Go to full page →

பிரயாசத்திலும் தியாகத்திலும் முன்னோடிகள் TamChS 47

நம் வாலிபர்மேல் நமக்கு நம்பிக்கையிருப்பதை நாம் காட்ட வேண்டும். கடும் பிரயாசமும் தியாகமும் சம்பந்தப்பட்ட அனைத்து நடவடிக்கைகளிலும் வாலிபர்கள் முன்னோடிகளாக இருக்கவேண்டும். அதேசமயம், கிறிஸ்துவுக்காக உழைத்து உழைத்துப்பழக்கப்பட்ட முதியோர்களை ஆலோசகர்களாக வாலிபர்கள் ஏற்றுக் கொள்ளவேண்டும்; தேவனுக்காக அதிகம் ஓடுகிற வாலிபர்களை முதியோர்கள் ஊக்கப்படுத்தி, ஆசீர்வதிக்கவேண்டும். 3CT, pp 516,517 TamChS 47.2

ஊழியக்களங்களில் பணிசெய்ய வாலிபர்கள் தேவை.அவர்களை தேவன் அழைக்கிறார். முதியவர்கள் ஒருபெரிய குடும்பத்தை ஆதரித்து, சரியான வழியில் நடத்தவேண்டியவர்கள்.அவர்களைவிட வாலிபர்களுக்கு பொறுப்புகளும், அது சம்பந்தப்பட்ட கவலைகளும் குறைவாக இருப்பதால், ஊழியம் செய்வதற்கான வாய்ப்புகள் முதியயோரைவிட வாலிபருக்கு அதிகம் உள்ளன. மேலும், வாலிபர்கள் எளிதில் புதிய சூழல்களையும் புதிய சமுதாயத்தையும் தழுவிக்கொள்ளமுடியும். மேலும், அசௌகரியங்களையும் சிரமங்களையும் தாங்கிக்கொள்ளமுடியும். சரியான யுக்தியோடும் விடாமுயற்சியோடும் செயல்பட்டால், மக்கள் இருக்கிற இடத்திற்கே சென்று அவர்களை அணுகமுடியும். 1CT, p 517 TamChS 47.3

வீட்டிலே சரியான கல்வியைப்பெற்ற வாலிபர்கள் பலர் இருப்பார்கள்; அவர்களை சேவைக்காகப் பயிற்றுவிக்கவேண்டும். மேலும், நன்கு திட்டமிட்டு, உண்மையாக வேலைசெய்து புதிய இடங்களில் சத்தியத்தின் தரத்தை உயர்த்துவதற்கு ஊக்குவிக்க வேண்டும். நகரப்பணிகளில் அனுபவமிக்கவர்களோடும் நம் ஊழியர்களோடும் தொடர்புகொள்வதன்மூலம் அவர்கள் மிகச் சிறந்த பயிற்சியைப் பெறலாம். தேவனுடைய வழிநடத்துதலின்கீழ் செயல்பட்டு, அதிக அனுபவம் வாய்ந்த சகப்பணியாளர்களின் ஜெபத்தால் தாங்கப்பட்டு, மிகவும் பாக்கியமும் நன்மையுமான ஊழியத்தைச் செய்யலாம். அவர்கள் தங்கள் இளம் வயது ஆற்றல்களை முற்றிலும் ஈடுபடுத்தி, முதிய ஊழியர்களுடன் சேர்ந்து வேலை செய்யும்போது, பரலோகத் தூதர்களும் அதில் இணைந்து கொள்வார்கள். அதனால் தைரியத்தோடும் சுதந்தரத்தோடும் பாடல் பாடி, ஜெபித்து, விசுவாசித்து, ஊழியம்செய்கிற சிலாக்கியத்தைப் பெறுவார்கள். பரலோகத் தூதர்கள் உடனிருப்பதால், அவர்களுக்கும் அவர்களுடைய சக ஊழியர்களுக்கும் கிடைக்கிற தன்னம்பிக்கையும் உறதியும் அவர்களை ஜெபிக்கவும் போற்றவும் மெய்யான விசுவாசம்வைக்கவும் வழி நடத்தும். 29T, p 119 TamChS 48.1