நமது பிரசங்கிமார்களும் உபாத்திமார்களும் தவறிப் போன உலகத்திற்குத் தேவ அன்பைக் காட்ட வேண்டியவர்களாய் இருக்கிறார்கள். உருக்கமாய் இளகின இருதயத்துடன் சத்திய வசனம் பேசப்படுவதாக. தப்பிதத்தில் இருக்கிற அனைவரும் கிறிஸ்துவின் சாந்தத்துடன் நடத்தப்படுவார்களாக. நீங்கள் யாருக்காக வேலை செய்கிறீர்களோ அவர்கள் சத்தியத்தை உடனே சிந்தித்துக் கொள்ளக் கூடாதிருந்தால் கடிந்து கொள்ளாமலும், பழிக்காமலும் அல்லது ஆக்கினைத் தீர்ப்புச் செயாமலுமிருங்கள். நீங்கள் கிறிஸ்துவின் சாந்தத்தையும், பட்சத்தையும் அன்பையும் காட்ட வேண்டு மென்பதை நினைத்துக் கொள்ளுங்கள். LST 224.5
அவிசுவாசமும் விரோதமும் வருமென்று நாம் எதிர்பார்க்க வேண்டும். சத்தியம் எப்பொழுதும் இவைகளோடு போர் புரிய வேண்டியதிருந்திருக்கிறது. ஆனால் நீங்கள் மிக்க கசப்பான விரோதத்தையும் சந்திக்க வேண்டியதிருந்தாலும் நீங்கள் விரோதிகளைச் சபியாதிருங்கள். பவுல் செய்தது போல் அவர்கள் தேவனுக்குத் தொண்டு செய்கிறதாக நினைக்கலாம்; அப்படிப்பட்டவர்களுக்கு நாம் பொறுமையையும், சாந்தத்தையும், நீடிய பொறுமையையும் காட்ட வேண்டும். LST 225.1
ஜனங்களுக்குப் பிரியமில்லாத சத்தியத்தை எடுத்துச் சொல்வதில் நாம் பாரமான சோதனைகளைத் தாங்கவும் கொடியப் போர்களைச் சகிக்கவும் வேண்டியதிருக்கிறதென்று எண்ணாதிருப்போமாக. இயேசு உனக்காக என்ன பாடுபட்டார் என்பதை நினைத்து அமர்ந்திரு. தூஷிக்கப்பட்டு, அநியாயமாய்க் குற்றஞ் சாட்டப்படும் போதுங்கூட குறை கூறாதே; நிந்தனை அல்லது அதிருப்தியான எண்ணமொன்றும் உன் மனசில் பிரவேசியாதிருப்பதாக. LST 225.2