Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    மெய்யான மனந்திரும்புதல்.

    பாவியின் இருதயமானது தேவாவியின் வல்லமைக்குக் கீழ்ப்படியும் போதுதான், அவனுடைய மனச்சாட்சி தெளிவடைந்து, வானலோகத்திலும் பூலோகத்திலுமுள்ள தேவனுடைய அரசாட்சியின் அஸ்திபாரமான அவருடைய பரிசுத்த நியாயப்பிரமாணத்தின் ஆழத்தையும் பரிசுத் தத்தையுங்குறித்துக் கொஞ்சமறிந்து கொள்ளுகிறான், “உலகத்திலே வந்து ஒவ்வொரு மனுஷனையும் பிரகாசிப்பிக்கிற ஒளியே” (யோ. 1: 9). ஆத்துமாவிலுள்ள உள்ளான அறைகளைப் பிரகாசிப்பித்து, அந்தரங்கத்திலே மறைந்து கிடக்கிற காரியங்களை வெளிப்படுத்துகிறது. பாவ உணர்ச்சி மனதையும் இருதயத்தையும் பற்றிக்கொள்ளுகிறதுண்டு. பாவியானவன் ஏகோவாவின் நீதியைக்குறித்த அறிவையுடையவனாய், இருதயங்களை ஆராய்ந்தறிகிறவருக்கு முன்னிலையில், தன் சொந்த பாவத்தையும் அசுத்தத்தையுங்கண்டு பயந்து நடுங்குகிறான். தேவனுடைய அன்பையும், பரிசுதத்தின் மாட்சிமையையும், சித்தசுத்தத்தின் சந்தோஷத்தையும் பார்த்து, தானும் சுத்தமாகவேண்டுமென்று வாஞ்சித்து, வானவரோடு ஐக்கியமாகத்தன்னை முமுவதுமாய் ஒப்படைக்கிறான்.SC 33.1

    தாவீது பாவத்தில் விமுந்தபின் செய்த ஜெபமே பாவத்துக்காகவுண்டான மெய்யான துக்கத்தின் தன்மையைக் காட்டுந் திருஷ்டாந்தம். இவனுடைய மனந்திரும்புதல் உண்மையும் ஆழமுமாயிருந்த்து. போக்குச்சொல்லித் தன் பாவத்தை மறைத்துக் கொள்வதற்கு யாதொரு முயர்ச்சியுஞ் செய்ததில்லை. பயங்கரமான நியாயத்தீர்ப்பிலிருந்து தப்பித்துக்கொள்ள விருப்பமில்லாமலிருக்கும்படி தன் ஜெபத்திலே ஏவப்பட்டான். தாவீது தன் மீறுதலின் பெருக்கத்தையும், தன் ஆத்துமா தீட்டானதையுங் கண்டான். தன் பாவத்தை அருவருத்தான், பாவ மன்னிப்புக் காக மாத்திரம் ஜெபிக்காமல், இருதய சுத்திகரிப்புக்காகவும் வேண்டிக்கொண்டான், பரிசுத்தத்தின் சந்தோஷத்தையடையவும், தேவனேடு ஐக்கியப்படவும், அவரோடு இசைந்திருக்கவும் வாஞ்சித்தான். அவன் இருதயத்தின் வாஞ்சை என்ன்வென்றால்:-SC 34.1

    ” எவனுடைய மீறுதல் மன்னிக்கப்பட்டதோ, எவனுடைய பாவம் மூடப்பட்டதோ, அவன் பாக்கியவான். எவனுடைய அக்கிரமத்தைக் கர்த்தர் எண்ணாதிருக்கிறாரோ, எவனுடைய ஆவியில் கபடமில்லாதிருக்கிறதோ, அவன். பாக்கியவான்” சங் 32: 1,2.SC 35.1

    தேவனே, உமது கிருபையின்படி எனக்கு இரங்கும். உமது மிகுந்த இரக்கங்களின்படி என் மீறுதல்கள் நீங்க என்னைச் சுத்திகரியும். என் அக்கிரமம் நீங்க என்னை முற்றிலுங் கழுவி, என் பாவமற என்னைச் சுத்திகரியும். என் மீறுதல்களை நான் அறிந்திருக்கிறேன்; என் பாவம் எப்பொமுதும் எனக்கு முன்பாக நிற்கிறது. தேவரீர் ஒருவருக்கே விரோதமாக நான் பாவஞ்செய்து, உமது கண்களுக்கு முன்பாகப் பொல்லாங்கானதை நடப்பித்தேன். நீர் பேசும்போது உம்முடைய நீதி விளங்கவும், நீர் நியாயந்தீர்க்கும்போது உம்முடைய பரிசுத்தம் விளங்கவும் இதை அறிக்கையிடுகிறேன்.SC 35.2

    இதோ, நான் துர்க்குணத்தில் உருவானேன்; என் தாய் என்னைப் பாவத்தில் கர்ப்பந்தரித்தாள். இதோ, உள்ளத்தில் உண்மையிருக்க விரும்புகிறீர்; அந்தக்கரணத்தில் ஞானத்தை எனக்குத் தெரியப்படுத்துவீர். நீர் என்னை ஈசோப்பினால் சுத்திகரியும், அப்பொமுது நான் சுத்தமாவேன், என்னைக் கழுவியருளும், அப்பொமுது நான் உறைந்த மழையிலும் வெண்மையர்வேன். நான் சந்தேஷமும் மகிழ்ச்சியும் கேட்கும்படி செய்யும், அப்பொழுது நீர் நொறுக்கின எலும்புகள் களிகூறும்.SC 35.3

    என் பாவங்களைப் பாராதபடிக்கு நீர் உமது முகத்தை மறைத்து, என் அக்கிரமங்களையெல்லாம் நீக்கியருளும். தேவனே, சுத்த இருதயத்தை என்னிலே சிருஷ்டியும், நிலைவரமான ஆவியை என் உள்ளத்திலே புதுப்பியும். உமது சமுகத்தைவிட்டு என்னைத் தள்ளாமலும், உமது பரிசுத்த ஆவியை என்னிடத்திலிருந்து எடுத்துக்கொள்ளாமலுமிரும். உமது இரட்சணியத்தின் சந்தோஷத்தைத் திரும்பவும் எனக்குத் தந்து, உற்சாகமான ஆவி என்னைத் தாங்கும்படி செய்யும்.SC 36.1

    அப்பொமுது பாதகருக்கு உமது வழிகளை உபதேசிப்பேன்; பாவிகள் உம்மிடத்தில் மனந்திரும்புவார்கள். தேவனே, என்னை இரட்சிக்குந் தேவனே, இரத்தப் பழிகளுக்கு என்னை நீங்கலாக்கிவிடும்; அப்பொழுது என் நாவு உம்முடைய நீதியைக் கெம்பீரமாய்ப் பாடும்.” (சங்.51: 1-14) என்பதே.SC 36.2

