Go to full page →

4 - மீறுதலின் விளைவுகள் தீஇவ 61

தற்தியாக ஆவியை வளர்த்துக்கொள்ள சாலொமோன் தவறி விட்டான்; ஊதாரியாகவும் கொடுமைக்காரனாகவும் அவன் மாறி யதற்கு மிக முக்கியமான காரணம் அதுதான். தீஇவ 61.1

’அவர்கள் நடுவிலே நான் வாசம்பண்ண, எனக்கு ஒரு பரிசுத்த ஸ்தலத்தை உண்டாக்குவார்களாக’ எனும் தேவ கட்டளையை மக்களிடம் சீனாய் மலை அடிவாரத்தில் மோசே தெரிவித்தான். யாத் 25:8. இஸ்ரவேலர் அதை நிறைவேற்றப் போதுமான காணிக்கைகளைக் கொண்டுவந்தார்கள். ‘எவர்களை அவர்கள் இருதயம் எழுப்பி, எவர்களை அவர்கள் ஆவி உற்சாகப் படுத்தினதோ அவர்கள் எல்லாரும் ஆசரிப்புக் கூடாரத்தின் வேலைக்கு ஏற்றவை களைக் கர்த்தருக்குக் காணிக்கை யாகக் கொண்டுவந்தார்கள். யாத் 35:21. பரிசுத்த ஸ்தலம் கட்ட, மிகப் பிரமாண்டமான ஆயத்தம் அவசியப் பட்டது; விலையேறப்பெற்ற பொருட்கள் ஏராளம் தேவைப்பட்டன. ஆனால், மக்கள் மனதாரக் கொடுத்த காணிக்கைகளை மட்டுமே தேவன் ஏற்றுக்கொண்டார். ‘மனப்பூர்வமாய் உற்சாகத்துடன் கொடுப்பவன் எவனோ, அவனி டத்தில் எனக்குக் காணிக்கையை வாங்குவீர்களாக’ என்றேமோசே மூலம் மீண்டும் மீண்டும் அறிவித்தார். யாத் 25:2. உன்னதமானவர் வாசம் பண்ண ஓர் இடத்தை ஆயத்தம்பண்ண, அதற்கு முதல் தேவை தற்தியாக ஆவியும் தேவ பக்தியும் ஆகும். தீஇவ 61.2

ஆலயம் கட்டுவதற்கான பொறுப்பை சாலொமோனிடம் தாவீது ஒப்படைத்த சமயத்திலும், அதுபோன்ற தற்தியாக அழைப்புதான் கொடுக்கப்பட்டது. அங்குக் கூடியிருந்த திரளானவர்களிடம், தீஇவ 62.1

இப்போது இஸ்ரவேலர்களில் எத்தனைப் பேர் ஆலயப் பணிக் காக உங்களைக் கர்த்தருக்குக் கொடுக்கத் தயாராக இருக்கிறீர் கள்?’‘ என்று கேட்டான் தாவீது. 1நாளா 29:5. ஆலயம் கட்டுகிற வர்கள் தங்களையே மனதாரக் கொடுக்கவேண்டும்; இந்த அழைப்பை எப்பொழுதும் நீங்கள் மனதில் வைத்திருக்கவேண்டும். தீஇவ 62.2

வனாந்தர ஆசரிப்புக்கூடாரத்தைக் கட்டுகிற வேலைக்குத் தெரிந்து கொள்ளப்பட்ட மனிதருக்கு தேவன் விசேஷித்த திறமை யும் ஞானமும் அருளியிருந்தார். ‘மோசே இஸ்ரவேல் புத்திரரை நோக்கி, “கர்த்தர் யூதாவின் கோத்திரத்தில் பெசலெயேலைப் பேர் சொல்லி அழைத்து, அவன் விசித்திரமான வேலைகளை யோசித் துச் செய்ய, அவனுக்கு ஞானத்தையும் புத்தியையும் அறிவையும் அருளி, அவன் சகலவித வேலைகளையும் செய்யும் படி தேவ ஆவியினாலே அவனை நிரப்பினார். அவன் இருதயத்திலும், தாண் கோத்திரத்து அகோலியாபின் இருதயத்திலும் போதிக்கும் வரத்தை அருளினார். சித்திரவேலையையும் சிற்ப வேலையையும், விசித்திரத்தையல் வேலையையும், சகல விசித்திர நெசவுவேலை களையும் விநோதமான வேலைகளை யூகிக்கிறவர்களும் செய்கிற வர்களும் நிறைவேற்றும் சகலவித வேலைகளையும் செய்யும் படிக்கு அவர்களுடைய இருதயத்தை ஞானத்தினால் நிரப்பினார்” என்றான். அப்பொழுது பரிசுத்த ஸ்தலத்துத் திருப்பணிகளுக்கடுத்த சகல வேலைகளையும், கர்த்தர் கற்பித்தபடியெல்லாம், பெசலெ யேலும் அகோலியாபும், செய்ய அறியும்படிக்குக் கர்த்தரால் ஞான மும் புத்தியும் பெற்ற விவேக் இருதயமுள்ள மற்ற அனைவரும் செய்யத் தொடங்கினார்கள். ‘யாத் 35:30-35; 36:1. தேவன் தேர்ந் தெடுத்த பணியாட்களோடு பரலோக அறிவுஜீவிகளும் ஒத்துழைத் தார்கள். தீஇவ 62.3

