Go to full page →

6 - இராஜ்யம் பிரிக்கப்படல் தீஇவ 87

’சாலொமோன் தன் பிதாக்களோடே நித்திரையடைந்து, தன் தகப்பனாகிய தாவீதின் நகரத்தில் அடக்கம் பண்ணப்பட்டான்; அவன் குமாரனாகிய ரெகொபெயாம் அவன் ஸ்தானத்தில் ராஜா வானான்.’ 1 இராஜா 11:43. தீஇவ 87.1

சிங்காசனம் ஏறினதும், சீகேமுக்குப் போனான் ரெகொபெ யாம். அவனை முறைப்படி ராஜாவாக்க சகல கோத்திரத்தாரும் அங்கு வந்திருந்தார்கள். ‘ரெகொபெயாமை ராஜாவாக்கும் படி இஸ்ரவேலர் எல்லாரும் சீகேமுக்கு வந்திருந்தார்கள். 2 நாளா 10:1. தீஇவ 87.2

நேபாத்தின் குமாரனாகிய யெரொபெயாமும் அவர்களுடன் இருந்தான். சாலொமோனின் ஆட்சிக்காலத்தில் அவன் ‘பராக் கிரமசாலி’ எனப்பட்டான். ‘நான் ராஜ்ய பாரத்தைச் சாலொமோ னுடைய கையிலிருந்து எடுத்துக் கிழித்து, உனக்குப்பத்துக்கோத்திரங் களைக் கொடுப்பேன்’ எனும் தேவ செய்தியை அவனிடம் சீலோனி யனான அகியா தீர்க்கதரிசி அறிவித்திருந்தான். 1இராஜா 11:28, 31. தீஇவ 87.3

இராஜ்யத்தைப் பிரிக்கவேண்டியது பற்றி, தம் தூதுவன் மூலம் ஆண்டவர் யெரொபெயாமுக்குத் தெளிவாகச் சொன்னார். ‘’அவர் கள் என்னைவிட்டு, சீதோனியரின் தேவியாகிய அஸ்தரோத்தை யும், மோவாபியரின் தேவனாகிய காமோசையும், அம்மோன் புத் திரரின் தேவனாகிய மில்காவையும் பணிந்துகொண்டு, அவன் தகப்பனாகிய தாவீதைப்போல என் பார்வைக்குச் செம்மையாய் இருக்கிறதைச் செய்யவும், என் கட்டளைகளையும் என் நியாயங் களையும் கைக்கொள்ளவும், அவர்கள் என் வழிகளில் நடவாமற் போனபடியினால் அப்படிச் செய்வேன்’‘ என்றார். வச 33. தீஇவ 87.4

மேலும், சாலொமோனின் ஆட்சிக்காலத்திற்கு முன்பதாக ராஜ்யம் பிரிக்கப்படாது என்றும் யெரொபெயாமுக்குச் சொல்லப் பட்டிருந்தது. ‘’ராஜ்யபாரம் முழுவதையும் நான் அவன் கையி லிருந்து எடுத்துப்போடுவதில்லை; நான் தெரிந்து கொண்டவனும், என் கற்பனைகளையும் என் கட்டளைகளையும் கைக்கொண்ட வனுமான என் தாசனாகிய தாவீதினி மித்தம், அவன் உயிரோ டிருக்கும் நாளெல்லாம் அவனை அதிபதியாக வைப்பேன். ஆனா லும் ராஜ்ய பாரத்தை அவன் குமாரன் கையிலிருந்து எடுத்து, அதிலே பத்துக் கோத்திரங்களை உனக்குத் தருவேன்’‘ என்றார் ஆண்ட வர். வச 34, 35. தீஇவ 88.1

தனக்குப்பின் ரெகொபெயாமை ராஜாவாகத் தெரிந்து கொண் டிருந்தான் சாலொமோன். தேவனுடைய தீர்க்கதரிசி முன்னுரைத்த பிரச்சனையை ஞானத்தோடு எதிர்கொள்ளக்கூடிய அளவுக்கு ரெகொபெயாமின் மனதைப் பக்குவப்படுத்த அவன் ஆசைப் பட் டான். ஆனாலும், தன் குமாரனின் மனதில் நல்லெண்ணத்தை உருவாக்கும் படியான மாற்றத்தை அவரால் ஏற்படுத்தவே முடிய வில்லை. ஏனெனில், ரெகொபெயாமுக்குத் தேவையான பயிற்சி சிறுவயதில் கொடுக்கப்படவில்லை. அம்மோனியப் பெண்ணான தன் தாயிடமிருந்து, உறுதியற்ற குணச்சாயலையே பெற்றிருந்தான் ரெகொபெயாம். கர்த்தரைச் சேவிக்க அவ்வப்போது அவன் முயற்சிகள் மேற்கொண்டான். அதனால் ஓரளவுக்கு ஆசீர்வாதமும் பெற்றான். அதில் அவன் உறுதியாக நிற்கவில்லை . சிறு வயது முதலே தன்னைச் சுற்றிலும் இருந்து வந்த தீய செல்வாக்கிற்கு அடிபணிந்தான். சிலைவழிபாடு செய்யும் பெண்களை சாலொமோன் திருமணம் செய்ததின் மோசமான விளைவை ரெகொபெயாமின் வாழ் வின் தவறுகளிலும், இறுதியில் அவன் தேவனைவிட்டு விலகியதி லும் பார்க்கலாம். தீஇவ 88.2

