Go to full page →

“ஒருவரை யொருவர் கவனியுங்கள்” LST 188

சோதனையின் கீழ் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கும் ஆத்துமாக்களை நீ அடிக்கடி சந்திக்கலாம். சாத்தான் அவர்களோடு எவ்வளவு கண்டிப்பாய்ப் போராடியிருக்கலாம் என்பதை நீ அறியாய். அப்படிப்பட்ட ஆத்துமாக்களை அதைரியப்படுத்துவதினால் நீ சோதனைக்காரனுக்கு அனுகூலம் செய்யாதபடி ஜாக்கிரதையாயிரு. LST 188.3

சரிப்படுத்தப்பட்ட வேண்டியதோர் காரியத்தை நீ எப்பொழுதாயினும் கண்டால் அல்லது கேள்விப்பட்டால், உண்மையாயிருக்கப் பிரயாசப்படுகிற விஷயத்தில் நீ கண்டிப்பாயிராதபடிக்கு ஞானத்திற்காகவும் கிருபைக்காகவும் கர்த்தரைத் தேடு. LST 188.4

ஒருவருடைய தப்பிதங்களை எடுத்துக் காட்டுகிறது எப்பொழுதும் தாழ்த்துகிறதாயிருக்கும். அனுவசிய குற்றம் பிடித்தவிலான் அவ்வனுபோகத்தை அதிகக் கசப்பாக்காதே. பட்சமற்ற கண்டிப்பு அதைரியப்படுத்தி ஜீவனுக்கு கசப்பையும் துக்கத்தையும் கொண்டும் வருகிறது. என் சகோதரரே, கண்டிப்பினால் மேற்கொள்வதை விட அன்பினால் மேற் கொள்ளுவதே உசிதம். LST 188.5

குற்றஞ் செய்த ஒருவன் தன குற்றத்தை உணரும் போது அவனது சுயமரியாதையை அழித்துப் போடாதபடி கவலையாயிருங்கள். கட்டிக் குணப்படுத்தாமல் நசுக்கிக் காயப்படுத்தத் தேடாதேயுங்கள். LST 189.1