Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First
    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents

    THE WORK AND THE LIFE

    ஊழியமும் ஜீவியமும்.

    தேவன் சர்வலோகத்திலுள்ள ஜீவனுக்கும், ஒளிக்கும், சந்தோஷத்திற்கும் ஊற்றாயிருக்கிறார். சூரிய கதிர்களினின்று ஒளி வீசுமாப்போலவும், வற்றா ஊற்றிலிருந்து நீரோட்டங்கள் சுரந்தோடுமாப்போலவும் அவரிடத்திலிருந்தே சர்வ ஆசீர்வாதங்களும் நன்மைகளும் சகல சிருஷ்டிகளும் ஓடிவருகின்றன. தேவன் அருளும் ஜீவன் மனிதருடைய இருதயங்களில் எங்கெங்கே இருந்தபோதிலும், அது மற்றவர்களுக்கும் ஆசீர்வாதமும் அன்புமாகப்பொங்கி ஓடக்கூடியது.SC 134.1

    தவறி விழுந்த மனுஷரைத் தூக்கி ரட்சிப்பதே நம்முடைய இரட்சகருக்குள்ள சந்தோஷம். இதினிமித்தம், அவர் தமது ஜீவனை ஒரு பொருட்டாக எண்ணாமல் வெட்கத்தைக் களைந்து சிலுவைப்பாட்டைச் சகித்தார். அவ்விதமே தேவதூதர்களும் மற்றவர்களுடைய சந்தோஷத்தின் பொருட்டு வேலை செய்வதையே தங்கள் தொழிலாக்க்கொண்டிக்கிறார்கள். இதுதான் அவர்களுக்குச் சந்தோஷம். நிப்பந்த நிலைமையுள்ளவர்களுக்கும், எல்லா விஷயத் திலும் தங்களுக்குத் தாழ்ந்த அந்தஸ்தும் குணமும் உள்ளவர்களுக்கும் பணிவிடை செய்வது தீட்பான வேலையென்பதாக தன்னய இருதயமுள்ளவர்கள் எண்ணுகிற அந்த வேலையையே பாவமற்ற தேவதூதர்கள் செய்து வருகிறார்கள். கிறிஸ்துவானவர் தம்மைத்தாமே பலியாக ஒப்புக்கொடுத்த அன்பின் ஆவி பரலோகத்தை நிறப்புகிற ஆவியாயும், அதின் ஆனந்தத்தின் முழுச்சாரமுமாயிருக்கிறது. கிறிஸ்துவை பின்பற்றுகிற அடியாருக்கு இவ்வித ஆவி அவர்கள் செய்கிற வேலையில் இருக்கும். கிறிஸ்துவின் அன்பு இருதயத்தில் நாட்டப்படும்போது நற்சுகந்தமுள்ள பரிமளம் மறைந்திருப்பதுபோல அதுவும் மறைந்திருக்க முடியாது. அதின் பரிசுத்த சக்தி நாம் ஐக்கியப்படுகிற ஒவ்வொருவராலும் உணர்ந்துகொள்ளப்படும். இருதயத்திலிருக்கிற கிறிஸ்துவின் ஆவியானது எல்லாரையும் இளைப்பாற்றும்படி ஓடுகிறதும். அழிவுக்கேதுவானவர்களை ஜீவ தண்ணீரைக் குடிக்கும்படி ஆவலுண்டாக்குகிறதுமான வனாந்திர நீர் ஊற்றுக்கொப்பாயிருக்கிறது.SC 134.2

    இயேசுவின் பேரிலுள்ள அன்பு மனுஷஜாதியை தூக்கி ஆசீர்வதிப்பதற்காக அவர் உழைத்தபடி உழைக்கவேண்டும் என்கிற ஆசையில் வெளிப்படும். நம்முடைய பரமபிதாவின் பராமரிப்பிலிருக்கிற சகல ஜீவப்பிராணிகளிட்த்திலும் அன்பும் இரக்கமும் பட்சாதாபமாயிருக்கும்படி ஏவும்.SC 136.1