தங்களுடைய முந்தைய அரசனின் அடக்குமுறை ஆட்சியின் கொடுமைகளைப் பன்னிரண்டு கோத்திரத்தாரும் நீண்டகாலம் சந் தித்துவந்தனர். சாலொமோன் தேவனை மறந்த நாட்களில் ஊதாரித் தனமாக ஆட்சி செய்ததால், மக்களிடம் அதிக வரி விதித்தான் ; எடுபிடி வேலைகளில் அவர்களை நியமித்தான். எனவே, சாலொ மோனின் குமாரனுக்கு முடிசூட்டும் முன், ‘அப்புதிய மன்னன் இச் சுமைகளை இலகுவாக்குவானா, மாட்டானா?’ என்பதைக் கோத் திரத் தலைவர்கள் தெரிந்துகொள்ள விரும்பினார்கள். ‘யெரொ பெயாமும் இஸ்ரவேலனைத்துமாய் வந்து, ரெகொபெயாமை நோக்கி, ‘’உம்முடைய தகப்பன் எங்கள்மேல் பாரமான நுகத்தை வைத்தார்; இப்போதும் நீர் உம்முடைய தகப்பன் சுமத்தின கடின மான வேலையையும், அவர் எங்கள்மேல் வைத்த பாரமான நுகத் தையும் லகுவாக்கும்; அப்பொழுது உம்மைச் சேவிப்போம்” என் றார்கள். தீஇவ 88.3

தன் திட்ட அறிக்கையை அறிவிக்கும் முன், ஆலோசகர்களி டம் கலந்தாலோசிக்க விரும்பினதால், நீங்கள் மூன்று நாளைக் குப் பிற்பாடு திரும்ப என்னிடத்தில் வாருங்கள்” என்று பதிலளித் தான் ரெகொபெயாம். உடனே மக்கள் அங்கிருந்து சென்றார்கள். தீஇவ 89.1

’அப்பொழுது ராஜாவாகிய ரெகொபெயாம் தன் தகப்பனா கிய சாலொமோன் உயிரோடிருக்கையில் அவன் சமுகத்தில் நின்ற முதியோரோடே ஆலோசனைபண்ணி, ‘’இந்த ஜனங்களுக்கு மறு உத்தரவு கொடுக்க நீங்கள் என்ன ஆலோசனை சொல்லுகிறீர்கள்?’‘ என்று கேட்டான். அதற்கு அவர்கள், ‘’நீர் இந்த ஜனங்களுக்குத் தயவையும் பட்சத்தையும் காண்பித்து, அவர்களுக்கு நல்வார்த்தை களைச் சொல்வீரானால், என்றைக்கும் அவர்கள் உமக்கு ஊழியக் காரராயிருப்பார்கள்’‘ என்றார்கள். 2 நாளா 10:3-7. தீஇவ 89.2

ரெகொபெயாம் அதில் திருப்தியடையவில்லை. எனவே, தன்னோடு வளர்ந்தவர்களும் தன் கூட்டாளிகளுமான வாலிபர் களிடம் சென்று, ‘’உம்முடைய தகப்பன் எங்கள் மேல் வைத்த நுகத்தை லகுவாக்கும் என்று என்னிடத்தில் சொன்ன இந்த ஜனங் களுக்கு மறுமொழி கொடுக்க, நீங்கள் என்ன யோசனை சொல்லு கிறீர்கள்?” என்று கேட்டான். 1இராஜா 12:9. ராஜ்யத்தின் குடிமக் களைக் கடுமையாக அணுகுமாறும், தன் சொந்த விருப்பத்திற்கு இடையூறான எதையும் தன்னால் பொறுக்கமுடியாது என்பதை ஆரம்பத்திலேயே அவர்களுக்குத் தெளிவாகச் சொல்லிவிடுமா றும் அந்த வாலிபர்கள் ஆலோசனை கூறினார்கள். தீஇவ 89.3

