தருக்கு வழியை ஆயத்தப்படுத்துங்கள்” என்று வனாந்தரத்தில் யோவான் ஸ்நானனுடைய சத்தம் கேட்டதுபோல, பிரமாண்டமான சுற்றுலாப் பகுதிகளிலும் கடற்கரைச் சொகுசு விடுதிகளிலும் தேவதூதுவர்களின் சத்தம் கேட்கவேண்டும். 27T, 55,56 TamChS 169.1