Go to full page →

11. சாத்துனுடைய கடைசிக்கால வஞ்சகங்கள் கச 113

கிறிஸ்தவம் என்ற போர்வையின் கீழாக கச 113

இந்த பூமியினுடைய சரித்திரத்தின் முடிவை நாம் நெருங்க்கிக் கொண்டிருக்கின்றோம். சாத்தானும், இதற்குமுன் ஒருபோதும் இல்லாத அளவு கிரியை செய்துகொண்டிருக்கின்றான். கிறிஸ்தவ உலகத்தின் இயக்குநர் போல நடிப்பதற்கு அவன் மிகவும் கடுமையாக முயற்சித்துக் கொண்டிருக்கின்றான். தன்னுடைய பொய்யான வியக்கத்தகும் அற்புதங்களைக்கொண்டு, அவன் மிகவும் தீவிரமாகக் கிரியை செய்து கொன்டிருக்கின்றான். கெர்ச்சிக்கின்ற ஒரு சிங்கம்போல் எவனை விழுங்கலாமோ என்று, வகைதேடிச் சுற்றிக்கொண்டிருக்கிறவனாக அவன் விவரிக்கப்பட்டிருக்கிறான். அவன் தன்னுடைய ஜக்கியத்திற்குள்ளாக முழு உலகத்தையும் அணைத்துக்கொள்ள விரும்புகின்றான். தனது விகாரமான தோற்றத்தை கிறிஸ்தவம் என்ற போர்வைக்குள் மறைத்துக்கொண்டு, ஒரு கிறிஸ்தவனின் அடிப்படையான நற்பண்புகள் தனக்கிருப்பதாக பாவனை செய்துகொண்டு, தான் கிறிஸ்துவாகவே இருப்பதாக உரிமைபாராட்டிக் கொள்கின்றான். — 8MR 346 (1901). கச 113.1

சத்துருவினுடைய நோக்கம் ஏற்றதாயிருக்கும்போது, தன்னுடைய பிரதிநிதிகள் மூலமாக, கிறிஸ்தவம் என்ற ஒரு வேஷத்தின்கீழ் மாபெரும் ஒரு வல்லமையை வெளிப்படையாய்க் காண்பித்து “கூடுமானால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களையும் வஞ்சிப்பான்” (மத். 24;24) என்ற தேவனுடைய வார்த்தை தெரிவிக்கின்றது. — Ms 125, 1901. கச 113.2

இந்த ஆவிகள் வேதத்தை விசுவாசிப்பதாகக் கூறும்போதும், சபை அமைப்புகளின்மீது மரியாதையை வெளிக்காட்டும்போதும், அவைகளுடைய கிரியை தெய்வீக வல்லமையின் ஒரு வெளிப்பாடு என்பதுபோல ஏர்றுக்கொள்ளப்படும். — GC 588 (1911). கச 113.3

இந்த நமது உலகத்திலே, இழிந்த ஒழுக்கநிலைக்கு உறுதியான அரண் போன்றிருப்பது, கைவிடப்பட்ட பாவியின் அநீதியான வாழ்க்கையோ அல்லது சமுதாயத்தால் ஒதுக்கப்பட்ட மனிதனோ அல்ல; மாறாக, ஒழுக்கநிலையோடு மேன்மையாகவும் மதிப்பு வாய்ந்ததாகவும் காணப்படுகின்ற வாழ்க்கையிலே, சீராட்டி வளர்க்கப்படும் ஒரு பாவமே... நுண்ணறிவு, தாலந்து, இரக்கம், பெருந்தன்மையான அன்பான செயல்கள்கூட ஆத்துமாக்களை வசீகரித்து, அழிவின் விளிம்பிற்குக் கொண்டுசெல்ல, சாத்தான் உபயோகிக்கின்ற மறைவான கண்ணிகளாக மாறலாம். — Ed 150 (1903). கச 113.4