    இதைப் போன்ற ஓர் மனந்திரும்புதலை நாம் நாமே செய்து முடிக்கக் கூடாதவர்களாயிருக்கிறோம். உன்னதத்துக்கேறி, மனுஷருக்கு வரங்களை யளிக்கிற கிறிஸ்துவிடத்திலே மாத்திரம், இது கிடைக்குமேயொழிய வேறெருவரிடத்திலுங் கிடையாது.SC 36.3

    அநேகர் பிசகிப்போகிற ஓர் விஷயமிங்கேயுண்டு; ஆயினும், கிறிஸ்து அவர்களுக்குப் புரிய விரும்புகிற உதவியைப் பெற்றுக்கெள்ள தவறிப்போகிறார்கள். தாங்கள் முதலில் மனந்திரும்பினாலன்றி கிறிஸ்துவண்டை சேரலாகாதென்றும், மனந்திரும்புதல் தங்கள் பாவமன்னிப்புக்கு வழியை ஆயத்தம் பண்ணுகிறதென்றும் பலர் நினைத்துக்கொள்ளுகிறார்கள்: பாவமன்னிப்புக்கு முன் மனந்திரும்புதல் உண்டாகவேண்டுமென்பது வாஸ்தவந்தான்; ஏனெனில், நருங்குண்டதும் நொறுங்குண்டதுமான இருதயமே ஓர் மீட்பர் அவசியம் என்று உணர்ந்துகொள்ளும். அப்படியிருக்க, பாவியானவன் கர்த்தராகிய இயேசுவண்டை வருவதற்குமுன்னே மனந்திரும்புதலுக்கென்று காத்திருக்க்வேண்டுமா? பாவிக்கும் மீட்பருக்குமிடையில் மன்ந்திரும்புதல் ஓர் இடையூருக இருக்க்வேண்டுமோ?SC 37.1

    கிறிஸ்துவின் அழைப்பைக் கவனிக்குமுன் பாவியானவன் மனந்திரும்பவேண்டும் என்று சத்தியவேதம் போதிக்கிறதில்லை. “வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே, நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள், நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்.” மத் 11: 28. உண்மையான மனந்திரும்புதலுக்கு நட்த்துவது, கிறிஸ்துவிலிருநது புறப்படுகிற வல்லமைதான். ” இஸ்ரவேலுக்கு மனந்திரும்புத லையும் பாவ மன்னிப்பையும் அருளுகிறதற்காக, அவரை அதிபதியாகவும் இரட்சகராகவும் தமது வலது கரத்தினாலே உயர்த்தினார்.” அப்.5: 31 என்று அப்போஸ்தலனாகிய பேதுரு இஸ்ரவேலருக்குச் சாஷியாகக் கொடுத்த வாக்குமூலத்தில் தெளிவாய் இக்காரியத்தை விளங்கப் பண்ணியிருக்கிறார். கிறிஸ்துவின் ஆவியின்றி நமக்கு மனந்திரும்புதல் கிடையாது. கிறிஸ்துவையல்லாமல் நமக்குப் பாவமன்னிப்பில்லாததுபோல், அவரே ஒவ்வோர் சரியான ஏதுவுக்குங் காரணகர்த்தாவாயிருக்கிருர். அவர் ஒருவரே பாவத்தை வெறுக்கும் வெறுப்பை நமது இருதயத்தில் நாட்டக் கூடிபவர். சத்திபத்தையும் சுத்தத்தையும் நாடுகிற நாட்டமும், நமது பாவசுபாவத்தை உணருகிற உணர்ச்சியும் நமக்குள்ளே உண்டாகையில், அது நமது இருதயத்தில் நடக்கும் அவருடைய ஆவியின் கிரியை என்பதற்கு ஏற்ற ஓர் அத்தாஷியாகும்.SC 37.2

    “ நான் பூமியிலிருந்து உயர்த்தப்படும்போது எல்லாரையும் என்னிடத்தில் இழுத்துக் கொள்வேன்,” (யோவா. 12:32) என்று இயேசு திருவாய் மலர்ந்தருளியிருக்கிறார். உலகத்தின் பாவங்களுக்காக மீட்பர் மரிக்கிறதாய் பாவிக்குக் கிறிஸ்து வெளிப்படுத்தப்பட வேண்டும். தேவனுடைய குமாரனை கல்வாரிச் சிலுவையில் நோக்கும்போது, இரட்சிப்பின் இரகசியம் நம்முடைய மனதுக்குப் புலப்படத் தொடங்குகிறது தேவதயவும் நம்மை குணப்படும்படி ஏவுகிறது, பாவிகளுக் காக அவர் அடைந்த மரணத்தில் நாம் கிரகிக்கக் கூடாத ஓர் அதிசயமான அன்பை கிறிஸ்து விளங்கச் செய்திருக்கிறார். ஒருவன் தன்னைப் பாவியாகப் பாவித்து, இந்த அன்பைப் பற்றிக்கொள்ளுகையில் அது இருதயத்தை இளகச்செய்து, மனதை உறுத்தி, ஆத்துமாவிலே அநுதாபத்தை எமுப்பி விடுகிறது.SC 38.1

    கிறிஸ்துவண்டை இழுக்கப் பட்டிருக்கிறோம் என்று தங்கள் மனச்சாட்சி அறியுமுன்னே மனிதர் தங்கள் பாவ வழிகளைக் குறித்துச் சிலவேளை வெட்கமடைந்து, தங்கள் கேடான வழக்கங்களை விட்டு விடுவது மெய்தான். ஆயினும், நன்மைக் கடைபிடிக்க வேண்டுமென்கிற பூரணவாஞ்சையினால், தங்களைச் சீர்படுத்திக்கொள்ள முயற்சிக்கும் போதெல்லாம், கிறிஸ்துவின் வல்லமையே அவர்களை வலுவாய் அவரண்டை இழுக்கிறது. தங்கள் ஆத்துமாவில் நடக்கிறவேலையின் இரகசியத்தை அறியாதிருக்கிறபோதே, அவர்கள் மனச்சாட்சி உயிர்ப்பிக்கப்பட்டு, அவர்களுடைய வெளியரங்க ஜீவியம் சீரடைகிறது. தங்கள் பாவங்கள் பீறின கிறிஸ்துவைச் சிலுவையிலே அவர்கள் நோக்கிப்பார்க்கத்தக்கதாக, அவர் அவர்களண்டையில் கிட்டிச்சேர்கிறார்; அப்போதுதான் நியாயப் பிரமாணத்தை மீறுகிறது பாவம் என்று அறிந்து கொள்ளுகிறார்கள். தங்கள் ஜீவியத்தில் நடத்தின துன்மார்க்கமும், ஆத்துமாவிலே ஆழமாய்ப் பதிந்து கிடக்கிற பாவமும், அவர்களுக்கு வெளியாக்கப்படுகிறது. கிறிஸ்துவின் நீதியில் சில பாவங்களை உணரத் தொடங்கி, அதின் அகோரக் கொடுமையினின்று, மீட்கப்படுவதற்காக இவ்வித பலி வேண்டியதற்கு பாவமா காரணம்? என்றும், இந்த அன்பும், பாடும், தாழ்வும், நாம் அழிந்துபோகாமல் நித்திய ஜீவனை அடைவதற்கு வேண்டியதாக விருந்ததா? என்றும் பிரலாபிக்கிறார்கள்.SC 39.1