தனக்கு மிகுந்த அதிகாரம் கிடைக்குமென்ற நினைப்பால் வஞ்சிக்கப்பட்ட ரெகொபெயாம் தன் அரசவையிலிருந்த முதி யோரின் ஆலோசனையைப் புறக்கணிக்கத் தீர்மானித்தான். வாலிபர்களின் ஆலோசனையை ஏற்றுக்கொண்டான். தான் செயல்படுத்த விரும்பும் திட்டங்களைக்குறித்து அறிய மக்களை வரச்சொல்லியிருந்த நாளில் யெரொபெயாமும் சகல ஜனங்களும் ரெகொபெயாமிடத்தில் வந்தபோது, அவர்களிடம் ரெகொபெ யாம் ‘கடுமையாகப் பேசினான்.’ ‘என் தகப்பன் உங்கள் நுகத்தைப் பாரமாக்கினார், நான் உங்கள் நுகத்தை அதிக பாரமாக்கு வேன்; என் தகப்பன் உங்களைச் சவுக்குகளினாலே தண்டித்தார்; நான் உங்களைத் தேள்களினாலே தண்டிப்பேன்” என்றான். வச 12-14. தீஇவ 89.4

இஸ்ரவேலைக்குறித்த தேவசித்தத்தை ரெகொபெயாமும் அனுபவமற்ற அவனுடைய ஆலோசகர்களும் அறிந்திருப்பார் களானால், அரசின் நிர்வாகத்தில் உறுதியான சீர்திருத்தத்தை விரும்பின மக்களின் வேண்டுகோளுக்குச் செவிகொடுத்திருப் பார்கள். ஆனால், சீகேமில் மக்கள் கூடியிருந்த நாளில் அதற்கான வாய்ப்பு கிடைத்தபோது, தங்களுடைய நோக்கத்தையும் அதன் விளைவையும் பகுத்தறியத் தவறிவிட்டனர். அப்படியாக, அந்தத் திரளான மக்கள் மத்தியில் தங்கள் செல்வாக்கைக் கெடுத்துக் கொண்டார்கள். சாலொமோனின் ஆட்சியில் அறிமுகமான கொடு மைகளைத் தொடர்ந்து கடைப்பிடிக்கவும் அதிகரிக்கவும் அவர்கள் வெளியிட்ட தீர்மானமானது, இஸ்ரவேலைக்குறித்த தேவ திட்டத் திற்கு முற்றிலும் எதிர்மாறானதாக இருந்தது. அவர்களுடைய மெய்யான நோக்கங்களை மக்கள் அறிய அது ஏற்ற சமயமாக அமைந்தது. அதிகாரம் செலுத்தும் முயற்சியில் புத்தியற்றும் இரக்கமற்றும் செயல்பட்ட ராஜாவும், அவரால் தெரிந்துகொள் ளப்பட்ட ஆலோசகர்களும் அதிகாரத்தாலும் அந்தஸ்தாலும் தங்க ளுக்குள் உருவான அகந்தையை இதன் மூலம் வெளிப் படுத் தினார்கள். தீஇவ 90.1

ரெகொபெயாம் ஏற்படுத்தின திட்டங்களைச் செயல்படுத்த ஆண்டவர் அனுமதிக்கவில்லை. சாலொமோனுடைய அடக்கு முறை ஆட்சியால் கோத்திரத்தாரில் அநேகமாயிரம் பேர் விழிப் படைந்திருந்தனர். ‘இப்போது தாவீதின் வீட்டாருக்கு எதிராகக் கலகம் செய்வதைவிட வேறு வழியில்லை’ என்று அவர்கள் நினைத்தார்கள். ராஜாதங்களுக்குச் செவிகொடாததை இஸ்ரவேலர் எல்லாரும் கண்டபோது, உடனே அவர்கள் ராஜாவுக்கு மறு உத்தர வாக, ‘’தாவீதோடே எங்களுக்குப் பங்கேது? ஈசாயின் குமாரனி டத்தில் எங்களுக்குச் சுதந்தரம் இல்லை; இஸ்ரவேலே, உன் கூடாரங்களுக்குப் போய்விடு; இப்போது தாவீதே, உன் சொந்த வீட்டைப் பார்த்துக்கொள்’‘ என்று சொல்லிவிட்டு, தங்கள் தங்கள் கூடாரங்களுக்குப் போய்விட்டார்கள். வச 16. தீஇவ 90.2

ரெகொபெயாமின் முன்னறிவற்ற பேச்சால் ஏற்பட்ட பிள் வைச் சரிசெய்ய முடியாத நிலை ஏற்பட்டது. அது முதல் இஸ்ரவே லின் பன்னிரண்டு கோத்திரத்தாரும் பிரிந்தார்கள். ரெகொபெயா மின் ஆளுகையின்கீழ் யூதா எனும் தென்ராஜ்யத்தையூதா - பென்யமீன் கோத்திரத்தார் அமைத்தார்கள். மற்ற பத்துக் கோத்திரத்தாரும் வடக் கே இஸ்ரவேல் ராஜ்யத்தை உருவாக்கி, யெரொபெயாமைத் தங் கள் ராஜாவாக்கினார்கள். இராஜ்யம் பிரிக்கப்படுவது பற்றி தீர்க்க தரிசியால் முன்னுரைக்கப்பட்டது இவ்வாறு நிறைவேறியது. ‘கர்த்தரால் இப்படி நடந்தது. ‘வச 15. தீஇவ 91.1

