Go to full page →

5 - சாலொமோனின்மனந்திரும்புதல் தீஇவ 75

சாலொமோன் ஆட்சியில் ஆண்டவர் இருமுறை அவருக்குத் தரிசனமாகி ஆலோசனை தந்தார்; அவனை அங்கீகரித்தார். கிபி யோனில் ஞானம், ஐசுவரியம், புகழ்பற்றிய வாக்குத்தத்தம் இராத் தரிசனத்தில் கொடுக்கப்பட்டது; தாழ்மையோடும் கீழ்ப் படித லோடும் இருக்கும்படி புத்தி சொல்லப்பட்டது. ஆலயப் பிரதிஷ் டைக்குப்பின் மீண்டும் ஆண்டவர் தரிசனமாகி, உண்மையோடு இருக்கும் படி அறிவுறுத்தினார். தெளிவான புத்திமதிகளும் அருமையான வாக்குத்தத்தங்களும் சாலொமோனுக்கு அருளப் பட்டன. வாழ்விலும் குணத்திலும் எல்லாச் சூழ்நிலைகளிலும் பரலோகத்தின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற மிகவும் பொருத்தமான வனாகத் தெரிந்தான். ஆனாலும், அவனைப்பற்றி 1இராஜா 11:9, 10 சொல்வதைப் பாருங்கள்: ‘அவன் கர்த்தருடைய கட்டளைக்குக் கீழ்ப்படியவில்லை. இஸ்ரவேலரின் தேவனாகிய கர்த்தரைப் பின்பற்றுவதிலிருந்து அவன் விலகிப்போனான். எனவே, கர்த்தர் சாலொமோன் மீது கோபங்கொண்டார். கர்த்தர் அதற்கு முன்பு அவனிடம் இருமுறை தோன்றினார். அவர் அவனிடம், ‘’அந்நிய தெய்வங்களைப் பின்பற்றக்கூடாது” என்று கூறினார். அக்கிரமத் தால் தன் இருதயத்தைக் கடினமாக்கின அவன் நிலைமை கிட்டத் தட்ட நம்பிக்கையற்றதாகத் தோன்றியது. தீஇவ 75.1

தெய்வீக உறவின் சந்தோஷத்தைவிட்டு விலகி, சரீர உணர்வு களின் சந்தோஷத்தில் நிறைவுகாணத் திரும்பினான். இந்த அனுப் வத்தைப் பற்றி அவனே சொல்கிறான்: தீஇவ 76.1

’’நான் பெரிய வேலைகளைச் செய்தேன்; எனக்காக வீடு களைக் கட்டினேன், திராட்சத்தோட்டங்களை நாட்டினேன். எனக் காகத் தோட்டங்களை உண்டாக்கி, சகலவகைக் கனிவிருட்சங் களையும் நாட்டினேன்; வேலைக்காரரையும் வேலைக்காரி களையும் சம்பாதித்தேன்; வெள்ளியையும் பொன்னையும், ராஜ சம்பத்தையும் மாகாணங்களிலுள்ள பொருள்களையும் சேகரித் தேன்; சங்கீதக்காரரையும் சங்கீதக்காரிகளையும், மனுபுத்திரருக்கு இன்பமான பலவித வாத்தியங்களையும் சம்பாதித்தேன். எனக்கு முன் எருசலேமிலிருந்த எல்லாரைப்பார்க்கிலும் நான் பெரியவர் னும் திரவிய சம்பன்னனுமானேன். தீஇவ 76.2

’’என் கண்கள் இச்சித்தவைகளில் ஒன்றையும் நான் அவை களுக்குத் தடை பண்ணவில்லை; என் இருதயத்துக்கு ஒரு சந்தோ ஷத்தையும் நான் வேண்டாமென்று விலக்கவில்லை; நான் செய்த முயற்சிகளிலெல்லாம் என் மனம் மகிழ்ச்சி கொண்டிருந்தது. என் கைகள் செய்த சகல வேலைகளையும், நான் பட்ட எல்லாப் பிரயா சத்தையும் கண்ணோக்கினேன்; இதோ, எல்லாம் மாயையும் மனதுக்குச் சஞ்சலமுமாயிருந்தது; சூரியனுக்குக் கீழே பலன் ஒன்று மில்லை . தீஇவ 76.3

’’ஞானமானது என்ன என்றும், பைத்தியமும் மதியீனமும் என்ன என்றும் பார்த்து அறியும்படி திரும்பினேன் ; ராஜாவுக்கு பின்வரும் மனுஷன் என்ன செய்யக்கூடும்? செய்ததையே செய் வான். இந்த ஜீவனை வெறுத்தேன்; சூரியனுக்குக் கீழே நான் பட்ட பிரயாசத்தையெல்லாம் வெறுத்தேன்’’. பிர2:4-18. தீஇவ 76.4

