Go to full page →

இக்கட்டு தேவனின் தலையீட்டை வெளியரங்கமாக்கும் கச 111

ஒவ்வொரு காலகட்டத்திலும், கர்த்தர் தமது கிரியை செய்யும் விதத்தைக் காண்பித்திருக்கின்றார். பூமியின்மீது என்ன நடந்துகொண்டிருக்கின்றது என்பதைக் குறித்து அவர் கவனம் உள்ளவராய் இருக்கின்றார். ஒரு இக்கட்டு வரும்போது, சாத்தானுடைய திட்டங்களின் கிரியையைத் தடைசெய்யும்படிக்கு, தேவன் குறுக்கிட்டுத் தம்மை வெளிப்படுத்தியிருக்கின்றார். தேவன் தமது தலையீட்டைத் தனிச்சிறப்புள்ளதாய் ஆக்கும்படிக்கு, அநேக வேளைகளில் தேசங்களும், குடும்பங் களும் மற்றும் தனிப்பட்ட நபர்களும் ஒரு இக்கட்டுக்குள்ளாக வரும்படியான காரியங்களை அனுமதித்திருக்கின்றார். அதன் பின்பு, தமது ஜனங்களைத் தாங்கி, நியாயத்தை நிலைநாட்டுகின்ற தேவன் ஒருவர் இஸ்ரவேலிலே உண்டு என்ற உண்மையை அவர் விளங்கப்பண்ணுகிறார். கச 111.6

யேகோவாவின் சட்டத்தை எதிர்க்கின்ற காரியம் ஏறக்குறைய உலகளாவியதாய் இருக்கும்போதும், தங்களது சகமனிதர்களால் தேவனுடைய மக்கள் துன்புறுத்தப்படும்படியாக நெருக்கப்படும்போதும் தேவன் தலையிடுவார். அவரது ஜனங்களின் ஊக்கமான ஜெபங்களுக்குப்பதிலளிக்கப்படும். ஏனெனில், அவர் தமது மககள் தங்களது முழு மனதோடும் தம்மைத் தேடி, தங்களது விடுதலை நாயகனான அவர்மீது சார்ந்திருப்பதை அவர் விரும்புகின்றார். — RH June 15,1897. கச 112.1

தேவனுடைய பரிசுத்த கற்பனைகளை அறிந்திருப்பவர்கள்மீது கொடுங்கோலர்கள் ஜெயங்கொள்ளும்படி ஒரு குறுகிய காலத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்... கடைசியாக, சாத்தான் தன்னை ஒரு பொய்யனாக, ஒரு குற்றஞ்சாட்டுபவனாக, ஒரு கொலைபாதகனாக, தன்னுடைய குணத்தை வெளிப்படுத்தும்படி தேவன் அவனை அனுமதிப்பார். இப்படியாக, தேவனுடைய மக்களின் கடைசி வெற்றி மிகவும் குறிப்பிடப்படும் விதத்திலும், மிகவும் மகிமையானதாகவும், மிகவும் முழுமையானதாகவும், பரிபூரணமாகதாகவும் ஆக்கப்படும். — 3SM 414 (1904). கச 112.2