தனக்கு விசுவாசமாயிருப்பதிலிருந்து பத்துக்கோத்திரத்தாரும் பின்வாங்குவதை ரெகொபெயாம் கண்டபோது, உடனடியாகச் செயல்படத் தொடங்கினான். தன்னுடைய ராஜ்யத்தில் செல்வாக் குப் பெற்றிருந்தவர்களில் ஒருவனான பகுதி விசாரிப்புக்காரானா கிய அதோராம் மூலமாக அவர்களைச் சமாதானப் படுத்த முயன் றான். தீஇவ 91.2

ஆனால், ரெகொபெயாமுக்கு விரோதமாக மக்கள் கொண் டிருந்த உணர்வு எப்படிப்பட்டதென்பதை அந்தச் சமாதான தூதுவ னுக்குக் கிடைத்த வரவேற்பு காட்டியது ; ‘இஸ்ரவேல் எல்லாரும் அவனைக் கல்லெறிந்து கொன்றார்கள்.’ இதன்மூலம் கலகத்தின் கடுமையைக் கண்டு அதிர்ந்து, ‘ராஜாவாகிய ரெகொபெயாம் தீவிரமாய் இரதத்தின்மேல் ஏறி, எருசலேமுக்கு ஓடிப்போனான்.’ வச 18. தீஇவ 91.3

எருசலேமுக்குச் சென்ற பிறகு, இஸ்ரவேல் வம்சத்தாரோடே யுத்தம்பண்ணவும், ராஜ்யத்தைச் சாலொமோனின் குமாரனாகிய தன்னிடமாகத் திருப்பிக்கொள்ளவும் யூதா வம்சத்தார் பென்யமீன் கோத்திரத்தார் அனைவருமாகிய தெரிந்துகொள்ளப்பட்ட யுத்த வீரர் லட்சத்து எண்பதினாயிரம் பேரைக் கூட்டினான். தீஇவ 91.4

தேவனுடைய மனுஷனாகிய செமாயாவுக்குத் தேவனுடைய வார்த்தையுண்டாகி, அவர் சொன்னது, ‘நீ யூதாவின் ராஜாவாகிய ரெகொபெயாம் என்னும் சாலொமோனின் குமாரனையும் யூதா வம்சத்தார் அனைவரையும், பென்யமீனரையும், மற்ற ஜனங்களை யும் நோக்கி, ‘நீங்கள் போகாமலும், இஸ்ரவேல் புத்திரரான உங்கள் சகோதரரோடு யுத்தம் பண்ணாமலும், அவரவர் தம் தம் வீட்டிற்குத் திரும்புங்கள்; என்னாலே இந்தக் காரியம் நடந்ததென்று கர்த்தர் உரைக்கிறார்’ என்று சொல்” என்றார்; அப்பொழுது அவர்கள் கர்த்தருடைய சொல்லைக் கேட்டு, கர்த்தருடைய வார்த்தையின்படியே திரும்பிப் போய்விட்டார்கள். ‘வச 21- 24. தீஇவ 91.5

தன்னுடைய ஆளுகையின் ஆரம்பத்தில் ஏற்பட்ட கசப்பான அனுபவத்தை நன்மைக்கேதுவாக மாற்ற மூன்று வருடங்கள் முயற்சி மேற்கொண்டான் ரெகொபெயாம். அந்த முயற்சியில் அவனுக்கு ஆசீர்வாதம் கிடைத்தது. அவன் யூதாவிலே அரணான பட்டணங்களைக் கட்டினான். அந்த அரணிப்புகளைப் பலப்படுத்தி, அவைகளிலே தலைவரையும் ஆகாரமும், எண்ணெயும் திராட்சரச முள்ள பண்டகசாலைகளையும் ஏற்படுத்தினான். அரணிப்பான அந்தப் பட்டணங்களை மிகுதியும் பலப்படுத்துவதில்’ அக்கறை காட்டினான். 2நாளா 11:5,11,12. ஆனால், ரெகொபெயாமின் முதல் சில வருட ஆட்சியின்போது, யூதாவில் ஏற்பட்ட செழிப்பிற்கு இந்த நடவடிக்கைகள் காரணமில்லை. தேவனே மகத்துவமான ராஜா என்பதை யூதா - பென்யமீன் கோத்திரத்தார் உணர்ந்ததால் தான் அவர்கள் அனுகூலமான சூழ்நிலையில் வைக்கப்பட்டனர். வட தேசத்தின் கோத்திரத்தாரில் தெய்வ பயமுள்ள பலர் இவர்களுடன் இணைந்து கொண்டனர். இஸ்ரவேலின் கோத்திரங்களிலெல்லாம் இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரைத் தேடுகிறதற்கு, தங்கள் இரு தயத்தை நேராக்கினவர்கள் தங்கள் பிதாக்களின் தேவனாகிய கர்த் தருக்குப் பலியிடும்படிக்கு எருசலேமுக்கு வந்தார்கள். இப்படி மூன்று வருஷமட்டும் யூதாவின் ராஜ்யத்தைப் பலப்படுத்தி, சாலொ மோனின் குமாரனாகிய ரெகொபெயாமைத் திடப்படுத்தினார்கள்; தாவீதும் சாலொமோனும் நடந்த வழியிலே மூன்று வருஷமட்டும் நடந்தார்கள்.’வச 16,17. தீஇவ 92.1