    நமது இரட்சாபெருமானின் உலக ஜீவியம் தனக்கே சௌக்கியமும் கவலையற்ற ஜீவியமுமாயிராமல் விழுந்துபோன மனுஷஜாதியை மீட்கவேண்டியே அது ஒரேபிடியாயும், ஊக்கமாயும், சலிப்பில்லா முயற்சியாயும் இருந்த்து. மாட்டுக்கொட்டிலில் அவர் உதித்த நாள் முதல் கல்வாரியில் அவர் மரித்த நாள் வரைக்கும் தன்னை ஒறுத்தல் என்னும் பாதையிலே நடந்தார்; பிரயாசமான வேலையிலிருந்தும், வேதனை நிறைந்த பிரயாணங்களிலிருந்தும், இளைப்பும் வருத்தமுமான வேலையிலிருந்தும் தப்பித்துக்கொள்ள அவர் வழிதேடவில்லை. “மனுஷ குமாரன் ஊழியம் கொள்ளும்படி வராமல், ஊழியஞ் செய்யவும் அநேகரை மீட்கும் பொருளாகத் தம்முடைய ஜீவனைக் கொடுக்கவும் வந்தார்” (மத். 20:28) என்றார். இதுவே அவருடைய ஜீவியத்தின் பிரதம நோக்கம் மற்றவையாவும் அதற்கடுத்தவைகளும் துணையுமானவைகள். தேவனுடைய சித்தத்தை நிறைவேற்றுவதும் அவருடைய வேலையைச் செய்வதுமே அவருக்கு போஜனமும் பானமுமாக விருந்த்து. அவரது வேலையில், தான் என்பதற்கும், தன்னலம் என்பதற்கும் யாதாமோர் பங்கும் பாகமுங் கிடைக்கவில்லை.SC 136.2

    கிறிஸ்துவின் கிருபைக்குப் பங்காளிகளானவர்கள் அவருடைய மரணபுண்ணியத்துக்கு பாத்திரவான்களான மற்றவர்களும் பரமஈவில் பங்கு பெறும் படியாக எந்தவிதமான பலியையும் செலுத்த ஆயத்தமாயிருப்பார்கள் தாங்கள் உலகத்தில் தங்கும்படி அதை முன்னுக்குக் கொண்டுவருவதற்குத் தங்களாலானவைகளையெல்லாம் செய்வார்கள். உண்மையாய்க்குணப்பட்ட ஆத்துமாவின் வளர்ச்சி இத்தன்மையான ஊக்கமுள்ளது. ஒருவன் கிறிஸ்துவண்டை சேர்ந்தவுடனே இயேசுவுக்குள் ஓர் அருமையான நண்பனைக் கண்டடைந்ததாய் மற்றவர்களுக்குத் தெரிவிக்கும்படியான வாஞ்சை அவனுடைய இருதயத்தில் புறப்படுகிறது. இரட்சிக்கிறதும் பரிசுத்தப்படுத்துகிறதுமான திவ்யசத்தியத்தை அவன் இருதயத்தில் அடைத்துவைக்க முடியாது. கிறிஸ்துவானவருடைய நீதியின் வஸ்திரத்தையணிந்து உள்ளான மனுஷனில் வசிக்கும் அவருடைய ஆவியின் சந்தோஷத்தினால் நிரப்பப்பட்டிருப்போமாகில், நாம் அயர்ந்து சும்மா விருக்கமாளாது. கர்த்தர் நல்லவர் என்பதை நாம் கண்டு ருசித்திருப்போமானால் அவரைக் குறித்து ஏதாவது அறிக்கையிடவேண்டியதே. பிலிப்பு இரட்சகரைக் கண்டபோது, செய்தவண்ணம் நாமும் மற்றவர்களை அவருடைய திவ்யசமுகத்துக்கு அழைத்துக்கொண்டுவருவோம். மனிதரை வசப்படுத்தும் கிறிஸ்துவின் தன்மையையும் காணப்படாத மறு உலகத்தின் உண்மையையும் அவர்களுக்கு விளக்கிக்காட்டும்படி வழிதேடுவோம். இயேசுவின் அடிச்சுவடுகளைப் பின்பற்ற வாஞ்சை மிஞ்சியிருக்கும். நம்மைச் சுற்றிலுமிருக்கிற ஜனங்கள் “உலகத்தின் பாவங்களைச் சுமந்து தீர்க்கிற தேவாட்டுக்குட்டியை” (யோ 1 : 29) நோக்கிப் பார்க்கவேண்டுமென்கிற ஊக்கமான ஏக்கம் நமக்குள்ளிருக்கும்.SC 137.1

