Go to full page →

தொழிற் கல்வி TamChS 170

ஏழைக் குடும்பங்கள் ஏராளம் உள்ளன; அவர்களை ஓரிடத்தில் குடியமர்த்தி, தங்கள் பிழைப்பை நடத்தும்படி அதிலிருந்து எவ்வாறு விளைச்சலைப் பெறலாமென கற்றுக்கொடுப்பதைவிட சிறந்த ஊழியப்பணி இல்லை . இத்தகைய உதவியும் அறிவுரையும் நகரங்களில் மட்டும்தான் தேவைப்படுகிறதென நினைக்கக்கூடாது. நல்லதொரு வாழ்க்கை வாழ அனைத்து சாதகமான சூழல்களையும் பெற்றுள்ள கிராமங்களிலும் கூட எண்ணிலடங்காத ஏழை மக்கள் மிகுந்த தேவையில் இருக்கிறார்கள். ஒவ்வொரு சமுதாயத்திலும் தொழில்பற்றியும் சுகாதாரம்பற்றியும் போதுமான கல்வி கிடைப்பதில்லை. மக்கள் குடிசைகளில் வாழ்கிறார்கள். போதுமான வீட்டு சாமான்களும் துணிமணிகளும் இல்லை ; கருவிகள் இல்லை ; புத் தகங்கள் இல்லை; வசதிகள் இல்லை; பண்போடு வாழ்வதற்கான வாய்ப்புகள் இல்லை. மிருககுணம் படைத்தவர்களாகிறார்கள், உடல் நலிந்து மெலிந்துபோகிறது, பரம்பரைப் பாவமும் தவறான பழக்கங்களும் தீய விளைவுகளாக வெளிப்படுகின்றன. இந்த மக்களுக்கு அடிப்படையிலிருந்தே கற்றுக்கொடுக்க வேண்டும். சோம்பேறித்தனமான, சுறுசுறுப்பற்ற, சீர்கெட்ட ஒருவாழ்க்கையை வாழ்கிறார்கள்; சீர்கெட்ட பழக்கங்களை சரிசெய்யும்படி அவர்களைப் பயிற்றுவிக்க வேண்டும். 1MH, 192 TamChS 170.3

பல்வேறு தொழில்களை நிறுவுவதில் கவனம் செலுத்த வேண்டும்; அப்போதுதான் ஏழைக்குடும்பங்களுக்கு வேலை கிடைக்கும். தச்சர்களும், கொல்லர்களும், பிரயோஜனமிக்க தொழில்பற்றிய அறிவுள்ள ஒவ்வொருவரும், வேலையில்லாமலும் அறிவில்லாமலும் இருப்போருக்கு அந்த வேலையைச் சொல்லிக்கொடுப்பதும் அவர்களுக்கு உதவுவதும் தங்கள் கடமையென உணரவேண்டும். 2 MH, 194 TamChS 171.1

ஏழைகள் தங்களுக்கென வீடுகளைக் கட்டுவதற்கு உதவுவதிலும், நிலத்தைப் பண்படுத்தி விளைச்சலை உண்டாக்குவதுபற்றி அவர்களுக்குக் கற்றுக்கொடுப்பதிலும் கிறிஸ்தவ விவசாயிகள் உண்மையான ஒரு நற்செய்தி ஊழியத்தைச் செய்யலாம். விவசாயக்கருவிகளை எவ்வாறு பயன்படுத்தவேண்டும்? பழக்கன்றுகளை நட்டு எவ்வாறு பராமரிக்கவேண்டும்?’ என்பதை அவர்களுக்குக் கற்றுக்கொடுங்கள். 3MH, 193 TamChS 171.2

ஏழைகளுக்கு ஊழியம் செய்ய ஆண்களுக்கும் பெண்களுக் கும்முன்பாக ஒரு பரந்த களம் உள்ளது. திறமையான சமையல்காரர், வீட்டுவேலையாள், தையல்காரர், செவிலியர் என அனைவருடைய உதவியும் தேவைப்படுகிறது. ‘எவ்வாறு சமைக்கவேண்டும்? அவரவர் துணிமணிகளை எவ்வாறு தைக்கவேண்டும்? வியாதியஸ்தரை எவ்வாறு கவனிக்கவேண்டும்? குடும்பத்தை எவ்வாறு சரிவரக் கவனிக்கவேண்டும்?’ என்று ஏழைக் குடும்ப அங்கத்தினர்களுக்குக் கற்றுக்கொடுக்கவேண்டும். ஏதாவது பயன்மிக்க தொழில் அல்லது வியாபாரத்தை சிறுவர் சிறுமியருக்கு நன்றாகக் கற்றுக்கொடுக்கவேண்டும். 4 MH, 194 TamChS 171.3