’உலக காரியங்களை மேலானதாக நாடும் வாழ்க்கை வெறுமை யானது’ என்பதைத் தன் சொந்தக் கசப்பான அனுபவத்திலிருந்து சாலொமோன் கற்றான். அஞ்ஞான தெய்வங்களுக்கு அவன் பலி பீடங்களைக் கட்டினான். ஆனால், அவை ஆத்துமாவுக்கு இளைப் பாறுதல் தருவதாக வாக்குறுதிகளைக் கொடுத்தாலும், அவை முற்றிலும் மாயமானவை என்று கண்டுகொண்டான். ஆத்துமாவை அலைக்கழிக்கும் அந்தகார எண்ணங்கள் இரவும் பகலும் அவரை வருத்தின. இனி வாழ்வில் சந்தோஷமோ, மனதில் சமாதானமோ இல்லாது போகும் போல் அவருக்குத் தோன்றியது. எதிர்காலம் இருண்டுவிட்டதுபோல் தோன்றியது. அது அவனுக்கு மனமுறி வைத் தந்தது தீஇவ 76.5

ஆனாலும், ஆண்டவர் அவனைக் கைவிடவில்லை. கடிந்து கொண்டு, கடும் நியாயத்தீர்ப்பைச் சொல்லி, அவனுடைய செயல் களின் பாவநிலையை அவனுக்கு உணர்த்த ஆண்டவர் முயன்றார். தம்முடைய பாதுகாப்பை விலக்கினார்; இஸ்ரவேல் ராஜ்யத்தை எதிரிகள் தொந்தரவு செய்யவும், அதினால்ராஜ்யம் பெலவீனப்பட வும் அனுமதித்தார். ‘கர்த்தர் ஏதோமியனாகிய ஆதாத் என்னும் ஒரு விரோதியைச் சாலொமோனுக்கு எழுப்பினார். எலியாதாவின் குமாரனாகிய ரேசோன் என்னும் வேறொரு விரோதியை தேவன் எழுப்பினார்; ரேசோன் சாலொமோனுடைய நாளெல்லாம் இஸ்ர வேலுக்கு விரோதியாகி, சீரியாவின் மேல் ராஜாவாயிருந்து, இஸ்ர வேலைப் பகைத்தான். யெரொபெயாம் என்னும் சாலொமோனின் ஊழியக்காரனும் ராஜாவுக்கு விரோதமாய்க் கையெடுத்தான். யெரொபெயாம் என்பவன் பராக்கிரமசாலியாயிருந்தான்.’ 1இராஜா 11:14 - 28. தீஇவ 77.1

கடைசியாக, தீர்க்கதரிசி ஒருவன் மூலம் அதிர்ச்சியான ஒரு செய்தியைச் சாலொமோனுக்குத் தெரிவித்தார் தேவன்: ‘நான் உனக் குக் கட்டளையிட்ட என் உடன்படிக்கையையும் என் கட்டளை களையும் நீ கைக்கொள்ளாமற்போய் இந்தக் காரியத்தைச் செய்த படியினால், ராஜ்ய பாரத்தை உன்னிடத்திலிருந்து பிடுங்கி, அதை உன் ஊழியக்காரனுக்குக் கொடுப்பேன். ஆகிலும் உன் தகப்ப னாகிய தாவீதினிமித்தம், நான் அதை உன் நாட்களிலே செய்வ தில்லை; உன் குமாரனுடைய கையினின்று அதைப் பிடுங்குவேன்’ என்றார். 1இராஜா 11: 11,12. தீஇவ 77.2

தனக்கு எதிரான இந்த நியாயத்தீர்ப்பினால், கனவிலிருந்து விழித்துக்கொண்டவர்போல மனச்சாட்சியில் உணர்வடைந்து, தன் மூடத்தனத்தை அதன் மெய்யான வெளிச்சத்தில் கண்டான். ஆவியில் சிட்சிக்கப்பட்டு, உடலிலும் மனதிலும் சோர்வடைந்து, உடைசலுள்ள பூலோக நீர்த்தேக்கங்களால் களைப்பும் தாகமும் அடைந்து, இன்னுமொருமுறை ஜீவ நீரூற்றில் பானம் பண்ணத் திரும்பினான். கடைசியில், வேதனை தந்த ஒழுக்கம்தான் அவன் மனதில் மாற்றத்தைக் கொண்டுவந்தது. மூடத்தனத்திலிருந்து விலகமுடியாமல், ‘முற்றிலும் அழிந்தேன்’ என்று பயந்ததுதான் நீண்டகாலமாக அவனை அவதிக்குள்ளாக்கியிருந்தது. இப் பொழுதோ, தனக்குக் கொடுக்கப்பட்ட செய்தியில் இழையளவு நம்பிக்கையைக் கண்டான். ‘தேவன் தம்மை முற்றிலும் தள்ளி விடவில்லை; சவக்குழியிலும் கொடுமையானதும், தன் சொந்தப் பெலத்தால் வெளியேறவும் கூடாதிருந்த அடிமைத்தனத்திலிருந்து தம்மை விடுவிக்க தேவன் தயாராக இருப்பதைப் புரிந்து கொண் டான். தீஇவ 77.3

