Go to full page →

பரலோகப் பதிவேடு TamChS 118

உலகத்திற்கு நற்செய்தியாளர்கள் தேவை; அர்ப்பணிப்புமிக்க குடும்ப நற்செய்தியாளர்கள் தேவை. நற்செய்திப்பணி ஆவியில்லாத எவரையும் பரலோகப் பதிவேட்டில் ஒரு கிறிஸ்தவெனென்று பதிவுசெய்யமாட்டார்கள். 5RH, Aug. 23, 1892 TamChS 118.4

சபை அங்கத்தினர்கள் தனிப்பட்ட விதத்தில் இந்தப் பணியை மேற்கொள்ளாவிட்டால், தேவனோடு தங்களுக்கு உயிருள்ள உறவு இல்லையென அதன்மூலம் காட்டுகிறார்கள். சோம்பேறி வேலைக்காரர்கள் என்று அவர்களுடைய பெயர் பதிவேட்டில் எழுதப்படும். 15T, 462,463 TamChS 118.5

தேவநோக்கம் சம்பந்தப்பட்ட ஒரு விஷயத்தில், தங்களால் மறுப்பேதும் சொல்லமுடியாவிட்டாலும், அதில் அக்கறையின்றி, அதற்கு உதவி செய்ய மறுப்பவர்கள் எல்லாச்சபை இயக்கங்களிலும் காணப்படுகிறார்கள். அப்படிப்பட்டவர்கள், உன்னதத்தில் பதிவு செய்யப்பட்டுவரும் ஒரு பதிவுகுறித்து ஞாபகம் கொண்டால் நலமாயிருக்கும். அந்தப்பதிவுப்புத்தகத்தில் எதுவும் விடுபடப்போவதும் இல்லை; தவறு ஏற்படப்போவதும் இல்லை; அதிலிருந்துதான் அவர்கள் நியாயந்தீர்க்கப்படுவார்கள். தேவசேவையில், புறக்கணிக்கப்படும் ஒவ்வொரு தருணமும் அங்குப்பதிவு செய்யப்படும்; மேலும், அன்பாலும் விசுவாசத்தாலும் விளைந்த ஒவ்வொரு செயலும் நித்தியமாக அதில் பதிவுசெய்யப்படும். 2PK, 639 TamChS 119.1

1879, அக்டோபர் 23 காலையில், சுமார் 2 மணியளவில் கர்த்தருடைய ஆவியானவர் என்மேல் இறங்கினார். வரப்போகும் நியாயத்தீர்ப்பு காட்சிகளைக் கண்டேன். ஒரு பெரிய சிங்காசனத்திற்கு முன்பாக பதினாயிரம் பதினாயிரம் பேர் கூடியிருந்தார்கள், கம்பீரமான தோற்றமுடைய ஒருவர் அதன்மேல் வீற்றிருந்தார். அவருக்கு முன்பாக பல்வேறு புத்தகங்கள் இருந்தன, ஒவ்வொன்றின் அட்டைகளின் மேலும் ஜொலிக்கின்ற அக்கினியைப் போன்ற தங்க எழுத்துகளில் ‘பரலோகப் பதிவேடு’ என்று எழுதப்பட்டிருந்தது. அந்தப் புத்தகங்களில் சத்தியத்தை நம்புவதாகச் சொல்லிக் கொள்வோரின் பெயர்கள் அடங்கிய ஒருபுத்தகம் திறக்கப்பட்டது. உடனே, சிங்காசனத்தைச் சுற்றிலுமிருந்த எண்ணிலடங்காதோர் மேலிருந்து கண்களை விலக்கி, சத்தியத்தின் பிள்ளைகளென்றும் ஒளியின் பிள்ளைகளென்றும் சொல்லிக்கொள்வோரின்மேல் என் கவனத்தைச் செலுத்தினேன். TamChS 119.2