    பாவியானவன் இந்த அன்பை அல்லத்தட்டி, வெறுத்து கிறிஸ்துவண்டை நெருங்க மறுக்கலாம். அவன் விரோதித்து மறுக்காவிட்டால் கிறிஸ்துவினிடத்தில் இழுக்கப்படுவான். தேவனுடைய அருமைக் குமாரனின் பாடுகளூக்குக் காரணமாயிருந்த தன் பாவங்களூக்காக மன்ந்திரும்புவத்னுல் இரட்சிப்பின் வழியைக் காட்டுமறிவு சிலுவையின் தாளண்டையில் நடத்தும். SC 40.1

    இயற்கைப் பொருளை நடத்துகிற அதே திருவுளம் மனிதருடைய இருதயத்திலே இல்லாத ஏதோ ஓர் காரியத்தை வாஞ்சிக்கச் சொல்லவொண்ணாவண்ணம் ஏவிவிடுகிறது. இந்த ஏக்கத்தை பூலோகத்திலுள்ள காரியங்கள் தீர்க்கவே தீர்க்காது. தேவாவியானவர் சமாதானமும் இளைப்பாறுதலுமாகிய கிறிஸ்துவின் கிருபையையும், பரிசுத்தத்தின் சந்தோஷத்தையுங் கொடுக்கக்கூடிய அந்தக் காரியங்களை மாத்திரம் வாஞ்சிக்கும்படி அவர்களோடு பரிந்து பேசுகிறார். மனிதருடைய மனதைத் திருப்தி செய்யாத பாவச்சந்தோஷத்தினின்று அவர்களை விடுவித்து தம்மால் அவர்க்ளுக்குக் கிடைக்கக்கூடிய அளவற்ற ஆசீர்வா தத்தை நோக்கும்படி நம்முடைய இரட்சகர் காணப்படுகிறதும் காணப்படாததுமான சத்துவங்களின் மூலமாய், அவர்களைத்திருப்புவதற்காக இடைவிடாது வேலை செய்துகொண்டேயிருக்கிறார். இவ்வுலகத்திலே ஒட்டைத் தொட்டியிலிருந்து தாகந்தீரத் தண்ணீர் குடிப்பதற்கு வீணாய்த் தேடியலைகிற இந்த எல்லா ஆத்துமாக்களுக்கும், திவ்விய வாசகனாகியயோவான் மூலமாய் அவர் அருளிச்செய்திருக்கிற ஆறுதலான வாசகமாவது:- ” தாகமாயிருக்கிறவன் வரக்கடவன், விருப்பமுள்ளவன் ஜீவத்தண்ணீரை இலவசமாய் வாங்கிக்கொள்ளக்கடவன்” (வெளி 22: 17) என்பதே.SC 40.2

    இவ்வுலகங்கொடுக்கக்கூடாததைப் பார்க்கிலும் மேலான காரியத்தை வாஞ்சிக்கிற இருதயத்தையுடைய நீ, உனக்குள்ளிருக்கிற வாஞ்சையானது உன் ஆத்துமாவோடு பேசுகிற தேவனுடைய சத்தம் என்று அறிந்து கொள்வாயாக. தேவன் தம்முடைய அளவற்து அன்பினாலும், பூரண பரிசுத்தத்தினாலும், கிறிஸ்துவை உனக்கு வெளிப்பத்துவதற்காகவும், உனக்கு மனந்திரும்புதலை அருளுவதற்காவும் அவரை வேண்டிக்கொள்வாயாக. இரட்சகருடைய ஜீவியத்தில் தேவனுடைய நியாயப்பிரமாணத்தின் ஆதாரமாகிய தேவனிடத்திலும், மனிதரிடத்திலும் அன்பு கூருவது, திட்டமாய்த் திருஷ்டாந்தப்படுத்தப்பட்டிருக்கிறது. பரோபகாரம், தன்னயமற்ற அன்பு இவைகளே அவருடைய ஆத்மீக ஜீவியமாயிருந்த்து. நாம் அவரை நோக்கிப் பார்க்கையில் இரட்சகருடைய திவ்விய ஒளி நம்மேல் வீசுவதைக் காண்கிறது போல் நம்முடைய இருதயத்திலுள்ள பாவக்குணத்தையுங் காணலாம்.SC 41.1

    நம்முடைய வெளியரங்க ஜீவியம் சீராயிருப்பதினால், நமது ஜீவியமுழுவதும் துப்புரவானதென்று நிக்கொதேமைப்போல நம்மை நாமே மெச்சிக் கொண்டு, சாதாரண பாவி தேவசமுகத்தில் தன் இருதயத்தை தாழ்த்தவேண்டுமேயொழிய, நாம் அப்படிச் செய்ய அவசியமில்லையென்று நினைத்துக்கொள்ளலாம். ஆனால் கிறிஸ்துவின் ஜோதி நம்முடைய ஆத்துமாவிலே காந்தியாய்ப் பிரகாசிக்கும்போது, நாம் எவ்வளவு அசுசியாயிருக்கிறோம் என்று அறிந்து கொள்வோம். தன் நேசம் தேவனுக்கு அருவருப்பானது என்றும், நம்முடைய ஜீவியத்தையடுத்த ஒவ்வொரு கிரியையையும் அது தீட்டுப்படுத்துகிறதென்றும் உணர்ந்துகொள்வோம். அப்போதுதான் நம்முடைய நீதி அழுக்கான கநதையென்றும், கிறிஸ்துவின் இரத்தம் மாத்திரம் நமது பாவத்தீட்டைக் கழுவக்கூடுமென்றும், நம்முடைய இருதயத்தை அவர் தமது திருச்சாயலுக்கொப்பாய் புதிதாக்குவார் என்றும் அறிந்துகொள்வோம்.SC 42.1