’உயர்ந்தவன்மேல் உயர்ந்தவர் ‘ தேவன். அவர் வல்லவர்; கிருபை உள்ளவர். இதை நன்றியுணர்வோடு ஒத்துக்கொண்டான் சாலொமோன். பிரசங்கி 5:18. மனம் வருந்தி, தான் இம்மட்டும் விழுந்துகிடந்த நிலையிலிருந்து பரிசுத்தமும், தூய்மையுமான மகா மேன்மையை நோக்கி மீண்டும் சென்றான். பாவத்தின் மோசமான விளைவுகளிலிருந்து தப்ப , அவனுக்கு வழி இல்லாதிருந்தது. தன் கடந்தகாலச் சிற்றின்ப நாட்டத்தின் நினைவுகளைத் தன் மனதி லிருந்து அகற்ற முடியவில்லை. ஆனால், அதே மூடத்தனத்தைப் பிறர் பின்பற்றாதவாறு அவர்களுக்குப் புத்தி சொல்லி, மூடத்தனத் திலிருந்து அவர்களை விலகச் செய்ய அக்கறையோடு பெரு முயற்சி செய்தான். தான் ஆரம்பித்து வைத்த தீமையான செல்வாக் குகளில் பிறரும் அகப்பட்டு, அதிலிருந்து தப்பவே முடியாத நிலைக்குச் செல்லாதபடி, தன் வழிகளின் தாறுமாறைத் தாழ்மை யோடு அறிக்கையிட்டு, எச்சரிப்பைச் சத்தமிட்டுக் கூற நினைத் தான். தீஇவ 78.1

ஒருவன் மெய்யாகவே மனம் மாறினாலும், அவனுடைய கடந்த காலப் பாவங்கள் அவன் நினைவிலிருந்து அகன்று விடுவ தில்லை . தனக்குச் சமாதானம் கிடைத்தவுடன், தன் கடந்தகாலத் தவறுகள் பற்றி அவன் அக்கறையற்று இருந்துவிடமாட்டான். தன் போக்கால் பாவத்திற்குள்ளாக வழிநடத்தப்பட்டவர்கள் குறித்து எண்ணிப்பார்ப்பான். மீண்டும் அவர்களை மெய்யான பாதையில் கொண்டுவர எல்லா வழிகளிலும் முயல்வான். அவன் கண்டு கொண்ட வெளிச்சம் பிரகாசமானதாய் இருப்பதால், மற்றவர்களைச் சரியான பாதையில் நடத்த வேண்டுமென்கிற விருப்பம் அவனில் வலுவாயிருக்கும். அவன் தன் மாறுபாடான போக்கைப் பூசி மெழுகமாட்டான்; தன் தவற்றை இலகுவாக எடுத்துக் கொள்ளவும் மாட்டான். மாறாக, பிறர் எச்சரிப்படையும்படியாக, அபாய ஒலி எழுப்புவான். தீஇவ 78.2

’’மனுபுத்திரரின் இருதயம் தீமையினால் நிறைந்திருக்கிறது’‘ என்கிறான் சாலொமோன். பிரசங்கி 9:3. மீண்டும் அவன், ‘துர்க்கிரி யைக்குத்தக்க தண்டனை சீக்கிரமாய் நடவாதபடியால், மனுபுத் திரரின் இருதயம் பொல்லாப்பைச் செய்ய அவர்களுக்குள்ளே துணி கரங்கொண்டிருக்கிறது. பாவி நூறுதரம் பொல்லாப்பைச் செய்து நீடித்து வாழ்ந்தாலும் என்ன ? தேவனுக்கு அஞ்சி, அவருக்கு முன்பாகப் பயந்திருப்பவர்களே நன்றாயிருப்பார்கள் என்று அறிந் திருக்கிறேன். துன்மார்க்கனோ நன்றாயிருப்பதில்லை; அவன் தேவனுக்கு முன்பாகப் பயப்படாதிருக்கிறபடியால், நிழலைப் போலிருக்கிற அவனுடைய வாழ்நாள் நீடித்திருப்பதுமில்லை’‘ என்கிறான். பிரசங்கி 8:11-13. தீஇவ 78.3