அந்தப் பணியாட்களின் வம்சாவழியினர் தங்கள் முற்பிதாக் களுக்கு அருளப்பட்ட திறன்களைப் பெருமளவில் பெற்றிருந் தனர். யூதா கோத்திரத்தாரும் தாண் கோத்திரத்தாருமாகிய இவர் கள் சில காலம் தாழ்மையோடு சுயநலம் இல்லாமல் இருந்தனர். ஆனால், தேவன்மேலிருந்த பற்றையும், சுயநலமின்றி அவரைச் சேவிக்கிற ஆசையையும் தங்களை அறியாமலேயே படிப்படியாக இழந்தார்கள். அவர்கள் செய்த விசித்திர வேலைகளின் வேலைப் பாட்டுத் திறன்களுக்கேற்ப அதிக சம்பளம் கேட்டார்கள். சில தரு ணங்களில், கேட்டபடி அதிக சம்பளம் கிடைத்தது; பல சமயங் களில் அப்படிக் கிடைக்கவில்லை. அதிக சம்பளம் கிடைக்காத வர்கள் பிரதேசங்களுக்கு வேலை தேடிச் சென்றனர். முன்னோர் கள் முன்மாதிரியாகத் திகழ்ந்தவர்கள்; அவர்கள் உள்ளத்தில் தற் தியாக ஆவி நிறைந்திருந்தது. இவர்களோ இச்சிக்கிற ஆவியை உடையவர்களாகி, அதிக சம்பளம் வேண்டுமென்று நினைத்தனர். தேவன் தந்த திறமைகளை அஞ்ஞான அரசர்களுக்குச் சேவை செய்யப் பயன்படுத்தினார்கள்; தங்கள் சிருஷ்டிகருக்கு அவமதிப் பைக் கொண்டுவரக்கூடிய காரியங்களைச் செய்ய, தங்கள் தாலந்து களைச் செலவழித்தார்கள். தீஇவ 62.4

மோரியா மலையில் நடந்த தேவாலயக் கட்டுமானப் பணியை மேற்பார்வையிட, இவர்களில் ஒரு நிபுணனைத் தேடினான் சாலொ மோன். தேவாலயக் கட்டட அமைப்பின் ஒவ்வொரு நுணுக்கமான விவரங்களும் எழுத்துவடிவில் சாலொமோனிடம் தரப்பட்டிருந் தது. அதனால், ஆலயப் பணி செய்ய மனமுவந்து வருகிறவர் களைக் காட்டுமாறு விசுவாசத்தோடு அவன் தேவனிடம் கேட் டிருக்கவேண்டும்; செய்யவேண்டிய வேலைகளைச் செம்மையா கச் செய்வதற்கான விசேஷத்திறமைகளை தேவன் அவர்களுக்கு அருளி யிருப்பார். தேவன்மேல் தனக்குள்ள விசுவாசத்தைச் செயல்படுத்த, அந்தத் தருணத்தைச் சாலொமோன் பயன்படுத்தி யிருக்கவேண்டும்; அவன் அப்படிச் செய்யவில்லை. ‘யூதாவிலும் எருசலேமிலும் இருக்கிறவர்களுமாகிய நிபுணரோடு, பொன்னிலும் வெள்ளியிலும் வெண்கலத்திலும் இரும்பிலும் இரத்தாம்பர நூலி லும் சிவப்பு நூலிலும் இளநூலிலும் வேலை செய்ய அறிந்த’ ஒருவனை அனுப்புமாறு தீரு ராஜாவுக்குச் சொல்லியனுப்பினான் சாலொமோன். 2நாளா 2:7. தீஇவ 63.1

ஈராம் என்பவனை பெனிக்கேயாவின் ராஜா அனுப்பினான். அவன் ‘தாணின் குமாரத்திகளில் ஒரு ஸ்திரீயின் குமாரன்; அவன் தகப்பன் தீருதேசத்தான். ‘வச . 14. ஈராம் தன் தாயின் வழிப்படி அகோலியாபின் வம்சத்தைச் சேர்ந்தவன். சில நூறு வருடங்களுக்கு முன்பு, ஆசரிப்புக் கூடாரத்தைக் கட்டுவதற்கு தேவன் விசேஷித்த ஞானத்தை அந்த அகோலியாபிற்கு வழங்கியிருந்தார். தீஇவ 63.2

சுயநலமின்றி தேவனுக்குச் சேவை செய்யக்கூடிய ஒருவன் தான் சாலொமோனின் வேலையாள் குழுவின் தலைவனாக நிய மிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அப்படிப்பட்ட தன்மை எதுவும் இல்லாத ஒருவன் அந்தப் பதவிக்கு வந்தான். இந்த உல கத்தைத் தன் தெய்வமாகப் போற்றி வந்தவன் அவன். அவன் நாடிநரம்புகளின் ஒவ்வொரு பகுதியிலும் சுயநலநியதிகள்தாம் ஊறிக்கிடந்தன. தீஇவ 63.3

தனக்கிருந்த விசேஷ திறமைகளின் நிமித்தம் அதிக சம்பளம் வேண்டினான் ஈராம். அவனிடம் காணப்பட்ட இந்தத் தவறான நியதிகளைப் படிப்படியாக அவன் கூட்டாளிகளும் ஏற்றுக் கொண்டனர். அவர்கள் ஒவ்வொரு நாளும் அவனோடு சேர்ந்து வேலை செய்யச்செய்ய, தாங்கள் பெற்ற சம்பளத்தை அவன் பெற்று வந்த சம்பளத்தோடு ஒப்பிடும்படியாகத் தூண்டப் பட்டார் கள். எனவே, தாங்கள் செய்துவந்த பணியின் பரிசுத்தத் தன்மையை அவர்கள் மறந்து போனார்கள். சுயத்தை மறுக்கும் மனநிலை அவர்களிடமிருந்து விலகிப்போய்விட்டது. அதற்குப் பதிலாக இச்சிக்கும் ஆவி அவர்கள் மனதில் குடிகொண்டது. அதிக சம்பளம் வேண்டுமென்று வற்புறுத்தினார்கள். அப்படியே அவர் களுக்கும் கொடுக்கப்பட்டது. தீஇவ 64.1

அங்குச் செயல்பட்டு வந்த இந்த மோசமான தன்மைகளின் பாதிப்பு சகல ஆராதனை முறைகளிலும் புகுந்தது; ராஜ்யம் முழு தும் பரவியது. அதிக சம்பளம் வேண்டி, அதைப் பலர் பெற்றுக் கொண்டதால், சுகபோகமாகவும் ஊதாரித்தனமாகவும் வாழ அவர்களுக்கு அது வாய்ப்பாக அமைந்தது. தரித்திரரைப் பணக் காரர்கள் ஒடுக்கினார்கள்; தற்தியாக மன நிலை கிட்டத்தட்ட ஒழிந்துபோனது. நீடித்த விளைவுகளை ஏற்படுத்திய இத்தகைய தன்மைகள் உருவானதற்கு ஒரு முக்கியக் காரணமுண்டு. மனிதர் களிலேயே ஞானியாக ஒரு சமயத்தில் எண்ணப்பட்ட சாலொமோன் இப்போது தன் தேவனை மறந்துபோனதுதான் அந்தக் காரணம். தீஇவ 64.2