தொடர்ந்து அத்தகைய நடவடிக்கைகளை மேற்கொண்டு, கடந்தகாலத்தவறுகளைச் சரிசெய்யவும், விவேகத்தோடு ஆளும் படி தன் திறமையின்மேல் நம்பிக்கையை வளர்த்துக்கொள்ளவும் ரெகொபெயாமுக்கு வாய்ப்பு கிடைத்தது. ஆனால், சாலொமோ னுக்குப் பின் ராஜாவான அவன், யேகோவாவின் மேல் மெய்ப்பற்று கொள்வதற்கு ஏதுவான செல்வாக்கை ஏற்படுத்தத் தவறிவிட்டான். அத்தகைய வருத்தகரமான குறிப்பைத்தான் வேதாகமம் சொல் கிறது. இயல்பிலேயே முரட்டுக்குணமும் தன்னம்பிக்கையும் சுய சித்தமும் சிலைவழிபாட்டில் ஈடுபாடும் உடையவராக இருந்தாலும், அவர் தன் முழு நம்பிக்கையையும் தேவனில் வைத்திருந்தானா னால், குணத்தில் வலிமை பெற்றிருக்கலாம்; விசுவாசத்தில் உறுதி யடைந்திருக்கலாம். தீஇவ 93.1

ஆனால், நாட்கள் செல்லச் செல்ல தன் அதிகாரத்திலும், தான் பெலப்படுத்திய அரண்களிலும் நம்பிக்கை வைத் தான் ராஜா. சி லைவழிபாட்டிற்கு ஏதுவாக அவன் தன் செல்வாக்கு முழுவதையும் செலவிடும் சூழ்நிலை ஏற்படும் வரையிலும், தன் பெலவீனங்களைக் கொஞ்சம் கொஞ்சமாக வளரவிட்டான். ‘ரெகொபெயாம் ராஜ் யத்தைத் திடப்படுத்தி, தன்னைப் பலப்படுத்திக் கொண்டபின், அவனும் அவனோடே இஸ்ரவேலர் அனைவரும் கர்த்தருடைய நியாயப்பிரமாணத்தை விட்டுவிட்டார்கள். 2 நாளா 12:1. தீஇவ 93.2

’அவனோடே இஸ்ரவேலர் அனைவரும்’ என்கிற வார்த்தை கள் எத்தனை முக்கியத்துவமும் வருத்தமும் நிறைந்தவைகள்! சுற்றிலுமிருந்த தேசங்களுக்கு விளக்காகத் திகழும்படி தேவனால் தெரிந்து கொள்ளப்பட்டவர்கள் தங்களுக்கு ஆதாரமானவரை விட்டு விலகி நின்றார்கள். சாலொமோனுடைய தவறான முன் மாதிரியால் அநேகர் தடம்புரண்டு தவறியதுபோல, ரெகொபெயா மாலும் நடந்தது. அவர்களைப்போல இன்றும் தீமை செய்ய தங் களை ஒப்புக்கொடுக்கும் ஒவ்வொருவரும் அதிக அளவிலோ, குறைந்த அளவிலோ, பிறரைத் தடம் புரட்டுகின்றனர். தீமையால் ஏற்படும் பாதிப்பு அதைச் செய்தவரோடுமாத்திரம் நின்றுவிடாது. எவனும் தனக்காக மட்டும் வாழமுடியாது; அக்கிரமம் அதைச் செய்தவர்களை மாத்திரம் அழிப்பதில்லை. ஒவ்வொருவரின் வாழ்க்கையும் பிறருடைய பாதைக்கு வெளிச்சத்தையும் சந்தோஷத் தையும் தரக்கூடியதாக இருக்கலாம்; அல்லது, மனச்சோர்வுக்கும் அழிவுக்கும் நேராக அவர்களை வழிநடத்தக்கூடிய அந்தகாரமும் வறண்டதுமான பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடியதாக இருக்கலாம். ‘சந்தோஷம், நித்திய வாழ்வு’ எனும் மேன்மைக்கோ, ‘துக்கம், நித்திய மரணம்’ எனும் தாழ்மைக்கோ மற்றவர்களை வழி நடத்து கிறவர்களாக நாம் ஒவ் வொருவரும் இருக்கிறோம். நம்மைச் சுற்றிலுமுள்ளவர்களின் தீய சக்திகளை நம் செயல்கள் மூலம் நாம் பெலப்படுத்தி, உறுதிப்படுத்தலாம். அவ்வாறு நாம் செய்யும் போது, நாமும் அவர்கள் பாவத்தில் பங்குகொள்கிறோம். தீஇவ 94.1