    தேவ மகிமையின் ஓரே கதிரும், கிறிஸ்துவின் பரிசுத்த ஜோதியும் ஆத்துமாவுக்கூடே சென்று, அதிலுள்ள தீட்டின் ஒவ்வொரு கறையையுந் தெளிவாகக் காட்டி, மனநோவை அதிகரிக்கச்செய்கிறது. மனுஷீக சுபாவத்திலுள்ள ஒவ்வொரு குறைவையும், ஊனத்தையும் வெளியாக்குகிறது. துராசைகளையும், இருதயத்திலுள்ள அவநம்பிக்கையையும், உதடுகளின் அசங்கியத்தையும் பிரத்தியக்ஷமாகப் பார்க்கும்படி செய்கிறது. அவபக்தியாய் நடக்கிற பாவியினுடைய கிரியைகள் தேவனுடைய கற்பனைகளை மீறுகிறதாக. அவனுக்குக்காட்டுகின்றன. தேவாவியானவர் அவனை ஆராய்ந்தறியுங் காலத்தில், ஐயையோ, நான் தெய்வ துரோகியானேனே, என்று மாரடித்துப் புலம்பி, துன்புற்று வருந்துவான். கிறிஸ்துவணிந்திருக்கும் தூய்மையையும், அவரிடத்தில் இலங்கும் களங்கமற்றசுபாவ லட்சணத்தையுங் கண்ணுற்றுத் தன்னைத்தான் வெறுத்துக்கொள்வான்.SC 43.1

    தீர்க்கதரிசியாகிய தானியேல் தன்னண்டை வந்திருந்த தேவதூதனைச் சுற்றி மகிமை சூழ்ந்திருந்ததைக் கண்ட தரிசனத்தில், தான் பெலனற்றுத் திடனற்றுப் போனதை யறிந்து பயந்து நடுங்கினான். இந்த ஆச்சரியக் காட்சியினால் தன்க்கு நேரிட்டதைப்பற்றி, “என் பெலனெல்லாம் போயிற்று; என் உருவம்மாறி வாடிப்போயிற்று; திடனற்றுப்போனேன்” (தானி. 10.8) என்று சொல்லுகிறான். இவ்வாறு உணர்த்தப்பட்ட ஆத்துமா தன் சுயநயத்தை வெறுத்துத் தள்ளும், சுயநேயத்தை அருவருக்கும்; இயேசுகிறிஸ்துவின் புண்ணியமாகிய நீதியின் மூலமாய்த்தேவகட்டளைக்கும். கிறிஸ்துவின் லட்சணத்துக்கும் பொருந்தியிருக்கிறசுத்த இருதயத்தையே நாடித்தேடும்.SC 43.2

    பவுல் தன் வெளியரங்ககிரியைகளை ஆராய்ந்து பார்த்தபோது, “நியாயப்பிரமாணத்திற்குரிய நீதியின்படி குற்றஞ்சாட்டப்படாதவன்” (பிலி.3:6) என்று சொல்லுகிறார். நியாயப்பிரமாணத்திற்குரிய ஆவியின் லட்சணம் அவனிடத்தில் வெளியானபோதோ, தான் பாவியென்றுகண்டார். மனிதர்வெளியரங்க ஜீவியத்தைப் பார்க்கிறபடி நியாப்பிரமாணத்தின் அட்சரத்தினாலே நியாயந் தீர்க்கப்பட்டு, பாவத்துக்கு விலகியிருந்தார். பரிசுத்த கற்பனைகளின் ஆழத்தை எட்டிப்பார்த்தபோதோ, தேவன் பார்க்கிறபடியே தன்னைப்பார்த்து, மனத்தாழ்மையாய்க் குனிந்து பணிந்து, தன் பாவதோஷத்தை அறிக்கையிட்டார். “முன்னே நியாயப்பிரமாணமில்லாதவனா யிருந்தபோது நான் ஜீவனுள்ளவனாயிருந்தேன்; கற்பனை வந்தபோது பாவம் உயிர்கொண்டது, நான் மரித்தவனானேன்” (ரோயர் 7:9) என்று புலம்புகிறான். நியாயப்பிரமாணத்தின் ஆவிக்குரிய தன்மையைக் கண்டபோது, பாவமானது அதின் தற்சொரூபமாகிய பயங்கரகோலத்தில் காணப்பட்டது. தன்னைப்பற்றிக்கொண்டிருந்த ஆங்காரமான எண்ணமுந் தொலைந்தது.SC 44.1

    தேவன் பாவங்களெல்லாவற்றையும் ஓரேயளவாய் மதிக்கிறதில்லை. மனிதனை எவ்வாறு எடை போட்டு வைத்திருக்கிறாரோ அவ்வாறே அவருடைய பார்வையில் பாவத்தின் அளவையும் நிறுத்து வைத்திருக்கிறார். மனிதருடைய பார்வையில் எந்தக்கெட்ட நடத்தையும் வெகு அற்பமாய்த் தோன்றினாலும், ஒரு பாவமாவது தேவனுடைய பார்வையில் சின்னதாகக்காணப்படுகிறதில்லை. மனிதருடைய தீர்ப்பு பக்ஷபாதமும்குறைவுமுள்ளது, தேவனோ எல்லாக்காரியத்தையும் இருக்கிறபடியே சீர்தூக்கிப் பார்க்கிறார். பெருமை, தற்சிநேகம், மாம்ச இச்சை முதலிய அந்த ரங்க பாவமுள்ளவர்களைக் கண்டிக்கிறவர்கள் வெகு சொற்பம். வெளியரங்கமாய்க்குடித்து வெறிக்கிறவனை பூலோகத்தார் அவமதித்து, அவனுடைய கொடியபாவத்தினிமித்தம் பரலோகத்திலும் அவனுக்கு இடங்கிடையாமல் தள்ளிவிடப்படுவான் என்று சொல்லிக் கொள்வார் பலர். தேவனுடைய பரோபகார லட்சணத்துக்கும், பரிசுத்தவான்களுடைய வெறுப்பின் ஜீவியத்துக்கும், இந்தப் பாவக்குணங்கள் முற்றும் விரோதமாயிருக்கின்றபடியால், அவருக்கு அதிக வருத்தத்தை யுண்டாக்குகிறவைகளாயிருக்கின்றன. கொடிய பாவங்களில் ஒன்றில் சிக்கி, அதிலே விமுந்து கிடக்கிற ஒருவன், வெட்கத்தையும் நஷ்டத்தையும் வறுமையுமடைந்து, துன்புறும் நேரத்திலும், கிறிஸ்துவின் உன்னத கிருபையின் அவசியத்தை உணரக்கூடும். பெருமையானது ஒருவனுடைய குறைவைக் காணவொட்டாமல், கிறிஸ்துவுக்கும் அவர் அருளவிருக்கும் ஆசீர்வாதங்களுக்கும் அவன் இருதயத்தை முழுவதும் அடைத்துப்போடுகிறது.SC 45.1