வனாந்தர ஆசரிப்புக் கூடாரம் கட்டினவர்களுக்கும் சாலொ மோன் கட்டின தேவாலயப் பணியில் ஈடுபட்டிருந்தவர்களுக்கும் இடையே மனநிலையிலும் நோக்கத்திலும் மாபெரும் வித்தியாசங் கள் இருந்தன. இதில் மிக முக்கியமான பாடம் உள்ளது. சாலொ மோன் காலத்தில் ஆலயம் கட்டினவர்கள் சுயநலத்தை நாடினார்கள். அதுபோலவே இன்றைய உலகிலும் சுயநலக்காரர்கள் பலர் இருக் கிறார்கள். உலகில் இன்று சுயநலம் ஆளுகை செய்கிறது. உயர் பதவியையும் அதிக சம்பளத்தையும் இச்சிக்கிற ஆவிதான் இந்தக் காலத்திலும் எங்கும் பரவிக்கிடக்கிறது. வனாந்தர ஆசரிப்புக் கூடாரத்தைக் கட்டினவர்களிடம் காணப்பட்ட தன்னார்வச் சேவை யையும் சுய மறுப்பையும் இன்றைய ஊழியர்களிடம் காண்பது அரிதாயிருக்கிறது. ஆனால், இயேசுவைப் பின்பற்றுகிறவர்களில் இப்படிப்பட்ட மனநிலையையே ஊக்குவிக்கவேண்டும். தம் சீடர் கள் எவ்வாறு ஊழியம் செய்ய வேண்டுமென்பதற்கு நம் தெய்வீக ஆசிரியர் ஒரு முன்மாதிரியாக இருக்கிறார். அந்த மனநிலை உள்ளவர்களிடமே,’’என்பின்னே வாருங்கள்; உங்களை மனு ஷரைப் பிடிக்கிறவர்களாக்குவேன்’‘ என்று அவர் சொல்கிறார். மத் 4:19. அவர்கள் சேவைக்கு ஊதியமாகக் குறிப்பிட்ட தொகை தரப்போவதாக அவர் வாக்களிக்கவில்லை. அவர்கள் அவரைப் போல சுயமறுப்பும் தற்தியாகமும் உள்ளவர்களாக வாழ வேண்டி யிருந்தது. தீஇவ 64.3

சம்பளத்திற்காக ஊழியம் செய்கிறவர்களாய் நாம் இருக்கக் கூடாது. தேவனுக்காகச் சேவை செய்ய விரும்புகிற நம்முடைய நோக்கத்தில் சுயநலம் இருக்கக்கூடாது. தேவனுக்கு உகந்த சேவை செய்ய முதலில் தேவையானவை சுயநலமற்ற அர்ப்பணிப்பும் தற்தியாக ஆவியுமே. இவையே இன்றும் என்றும் அவசியம். நாம் அவருக்காகச் செய்கிற சேவையில் சுயநலம் ஓர் இழையளவுகூட ஊடுருவிச் செல்வதை நம் ஆண்டவரும் எஜமானுமானவர் விரும்பு வதில்லை. பூலோகப் பரிசுத்த ஸ்தலத்தைக் கட்டினவர்களிடம் பரிபூரணத்தின் தேவன் எதிர்பார்த்த அதே திறமையோடும் மதி நுட்பத்தோடும் ஞானத்தோடும் செம்மையோடும் நாம் வேலை செய்ய வேண்டும். சுயநலத்தைப் பலிபீடத்தின்மேல் வைத்து, அதை ஜீவ பலியாக எரித்தால்தான், நம் மேன்மையான தாலந்து களும் உன்னதமான சேவைகளும் தேவனுக்கு ஏற்புடையவை யாகும். இதனை ஞாபகத்தில் வைத்து, நாம் சகல வேலைகளையும் செய்யவேண்டும். தீஇவ 65.1

இஸ்ரவேல் ராஜா சரியான நியதிகளிலிருந்து விலகி, இறுதி யில் விழுந்து போனதற்கு இன்னொரு காரணமும் உண்டு. தேவ னுக்கு மாத்திரமே உரிய மகிமையைத் தனக்குச் சொந்தமாக்கிக் கொள்ளும் இச்சைக்கு அவன் பணிந்துகொடுத்ததுதான் அந்தக் காரணம். தீஇவ 65.2

தேவாலயத்தைக் கட்டும் பணி சாலொமோனிடம் ஒப்படைக் கப்பட்ட நாள் முதல், அது முடியும்வரையிலும், ‘இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரின் நாமத்திற்கு ஆலயத்தைக் கட்டவேண்டும்’ என்பதே அவன் நோக்கமாக இருந்தது. 2 நாளாகமம் 6:7. தேவா லயப் பிரதிஷ்டையின் போது அங்குக் கூடியிருந்தவர்கள் முன்பாக, அந்த நோக்கம் முழுவதும் வெளிப்பட்டது. அங்கு என் நாமம் விளங்கும்’ என்று யேகோவா சொன்னதாக, ராஜா தனது ஜெபத்தில் தெரிவித்தான். 1இராஜாக்கள் 8:29. தீஇவ 65.3

தேவனுடைய மகத்துவம் சகல தேசங்களிலும் பரவ இருந்த தால், தூரதேசத்திலிருந்து அந்நிய ஜாதியார் வந்து, தேவனிடம் வேண்டிக்கொள்ளும்போது, தேவன் அவர்களுக்குச் செவி கொடுக்க வேண்டுமென்று சாலொமோன் ஜெபித்தான். அது அவ ருடைய பிரதிஷ்டை ஜெபத்தில் நம் மனதைத் தொடுகிற பகுதிகளில் ஒன்று. ‘அந்நிய ஜாதியார் உமது மகத்துவமான நாமத்தையும், உமது ஓங்கிய புயத்தையும் கேள்விப்படுவார்களே’ என்று வேண்டினான் ராஜா. அங்கு வந்து தொழுதுகொள்ளப்போகிற அந்நியர் ஒவ் வொருவருக்காகவும் சாலொமோன் பின்வருமாறு விண்ணப்பித் தான்: ‘பூமியின் ஜனங் களெல்லாரும் உம்முடைய ஜனமாகிய இஸ்ரவேலைப்போல் உமக்குப் பயப்படும் படிக்கும், நான் கட்டின இந்த ஆலயத்துக்கு உம்முடைய நாமம் தரிக்கப்பட்டதென்று அறி யும் படிக்கும், உம்முடைய நாமத்தை அறியத்தக்கதாக, அந்த அந் நிய ஜாதியான் உம்மை நோக்கி வேண்டிக்கொள்வதின்படியெல் லாம் தேவரீர் செய்வீராக’ என்று ஜெபித்தான். வச. 42, 43. தீஇவ 66.1