வேறொரு புத்தகம் திறக்கப்பட்டது, அதில் சத்தியத்தைக் கைக்கொள்வதாகச் சொல்வோரின்பாவங்கள் பதியப்பட்டிருந்தன. சுயநலம் என்கிற பொதுவான தலைப்பின்கீழ் மற்ற அனைத்துப் பாவங்களும் எழுதப்பட்டிருந்தன. ஒரு வகுப்பினர்பற்றி ‘ நிலத்தைக் கெடுக்கிறவர்கள்’ என்று பதிவு செய்யப்பட்டிருந்தது. நியாயாதிபதியின் ஊடுருவுகிற பார்வை அவர்கள்மேல் பட்டதும், அலட்சியம் என்கிற அவர்களுடைய பாவம் தெள்ளத்தெளிவாகத் தெரிந்தது. தங்களை நம்பி ஒப்படைக்கப்பட்ட பரிசுத்த பொறுப்புக்கு தாங்கள் நம்பிக்கைத்துரோகம் செய்ததாக உதடுகள் வெளுக்க நடுநடுங்கி ஒத்துக்கொண்டார்கள். எச்சரிப்புகளையும் சிலாக்கியங்களையும் பெற்றிருந்தார்கள்; ஆனால், அவற்றிற்குச் செவிகொடுக்கவோ மேம்படுத்தவோ இல்லை. தேவனுடைய இரக்கம்பற்றி அளவுக்கதிகமாக ஊகித்தது தவறென இப்போது கண்டுகொண்டார்கள். தீயவர்களையும் ஒழுக்கக்கேடானவர்களையும் போல அறிக்கையிடவேண்டிய பாவங்கள் அவர்களிடம் அதிகம் இல்லை. ஆனால், கனி கொடுக்காததாலும், அவர்களை நம்பி ஒப்படைக்கப்பட்ட தாலந்துகளைப் பயன்படுத்தாததாலும் சபிக்கப்பட்டார்கள். இவர்கள் சுயத்தை முக்கியப்படுத்தினார்கள்; சுயநலன்களுக்காக மட்டும் பிரயாசப்பட்டார்கள். தேவனுக்காக ஐசுவரியவான்களாக இருக்கவில்லை; அவர்களிடம் தேவன் கேட்டதை அவர்கள் கொடுக்கவில்லை. கிறிஸ்துவின் ஊழியர்களெனச் சொன்னாலும், ஆத்துமாக்களை அவரிடம் கொண்டுவரவில்லை. அவர்கள்மூலம் தேவநோக்கம் நிறைவேற வேண்டுமென இருந்திருந்தால், அது நடந்திருக்காது. ஏனென்றால், தேவன் அவர்களுக்குக் கொடுத்த வசதிகளை பயன்படுத்தாமல் இருந்ததுமன்றி, தங்களையும் பயன்படுத்தாமல் இருந்தார்கள். எஜமானின் திராட்சத் தோட்டத்தில் மற்றவர்களைப் பணிசெய்ய விட்டு விட்டு, பாரமான பொறுப்புகளை அவர்கள்மேல் சுமத்திவிட்டு, தங்களுடைய தற்காலிக நலன்களை நாடுவதிலேயே சுயநலமாக இருந்தார்கள். TamChS 119.3

“அனைவரும் விசுவாசத்தால் நீதிமான்களாக்கப்பட்டு, தங்களில் கிரியைகளால் நியாயந்தீர்க்கப்படுவார்கள்” என்று நியாயாதிபதி சொன்னார். அப்போது அவர்களுடைய அலட்சியம் எவ்வளவு தெளிவாக விளங்கியது! தங்கள் சகமனிதரின் நலனுக்காகவும்,அவர்களை இரட்சிப்பதற்காகவும் ஒவ்வொருவரும் ஒவ்வொரு வேலையைச் செய்யுமாறு தேவன் செய்துள்ள ஏற்பாடு எவ்வளவு ஞானமானதென விளங்கியது. ஏழைகள்மேல் இரக்கம் காண்பித்து, வேதனைப்படுவோர் மேல் பரிவுகாட்டி, நற்செய்தி ஊழியத்தில் ஈடுபட்டு, தன் வசதிவாய்ப்புகளால் தேவ நோக்கத்திற்கு உதவி செய்து ஒவ்வொருவரும் தன் குடும்பத்திலும் அக்கம் பக்கத்தார் மத்தியிலும் உயிருள்ள விசுவாசத்தைக் காண்பிக்க வேண்டியிருந்தது. மேரோசைப் போல, தாங்கள் செயல்படாத காரணத்திற்காக தேவ சாபம் அவர்கள்மேல் தங்கியது. இந்த வாழ்க்கையில் தங்களுக்கு மிகுந்த ஆதாயத்தைத் தந்த பணியை நேசித்தார்கள்; இன்னின்ன நற்கிரியைகளைச் செய்தார்களென்று பரலோகப் பதிவுகளில் அவர்களுடைய பெயர்களுக்கு நேராக எதுவுமே எழுதப்பட வில்லை. 14T, 384,386 TamChS 120.1