Go to full page →

ஏணி ஏறுதல் LST 224

ஒரு ஜனமாக நமக்கு அவசியமானதும், காலம் கேட்கும் காரியங்களுக்குப் பதில் சொல்லத் தக்கதாக நமக்கிருக்க வேண்டியதும் மனோ பயிற்சியே. வறுமை, தாழ்ந்த பிறப்பு, வசதிக் குறைவுகள் முதலியவை புத்தியைப் பண்படுத்துவதற்கு தடை இருக்கலாகாது. LST 224.2

நமது ஊழியரில் அநேகர் சில உபதேசங்களை மாத்திரம் பிரசங்கிக்கக் கூடும். எவ்வளவு பிரயாசத்தினாலும் கஷ்டத்தினாலும் அவர்கள் இவ் விஷயங்களை அறிந்து கொண்டார்களோ அதே பிரயாசத்தினாலும் கஷ்டத்தினாலும் அவர்கள் மற்றவர்களையும் அறிந்து கொள்ளக் கூடும். தீர்க்கதரிசனங்களையும் மற்றக் கொள்கை விஷயங்களையும் சகல ஊழியர்களும் பூரணமாய் அறிந்து கொள்ள வேண்டும். LST 224.3

நமது பிரசங்கிமார் களுக்குள்ளுங் கூட முயற்சியின்றி உலகத்தில் உயர்ந்து காண விரும்புகிறவர்கள் அநேகர் உண்டு. அவர்கள் ஏதோ பிரயோஜனமான பெரிய வேலையைச் செய்ய அபேட்சிக்கிரார்கள்; ஆனால் அவர்களுக்கு ஆதரவானதும், அவர்களைக் கிறிஸ்துவின் ஒழுங்குள்ள ஊழியர்களாக்கக் கூடியதுமான சிறிய, அனுதின கடமைகளையோ அவமதிக்கிறார்கள். மற்றவர்கள் செய்து கொண்டிருக்கிற வேலையை அவர்கள் செய்ய விரும்புகிறார்கள், ஆனால் அவர்களை அதற்குத் தகுதியானவர்கள் ஆக்கத் தக்க பயிற்சியடையவோ அவர்கள் விரும்புகிறதில்லை. தங்களுடைய தற்போதிய திறமைகளுக்கு மிஞ்சி எதையும் செய்ய வேண்டும் என்கிற இப் பேராசையே ஆண்களையும் பெண்களையும் துவக்கத்திலேயே திட்டமான அபஜெயங்களை அடையும்படிச் செய்கிறது. அவர்கள் முன்னைவிட கொஞ்சம் கஷ்டக் குறைவான வலியின் மூலமாய் மேலே ஏற விரும்பி ஏணி ஏற மாட்டோம் என மூர்க்கத்துடன் மறுக்கின்றார்கள் ---- G. W. 278-82. LST 224.4