    மற்றவர்களை ஆசிர்வதிக்கும்படி நாம் எடுத்துக் கொள்ளும் முயற்சி நமக்கே நன்மைகளையும் ஆசிர்வாதங்ளையும் தருவிக்கும் எத்தனமாகும். இரxaக்ஷண்ணிய முறையில் நாமும் ஒரு பங்கைச் செய்யும்படி கொடுத்த தேவனுடைய நோக்கம் இதுவே. தெய்வீக தன்மையில் பங்கடையும் சிலாக்கியத்தை தேவன் மனுஷருக்கும் ஆசிர்வாதமாக விருக்கும்படி வைத்திருக்கிறார். இதுவே தேவன் மனிதருக்கு அருளக்கூடிய மேலானகனமும், பூரண சந்தோஷமுமாயிருக்கிறது. இவ்வாறு அன்பின் வேலைகளில் பங்காளிகளாகிறவர்களெவர்களோ அவர்களே தங்கள் சிருஷ்டிகருக்குச் சமீபமாய் வந்தவர்கள்.SC 138.1

    தேவன் சுவிசேஷ செய்தியையும், அன்புக்குரிய வேலையாகிய எல்லா பணிவிடையையும் பரமதூதர்கள் வசத்தில் ஒப்புவித்திருக்கலாமல்லவா? தம்முடைய திவ்ய நோக்கத்தை நிறைவேற்றுவதற்கு வெவ்வேறு ஒழுங்குகளை செய்திருக்கலாமல்லவா? என்றாலும், தேவன் சுயநலத்தைத் தேடாத ஊழியத்தினின்று உண்டாகிற ஆசிர்வாதத்துக்கும், சந்தோஷத்துக்கும், ஆத்மீக எழுப்புதலுக்கும் நாம் பங்காளிகளாகும்படி, தம்முடைய மட்டற்ற அன்பினாலே தம்மோடும், கிறிஸ்துவோடும், தூதரோடும் உடன் ஊழியராகிறதற்கு நம்மை ஏற்படுத்தியிருக்கிறாரே.SC 138.2

    கிறிஸ்துவானவருடைய பாடுகளில் நமக்கிருக்கிற அந்நியோந்நியத்தின் மூலமாய்த்தான் அவருடைய அனுதாபத்துக் குரியவர்களாகிறோம் மற்றவர்களுடைய நன்மைக்காகச் செய்யப்படுகிற தற்பலியான ஒவ்வொரு கிரியையும், அதைச் செய்கிறவனுடைய இருதயத்தில் குடிகொண்டிருக்கும் விருப்பத்தை பலப்படுத்துகிறது மாத்திரமல்ல, ” ஐசுரியமுள்ள வராயிருக்கும் நமது நிமித்தம் ஏழையாகி, அவருடைய எளிமையின் மூலமாய் நம்மை ஐசுவரியவான்களாக்கின உலக மீட்பரோடு நெருங்கி இருக்கவும் செய்கிறது. ஆகவே, தேவன் நம்மை சிருஷ்டித்த நோக்கம் இவ்வாறு நிறைவேறுகிறதினாலே மாத்திரம் இந்த ஜீவியம் நமக்கு ஆசிர்வாதமாகவிருக்கக்கூடும்.SC 139.1

