Go to full page →

எஜமானின் ஆவியில் LST 189

நாம் ஒருவரை யொருவர் நேசிக்கப் பிரயாசப்பட்டு ஆரம்பிக்க வேண்டியதில்லை. இருதயத்தில் கிறிஸ்துவின் அன்பே தேவை. சுயநலம் கிறிஸ்துவில் மூடப்படும்போது மெய்யன்பு தானாக வெளிப்படுகிறது. LST 189.2

பொறுமையோடு சகித்து நாம் வெற்றியடைவோம். ஊழியத்தில் காணப்படும் பொறுமையே ஆத்மாவிற்கு இளைப்பாறுதலைக் கொடுக்கிறது. தாழ்மையும், சுறுசுறுப்பும், உண்மையுமுள்ள ஊழியர்கள் மூலமாய்த்தான் இஸ்ரவேலுக்கு க்ஷேமமுன்டாகிறது. குற்றவாளியின் மேல் நீ சாட்டும் குற்றங் குறைகள் எல்லாவற்றையும் விட அவனுடைய முற்கோபத்தையும் பிடிவாதத்தையும் தணிக்க அன்பும் தைரியமுமான ஒரு வார்த்தை அதிகப் பிரயோஜனப்படும். LST 189.3

எஜமானின் தூது எஜமானின் ஆவியில் கூறப்பட வேண்டும். - 7 T 265-6. LST 189.4