    ” தேவனே, பாவியாகிய என்மேல் கிருபையாயிரும் ” லூக். 18 : 13 என்று ஜெபித்த அந்த ஏழை ஆயக்காரன் தன்னை மகா துன்மார்க்கன் என்றும், மற்றவர்களும் தன்னை அப்படியே தீர்த்திருக்கிறார்கள் என்றும் உணர்ந்தான். ஆயினும், அவன்தன் குறைவைக் கண்டு, பாவபாரத்தையும் வெட்கத்தையும் சுமந்தவனாய், தேவசமுகத்திலே வந்து அவருடைய இரக்கத்துக்காகக்கெஞ்சுகிறான். தேவாவியி னுடைய கிருபைநிறைந்த கிரியையை அவனுக்குள் நடப்பிப்பதற்கும், பாவத்தின் வல்லமையினின்று அவனை விடுவிப்பதற்கும், அவனுடைய இருதயம் திறந்திருந்தது. பரிசேயனுடைய பெருமையும் சுயநீதியும் நிறைந்த ஜெபமானது பரிசுத்தாவியினுடைய கிரியையை நடப்பிக்கக்கூடாதபடி அவருக்கு விரோதமாய் அவனுடைய இருதயம் அடைபட்டிருந்ததெனக் காட்டினது. தேவனைவிட்டுத் தூரமாய் விலகியிருந்ததினாலேதான், அவருடைய பூரண பரிசுத்தத்திற்கும் தன் இருதயத்திலுள்ள தீட்டான பாவங்களுக்கும் பெரிய வித்தியாசமிருக்கிறதென்றுணரவில்லை. தனக்கு அவசியமானது இன்னதென்று இவன் கண்டுகொள்ளாததினாலே, ஒரு நன்மையையும் பெற்றுக் கொள்ளவில்லை. ஆதலால் நீ உன் பாவக்குணத்தைப் பார்ப்பாயாகில், உடனே அதினின்று விலகிக்கொள்ளதாமதஞ் செய்யாதிருப்பாயாக. பரிசுத்தமுள்ள கிறிஸ்துவண்டை சேருவதற்கு நாங்கள் யோக்கியரல்லவென்றெண்ணி, சோரம்போகிறவர்கள் எத்தனை எராளம். உன் சுய முயற்சியினாலும், நற்கிரியைகளினாலும் யோக்கியனாகலாம் என்றெண்ணுகிறாயோ? “எத்தியோப்பியன் தன் தோலையும், சிவிGங்கித் தன் புள்ளியையும் மாற்றக் கூடுமோ? கூடுமானால், தீமை செய்யப்பழகின நீங்களும் நன்மை செய்யக்கூடும்;” எரே. 13:23. நமக்குச் சகாயம் தேவனிடத்தில் மாத்திரமுண்டு. நமது மனதில் ஓர் விசேஷித்த உணர்ச்சியுண்டாகவேண்டுமென்றும், நல்லசமயம்வரட்டுமென்றும், நடக்கை இன்னும் பரிசுத்தமாகட்டும் என்றும் காத்திருக்கக்கூடாது. ஏனென்றால், இந்த விஷயத்தில் நாமாக ஒன்றுஞ் செய்ய முடியாது. நாம் எப்படி இருக்கிறோமோ அப்படியே கிறிஸ்துவண்டை வரவேண்டும்.SC 46.1

    ஆனால், தேவன் அன்பும், இரக்கமும், சாந்தமும், நீடிய பொறுமையும் மிகுந்தவரானபடியால் தம்முடைய கிருபையை அடையாதபடி தள்ளுண்டு போனவர்களை அவர் ஒருபோதும் கைவிடமாட்டார் என்றெண்ணி ஒருவனும் தன்னைத் தான் வஞ்சித்துக் கொள்ளாதிருப்பானாக. பாவத்தின் மேல் பாவத்தைச் செய்ததினாலுண்டாயிருக்கிற பாவப் பெருக்கம் சிலுவையின் வெளிச்சத்திலே மாத்திரம் அளவிடக்கூடும். தேவன் நன்மை மிகுந்தவராதலால் பாவியைத் தள்ளார் என்கிற எண்ண்ம் அவன் உள்ளத்தில் எழும்பும்போது கல்வாரியையே நோக்குவானாக. ஏனெனில், மனிதர் இரட்சிப்படைவதற்கு வேறூ வழியில்லாமையாலும், தீட்டுப்படுத்தும் பாவ வல்லமையினின்று மனுக்குலத்தைத் தப்புவிக்கவும், பரிசுத்தரோடு மறுபடியும் அவர்களை ஐக்கியப்படுத் தவும், இந்தப் பலியைத்தவிர வேறு புகலில்லாமையாலும், ஆவிக்குரிய ஜீவியத்தில் திரும்பவும் அவர்கள் பங்கடையக் கூடாமையாலும், கீழ்ப்படியாதவர்களின் அக்கிரமத்தை கிறிஸ்து தம்மேல் சுமந்து கொண்டதினாலும், பாவிகளுக்குப் பதிலாக அவர் பாடனுபவித்துத் தீர்த்தார். தேவ குமாரனுடைய இந்த அரிய அன்பும், வேதனை நிறைந்தபாடும், நிந்தையான மரணமுமாகிய இவையும், பயங்கரமான பாவத்தின் அகோரத்தையும் மிகுதியையுமே காட்டிகின்றன. இன்னும் அவைகள் நம்முடைய ஆத்துமாவைக் கிறிஸ்துவுக்கு இப்படைப்பதினாலேயல்லாமல், பாவத்தின் வல்லமையினின்று தப்பித்துக்கொள்ள வழியில்லையென்றும், உத்தம ஜீவியஞ் செய்ய நம்பிகையில்லையென்றும் தெரிவிக்கின்றன.SC 48.1

    தங்கள் பாவங்களுக்காக மனஸ்தாபப்பட்டு அதை தள்ளிவிடாதவர்கள், சில சமயங்களில் “அவர்களைப்போல நானும் யோக்கியனாயிருக்கிறேன்” என்று பேர்க் கிறிஸ்தவர்களைச் சுட்டிக்காட்டி, தாங்களே போக்குச் சொல்லிக் கொள்ளுகிறர்கள். என்னுடைய ஜீவியத்திலிருக்கிறதைவிட அவர்களுடைய நடத்தையில், சுயவெறுப்பும், தெளிந்த புத்தியும், விழிப்பும் விசேஷமாயில்லை. என்னிடத்திலிருக்கிறபடியே ஆசாபாசங்களும், சிற்றின்ப அபேட்சையும், தற்புகழ்ச்சியும், அவர்களிடத்திலுமுண்டு. இவ்வாறு அவர்கள் பிறருடைய பாவக்குற்றங்களையே தங்களுக்கு ஒரு போக்காகப் பேசி, தங்களுடைய கடமையை நிறைவேற்றக் கவலையற்றுப் போகிறார்கள். மற்றவர்களுடைய பாவங்களும் குறைகளும் வேறெவருக்கும் போக்காகமாட்டாது; ஏனென்றால் கர்த்தராகிய ஆண்டவர் மனுக்குலத்தாராகிய நமக்கு மனிதருடைய குற்றங்களையும் பாவங்களையும் மாதிரியாகக் கொடாமல், கரை திரையற்ற தமது திருக்குமாரனையே நமக்கு உத்தம மாதிரியாக அருளிச் செய்திருக்கிறார். பேர்க்கிறிஸ்தவர்களுடைய ஒழிங்கீனமான நடத்தையைச் குறித்து ஆவலாதி சொல்லுகிறவர்கள் தாங்களே பரிசுத்த ஜீவியஞ்செய்து உத்தமமாதிரியைக் காட்டவேண்டியவர்களாயிருக்கிறாகள். கிறிஸ்தவன் இருக்கவேண்டிய நிலைமையைக்குறித்து அவர்கள் மேலான எண்ணமுடையவர்களாயிருப்பார்களேயானால், அவர்களுடைய பாவம் அவ்வளவு பெரிதாயிராதல்லவா? சரியானது இன்னதென்று அவர்கள் அறிந்திருந்தாலும் அதைச் செய்வதற்கு உடன்படுகிறதில்லை.SC 49.1