’கர்த்தரே தேவன், வேறொருவரும் இல்லையென்பதை பூமி யின் ஜனங்களெல்லாம் அறியும்படியாக ‘தேவனுக்கு உண்மையும் உத்தமுமாக இருக்கவேண்டுமென்று அந்த ஆராதனையின் முடி வில் இஸ்ரவேலருக்குப் புத்தி சொன்னான் சாலொமோன். வச. 60. தீஇவ 66.2

சாலொமோனைவிட பெரியவரான தேவனே அந்தத் தேவா லயத்தை வடிவமைத்தவர். தேவ ஞானமும் மகிமையும் அதில் வெளிப்பட்டது. இந்த உண்மையை அறியாதவர்கள், ‘அதை வடி வமைத்துக் கட்டினவன் சாலொமோன்’ என்று புகழ்ந்தார்கள். ஆனால், தான் தான் தேவாலயக்கட்டடத்தைத் திட்டமிட்டதாகவும், கட்டிமுடித்ததாகவும் சாலொமோன் உரிமை கொண்டாடவில்லை. தீஇவ 66.3

சேபாவின் ராஜஸ்திரீ சாலொமோனைச் சந்திக்க வந்தபோதும் அவன் அவ்வாறே நடந்துகொண்டான். அவனுடைய ஞானத்தை யும், அவன் கட்டின் மகிமையான ஆலயத்தையும் பற்றி அவள் கேள்விப்பட்டு, விடுகதைகளினால் அவனைச் சோதிக்கத் தீர்மானித்திருந்தாள்; தானே அவனுடைய பிரசித்தியான வேலைப் பாடுகளை நேரில் காண விரும்பினாள். மிகுந்த பரிவாரத்தோடும், கந்தவர்க்கங்களையும், மிகுதியான பொன்னையும் இரத்தினங் களையும் சுமக்கிற ஒட்டகங்களோடும்’ எருசலேமை நோக்கி நெடுந் தூரம் பயணித்து வந்திருந்தாள். ‘அவள் சாலொமோனிடம் வந்த போது, தன் மனதில் இருந்த எல்லாவற்றையுங் குறித்து, அவனிடத் தில் சம்பாஷித்தாள். அவனிடத்தில் இயற்கையின் இரகசியங் கள் குறித்து அவள் கேட்டாள். இயற்கையின் தேவனான மகத்துவ சிருஷ்டிகர் பற்றி சாலொமோன் அவளுக்குப் போதித்தான். உன்ன தமான பரலோகத்தில் வாசம் செய்கிறவரும் சகலத்தையும் ஆளு பவருமாய் அவர் இருக்கிறாரென்று சாலொமோன் சொல்லிக் கொடுத்தான். ‘சாலொமோன் அவள் கேட்டவைகளையெல்லாம் விடுவித்தான். அவளுக்கு விடுவிக்கக்கூடாதபடிக்கு, ஒன்றாகிலும் ராஜாவுக்கு மறைபொருளாய் இருக்கவில்லை . 1இராஜா 10:1-3; 2நாளா 9:1, 2. தீஇவ 66.4

’சேபாவின் ராஜஸ்திரீ சாலொமோனுடைய சகல ஞானத்தை யும், அவன் கட்டின அரமனையையும் கண்டபோது அவள் ஆச் சரியத்தால் பிரமை கொண்டாள்.’ ‘உம்முடைய வர்த்தமானங் களையும் உம்முடைய ஞானத்தையும் குறித்து நான் என் தேசத்தில் கேட்ட செய்தி மெய்யாயிற்று. நான் வந்து அதை என் கண்களால் காணுமட்டும் அந்த வார்த்தைகளை நான் நம்பவில்லை; இவை களில் பாதியாகிலும் எனக்கு அறிவிக்கப்படவில்லை என்று காண் கிறேன்; நான் கேள்விப் பட்ட பிரஸ்தாபத்தைப் பார்க்கிலும், உம் முடைய ஞானமும் செல்வமும் அதிகமாயிருக்கிறது. உம்முடைய ஜனங்கள் பாக்கியவான்கள்; எப்போதும் உமக்கு முன்பாக நின்று, உம்முடைய ஞானத்தைக் கேட்கிற உம்முடைய ஊழியக்காரரும் பாக்கியவான்கள்’ என்று அறிக்கையிட்டாள். 1இராஜா 10:4-8; 2நாளா 9:3-6. தீஇவ 67.1

அந்த ராஜஸ்திரீ திரும்பிச் செல்வதற்குள் தன்னுடைய ஞானத் திற்கும் செழிப்புக்கும் ஆதாரமானவரைப்பற்றி, அவளுக்கு முற்றி லும் போதித்திருந்தான் சாலொமோன். எனவேதான், அவள் மனிதரைப் புகழாமல், ‘உம்மை இஸ்ரவேலின் சிங்காசனத்தின் மேல் வைக்க, உம்மேல் பிரியங்கொண்ட உம்முடைய தேவனாகிய கர்த்தர் ஸ்தோத்திரிக்கப்படுவராக; கர்த்தர் இஸ்ரவேலை என்றைக் கும் சிநேகிக்கிறபடியினால், நியாயமும் நீதியும் செய்கிறதற்கு உம்மை ராஜாவாக ஏற்படுத்தினார்’ என்று போற்றும்படி ஏவப்பட் டாள். 1இராஜா 10:9. சகல ஜனங்கள் மத்தியிலும் தேவதன்மை பற்றிய இப்படிப்பட்ட ஒரு தாக்கம்தான் ஏற்படவேண்டும். சாலொ மோனின் இருதயத்திலேதேவன் அருளியஞானத்தைக் கேட்பதற்கு பூமியின் ராஜாக்கள் எல்லாரும் அவன் முகதரிசனத்தைத் தேடின போது, வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தவரும், சர்வ லோகத்தையும் ஆளுகிறவரும், சர்வஞானியுமான தேவனைப் பய பக்தியுடன் சுட்டிக்காட்டி, தன் தேவனையே மகிமைப்படுத்தி னான் சாலொமோன். ஆனாலும், அவன் தொடர்ந்து அப்படியே இருந்துவிடவில்லை . 2நாளா 9:23. தீஇவ 67.2