தான் வீணாக்கிய வருடங்களின் வரலாற்றையும், அதிலுள்ள எச்சரிப்பின் பாடங்களையும் ஆவியானவரின் ஏவுதலினால் ராஜா எழுதிவைத்தான். அவன் விதைத்த விதையால் அவனுடைய மக் கள் தீமையை அறுவடை செய்தபோதும், அவனுடைய வாழ்வின் பணி முற்றிலுமாக முடிந்துவிடவில்லை. சாலொமோன் தன்னு டைய பின்னான வருடங்களில் சாந்தத்தோடும் மனத்தாழ்மை யோடும் தன்னுடைய ஜனத்துக்கு அறிவைப் போதித்து, கவன மாய்க் கேட்டாராய்ந்து அநேகம் நீதிமொழிகளைச் சேர்த்து எழுதி னான். இதமான வார்த்தைகளைக் கண்டுபிடிக்க வகைதேடினான். எழுதின வாக்கியங்கள் செவ்வையும் சத்தியமுமானவைகள். ஞானிகளின் வாக்கியங்கள் தாற்றுக்கோல்கள் போலவும் சங்கத் தலைவர்களால் அறையப்பட்ட ஆணிகள் போலவும் இருக்கிறது; அவைகள் ஒரே மேய்ப்பனால் அளிக்கப்பட்டது. ‘’என் மகனே! இவைகளினாலே புத்தியடைவாயாக’‘ என்கிறான். பிரசங்கி 12:9-12. தீஇவ 79.1

’’காரியத்தின் கடைத்தொகையைக் கேட்போமாக, தேவனுக் குப் பயந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொள்; எல்லா மனுஷர் மேலும் விழுந்த கடமை இதுவே. ஒவ்வொரு கிரியையையும், அந்தரங்கமான ஒவ்வொரு காரியத்தையும், நன்மையானாலும், தீமையானாலும் தேவன் நியாயத்திலே கொண்டுவருவார்” என் றும் எச்சரிக்கிறான். பிரசங்கி 12:13,14. தீஇவ 80.1

பரலோகத்தின் மேன்மையான ஈவுகளைவிட்டு விலகி, ஒன்று மில்லாததற்காக தன்னுடைய நாட்களை தான் வீணாக்கின அதே தவறுகளில் வாலிபர்கள் விழுந்துவிடாதபடி அவர்களை எச்ச ரிக்க, விசேஷித்த அக்கறை எடுத்துக்கொண்டான் சாலொமோன். தன்னுடைய போக்கின் துன்மார்க்கத்தை அதிகமதிகமாக உணர்ந்த போதுதான் அவன் அப்படிச் செய்தான் என்பது அவன் பிற்கால எழுத்துகளில் வெளிப்படுகிறது. இளமைப் பருவத்தில், தேவ னைத் தன் ஆறுதலாகவும், தன் ஆதரவாகவும் வாழ்க்கையாகவும் கண்டுகொண்டிருக்க வேண்டிய நேரத்தில், பரலோக வெளிச்சத் தையும் தேவஞானத்தையும் விட்டு தான் திரும்பியதாகவும், யேகோவாவிற்குரிய தொழுகையின் இடத்தில் விக்கிரகத்தை வைத்ததாகவும் துக்கத்தோடும் அவமானத்தோடும் அவன் அறிக்கையிட்டான். அத்தகைய மூடத்தனமான வாழ்வின் மோச மான அனுபவத்திலிருந்து பாடம் கற்றான். இப்பொழுது, தான் கடந்து சென்ற கசப்பான அனுபவத்திலிருந்து மற்றவர்களைக் காப் பாற்ற தீராத வாஞ்சைகொண்டான். தீஇவ 80.2

தேவனைச் சேவிக்க வாலிபர்கள் முன் வைக்கப் பட்டுள்ள சிலாக்கியங்களையும் பொறுப்புகளையும் உண்மையான கனி வோடு எழுதிவைத்துள்ளான்: வெளிச்சம் இன்பமும், சூரியனைக் காண்பது கண்களுக்குப் பிரியமுமாமே. மனுஷன் அநேக வருஷம் ஜீவித்து, அவைகளிலெல்லாம் மகிழ்ச்சியாயிருந்தாலும், அவன் இருளின் நாட்களையும் நினைக்கவேண்டும்; அவைகள் அநேக மாயிருக்கும்; வந்து சம்பவிப்பதெல்லாம் மாயையே. வாலிபனே! உன் இளமையிலே சந்தோஷப்படு , உன் வாலிப நாட்களிலே உன் இருதயம் உன்னைப் பூரிப் பாக்கட்டும்; உன் நெஞ்சின் வழிகளி லும், உன் கண்ணின் காட்சிகளிலும் நட; ஆனாலும் இவையெல் லாவற்றினிமித்தமும் தேவன் உன்னை நியாயத்திலே கொண்டு வந்து நிறுத்துவார் என்று அறி. நீ உன் இருதயத்திலிருந்து சஞ்சலத் தையும், உன் மாம்சத்திலிருந்து தீங்கையும் நீக்கிப்போடு ; இள வயதும் வாலிபமும் மாயையே.’ பிரசங்கி 11:7-10. தீஇவ 80.3

’நீ உன் வாலிபப்பிராயத்திலே உன் சிருஷ்டிகரை நினை;
தீங்கு நாட்கள் வராததற்கு முன்னும்,
எனக்குப் பிரியமானவைகளல்ல என்று
நீ சொல்லும் வருஷங்கள் சேராததற்குமுன்னும்,