    காலதாமதஞ்செய்வதைக் குறித்து நாம் எச்சரிக்கையாயிருப்பது நன்மை. பாவங்களைத் தொலைத்துவிட்டு, கிறிஸ்துவின் மூலமாய்ச் சுத்த இருதயத்தைத்தேடும் வேலையைக் கடத்திவைப்பது நன்றன்று. இவ்விஷயத்தில் ஆயிரம் ஆயிரமானவர்கள் தவரிப்போய், நித்திய நஷ்டத்துகுள்ளாகிறார்கள். நம்முடைய ஜீவியத்தின் சுருக்கத்தையும், அநிச்சயத்தையும்பற்றி இப்போது சொல்லப்புகாமல், தேவாவிபரிந்து பேசும் சத்தத்துக்கு இணங்கிப்போக தாமதிப்பதினாலும், பாவத்திலே ஜிவிக்க விரும்புவதினாலும், மிகப்பயங்கரமான அபாயம் நேரிடும் என்பதை உணர்த்துகிறோம். இந்த மோசத்தை அநேகர் சரியாய் உணருகிறதில்லை. அப்படிப்பட்டவர்கள் இப்படித் தாமதஞ் செய்வது இயல்பு. பாவத்தை நாம் மிக அற்பமென்றெண்ணி வந்திருந்தாலும், நித்திய நஷ்டத்தையடையவிருக்குங் காலத்தில் மாத்திரம், ஐயையோ, மோசம் போனோமே என்று பரிதபிக்க நேரிடும். நாம் மேற்கொள்ளாதவைகள் எவைகளோ அவைகளே நம்மை மேற்கொண்டு, அதமாக்கிவிட வழிதேடும்.SC 50.1

    ஆதாம் ஏவாள் இருவரும் தேவன் விலக்கின மரத்தின் கனியைப் புசிக்கும் இந்த அற்பக்காரியத்தினால், அவர் சொல்லியபடி, காரியம் நடக்கப்போகிறதோ வென்றும், என்ன பிரமாதமிது: நடக்கிறது நடக்கட்டும் என்றும், துணிந்து, அதைப்பிடுங்கிச் சாப்பிடத் தலைப்பட்டார்கள். இவர்கள் அற்பமென்றெண்ணின இந்தச் சின்னக்காரியமே அவர்கள் தேவனுடை மாறாத பரிசுத்த கற்பனையை மீறுகிறதற்குக் காரணமாயிருந்தது. ஆம்! அது தேவனுக்கும் மனிதனுக்கும் ஊடே பெரிய பிளப்பையும் பிரிவினையுமுண்டாக்கிற்று மனுக்குலத்தாருக்கு மரணவாசல்களைத் திறந்துவிட்டது. இவ்வுலகத்தின் சர்வ சிருஷ்டிகளின் மீதும் சாபத்தையும், துர்க்கதியையும், சொல்லவொண்ணா நிர்ப்பந்தத்தையும் வருவித்தது. தலைமுறை தலைமுறை யாய் மண்ணுலகினின்று பெருமூச்சும், புலம்பலும் தொடர்ந்தேர்ச்சியாக விண்ணுலகுக்கு ஏறிக்கொண்டேயிருக்கிறது. மனிதனுடைய கீழ்ப்படியாமையால் விளைந்த உபாதையினாலேதான் சிருஷ்டிப்பனைத்தும் பெருமூச்செறிந்து, ஒருமிக்க பிரசவவேதனை யடைந்துகொண்டே யிருக்கின்றன. தேவனுக்கு விரோதமாய் எதிர்த்ததினாலுண்டான தோஷத்தை வானலோகமும் உணர்ந்தது. தேவனுடைய கட்டளையை மீறினதினால், இழ்ந்துபோனதை மீட்கும்படியாய்ச் செலுத்தப்பட்ட ஆச்சரிய பலிக்குக் கல்வாரிமேடு சிறந்த சின்னமாக என்றும் நிலை நிற்கிறதே. ஆகையால் பாவம் ஒரற்பக்காரியந்தானென்றெண்ணி, ஏனோதானோவென்று அசதியாயிராதிருப்போமாக.SC 51.1

    கற்பனையை மீறிச் செய்கிற ஒவ்வொரு கிரியையும், கிறிஸ்துவின் கிருபையை நிராகரிக்கிற ஒவ்வொரு அசட்டையும், அதைச் செய்வதன் எவனோ அவனையே எதிர்த்துத்தாக்குகிறது. அது இருதயத்தைக் கடினப்படுத்தி, தேவாவியினுடைய உருக்கமான பரிந்து பேசுதலுக்குச் சம்மதிக்க இடங்கொடாதது மாத்திரமல்ல, இணங்கக் கூடாமலுமாக்கிவிடும்.SC 52.1

    தாங்கள் விரும்புகிறபோது தங்களுடைய தீமையான வழியை மாற்றிக்கொள்ளலாம் என்னும் எண்ணத்தோடு அல்லகல்லோலமாய்க் குழம்பியிருக்கிற மனசாட்சியை அநேகர் சாந்தப்படுத்திக் கொள்வதுமுண்டு. இரக்கமான அழைப்பையும் அற்பமாயெண்ணி அவமதித்துச் செவியை அடைத்துக் கொள்ளவுங் கூடும். ஆயினும், மனச்சாட்சியோ அவர்களைத் திரும்பத்திரும்ப உறுத்திக்கொண்டேயிருக்கும். அப்பேர்க்கொத்தவர்கள் கிருபை நிறைந்த ஆவியை அவமதித்து, சாத்தான் பட்சத்தில் தங்கள் செல்வாக்கைப் பிரயோகித்தபின், பயங்கரமான கடைசி வேளையில் தங்கள் நடத்தையை மாற்றிக் கொள்ளலாமென்று நினைக்கிறார்கள். இது லேசான காரியமல்ல; எப்படியென்றால், பாவத்தையொட்டிய அநுபவமும், அதைப்பற்றிய போந்த அறியும் அவர்கள் ஜீவியத்தில் முழுவதும் உருப்படுத்தப்பட்டிருக்கிறபடியால், கிறிஸ்துவின் சாயலையடையவேண்டுமென்கிற விருப்பம் கிஞ்சிற்றேனும் இருக்கவே இராது.SC 52.2