யூத அரசனுடைய அவ பக்தியை தேவன் தண்டிக்காமல் விட்டுவிடவில்லை. ‘அவர்கள் கர்த்தருக்கு விரோதமாய்த் துரோ கம்பண்ணினபடியினால், ராஜாவாகிய ரெகொபெயாமின் ஐந்தாம் வருஷத்தில் எகிப்தின் ராஜாவாகிய சீஷாக் ஆயிரத்து இருநூறு இரதங்களோடும், அறுபதினாயிரம் குதிரை வீரரோடும் எருசலே முக்கு விரோதமாய் வந்தான். அவனோடேகூட எகிப்திலிருந்து வந்தஜனங்கள் எண்ணிக்கைக்கு அடங்காதவர்களாயிருந்தார்கள். அவன் யூதாவுக்கு அடுத்த அரணான பட்டணங்களைப் பிடித்து, எருசலேம் மட்டும் வந்தான். தீஇவ 94.2

’அப்பொழுது செமாயா தீர்க்கதரிசி ரெகொபெயாமிடத்துக் கும், சீஷாக்கினிமித்தம் எருசலேமிலே வந்து கூடியிருக்கிற யூதா வின் பிரபுக்களிடத்துக்கும் வந்து, அவர்களை நோக்கி, ‘நீங்கள் என்னை விட்டுவிட்டீர்கள். ஆகையால், நான் உங்களையும் சீஷாக் கின் கையிலே விழும்படி விட்டுவிட்டேனென்று கர்த்தர் சொல்லு கிறார்” என்றான். ‘வச 2-5. தீஇவ 94.3

தேவனுடைய நியாயத்தீர்ப்புகளை அற்பமாக எண்ணுமள விற்கு இன்னமும் தேவனை ஜனங்கள் மறந்துவிடவில்லை. சீஷாக்கின் ஆக்கிரமிப்பால் ஏற்பட்ட இழப்புகளில், தேவகரம் செயல்பட்டதை அவர்கள் உணர்ந்து, அந்நேரம் தங்களைத் தாழ்த்தினார்கள். ‘கர்த்தர் நீதியுள்ளவர்’ என்பதை ஒத்துக் கொண் டனர். தீஇவ 95.1

’அவர்கள் தங்களைத் தாழ்த்தினதைக் கர்த்தர் கண்டபோது, கர்த்தருடைய வார்த்தை செமாயாவுக்கு உண்டாகி, அவர் சொன் னது: ‘அவர்கள் தங்களைத் தாழ்த்தினார்கள், ஆகையால் அவர் களை அழிக்கமாட்டேன்; என் உக்கிரம் சீஷாக்கைக்கொண்டு எருசலேமின் மேல் ஊற்றப்படாதபடிக்கு, அவர்களுக்குக் கொஞ் சம் சகாயத்தைக் கட்டளையிடுவேன். ஆனாலும், என்னைச் சேவிக் கிறதற்கும், அந்நிய தேசங்களின் ராஜ்யங்களைச் சேவிக்கிறதற் கும் இருக்கிற வித்தியாசத்தை அவர்கள் அறியும்படிக்கு, இவர்கள் அவனைச் சேவிக்கிறவர்கள் ஆவார்கள்’ என்றார். தீஇவ 95.2

’அப்படியே எகிப்தின் ராஜாவாகிய சீஷாக் எருசலேமுக்கு விரோதமாய் வந்து, கர்த்தருடைய ஆலயத்தின் பொக்கிஷங்களை யும், ராஜாவுடைய அரமனைப் பொக்கிஷங்களையும் சாலொமோன் செய்வித்த பொன்பரிசைகள் ஆகிய சகலத்தையும் எடுத்துக்கொண்டு போய்விட்டான். அவைகளுக்குப் பதிலாக ராஜாவாகிய ரெகொ பெயாம் வெண்கலப் பரிசைகளைச் செய்வித்து, அவைகளை ராஜாவின் வாசற்படியைக் காக்கிற சேவகருடைய தலைவரின் கையில் ஒப்புவித்தான். அவன் தன்னைத் தாழ்த்தினபடியினால், கர்த்தர் அவனை முழுதும் அழிக்காதபடிக்கு அவருடைய கோபம் அவனை விட்டுத் திரும்பிற்று; யூதாவிலே இன்னும் சில காரியங் கள் சீராயிருந்தது. ‘வச.6-12. தீஇவ 95.3