’சூரியனும்
வெளிச்சமும்
சந்திரனும்
நட்சத்திரங்களும்
அந்தகாரப்படாததற்கு முன்னும்,
மழைக்குப்பின் மேகங்கள்
திரும்பத் திரும்ப வராததற்கு முன்னும்,

’வீட்டுக் காவலாளிகள் தள்ளாடி,
பெலசாலிகள் கூனிப்போய்,
ஏந்திரம் அரைக்கிறவர்கள் கொஞ்சமானதினால் ஓய்ந்து,
பலகணிவழியாய்ப் பார்க்கிறவர்கள் இருண்டு போகிறதற்கு முன்னும்,

’ஏந்திரசத்தம் தாழ்ந்ததினால் தெருவாசலின் கதவுகள் அடைபட்டு,
குருவியின் சத்தத்துக்கும் எழுந்திருக்கவேண்டியதாகி,
கீதவாத்தியக் கன்னிகைகளெல்லாம் அடங்கிப் போகாததற்கு முன்னும்,

’மேட்டுக்காக அச்சமுண்டாகி,
வழியிலே பயங்கள் தோன்றி,
வாதுமைமரம் பூப்பூத்து,
வெட்டுக்கிளியும் பாரமாகி,
பசித்தீபனமும் அற்றுப்போகாததற்கு முன்னும்,

’மனுஷன் தன் நித்திய வீட்டுக்குப் போகிறதினாலே,
துக்கங்கொண்டாடுகிறவர்கள் வீதியிலே திரியாததற்கு முன்னும்,

’வெள்ளிக்கயிறு கட்டுவிட்டு,
பொற்கிண்ணி நசுங்கி,
ஊற்றின் அருகே சால் உடைந்து,
துரவண்டையில் உருளை நொறுங்கி, ’இவ்விதமாய் மண்ணானது.
தான் முன்னிருந்த பூமிக்குத் திரும்பி,
ஆவி
தன்னைத் தந்த தேவனிடத்திற்கு மறுபடியும் போகாததற்கு முன்னும்,
அவரை உன் வாலிபப்பிராயத்திலே நினை என்று கேட்டுக் கொள்கிறார். தீஇவ 81.1

பிரசங்கி 12:1-7.

வாலிபர்களுக்கு மட்டுமல்ல, வாழ்க்கை ஓட்டத்தை முடிக் கும் தருவாயில் உள்ள முதியவர்களுக்கும் சாலொமோனின் வாழ்க்கை எச்சரிப்பு நிறைந்ததாகவே இருக்கிறது. வாலிபத்தின் தடுமாற்றம் நாம் அறிந்ததே. அது பற்றி நாம் கேள்விப்படுகிறோம்; பார்க்கவும் செய்கிறோம். நன்மைக்கும் தீமைக்குமிடையே வாலிபர்கள் ஊசலாடுகிறார்கள். தீய உணர்வுகளின் அலைகள் அவர்களையும் விஞ்சின் வலிமையுடன் உள்ளன. ஆனால், இத் தகைய தடுமாற்றத்தையும் பொறுப்பின்மையையும் வயது முதிர்ந் தவர்களிடம் நாம் எதிர்பார்ப்பதில்லை; குணம் ஸ்திரப்பட்டு, நிலையான நியதிகளில் வேரூன்றிய நிலையில் அவர்கள் இருப்பார் களென்று எதிர்பார்க்கிறோம். ஆனால், பல சமயங்களில் அப்படி நிகழ்வதில்லை. வைரம் பாய்ந்த மரம் போல நற்குணத்தில் உறுதிப் படவேண்டிய நேரத்தில், இச்சையின் தூண்டுதலுக்கு ஆளாகி, உறுதிகுலைந்தான் சாலொமோன். பெலத்தோடு நிற்கவேண்டிய நேரத்தில், பெலவீனன் ஆனான். தீஇவ 82.1

விழித்திருந்து ஜெபிப்பதில் மட்டுமே வாலிபர்களுக்கும் முதியவர்களுக்கும் தேவையான பாதுகாப்பு இருக்கிறது. இதை இப்படிப் பட்ட முன்மாதிரிகளிலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டும். உயர் அந்தஸ்தும், பெரும் சிலாக்கியங்களும் பாது காப்பைத் தரமுடியாது. ஒருவர் பலவருடங்கள் மெய்யான கிறிஸ் தவ அனுபவத்தைப் பெற்றிருக்கலாம். இருந்தாலும், அவன் சாத்தா னுடைய தாக்குதல்களுக்கு ஆளாக நேரிடும். உட்புறப் பாவத்தோ டும் வெளிப்புற இச்சையோடும் இருக்கிற போராட்டத்தில், ஞானி யும் வல்லவருமான சாலொமோன் கூட தோற்றுவிட்டான். ஒரு மனிதன் எத்தகைய அறிவுத்திறனைப் பெற்றிருந்தாலும், கடந்த காலத்தில் எவ்வளவு உண்மையோடு தேவனைச் சேவித்திருந்தா லும், தன் சுய ஞானத்திலும் ஒழுக்கத்திலும் நம்பிக்கைவைத்தால், ஒருபோதும் தன்னைப் பாதுகாக்க முடியாது. அதைத்தான் அவ னுடைய தோல்வி நமக்குப் போதிக்கிறது. தீஇவ 82.2