    நல்லொழுக்கத்திலிருந்து விழும் ஒரு தவறுதலும், பாவமான ஒரு ஆசையுங்கூட இருதயத்தை நன்றாய்ப்பற்றிக்கொண்டு கடினப்படுத்தி விடுகிறபடியால், சுவிசேஷவல்லமை அங்கே கிரியை செய்யாதபடி, அதின் சத்துவத்தைக் கெடுத்துப் போடுகிறது. நம்முடைய இருதயத்திலே பாவத்துக்கு இளக்காரங் கொடுத்து அதைப் பரிபாலித்துவருவோமானால், தேவனுக்கு அவ்வித ஆத்துமாவின் பேரிலிருக்கிற வெறுப்புமிகுதியாய் மிஞ்சிவிடும். அவ்விசுவாசத்தை வீரியத்தோடு பேசுகிறவனும், சத்திய வசனங்களைக் கவனியாதவனும் தாங்கள் விதைத்ததையே பலனாக அறுப்பார்களேயல்லாம், வேறெந்த நன்மையையுமடையார்கள். “துன்மார்க்கனை அவனுடைய அக்கிரமங்களே பிடித்துக்கொள்ளும், தன் பாவக்கயிறுகளால் கட்டப்படுவான்” (நீதி. 5:22) என்னும் ஞானியின் வார்த்தைகளைப்பார்க்கிலும், தீமைபை வெறுத்து அரோசிக்கவேண்டுமென்பதற்கு இதைவிட வேறே பயங்கர எச்சரிப்பு வேதாகமம் முழுவதிலுமில்லை. SC 53.1

    கிறிஸ்து பாவத்திலிருந்து நம்மை விடுதலையாக்க ஆயத்தமாயிருக்கிறார். நம்முடைய சித்தத்தையோ அவர் கட்டாயம் பண்ணுகிறபடியால் சித்தமானது தீமையின்பேரில் பிரியங்கொண்டு, விடுதலையடையவேண்டுமென்கிற விருப்பம் இல்லாமற்போய்விடுகிறது. அப்போது அவருடைய கிருபையை அங்கீகரிக்க மாட்டோம் என்று மறுத்தால், அவர் என்னதான் செய்யக்கூடும்? நாம் அவருடைய அன்பை தீர்மானமாயத் தள்ளிவிட்டபடியால் நம்மை நாமே நாசமாக்கியிருக்கிறோம். “இதோ, இப்போழுதே அநுக்கிரக காலம், இப்போழுதே இரட்சண்ணிய நாள்.” 2 கொரி. 6: 2. “ஆகையால், பரிசுத்தாவி சொல்லுகிறபடியே: இன்று அவருடைய சத்ததைக் கேட்பிர்களாகில், வனாந்தரதிலே கோபமூட்டினபோதும், சோதனை நாளிலும் நடந்ததுபோல,உங்கள் இருதயங்களைக் கடினப்படுத்தாதிருங்கள்.” எபி. 3: 7, 8. “மனுஷன் முகத்தைப் பார்ப்பான், கர்த்தரோ, இருதயத்தைப் பார்க்கிறார்.” 1 சாமு. 16: 7. ஏனென்றால், அவர் மனிதருடைய இருதயம் ஒன்றுக்கொன்று ஒவ்வாத சந்தோஷமும் துக்கமும் மிகுந்தது என்றும், அசுத்தம், வஞ்சனை முதலிய துர்க்கிருத்தியங்களுக்கு உறைவிடமாயும், மனம் போனபோக்கெல்லாம் திரிந்து அலைந்து, தீட்டாக்கிக்கொள்ளுகிறதென்றும் பார்க்கிறார். தேவனுக்கு மனிதருடைய இருதயத்தின் யோசனைகளும், அந்தரங்கங்களும் நன்றாய்த் தெரியும். ஆகையால் சங்கீதக்காரன் எல்லாவற்றையும் ஆராய்ந்து பார்க்கிற தேவனுக்கு நேரே தன் இருதய அறைகளை திறந்துவிட்டு, “தேவனே, என்னை ஆராய்ந்து என் இருதயத்தை அறிந்துகொள்ளும்; என்னைச்சோதித்து, என் சிந்தனைகளை அறிந்துகொள்ளும்: வேதனை உண்டாக்கும் வழி என்னிடத்தில் உண்டோ என்று பார்த்து, நித்திய வழியிலே என்னை நடத்தும்” (சங். 139: 23, 24) என்று அங்கலாய்த்து மன்றாடினதுபோல கறைப்பட்டு தீட்டாயிருக்கிற உன் ஆத்துமாவோடுகூட அவரண்டை சேர்வாயாக.SC 54.1

    அநேகர் இருதயம் சுத்திகரிக்கப்படாமல், தெய்வபக்தியின் வேஷமாகிய மார்க்கத்தையே அநுசரித்து வருகிறார்கள். ஆனால் “சுத்த இருதயத்தை என்னிலே சிருஷ்டியும், நிலைவரமான ஆவியை என் உள்ளத்திலே புதுப்பியும்” (சங். 51: 10) என்பதே உன்னுடைய ஜெபமாயிருக்கவேண்டும். உன் இரு தயத்தை நீயே ஆராய்ச்சிசெய்து, அதின் நிலைமையை அறிந்துகொள்வாயாக. சாவுக்கேதுவான உன் ஜீவன் ஊனப்படுமானால், எவ்வளவு அக்கரையோடே அதைக் காப்பாற்ற முயற்சி யெடுத்துக்கொள்வாயோ, அவ்வளவு ஊக்கத்தோடே உன் இருதயமும் கறைப்படாதபடி பார்த்துக்கொள். ஏனென்றால், இது தேவனும் உன் ஆத்துமாவுமே சதாகாலத்துக்கென்று தீர்மானிக்கவேண்டிய காரியமாயிருக்கிறது. சந்தேகமுள்ள நம்பிக்கையும், இனி வேறொன்றும் நடப்பதில்லை என்கிற வீண் எண்ணமுமே உன் அனர்த்தத்துக்கு ஆதாரமாகும்.SC 55.1