தன்னை நாடி வந்தவர்களின் கவனத்தை, தனக்கு ஞானமும் ஐசுவரியமும் மகிமையும் தந்த தேவனை நோக்கித் திருப்புகிற தாழ்மையான சிந்தையில் சாலொமோன் தொடர்ந்து நிலைத்திருந் திருப்பானானால், அவன் வரலாறு எவ்வளவு மேன்மையாக அமைந்திருக்கும்! அவனுடைய நற்பண்புகளைப் பதிவுசெய்த வேதாகமம், அவன் விழுகை பற்றிய உண்மையை அறிவிக்கவும் தவறவில்லை. புகழின் உச்சிக்குச் சென்று, செல்வச்செழிப்பின் நன்மைகள் நிறைந்தபோது, சாலொமோன் குழம்பிப்போய், தன் சமநிலை தவறி, வீழ்ச்சி அடைந்தான். உலக மனிதர்கள் அவனை எப்பொழுதும் புகழ்ந்து கொண்டே இருந்ததால், அந்த முகஸ்துதி களை எதிர்த்து அவனால் நெடுநாட்கள் தாக்குப்பிடிக்க முடிய வில்லை. தேவனை மகிமைப்படுத்தும்படி அவனுக்கு ஞானம் அருளப்பட்டது; அவனோ அதை நினைத்து அகந்தை கொண் டான். ‘இஸ்ரவேலின் கர்த்தராகிய தேவனுடைய நாமத்தின் ‘ மகிமைக்காக ஈடு இணையற்ற அழகோடு திட்டமிட்டு அந்தக் கட்டடத்தைக் கட்டினார்கள்; அதன் பெருமைக்குரிய தேவனை மட்டுமே மனிதர்கள் புகழ்ந்திருக்க வேண்டும். அதற்குப் பதில், தன்னைப் புகழ அவன் இடங்கொடுத்துவிட்டான். தீஇவ 68.1

இவ்வாறுதான் யேகோவாவின் ஆலயமானது ‘சாலொமோ னின் தேவாலயம்’ என்று தேசம் முழுவதிலும் அழைக்கப்படலா யிற்று. ‘உயர்ந்தவன் மேல் உயர்ந்தவருக்குச் சொந்தமான மகிமை யை மனிதன் தனக்குச் சொந்தமாக்கினான். பிரசங்கி 5:8. ‘நான் கட்டின இந்த ஆலயத்திற்கு உம்முடைய நாமம் தரிக்கப்பட்டது’ என்று சாலொமோன் சொன்ன ஆலயம் இன்றும்கூட ‘யேகோவாவின் ஆலயம்’ என்று அழைக்கப்படாமல், ‘சாலொமோனின் தேவால யம்’ என்றே பெரும்பாலும் அழைக்கப்படுகிறது. 2நாளா 6:33. தீஇவ 68.2

பரலோகம் தனக்கு அருளியிருக்கிற ஈவுகளுக்கான கனத் தைத் தனக்குச் செலுத்துமாறு அனுமதிப்பதுதான் மனிதனின் மிகப் பெரும் பெலவீனமாக இருக்கிறது. மெய்க்கிறிஸ்தவன் ஒருவன் தேவனையே சகலத்திலும் முதலும் கடைசியும் முக்கியமுமாக எத்தகைய பேராசையான நோக்கங்களாலும் தேவன் மேலான அவனுடைய அன்பைக் கொடுக்கமுடியாது. அவன் உறுதியோடும் விடாமுயற்சியோடும் தன் பரலோகப் பிதாவிற்கு மகிமையைக் கொடுப்பான். தேவனுடைய நாமத்தை உயர்த்துவதில் நாம் உண்மையுள்ளவர் களாக இருக்கும்போதுதான், நம்முடைய உணர்வுகள் தெய்வீக கண்காணிப்பின் கீழ் இருக்கும். அப்போது தான், நாம் நம்முடைய ஆவிக்குரிய வல்லமையையும் அறிவாற் றலையும் வளர்த்துக் கொள்ளமுடியும். தீஇவ 68.3

தெய்வீக ஆசிரியரான இயேசு தம் பிதாவின் நாமத்தை எப் பொழுதும் மகிமைப்படுத்தினார். ‘பரமண்டலங்களில் இருக்கிற எங்கள் பிதாவே, உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக’ என்று ஜெபிக்குமாறு அவர் தம்முடைய சீடர்களுக்குப் போதித்தார். மத் 6:9. எனவேதான், ‘மகிமை உம்முடையது’ என்று பிதாவிடம் ஒத்துக்கொள்ள அவர்கள் மறக்கவில்லை . மத் 6:13. மனிதரின் கவனத்தைத் தம்முடைய வல்லமைக்கு ஆதாரமானவரை நோக்கித் திருப்பிவிடுவதில் மாமருத்துவராம் இயேசு கவனமாக இருந்தார். எனவேதான், ‘ஊமையர் பேசுகிறதையும் ஊனர் சொஸ்தமடை கிறதையும் சப்பாணிகள் நடக்கிறதையும்’ அந்தத் திரளான ஜனங் கள் கண்டபோது அவரை மகிமைப்படுத்தாமல், ‘இஸ்ரவேலின் தேவனை மகிமைப்படுத்தினார்கள். ‘மத் 15:31. தாம் சிலுவையில் அறையப் படுவதற்குச் சற்று முன்பாகச் செய்த அற்புதமான ஜெபத்தில், ‘பூமியிலே நான் உம்மை மகிமைப்படுத்தினேன். உம் முடைய குமாரன் உம்மை மகிமைப்படுத்தும் படி நீர் உம்முடைய குமாரனை மகிமைப்படுத்தும். நீதியுள்ள பிதாவே, உலகம் உம்மை அறியவில்லை, நான் உம்மை அறிந்திருக்கிறேன்; நீர் என்னை அனுப்பினதை இவர்களும் அறிந்திருக்கிறார்கள். நீர் என்னிடத்தில் வைத்த அன்பு அவர்களிடத்தில் இருக்கும் படிக்கும், நானும் அவர் களில் இருக்கும் படிக்கும், உம்முடைய நாமத்தை அவர்களுக்குத் தெரியப்படுத்தினேன்; இன்னமும் தெரியப் படுத்துவேன்’‘ என்று வேண்டிக்கொண்டார் கிறிஸ்து. யோவான் 17:4, 2, 26, 27. தீஇவ 69.1