ஆனால், உபத்திரவம் எனும் கரம் அவர்களைவிட்டு நீங்கி, தேசம் மறுபடியும் செழித்தபோது, அநேகருக்குப் பயம் விட்டுப் போயிற்று; அவர்கள் மீண்டும் சிலைகளை வணங்கினார்கள். ராஜாவாகிய ரெகொபெயாம்தாமே அவர்களில் ஒருவனாயிருந் தான். தனக்குச் சம்பவித்தப் பேரழிவால் தாழ்த்தப்பட்ட போதிலும் அந்த அனுபவத்தை அவன் தன் வாழ்வில் ஒரு திருப்பு முனை யாக்கிக் கொள்ளவில்லை. தேவன் அவனுக்குக் கற்பிக்க விரும் பின் பாடத்தை அவன் மறந்தான். தேசத்தின் மேல் நியாயத்தீர்ப்பு களைக் கொண்டு வந்த அதே பாவங்களை மீண்டும் செய்தான். அதனால் சில காலம் மிக இழிவான நிலைக்கு அவன் சென்ற போதிலும், ‘அவன் கர்த்தரைத் தேடுகிறதற்குத் தன் இருதயத்தை நேராக்காமல் பொல்லாப்பானதைச் செய்தான். ‘’ரெகொபெயாம் தன் பிதாக்களோடே நித்திரையடைந்தபின் தாவீதின் நகரத்தில் அடக்கம் பண்ணப்பட்டான்; அவன் குமாரனாகிய அபியா அவன் ஸ்தானத்தில் ராஜாவானான்.’ 1நாளா 12:14, 16. தீஇவ 95.4

ரெகொபெயாமுடைய ஆட்சியின் ஆரம்பத்திலேயே ராஜ்யம் பிரிந்துவிட்டதால், இஸ்ரவேலின் மகிமை மங்க ஆரம்பித்தது; அதன்பின் அது மீண்டும் பழைய நிலைக்குத் திரும்பவில்லை. பின்னான காலங்களில், ஒழுக்கமும் விவேகமும் நிறைந்தவர்கள் அவ்வப்போது தாவீதின் சிங்காசனத்தில் வீற்றிருக்கத்தான் செய் தார்கள். அந்த அரசர்களின் ஆளுகையில், யூதாவின் மனிதர் பெற் றுக் கொண்ட ஆசீர்வாதத்தைச் சுற்றிலுமிருந்த தேசத்தாரும் பெற்றுக் கொண்டனர். அவ்வப்போது யேகோவாவின் நாமமானது சகல பொய்த்தெய்வங்களுக்கும் மேலாக உயர்த்தப்பட்டது; அவனு டைய பிரமாணம் பயபக்தியோடு கைக்கொள்ளப்பட்டது. அவ்வப் போது வல்லமையான தீர்க்கதரிசிகள் எழும்பி, அரசர்களைத் திடப் படுத்தினார்கள்; உண்மையோடிருக்கும்படி மக்களை ஊக்கப் படுத்தினார்கள். ஆனாலும், ரெகொபெயாம் சிங்காசனத்தில் அமர்ந்ததிலிருந்து முளைவிட ஆரம்பித்திருந்த தீமையின் விதை களை முற்றிலுமாகப் பிடுங்கி எறிய இயலவில்லை . ஒரு சமயத்தில் தேவதய வுக்குப் பாத்திரவான்களாயிருந்தவர்கள், அஞ்ஞான மார்க்கத்தாரிடையே பழமொழியாகும் அளவிற்குத் தரம் தாழ்ந்து போனார்கள். தீஇவ 96.1

சிலைவழிபாட்டின் பக்கம் சென்றவர்களின் மாறுபாட்டிற்கு மத்தியிலும், பிரிந்த அந்த ராஜ்யத்தை முழு அழிவிலிருந்து தடுக்க, தம் வல்லமைக்கு உட்பட்ட அனைத்தையும் செய்ய தேவன் இரக் கம் கொண்டிருந்தார். வருடங்கள் கடந்து கொண்டிருந்தன. சாத்தா னுடைய கிரியைகளால் உருவான மனிதரின் திட்டங்களால், இஸ்ர வேலைக்குறித்த தேவதிட்டம் முற்றிலும் பாழாவது போல் தெரிந் தது. ஆனாலும், தெரிந்துகொள்ளப்பட்ட அத்தேசம் சிறையிருப்புக் குள்ளாகி, மீண்டும் மீட்கப்பட்டதில் தம்முடைய நன்மையான திட் டங்களை அவர் வெளிப்படுத்தினார். தீஇவ 96.2

