இயேசு சென்றபோது, ஒவ்வொருவருக்கும் ஒருவேலையைக் கொடுத்தார். ‘எதுவுமே செய்யாமல் இருப்பது’ என்பது நியாயப்படுத்த முடியாத சாக்குப்போக்கு ஆகும். ‘எதுவுமே செய்யாமல் இருப்பதுதான் மனிதர்கள் மத்தியில் வேதனை உண்டாவதற்கான காரணம். ஏனென்றால், சோம்பேறிகளின் சிந்தனைகளை சாத்தான் தன் திட்டங்களால் நிறைத்து, அவற்றைச் செயல்படுத்த வைக்கிறான். ‘எதுவுமே செய்யாமல் இருப்பது’ சகோதரருக்கு விரோதமாக மோசமான சாட்சியைச் சொல்லச்செய்கிறது; கிறிஸ்துவின் திருச்சபைக்குள் ரிவினையைக் கொண்டுவருகிறது.’ என்னோடே சேர்க்காதவன் சிதறடிக்கிறான்’ என்று இயேசு சொன்னார். 2RH, March 13, 1888 TamChS 145.1
சகோதர சகோதரிகளே, மற்றவர்களுக்காக ஊழியம் செய்ய இயலவில்லை என்று சொல்லி, வேலைசெய்யாமல் அநேகர் சாக்குப்போக்குச் சொல்லுகிறீர்கள். தேவனா உங்களை திறனற்றவர் ஆக்கினார்? நீங்கள் செயல்படாததால் தானே இயலாமல் போனது? உங்களுடைய துணிகரமான தீர்மானத்தால் தானே இயலாதவர்களாக மாறிவிட்டீர்கள்? உங்களுடைய வசதியையும் சந்தோஷத்தையும் பெருக்குவதற்காக அல்ல, அவருக்காக பயன்படுத்தும்படி ஒரு தாலந்துகூட அவர் உங்களுக்குக் கொடுக்கவில்லையா? நீங்கள் அவருக்காக வேலை செய்ய அமர்த்தப்பட்ட வேலைக்காரர்கள். உங்களை நம்பி அவர் போட்ட மூலதனத்தை ஞானமாகவும் திறமையாகவும் பயன்படுத்தி, நீங்கள் அவருக்கு இலாபத்தை ஈட்ட வேண்டுமென்பதை நீங்கள் உணரவில்லையா? இந்த நோக்கத்திற்காக அவர் உங்களுக்குத் தந்த திறன்களை மேம்படுத்துகிற வாய்ப்புகளை நீங்கள் புறக்கணிக்கவில்லையா? தேவனுக்குச் செய்யவேண்டிய கடமை குறித்த மெய்யான உணர்வை ஒரு சிலரே அடைந்திருக்கிறார்கள் என்பது உண்மை. 35T, 457 TamChS 145.2
தங்களுடைய தொழில் நன்றாக நடக்கிறதென்றால், ஆத்தும ஆதாயத்திற்காகவும் தங்கள் மீட்பரின் நோக்கத்தை நிறைவேற்று வதற்காகவும் தங்களால் எதுவும் செய்யமுடியாது என்று நினைக் கிறார்கள். எதையும் அரைகுறையாக செய்ய முடியாது என்று சொல்லி விட்டு, ஆன்மிகக் கடமைகளிலும் ஆவிக்குரிய நடவடிக்கைகளிலுமிருந்து விலகி, முழுவதும் தொழிலிலேயே மூழ்கிவிடுகிறார்கள்; தேவனை மறந்துவிடுகிறார்கள். அவர்கள்மேல் தேவனுக்கு மகிழ்ச்சி இல்லை. பக்தியான வாழ்க்கையிலும், தேவனுக்குப் பயப்படுவதால் வரும் பூரண பரிசுத்தத்திலும் வளரமுடியாத ஏதாவது தொழிலில் யாராவது ஈடுபட்டிருந்தால், அந்தத் தொழிலை அவர்கள் விட்டுவிட வேண்டும். ஒவ்வொரு மணி நேரமும் இயேசு தங்களோடிருக்கிற ஒரு தொழிலுக்கு அவர்கள் மாறவேண்டும். 12T, 233, 234 TamChS 145.3