ஒருவன் எந்தத் தேசத்தைச் சேர்ந்தவனானாலும் எந்தத் தலை முறையானாலும் அவன் தன்னுடைய குணத்தை மேம்படுத்துவதற் கான செயல்பாடுகளின் அடித்தளமும் மாதிரியும் ஒரே விதமான வையே. ‘உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத் தோடு அன்புகூர்ந்து, உன்னிடத்தில் அன்புகூருவது போலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக’ எனும் தேவ கட்டளையின் மேன்மையான நியதி நம் இரட்சகரின் வாழ்விலும் குணத்திலும் வெளிப்பட்டதே. லூக்கா10:27. அதுவே பாதுகாப்பான அடித்தளம் ; மெய்யான வழிகாட்டி. ‘பூரணரட்சிப்பும் ஞானமும் அறிவும் உன் காலங்களுடைய உறுதியாயிருக்கும்’ என்று ஏசாயா 33:6 சொல்கிற ஞானத்தையும் அறிவையும் தேவவார்த்தை மட்டுமே கொடுக்க முடியும். தீஇவ 82.3

தேவ கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவது பற்றி ‘ஜனங்களின் கண்களுக்கு முன்பாக இதுவே உங்களுக்கு ஞானமும் விவேக முமாய் இருக்கும்’ என்று சொல்லப்பட்ட வார்த்தைகள் இன்றும் பொருந்தும். உபா 4:6. தனிமனிதனின் ஒழுக்கத்திற்கும், குடும் பத்தின் பரிசுத்தத்திற்கும், சமுதாயத்தின் நலனுக்கும், தேசத்தின் உறுதிக்கும் ஒரே பாதுகாப்பு இதுவே. வாழ்வின் சகல குழப்பங் களுக்கும், இடர்பாடுகளுக்கும், உரிமைப்போராட்டங்களுக்கும் மத்தியில் பாதுகாப்பும் உறுதியுமானது ஒன்றே ஒன்றுதான்; தேவன் சொல்லுகிறபடி செய்வதுதான் அது. ‘கர்த்தருடைய நியாயங்கள் செம்மையாயிருக்கிறது. இப்படிச் செய்கிறவன் என்றென்றைக் கும் அசைக்கப்படுவதில்லை . சங்கீதம் 19:8; 15:5. தீஇவ 83.1

சாலொமோனின் அவபக்தி நமக்குத் தரும் எச்சரிப்புக்குச் செவிகொடுங்கள். அவனை மேற்கொண்ட பாவங்கள் உங்களை நெருங்கும்போது, முதலிலேயே அவற்றிலிருந்து ஒதுங்கிவிடுங் கள். பரலோகத்தின் விதிகளுக்குக் கீழ்ப்படிவதால் மட்டுமே அவ பக்தியிலிருந்து தப்ப முடியும். மகத்தான வெளிச்சத்தையும் அதிகமான ஆசீர்வாதங்களையும் மனிதர்மேல் தேவன் பொழிந் திருக்கிறார். ஆனால், இவற்றை ஏற்றுக் கொள்ளாதபட்சத்தில், கீழ்ப்படியாமையிலிருந்தும் அவபக்தியிலிருந்தும் எவ்விதப் பாது காப்பும் பெற முடியாது. மேலான பொறுப்புகளுடைய பதவி களுக்கு தேவனால் உயர்த்தப்படுவோர் அவரை விட்டுவிட்டு, மனிதஞானத்திற்குத் திரும்பினால், அவர்கள் வெளிச்சம் இருண்டு விடும். அவர்களுக்கு அருளப்பட்ட திறமைகளே அவர்களுக்குக் கண்ணியாகிவிடும். தீஇவ 83.2

போராட்டம் முடியுமட்டும் தேவனை விட்டுப் பின்வாங்கு வோர் இருக்கவே செய்வார்கள். நாம் தேவ வல்லமையால் பாது காக்கப்படாத பட்சத்தில், நம்மை அறியாமலேயே நம் ஆத்தும் அரண்களைப் பெலவீனப்படுத்தம் சூழ்நிலைகளைச் சாத்தான் உருவாக்குவான். நாம் ஒவ்வோர் அடி எடுத்துவைக்கும் போதும், ‘இது ஆண்டவரின் வழிதானா?’ என்று கேட்டுப் பார்க்கவேண்டும். உலகில் வாழும் வரை உறுதியான நோக்கத்தோடு, ஆசைகளையும் உணர்வுகளை யும் காத்துக்கொள்ளவேண்டியது அவசியம். நாம் தேவனைச் சார்ந்திருக்கவேண்டும்; நம் வாழ்வு கிறிஸ்துவில் மறைந்திருக்க வேண்டும். இல்லாத பட்சத்தில், ஒரு நொடி கூட நமக்குப் பாதுகாப்பு இல்லை. விழிப்பும் ஜெபமுமே தூய்மையின் பாதுகாவல்கள். தீஇவ 83.3