இராஜ்யம் பிரிந்தபோதிலும், ஓர் அற்புத வரலாற்றின் ஆரம்ப மாக அது இருந்தது; தேவனுடைய கனிவான இரக்கமும் நீடிய பொறுமையும் அதில் வெளிப்பட்டது. தேவன் அவர்களை தமக் கென விசேஷித்த ஜனங்களாகவும் நற்கிரியைகளில் ஆர்வமுள் ளவர்களாகவும் மாற்ற விரும்பினார். எனவேதான், அவர்கள் பெற்றுக் கொண்டதும் கற்றுக்கொண்டதுமான தீயதூண்டுதல் களிலிருந்து அவர்களைச் சுத்திகரிக்க, வேதனை எனும் அக்கினிக் குப்பியின் வழியாக அவர்களை நடத்த வேண்டியிருந்தது. அதன் மூலம் இறுதியில் அவர்கள்: தீஇவ 97.1

’கர்த்தாவே, உமக்கு ஒப்பானவன் இல்லை ; நீரே பெரியவர்; உமது நாமமே வல்லமையில் பெரியது. ஜாதிகளின் ராஜாவே, உமக்குப் பயப்படாதிருப்பவன் யார்? ஜாதிகளுடைய எல்லா ஞானிகளிலும், அவர்களுடைய எல்லா ராஜ்யத்திலும் உமக்கு ஒப்பானவன் இல்லை. ‘கர்த்தரோ மெய்யான தெய்வம்; அவர் ஜீவனுள்ள தேவன், நித்திய ராஜா’ என்பதை ஒத்துக்கொள்ள வேண்டியிருந்தது. எரே 10:6, 7, 10. தீஇவ 97.2

’பொய்த் தெய்வங்களிடம் மனிதரை மேம்படுத்தி இரட்சிப் பதற்கான வல்லமை இல்லை’ என்கிற பாடத்தைச் சிலைவழி பாட்டுக்காரர்கள் இறுதியாகக் கற்கவேண்டியிருந்தது. ‘வானத்தை யும் பூமியையும் உண்டாக்காத தெய்வங்கள், பூமியிலும் இந்த வானத்தின்கீழும் இராதபடிக்கு அழிந்துபோகும் என்பதை அவர் களுக்குச் சொல்லுங்கள். ‘எரே 10:11. சர்வத்தையும் சிருஷ்டித்த வரும் சர்வத்தையும் ஆளுபவருமான ஜீவனுள்ள தேவன்மேல் பற்றுவைத்திருப்பதால் மாத்திரமே, மனிதன் சமாதானத்தையும் இளைப்பாறுதலையும் கண்டடைய முடியும். தீஇவ 97.3

சிட்சிக்கப்பட்டு, பாவத்தை எண்ணி மனம் வருந்தின யூதா மற்றும் இஸ்ரவேல் தேசத்தார், தங்கள் பிதாக்களின் தேவனும், சே னைகளின் யேகோவாவுமானவரோடு இறுதியில் தங்கள் உடன் படிக்கை உறவை ஏகமனதோடு புதுப்பிக்க வேண்டியிருந்தது; அவரைக் குறித்து, பின்வருமாறு அவர்கள் அறிக்கையிட வேண்டி யிருந்தது: தீஇவ 97.4

அவரே பூமியைத் தம்முடைய வல்லமையினால் உண்டாக்கி,
பூச்சக்கரத்தைத் தம்முடைய ஞானத்தினால் படைத்து,
வானத்தைத் தம்முடைய அறிவினால் விரித்தார். ’அவர் சத்தமிடுகையில் வானத்திலே
திரளான தண்ணீர் உண்டாகிறது;
அவர் பூமியின் கடையாந்தரத்திலிருந்து
மேகங்களை எழும்பப்பண்ணி,
மழையுடனே மின்னல்களை உண்டாக்கி,
காற்றைத் தமது பண்டகசாலைகளிலிருந்து
புறப்படப்பண்ணுகிறார்.

மனுஷர் அனைவரும் அறிவில்லாமல்
மிருக்குணமுள்ளவர்களானார்கள்;
தட்டார் அனைவரும் வார்ப்பித்த சுரூபங்களாலே
வெட்கிப் போகிறார்கள்,
அவர்கள் வார்ப்பித்த விக்கிரகம் பொய்யே,
அவைகளில் ஆவி இல்லை.

’அவைகள் மாயையும்,
மகா எத்தான கிரியையுமாயிருக்கிறது;
அவைகள் விசாரிக்கப்படும் நாளிலே அழியும்.
யாக்கோபின் பங்காயிருக்கிறவர்
அவைகளைப்போல் அல்ல‘

’அவர் சர்வத்தையும் உருவாக்கினவர்,
இஸ்ரவேல் அவருடைய சுதந்தரமான கோத்திரம்
சேனைகளின் கர்த்தர் என்பது அவருடைய நாமம்’ தீஇவ 97.5

வசனங்கள் 12-16