’ஞானி தன் ஞானத்தைக் குறித்து மேன்மை பாராட்ட வேண் டாம்; பராக்கிரமன் தன் பராக்கிரமத்தைக்குறித்து மேன்மைபாரட்ட வேண்டாம்; ஐசுவரியவான் தன் ஐசுவரியத்தைக் குறித்து மேன்மை பாராட்ட வேண்டாம்; மேன்மை பாராட்டுகிறவன் பூமியிலே கிருபையையும் நியாயத்தையும் நீதியையும் செய்கிற கர்த்தர் நான் என்று என்னை அறிந்து உணர்ந்திருக்கிறதைக்குறித்தே மேன்மை பாராட்டக்கடவன் என்று கர்த்தர் சொல்லுகிறார்; இவைகளின் மேல் பிரியமாயிருக்கிறேன்’ என்று கர்த்தர் சொல்லுகிறார். எரே 9:23, 24. தீஇவ 69.2

’தேவனுடைய நாமத்தைப் பாட்டினால் துதித்து,
அவரை ஸ்தோத்திரத்தினால் மகிமைப்படுத்துவேன்.’


”கர்த்தாவே, தேவரீர் மகிமையையும் கனத்தையும் வல்லமையையும்
பெற்றுக்கொள்ளுகிறதற்குப் பாத்திரராயிருக்கிறீர்;
நீரே சகலத்தையும் சிருஷ்டித்தீர்.
உம்முடைய சித்தத்தினாலே அவைகள் உண்டாயிருக்கிறவைகளும்
சிருஷ்டிக்கப்பட்டவைகளுமாய் இருக்கிறது” என்றார்கள்.
‘என் தேவனாகிய ஆண்டவரே, உம்மைஎன் முழு இருதயத்தோடும் துதித்து,
உமது நாமத்தை என்றென்றைக்கும் மகிமைப்படுத்துவேன்’
”என்னோடேகூடக் கர்த்தரை மகிமைப்படுத்துங்கள்,
......ஒருமித்து அவர் நாமத்தை உயர்த்துவோமாக.’ தீஇவ 70.1

சங்69:30; வெளி 4:11; சங் 86:12; 34:3.

இப்படிச் செய்வதற்குப் பதிலாக, இஸ்ரவேலர் தங்கள் சுய மகிமையைத் தேடினார்கள்; அவர்களிடம் தியாகமனப்பான்மை இல்லாமல் போய்விட்டது. மேலும், அவர்களுக்கான தேவதிட்டத் திலிருந்து இன்னொரு விதத்திலும் தடம் புரள ஆரம்பித்தார்கள். அதாவது, தம்முடைய மக்கள் உலகத்திற்கு ஒளியாக விளங் க வேண்டுமென்கிற தேவனுடைய திட்டத்திலிருந்தும் வழிவிலகி னார்கள். அவர்கள் தங்கள் வாழ்க்கையின் மூலம், அவருடைய பிரமாணத்தின் மகிமையைப் பிரகாசிப்பிக்க வேண்டியிருந்தது. இந்தத் திட்டத்தை நிறைவேற்றும்படி, தெரிந்துகொள்ளப்பட்ட தேசத்தை பூமியின் சகல தேசங்களுக்கும் மத்தியில் மிக முக்கிய மான இடத்தில் வைத்திருந்தார் தேவன். தீஇவ 70.2

சாலொமோனின் நாட்களில், வடக்கே ஆமாத் முதல் தெற்கே எகிப்துவரையிலும், மத்திய தரைக்கடலிலிருந்து ஐபிராத்து நதி வரையிலும் இஸ்ரவேல் ராஜ்யமானது பரவியிருந்தது. உலக வர்த்தகத்திற்கு ஏதுவான நெடுஞ்சாலைகள் பல இயற்கையாகவே அந்தப் பகுதிகளின் ஊடே அமைந்திருந்தன. தூரதேசங்களைச் சேர்ந்த வணிகர்கள் எப்பொழுதும் அதன் வழியே போக்கும் வரத்து மாக இருந்தார்கள். இதன்மூலம் சாலொமோனுக்கும் அவனுடைய மக்களுக்கும் நல்ல வாய்ப்பு கொடுக்கப்பட்டது. ராஜாதி ராஜாவின் குணத்தைச் சகல தேசத்தாருக்கும் வெளிப்படுத்தியிருக்கலாம். தேவனுக்குப் பயந்து, அவருக்குக் கீழ்ப்படியும்படி அவர்களுக்குப் போதித்திருக்கலாம். இந்த அறிவை உலகம் முழுவதிலும் இஸ்ர வேலர் பரப்பவேண்டியிருந்தது. பலமுறை போதனைகள் மூலம் அவரை அறிந்து, அவரை நோக்கிப் பார்க்கும் யாவரும் பிழைக்கும் படி, சகல தேசத்தாருக்கும் முன்பாக அவர் உயர்த்தப்பட வேண்டி யிருந்தது. தீஇவ 70.3

