Go to full page →

உபத்திரவம் தேவனுடைய மக்களைச் சிதறடிக்கும் கச 111

கர்த்தருடைய ஓய்வுநாளைக் கடைபிடிப்பவர்களுக்கு எதிராக வெவ்வேறு இடங்களில் பகைமை எழும்பும்போது, அந்த இடங்களிலிருந்து அதிக கடுமையான எதிர்ப்புகள் இல்லாத வேறு இடங்களுக்கு, அவர்கள் நகர்ந்துபோய்விட வேண்டும் என்பது தேவனுடைய மக்களுக்கு அவசியமாக மாறிவிடும். கச 111.2

துன்மார்க்கமான மனிதர்களின் நடத்தையினால் தேவனுடைய பிள்ளைகளுடைய செல்வாக்கு பயனற்றதாக ஆக்கப்பட்டிருப்பதாலும், அவர்களது ஜீவன் ஆபத்துக்கு உட்படுத்தப்பட்டிருப்பதாலும், அப்படிப்பட்ட இடங்களில் அவர்கள் தங்கியிருப்பதை தேவன் விரும்புவதில்லை. வாழ்க்கையும் சுதந்தரமும் ஆபத்துக்குள்ளாக்கப்படும்பொழுது, ஜீவனுள்ள வார்த்தையைக் கேட்க விரும்புகின்ற மக்கள் இருக்கும் இடத்திற்கு செல்வதென்பது நமது வெறும் சிறப்புரிமை மாத்திரம் அல்ல, அது நமது ஆக்கபூர்வமான கடமையும்கூட ஆகும். மேலும், தேவனுடைய வார்த்தையை போதிப்பதற்கு எங்கு சந்தர்ப்பம் உள்ளதோ, அங்கு சென்று போதிப்பதென்பது மிகவும் சாதகமானதாகும். — Ms26, 1904. கச 111.3

உபத்திரவத்தின் நிமித்தமாக, தேவனுடைய மக்கள் அநேக நாடுகளில் சிதறுண்டு போகக்கூடிய காலம் விரைவாக வந்துகொன்டிருக்கின்றது. எல்லாக் காரியங்களையும் குறித்த முழுமையான கல்வி அறிவைப் பொற்றிருப்பவர்கள், எங்கு இருக்கின்றனரோ அங்கு அனுகூலத்தைப் பெறுவார்கள். — 5MR 280 (1908). கச 111.4