தேவ நகரத்திற்குள் பிரவேசிக்கும் யாவரும் பெரும்பாடு பட்டு, குறுகலான வாசல் வழியாகவே பிரவேசிக்கவேண்டும். ஏனெனில், ‘தீட்டுள்ள ஒன்றும் அதில் பிரவேசிப்பதில்லை. வெளி 21:27. விழுந்து போன எவரும் நம்பிக்கை இழக்கத் தேவை யில்லை. ஒரு சமயத்தில் தேவ நன்மதிப்புக்குப் பாத்திரராயிருந்த முதியவர்கள் கூட பிற்பாடு தங்கள் ஆத்துமாக்களைத் தீட்டுப் படுத்தலாம்; இச்சை எனும் பலிபீடத்தில் தங்கள் நற்பண்புகளைப் பலியாக்கலாம். அவர்கள் மனந்திரும்பி, பாவத்தை உதறி, தேவ னிடம் வந்தால் நம்பிக்கையில்லாமல் போவதில்லை. நீ மரண பரியந்தம் உண்மையாயிரு , அப்பொழுது ஜீவகிரீடத்தை உனக்குத் தருவேன்” என்று சொன்னவர், துன்மார்க்கன் தன் வழியையும், அக்கிரமக்காரன் தன் நினைவுகளையும் விட்டு, கர்த்தரிடத்தில் திரும்பக்கடவன்; அவர் அவன் மேல் மனதுருகுவார்; நம் முடைய தேவனிடத்திற்கே திரும்பக்கடவன்; அவர் மன்னிக்கிறதற்குத் தயை பெருத்திருக்கிறார்” என்றும் அழைப்பு விடுக்கிறார். வெளி 2:10; ஏசாயா 55:7. தேவன் பாவத்தை வெறுக்கிறார்; பாவியையோ நேசிக்கிறார். ‘நான் அவர்கள் சீர்கேட்டைக் குணமாக்குவேன்; அவர்களை மனப்பூர்வமாய்ச் சிநேகிப்பேன்; என் கோபம் அவர் களைவிட்டு நீங்கிற்று’ என்கிறார். ஓசியா 14:4. தீஇவ 84.1

சாலொமோனின் மனமாற்றம் மெய்யானது; ஆனால் அவனு டைய மோசமான நடத்தையின் முன்மாதிரியால் ஏற்பட்ட தீங்கைச் சரிசெய்ய முடியவில்லை . தேவனை அவன் மறந்த நாட்களிலும், தங் கள் பரிசுத்தத்தையும் பற்றுறுதியையும் காத்துக்கொண்டவர்கள் ராஜ்யத்தில் இருந்தார்கள். ஆனால், பலர் நெறிதவறிப் போய்விட் டார்கள்; ராஜா மனமாறிய போதும், சிலைவழிபாடு மற்றும் உலகப் பிரகாரமான காரியங்களின் அறிமுகத்தால் செயல்படத் தொடங்கிய தீயசக்திகளை அவனால் எளிதில் தடுத்து நிறுத்த முடியவில்லை நன்மைக்கேதுவான செல்வாக்கை ஏற்படுத்த முடியாதபடி அவன் பெலவீனமடைந்துவிட்டான். அவன் தலைமையில் முழு நம்பிக்கை கொள்ள அநேகர் தயங்கினார்கள். ராஜா தன் பாவத்தை அறிக்கை செய்து, பிற்காலச் சந்ததியாரின் நலனுக்காக தன் மூடத்தனத்தையும் மன மாற்றத்தையும் குறித்து எழுதிவைத்தாலும், தன் தவறான நடத்தைகளால் ஏற்பட்ட மோசமான விளைவுகள் முற்றிலும் அகலு மென அவன் நம்பிக்கை கொள்ள முடியவில்லை. அவனுடைய அவ பக்தியைப் பார்த்து, துணிவுகொண்ட அநேகர் தீமையை, தீமையை மாத்திரமே செய்து வந்தார்கள். அவனுக்குப் பிறகு வந்த அரசர்கள் பலரிடமும் அதேவித கீழ்த்தரமான போக்கு காணப் பட்டதையும், தேவன் அருளிய வல்லமைகளை அவர்கள் தவறாகப் பயன்படுத்தியதையும் காணமுடிகிறது. தீஇவ 84.2