    தேவனுடைய வசனத்தை ஜெபத்தோடே வாசிப்பாயாக. என்னத்திற்காகவென்றால், அவ்வசனம் தேவனுடைய நியாயப்பிரமாணத்திலும், கிறிஸ்துவானவருடைய ஜீவியத்திலுமடங்கிய பரிசுத்தத்தின சிறந்த நோக்கத்தையும, “பரிசுத்த மில்லாமல் ஒருவனும் கர்த்தரை தரிசிப்பதில்லை,” (எ பி. 12: 14) என்பதையும் உனக்குப் பரிஷ்காரமாய்க் காட்டும் இன்னும் அது பாவத்தை நன்றாய் உணர்த்தி இரட்சிப்பின் மார்க்கத்தைத்தெளிவாய்ப் போதிக்கும். தேவனுடைய சத்தம் உன் ஆத்துமாவிடத்தில் பேசுகிறதாக எண்ணி, அதற்கு உன் செவியைக் கவனமாய்ச் சாய்ப்பாயாகSC 56.1

    உன் பாவத்தின் மிகுதியையும், தற்காலம் நீ இருக்கிற நிர்ப்பந்த நிலைமையையும் பார்க்கும்போது, நம்பிக்கையற்று துயரடையாதே. இவ்விதப் பாவி களை இரட்சிக்கவே இயேசு கிறிஸ்து உலகத்தில் எழுந்தருளினார். நாம் தேவனை நமக்கு ஒப்புரவாக்கிக்கொள்ளவேண்டியதில்லை. அதற்கு பிரதியாக தம்முடைய அற்புத அன்பினாலேயே தேவன், “கிறிஸ்துவுக்குள் உலகத்தை தமக்கு ஒப்புர வாக்கிக்கொண்டிருக்கிறார்” 2 கொரி, 5: 19, வழுவிப்போன தமது பிள்ளைகளை இரட்சிக்கும்படி, இவ்வுலக பெற்றோர் தங்கள் பிள்ளைகளிடத்தில் பொறுமையாயிருப்பதை விட அதிகமாய், தேவன் அவர்களுடைய இருதயங்களிடத்தில் பரிந்து பேசுகிறார். அவர்களுடைய குற்றங்களையும் தப்பு தோஷங்களையும் அதிகமாய் மன்னித்து பொறுமையாயிருக்கிறார். குற்றவாளிகளோடு பட்சமாய்பேசி நியாயஞ்சொல்லி, அவ்வளவு தயவாய் வழக்காடுகிறவர்கள் அவரைவிடச் சிறந்தவர்கள் இவ்வுலகில் வேறெவருமில்லை. இவ்வுலக ஆசாபாசங்களிலே உழன்று திரிந்தலைகிற பரதேசியிடத்தில், இரக்க உருக்கமாய்ப் பேசுகிற உதடு அவருக்குகேயன்றி வேறெவருக்குண்டு? அவருடைய வாக்குத்தத்தங்கள், எச்சிரிப்புகள் யாவும் அவரது அளவற்ற அன்பின் பெருமூச்சேயொழிய வேறல்ல.SC 56.2

    சாத்தான் உன்னிடத்தில்வந்து “நீ பெரிய பாவியாயிருக்கிறாய்” என்று உன் காதுக்குள் குசுகுசென்று ஒதும்போது, அவன் வார்த்தைகளுக்கு உன் செவியைச் சாய்க்காமல், உன் மீட்ப்பராகிய இயேசுவை நோக்கிப் பார்த்து, அவர் உனக்குச் செய்திருக்கிற புண்ணியச் செய்கையை எடுத்துப்பேசு. அவரு டைய திவ்விய ஒளியை நீ நோக்கிப் பார்ப்பதே உனக்கு உற்ற உதவியாகும். உன் பாவங்களை அவருக்கு முன் ஒத்துக்கொள். அவரது அளவற்ற அன்பினால் நான் இரட்சிக்கப்படும்படியாகவே, “பாவிகளை இரட்சிக்க கிறிஸ்து இயேசு உலகத்தில் வந்தார்” 1 தீமோ. 1: 15 என்று உன் சத்துருவாகிய சாத்தானிடத்தில் சொல்லுவாயாக. கடன்பட்ட இருவரைப்பற்றி இயேசு ஒரு கேள்வியை சீமோனிடத்தில் கொஞ்சத் தொகையும், மற்றவன் அதிகத்தொகையும் கடன் வாங்கியிருந்தார்கள்; கொடுக்க அவர்களுக்கு நிர்வாகமில்லாதபோது, இருவருக்கும் கடனை மன்னித்துவிட்டான்; இப்படியிருக்க அவர்களில் எவன் எஜமானிடத்தில் அதிக அன்பாயிருப்பான்? அதை எனக்கு சொல், என்பதே. அதற்கு “சீமோன் பிரதியுத்தரமாக: எவனுக்கு அதிகமாய் மன்னித்துவிட்டனோ அவனே அதிக அன்பாயிருப்பான்” லூக். 7: 43 என்றார். அந்தப்படியே நாம் பெரிய பாவிகளாகவேயிருக்கிறோம். அந்தப்பாவங்களை மன்னிக்கவும், தேவனோடு ஒப்புரவாகும் சிலாக்கியத்தை நமக்குக் அளிக்கவும், கிறிஸ்து நமக்காக மரித்தார். நாம் தேவனுடைய பிள்ளைகளாகும் அதிகாரம் அவருடைய புண்ணியமாகிய நீதியால் மாத்திரம் நமக்குக் கிடைத்திருக்கிறது. எவர்களுக்கு மிகுதியாய்ப் பாவங்களை மன்னித்திருக்கிறாரோ, அவர்களே அவரிடத்தில் அதிக மாய் அன்புகூர்ந்து, அவருடைய பேரன்பையும் அவர் செலுத்தியிருக்கிற அளவற்ற பலியையும் எண்ணி, ஸ்தோத்திரகீதங்களை பாடுவதற்கு அவர் சிம்மாசனத்தினருகே நிற்பார்கள்.SC 57.1

    நாம் தேவனுடைய அன்பை கிரகித்துக்கொள்ளுகிறபடியே பாவத்தின் கேடான தன்மையையும் அறிந்துகொள்கிறோம். நமக்குள் நேரே விடப்பட்டிருக்கிற அன்பின் நீண்ட சங்கிலியைப் பார்க்கிறபோதும், கிறிஸ்து நமக்காகச் செலுத்தியிருக்கிற ஒப்பற்ற பலியைப்பற்றிச் சற்று அறிவடைகிற போதும், நம்முடைய இருதயம் பச்சாதாபத்தினால் நிறைந்து நெருப்பைக்கண்ட மெழுகு இளகிவிடுவது போல் உருகிப்போகிறது. “நாம் தேவனுடைய பிள்ளைகளென்று அழைக்கப்படுவதினாலே பிதாவானவர் நமக்குப் பாராட்டின் அன்பு எவ்வளவு பெரிதென்று பாருங்கள்” 1 யோவா. 3: 1.SC 59.1