Go to full page →

சுய தேர்ச்சி LST 223

தேவ மனுஷர் ஒரு மணி நேரத்தையும் வீணாக்காமல் ஆராய்ச்சியில் ஜாக்கிரதை உள்ளவர்களாய், அறிவடைவதில் ஊக்க முள்ளவர்களாய் இருக்க வேண்டும். சோர்வடையா பிரயாசத்தின் மூலமாய் அவர்கள் கிறிஸ்தவர்களாக, வல்லமையும் செல்வாக்குமுள்ள மனுஷராக எந்த உன்னத அளவின் பதவிக்கும் எழும்பலாம். ஆனால் அநேகர் தங்கள் நோக்கங்களில் ஸ்திரமற்று இருப்பதினாலும், இளமைப் பருவத்திலிருந்தே இளகம்மான பழக்கம் உள்ளவர்களாய் இருப்பதினாலும் பிரசங்க பீடத்தாகிலும் வியாபாரத் தொழிலாகிலும் ஒருபோதும் மேலான இடத்தை அடையார்கள். அவர்கள் கையிட்டுச் செய்யும் எல்லாவற்றிலும் கவலையீனமான அஜாக்கிரதையே காணப்படுகிறது. LST 223.1

இடைக்கிடையே அப்போதைக் போது திடீரென உண்டாகும் உற்சாகம் சும்மாயிருக்க விரும்பும் இச் சோம்பெறிகளில் ஓர் சீர்திருத்தத்தை உண்டாக்கப் போதுமானதல்ல; இது பொறுமையோடு நற் கிரியையைச் செய்ய வேண்டுமெனக் கேட்கிற ஓர் வேலை. காரியக் காரரான மனுஷர் படுக்கையை விட்டெழும்புகிறதற்கும் ஜெபிக்கிறதற்கும், போஜனம் பண்ணுகிற தற்கும், நித்திரை செய்கிறதற்கும் திட்டமான நேரங்களை வைத்துக் கொள்ளுகிறதினால் மாத்திரம் அவர்கள் உண்மையில் சித்தியடையக் கூடும். உலக ஜோலியில் ஒழுங்கும் திட்டமும் முக்கியமாகுமானால் தேவனுடைய வேலையில் அது எவ்வளவு அதிக முக்கியமாகும்! LST 223.2

அநேகர் பிரகாசமுள்ள காலை மணி நேரங்களை படுக்கையிலே வீணாய்க் கழித்து விடுகிறார்கள். இந்த அருமையான மணி நேரங்களை ஒரு தடவை போக்கடித்தால் அவைகள் ஒருபோதும் திரும்பி வராமலே போகும்; அவைகள் சதா காலத்துக்கும் தொலைந்து போகின்றன. தினம் ஒன்றுக்கு ஒரு மணி நேரம் மாத்திரம் நஷ்டப் படுத்தினால் வருஷத்தில் எவ்வளவு காலம் நஷ்டமாகிறது! தூங்குகிறவன் இதைப் பற்றி யோசித்து தான் நஷ்டப்படுத்தின நற்சமயங்களைக் குறித்து தேவனுக்கு எப்படி கணக்குக் கொடுப்பான் என்பதை சற்று நின்று நிதானித்துப் பார்ப்பானாக. LST 223.3