சுற்றிலுமிருந்த தேசங்களுக்குக் கலங்கரை விளக்கமாக ஏற் படுத்தப்பட்டிருந்த ஒரு தேசத்தின் தலைவனாக நியமிக்கப்பட்டான் சாலொமோன். தேவனையும் அவருடைய சத்தியத்தையும் அறிய யாத மக்களைப் பிரகாசிப்பிக்கவும், இஸ்ரவேலரை அந்த வேலைக் கான மாபெரும் இயக்கமாக உருவாக்குவதற்கும் அவன் முயன் றிருக்கவேண்டும்; தேவன் தனக்குத் தந்த ஞானத்தையும் செல் வாக்கின் வல்லமையையும் அதற்கே அவர் பயன்படுத்தியிருக்க வேண்டும். தெய்வீக போதனைகளை உண்மையாய்ப் பின்பற்றும் படிதிரளானவர்களை அதன் மூலம் ஆதாயப்படுத்தியிருக்கலாம்; பிற தேசத்தாரின் தீய பழக்கங்களிலிருந்து இஸ்ரவேலைப் பாது காத்திருக்கலாம். அது மகிமையின் தேவனுக்குப் பெரும் கனத்தைக் கொண்டு வந்திருக்கும். சாலொமோனோ இந்த உன்னத நோக்கத்தை மறந்தான். தன் நாட்டின் வழியே போக்கும் வரத்துமாய் இருந்த பிற நாட்டவருக்கும், தன் நாட்டின் முக்கிய நகரங்களில் தங்கியிருந்த பிற நாட்டவருக்கும் சத்தியம் சொல்கிற வாய்ப்புகளை அவன் பயன்படுத்தத் தவறிவிட்டான். தீஇவ 71.1

சாலொமோனின் இருதயத்திலும் சகல மெய் இஸ்ரவேலரின் இருதயங்களிலும் ஊழியநோக்கத்தைத் தேவன் விதைத்திருந்தார்; வியாபார நோக்கம் அதை அகற்றிவிட்டது. அநேக தேசங்களும் டன் தொடர்பு ஏற்பட்டதால் கிட்டிய வாய்ப்புகளைச் சொந்த நல னுக்காகப் பயன்படுத்தினார்கள். வணிக நுழைவு வாயில்களில் அரணான பட்டணங்களைக் கட்டி, தன் அரசியல் செல்வாக்கைப் பலப்படுத்த முயன்றான் சாலொமோன். சிரியா - எகிப்து சாலையில் யோப்பாவிற்கு அருகாமையில் அமைந்திருந்த கேசேரைத் திரும்பக் கட்டினான். யூதாவின் மையப்பகுதியிலிருந்து கேசேருக் கும் கடற்கரைக்கும் செல்லும் நெடுஞ்சாலையின் நுழைவுவாயிலாக அமைந்திருந்த பெத்தொரோனையும் திரும்பக் கட்டினான்; அந்தப் பட்டணம் எருசலேமிற்கு மேற்கே இருந்தது. எருசலேமிலிருந்து வடதிசையில் சென்ற தமஸ்கு - எகிப்து வணிகச்சாலையில் இருந்த மெகிதோவையும் திரும்பக் கட்டினான். கிழக்கிலிருந்து சென்ற வணிகச்சாலைகளின் ஓரமாக அமைந்திருந்த வனாந்தரத்திலுள்ள தத்மோரையும் ‘ அவன் திரும்பக் கட்டினான். 2நாளா 8:4. இந்தப் பட்டணங்கள் எல்லாம் அரணான கோட்டைகளுடன் கட்டப் பட்டிருந்தன. ‘ஏதோம் தேசத்தில் சிவந்த சமுத்திரக்கரையிலே தீஇவ 71.2

ஏ..................................................................’ செய்வித்தான். சிவந்த சமுத் திரத்தின் முகத்துவாரத்தில் வர்த்தக வசதிக்கான அனுகூலங்கள் ஏற்பட்டன. தீருவின் திறமை மிக்க கப்பலோட்டிகள், ‘சாலொ மோனுடைய வேலைக்காரரோடேகூட இந்தக் கப்பல்களில் ஆட் களை ஏற்றிக்கொண்டு, பயணித்து, ‘ஓப்பீருக்குப் போய், அவ் விடத்திலிருந்து பொன்னையும் மிகுந்த வாசனை மரங்களையும் இரத்தினங்களையும் கொண்டுவந்தார்கள். 2நாளா8:18; 1இராஜா 9:26, 28; 10:11. தீஇவ 72.1

இராஜாவுடைய வருமானமும் அவர் குடிமக்கள் பலருடைய வருமானமும் அதிகமாகப் பெருகியது. ஆனால், அதற்கு அவர் கள் கொடுத்த விலைதான் என்ன! தேவ வார்த்தைகள் யாரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்ததோ அவர்கள் பேராசையும் குறுகிய பார்வையும் உடையவர்களாக இருந்ததால், அந்த நெடுஞ்சாலை களில் கூட்டம் கூட்டமாகச் சென்றுவந்த எண்ணற்றோர் யேகோ வாவை அறியாமலேயே போகவேண்டியதாயிற்று. தீஇவ 72.2

பூலோக வாழ்வில் கிறிஸ்து சென்ற வழிக்கும், சாலொமோன் சென்ற வழிக்கும் மாபெரும் வித்தியாசங்கள் இருந்தன. இரட்ச கர் ‘சகல வல்லமையையும் பெற்றிருந்தபோதும், அதை ஒரு போதும் தம் சுயநன்மைக்காகப் பயன்படுத்தியதில்லை . ‘உலகத் தைக்கைப் பற்றவேண்டும்; உலகமேன்மையைப் பெறவேண்டும்’ என்பது போன்ற எத்தகைய எண்ணமும், மனித இனத்திற்கான அவருடைய பூரண சேவையைக் களங்கப்படுத்தவில்லை. ‘நரிக ளுக்குக் குழிகளும் ஆகாயத்துப் பறவைகளுக்குக் கூடுகளும் உண்டு; மனுஷ குமாரனுக்கோ தலை சாய்க்க இடமில்லை” என் றார் அவர். மத்தேயு 8:20. இன்றைய அவசர அழைப்புக்குச் செவி கொடுத்து, எஜமானனுடைய சேவையைச் செய்ய வருகிற எவரும், அவருடைய வழிமுறைகளைக் கற்றுக்கொள்ள வேண்டும். இரட்ச கர்தாம் சென்ற இடங்களிளெல்லாம் தமக்குக் கிடைத்த வாய்ப்புகள் அனைத்தையும் ஊழியத்துக்குச் சாதகமாக்கிக் கொண்டார். தீஇவ 73.1

