Go to full page →

வேற்று நேரங்களை விருத்தி செய்தல் LST 223

ஊழியர்கள் வாசிப்பிலும், படிப்பிலும், தியானத்திலும், ஜெபத்திலும் நேரத்தைச் செலவிட வேண்டும். அவர்கள் பிரயோஜனுமுள்ள அறிவினால் தங்கள் மனசை நிரப்புகிறதும் வேதத்தின் பாகங்களை மனப்பாடம் செய்கிறதும், தீர்க்கதரிசனங்களின் நிறைவேறுதலைக் கண்டு பிடிக்கிறதும், கிறிஸ்து நமது சீஷர்களுக்குக் கொடுத்த பாடங்களைப் படிக்கிறது மாயிருக்க வேண்டும். கார்களில் பிரயாணம் செய்கிற போதாகிலும் அல்லது ரெயில்வே ஸ்டேஷன்களில் காத்திருக்கும் போதாகிலும் வாசிப்பதற்காக ஒரு புத்தகம் எடுத்துக் கொள். கிடைக்கும் வேற்று நேரங்களில் ஏதாவது செய்து கொண்டிரு. இவ்விதமாக சோதனைகளுக் கனுகூலமான கதவு அடைபட்டுப்போம். LST 223.4

மனோ வல்லமையின் உன்னத நிலையை அடைய வேண்டியது தன்னைப் பொறுத்த கடமை என்பதை ஒவ்வொருவரும் உணர வேண்டும். தாங்கள் அடைந்திருக்கும் அறிவினிமித்தம் ஒருவரும் பெருமை கொள்ளலாகாதாயினும் அவர்கள் அவர்கள் படிப்படியாய் மேலே ஏற ஏற தேவனை இன்னும் அதிகமாய்க் கனப்படுத்தவும் ஆகிறதென்பதை அறிவதினால் திருப்தி அடைந்து ஆனந்திப்பது எல்லோரின் சிலாக்கியமாம். LST 224.1