பிள்ளையின் முதல் பள்ளி வீடு. சேவை வாழ்க்கைக்கான அடித்தளத்தை அங்குதான் போடவேண்டும். 1MH, 400 TamChS 269.1
வீட்டில் ஒரு நற்செய்தி ஊழியராக இருப்பதுதான் உங்கள் வாழ்க்கையின் முதல் முக்கியமான பணி. 2MH, 400 TamChS 269.2
மனித இனத்தை மீட்டு, உயர்த்துகிற பணி முதலாவது வீட்டில் தான் ஆரம்பிக்கிறது. பெற்றோரின் பணிதான் ஒவ்வொன்றுக்கும் அடித்தளமாக இருக்கிறது. சமுதாயத்தின் நலனும், திருச்சபையின் வெற்றியும், தேசத்தின் செழிப்பும், குடும்பச் செல்வாக்குகளைச் சார்ந்துள்ளது. 3MH, 349 TamChS 269.3
மெய்ஊழியத்தின் ஆவி எவ்வளவு தூரம் முழுமையாக குடும்பத்தில் பரவியிருக்கிறதோ, அவ்வளவு முழுமையாக பிள்ளைகளின் வாழ்வில் அது உருவாகியிருக்கும். பிறர் நலனுக்காகச் சேவைசெய்வதிலும், தியாகம் செய்வதிலும் சந்தோஷமடைய அவர்கள் கற்றுக்கொள்வார்கள். 1MH, 401 TamChS 269.4
குடும்பத்தில் தங்களுக்கு முன்பாக மிகப்பெரிய நற்செய்தி ஊழியக்களம் இருப்பதை பெற்றோர்கள் மறவாதிருப்பார்களாக. ஒவ்வொரு தாயும் தேவன் தனக்குக் கொடுத்துள்ள பிள்ளைகள் குறித்து பரிசுத்தமான கட்டளையை அவரிடமிருந்து பெற்றிருக்கிறாள்.“இந்த மகனை, இந்தமகளைப் பெற்றுக்கொள். எனக்காக அவர்களுக்குப் பயிற்சியகொடு. ஆண்டவருடைய மன்றங்களில் என்றென்றும் பிரகாசிக்கும்படி ஒரு மாளிகைக்கு ஒப்பாக அவர்கள் குணத்தை மெருகேற்று” என்று தேவன் சொல்கிறார். உண்மையுள்ள ஒருதாய், தீமையின் செல்வாக்கை எதிர்த்து நிற்பதற்குதன் பிள்ளைகளைப் பயிற்றுவிக்கும்போது, தேவனுடைய சிங்காசனத்திலிருந்து புறப்படுகிற வெளிச்சமும் மகிமையும் அவள்மேல் பிரகாசிக்கும். 29T, 37 TamChS 270.1
கிறிஸ்துவுக்காக நாம் செய்கிற ஊழியம் முதலாவது நம் குடும்பத்தில், நம் வீட்டில்தான் ஆரம்பிக்கவேண்டும். இதைவிட அதிக முக்கியமான ஊழியக்களம் வேறு எதுவும் இல்லை. மனம் மாறாதோருக்காக ஊழியம் செய்யும்படி பெற்றோர் தங்கள் முன்மாதிரியாலும் போதனையாலும் பிள்ளைகளுக்குக் கற்பிக்கவேண்டும். வயதானோர் மேலும் வேதனையில் உள்ளோர் மேலும் பரிவுகாட்டும் விதத்தைச் சொல்லிக்கொடுக்க வேண்டும். எளியோரின் உபத்திரவங்களைத் தணிக்க முயலும் விதத்தைப் பிள்ளைகளுக்குக் கற்றுக்கொடுக்க வேண்டும். நற்செய்தி ஊழியத்தில் கருத்தோடு இருப்பதற்கு அவர்களுக்குக் கற்றுக்கொடுக்க வேண்டும். அவர்கள் தேவனோடு உடன் வேலையாட்களாக இருக்கும்படிக்கு சுய மறுப்பைக் கற்பிக்க வேண்டும். பிறர் நலனுக்காகவும் கிறிஸ்துவின் நோக்கம் நிறைவேறவும் தியாகத்தோடு வாழ்வதை ஆரம்பத்திலிருந்தே அவர்களுக்குள் புகுத்தவேண்டும். ஆனால் மற்றவர்களுக் காக ஊழியம் செய்வதுபற்றி அவர்கள் கற்றுக்கொள்ள வேண்டுமா னால், தங்களுடைய அன்புக்கு உரிமையுள்ளவர்களான தங்கள் குடும்ப அங்கத்தினர்களுக்கு ஊழியம் செய்ய முதலில் கற்றுக் கொள்ளவேண்டும். 36T, 429 TamChS 270.2
நம் குடும்பத்தினர்களை ஒழுங்குப்படுத்தவேண்டும். நற்செய்தி ஊழிய முயற்சிகளில் குடும்ப அங்கத்தினர்கள் ஒவ்வொருவரிலும் ஆர்வத்தை உண்டாக்க ஊக்கமான முயற்சிகளை எடுக்க வேண்டும். நம் பிள்ளைகள் எல்லாச் சமயங்களிலும் எல்லா இடங் க ளிலும் கிறிஸ்துவைப் பிரதிபலிக்கும்படி தங்களால் முடிந்த அளவு சிறப்பாகச் செயல்படுவதற்கு இரட்சிக்கப்படாதோருக்காக ஊக்கமாக உழைக்கும் உணர்வுகளை நம் பிள்ளைகளில் எப்போதும் ஏற்படுத்திக்கொண்டே இருக்கவேண்டும். 1RH, July 4, 1893 TamChS 270.3