அங்குமிங்குமாக அலைந்து திரிந்த அவர், இடையிடையே கப்பர்நகூமில் தங்குவதுண்டு. அதனால், அது அவருடைய ‘சொந்த நகரம்’ என்று அழைக்கப்பட்டது. மத்தேயு 9:1. தமஸ் குவிலிருந்து எருசலேமுக்கும் எகிப்திற்கும் மத்தியதரைக் கடலுக் கும் செல்லும் நெடுஞ்சாலையில் கப்பர்நகூம் அமைந்திருந்ததால், இரட்சகரின் ஊழியத்திற்குப் பொருத்தமான இடமாக அது திகழ்ந் தது. பல தேசங்களிலிருந்தும் மக்கள் அந்நகரம் வழியாகச் சென் றார்கள்; இளைப்பாற அங்குத் தங்கினார்கள். சகல தேசங்களி லிருந்தும் வெவ்வேறு நிலையிலுள்ளவர்கள் அங்கு வந்தார்கள்; அவர்களை இயேசு அந்த நகரத்தில் சந்தித்தார். அவர்கள் மூலம் அவருடைய போதனைகள் மற்ற தேசங்களையும், அங்கிருந்த பல குடும்பங்களையும் சென்றடைந்தன. இதன் வாயிலாக, மேசியாவைச் சுட்டிக்காட்டின் தீர்க்கதரிசனங்கள் மேல் மக்களுக்கு ஆர்வம் எழுந் தது; மக்களின் கவனம் இரட்சகரைநோக்கி ஈர்க்கப்பட்டது; அவ ருடைய ஊழியப்பணியின் நோக்கம் உலகத்தாருக்கு வெளிப்பட் டது. தீஇவ 73.2

இஸ்ரவேலரின் நாட்களைவிட இன்றைய நாட்களில், சகல வித ஆண்களோடும் பெண்களோடும் தொடர்பை ஏற்படுத்து வதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன: போக்குவரத்துக்கான வழிமுறைகளும் ஆயிரம் மடங்கு பெருகியுள்ளன. தீஇவ 73.3

உன்னதமானவருடைய இன்றைய தூதுவர்களும் இக்கால நெடுஞ்சாலைகளில் கிறிஸ்துவைப்போல பணி செய்யவேண்டும். ஏனெனில், பிரயாணத்திற்காக உலகின் எல்லாப் பகுதிகளிலும் ருந்து வந்துகொண்டும் போய்க்கொண்டும் இருக்கிற ஏராளமான வர்களை அவர்கள் அங்குச் சந்திக்கக்கூடும். இயேசுவைப்போல தேவனில் தங்களை மறைத்தவர்களாக, சுவிசேஷ விதையை விதைக்க வேண்டும்; பரிசுத்த வேதாகமத்தின் விலையுயர்ந்த சத்தி யங்களைப் பிறருக்கு எடுத்துரைக்க வேண்டும். அது அவர்கள் மன திலும் இருதயத்திலும் ஆழமாக வேர்விட்டு, நித்திய ஜீவனுக்கேது வாகத் துளிர்விடும். தீஇவ 74.1

உன்னதமான நோக்கத்தை நிறைவேற்ற இஸ்ரவேலர் அழைக் கப் பட்டிருந்தனர். ஆனால், அவர்களும் அவர்கள் அரசனும் அதிலிருந்து விலகினார்கள். அந்நாட்களில் அவர்கள் செய்த தவறு தரும் பாடங்கள் முக்கியத்துவம் நிறைந்தவை. தாங்கள் தவறும்படி அவர் கள் எதில் பெலவீனராகக் காணப்பட்டார்களோ, அதில் இன்றைய இஸ்ரவேலர்கள், அதாவது, கிறிஸ்துவினுடைய மெய்ச் சபையின் பரலோகப் பிரதிநிகள் பெலவான்களாய்க் காணப் படவேண்டும். மனிதனிடம் ஒப்படைக்கப்பட்ட பணியை நிறை வேற்றுவதும், இறுதித் தீர்ப்புக்கான நாளை முன்னறிவிப்பதும் அவர்கள்மேல் விழுந்த கடமையாயிருக்கிறது. சாலொமோன் ஆளுகையின் நாட்களில் இஸ்ரலேரை மேற்கொண்ட அதே தாக்குதல்களை இன்றும் நாம் சந்தித்தாகவேண்டும். சகல நீதிக் கும் எதிரியானவனுடைய வல்லமைகள் வலுப்பெற்றுள்ளன. தேவனுடைய வல்லமையால் மாத்திரமே நாம் வெற்றிபெற முடியும். ஆத்துமாக்களை இரட்சிப்பதற்கான ஒவ்வொரு தருணத்தையும் ஞானமாகப் பயன்படுத்தும் படி, நாம் நம்மை நம்பாமல் சுய மறுப் பின் ஆவியை உடையவர்களாக தேவனை மாத்திரமே சார்ந்திருக் கும் பழக்கத்தை வளர்க்கவேண்டும்; நமக்கு முன் நிற்கும் போராட் டம் அதற்கே நம்மை அழைக்கிறது. மனிதரைக்காட்டிலும் தேவனை மகிமைப்படுத்தினார் இயேசு. சுவிசேஷத்தின் ஆசீர்வாதங்களைப் பெறவேண்டிய நிலையில் இருந்தவர்களுக்கு அன்போடும் உற்சா கத்தோடும் சேவை செய்தார். இவற்றில் கிறிஸ்துவின் தற்தியாக மனப்பான்மை அன்று வெளிப்பட்டது. இன்று பாவ இருளில் விழுந்துகிடக்கிற உலகத்தாருக்கு, பரிசுத்தத்தின் மேன்மையை அப் படிப்பட்ட மனப்பான்மையோடு தேவசபையினர் வெளிப்படுத்த, ஒற்றுமையோடு முன்னேற வேண்டும். அப்போது தேவசபை அவ ருடைய ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்ளும். தீஇவ 74.2