தன் மோசமான போக்கைக் குறித்த கசப்பான பிரதிபலிப் போடு, ‘யுத்த ஆயுதங்களைப் பார்க்கிலும் ஞானமே நலம்; பாவி யான் ஒருவன் மிகுந்த நன்மையைக் கெடுப்பான். நான் சூரியனுக் குக்கீழே கண்ட ஒரு தீங்குண்டு, அது அதிபதியினிடத்தில் தோன் றும் தப்பிதமே. மூடர் மகா உயர்ந்த நிலையில் வைக்கப்படுகிறார் கள்’‘ என்கிறான். பிரசங்கி 9:18; 10:5, 6. தீஇவ 85.1

’’செத்த ஈக்கள் தைலக்காரனுடைய பரிமள தைலத்தை நாறிக் கெட்டுப்போகப்பண்ணும்; ஞானத்திலும் கனத்திலும் பேர்பெற்ற வனைச் சொற்ப மதியீனமும் அப்படியே செய்யும்” என்று சொல்ல வேண்டிய நிலைக்கு ஆளானான் சாலொமோன். பிரசங்கி 10:1. தீஇவ 85.2

சாலொமோனின் வாழ்க்கை போதிக்கும் பாடங்கள் அநேகம். நம் செல்வாக்கு நன்மைக்கோ தீமைக்கோ ஏதுவாகப் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதே அவற்றிலெல்லாம் முக்கியமானது. நம் சுற்றுப்புறம் சிறியதாக இருந்தாலும், நன்மை அல்லது தீமைக்கு ஏதுவான பாதிப்பை நாம் ஏற்படுத்திக்கொண்டே இருக்கிறோம். நம் அறிவையும் கட்டுப்பாட்டையும் தாண்டி, பிற ருக்கு அது ஆசீர்வாதமாகவோ சாபமாகவோ அமைகிறது. சுய நலம், திருப்தியின்மை எனும் அந்தகாரமாக அது இருக்கலாம்; நெடுநாள் பாவம் எனும் கொடும் விஷம் தோய்க்கப்பட்டதாக இருக்கலாம்; விசுவாசம், துணிவு, நம்பிக்கை எனும் ஜீவ வல்லமை நிறைந்ததாகவும், அன்பின் நறுமணம் எனும் இனிப்பு ஊட்டப்பட்ட தாகவும் அது இருக்கலாம். எதுவானாலும், அது நன்மைக்கோ தீமைக்கோ ஏதுவான விளைவை உண்டுபண்ணுகிறது என்பது நிச்சயம். தீஇவ 85.3

’நம் செல்வாக்கு மரணத்துக்கேதுவான பாதிப்பை ஏற்படுத்தக் கூடும்’ என்பதை நினைக்கும்போது, ஒருவிதமான பயம் ஏற்பட லாம். ஆனால், அது சாத்தியம்தான். அதனால் ஓர் ஆத்துமா தடம்புரண்டு, நித்திய மகிழ்ச்சியை இழந்து போகவும் கூடும். நாம் அவசரப்பட்டு செய்த ஒரு செயல் , யோசிக்காமல் பேசிய ஒரு வார்த்தை இன்னொருவரின் வாழ்க்கையில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தி, அவர் வாழ்க்கையை அழித்துவிடலாம். நம்முடைய ஒரு கெட்டகுணத்தால், அநேகர் கிறிஸ்துவைவிட்டு விலகிவிட லாம். தீஇவ 86.1

விதை விதைக்கப்பட்டு அறுவடை நடக்கிறது. பிறகு, அந்த அறுவடையின் விதைகள் விதைக்கப்பட்டு, மறுபடியும் அறுக்கப் படுகிறது. இப்படியாக விளைச்சல் பெருகுகிறது. மற்றவரோடான நமது உறவிலும் இது பொருத்தமானதாக இருக்கிறது. ஒவ்வொரு செயலும், ஒவ்வொரு சொல்லும் ஒரு விதையாகும். அது நிச்சயம் கனியைப் பிறப்பிக்கும். கனிவு, கீழ்ப்படிதல், சுயமறுப்பு போன்ற வற்றால் யோசனையுடன் செய்யப்படுகிற ஒவ்வொரு செயலும் மற்றவர்களிலும் அதுபோன்ற சிந்தனையைப் பிறப்பிக்கும். அவர்கள் மூலம் இன்னும் அநேகருக்கு அந்தச் சிந்தனை பரவும். அதே போல, பொறாமை, பகைமை, பிரிவினை போன்ற ஒவ் வொரு செயலும் ஒருவிதமான கசப்பான வேரை முளைத்தெழுப் புகிறது. எபி. 12:15. அதனால் அநேகர் சீர்கெடக்கூடும். அந்த அநேகரால் இன்னும் எத்தனையோ ‘அநேகர்’ சீர்கெடப்போகி றார்கள். இவ்வாறு நன்மையையோ தீமையையோ விதைப்பதி னால், அது இம்மையிலும் மறுமையிலும் தாக்கத்தை ஏற்படுத்து கிறது தீஇவ 86.2