    கிறிஸ்துவின் ஏற்பாட்டின்படி நீங்கள் அவருடைய சீஷர்களாக வேலை செய்யப்போவீர்களானால் அவருக்கென்று ஆத்துமாக்களை ஆதாயப்படுத்துவீர்கள்; நீதியின்மேல் பசிதாகத்தையும், தெய்வீக காரி யங்களில் மேலான அறிவையும் அடைந்து தீர்க்கமான அனுபவத்தின் அவசியத்தையும் உணருவீர்கள்; தேவனிடத்தில் பரிந்து பேசுவீர்கள்; உங்கள் விசுவாசம் பலப்படும்; இரட்சிப்பின் கிணற்றிலிருந்து உங்கள் ஆத்துமா அதிகமாய்க் குடித்துத் திருப்தியாகும். உங்களுக்கு எதிரிடுகிற இடறுகளும் சோதனைகளும் உங்களை வேதம் வாசிக்கவும் ஜெபிக்கவும் ஏவும், நீங்கள் கிருபையில் வளர்ந்து, கிறிஸ்துவைப்பற்றிய அறிவில் தேறி, தீர்க்கமான அனுபவத்திலும் விருத்தியடைவீர்கள்.SC 139.2

    மற்றவர்களுக்கென்று செய்யும் தன்னயமற்ற வேலையின் தன்மை ஆழமும், நிலையுள்ளதும், கிறிஸ்துவின் அன்புக்கொத்தகுணமுமுள்ளது. இவ்வித தன்மையையுடையவைகளுக்கு சமாதானமும் சந்தோஷமும் முண்டாகிறது. அவர்கள் நாட்டங்கள் மேலானவைகளாயுமிருக்கின்றன. சோம்பலுக்காகிலும் தன்னலத்துக்காகிலும் இடமில்லை. இவ்விதமாய் கிறிஸ்தவகிருபைகளை உபயோகிக்கிறவர்கள் நாளொருவண்ணம் வளர்ந்து, தேவனுக்கென்று உழைக்க சத்துவமுள்ளவர்களாவார்கள். அவர்கள் ஆவிக்குரிய தெளிவான அறிவையும், உறுதியாய் வளரும் விசுவாசத்தையும், ஜெபத்தில் அதிகமான வல்லமையையும் அடைவார்கள். தேவ ஆவியானவர் அவர்களுடைய ஆவியின் பேரில் அசைவாடி தேவ ஏவுதலுக்கு உத்தரவாக ஆத்துமாவின் பரிசுத்த ஐக்கியத்துக்கு அழைக்கிறார். இந்த விதமாய் மற்றவர்களுடைய நன்மைக் காக தங்களை தன்னயமில்லாத முயற்சிக்கு ஒப்புக்கொடுக்கிறவர்கள், மெய்யாகவே தங்கள் சொந்த இரட்சிப்பின் கிரியையை நிறைவேற்றுகிறவர்களாயிருக்கிறார்கள்.SC 140.1

    நாம் கொடுக்கக்கூடிய உதவியைப் பெற்றுக்கொள்ள பாத்திரமானவர்களுக்கு சகாயம் புரிவதிலும் அவர்களை வாழ்த்துவதிலும் நம்மாலியன்ற மட்டும் தரித்திருப்பது நலம். கிறிஸ்து நமக்குக் கற்பித்திருக்கிற வேலையை பரோபகார சிந்தையோடே செய்வதே கிருபையில் வளர்வதாம். தேகாப்பியாசத்தினால் பலம் வருகிறது சுறுசுறுப்பு ஜீவியத்தின் நிலைமையைக்காட்டும். கிருபையின் எத்தனங்கள் மூலமாய்வருகிற ஆசிர்வாதங்களைப் பெற்றுக்கொண்டு கிறிஸ்துவுக்காக ஒன்றும் செய்யாமல் கிறிஸ்தவஜீவியம் செய்ய முயலுகிறவர்கள், வேலை ஒன்றும் செய்யாமல் சாப்பிடுகிறவர்கள் போலிருக்கிறார்கள். லெளகீக உலகத்தில் இருக்கிறதுபோலவே ஆவிக்குரிய உலகத்திலும் இது எப்போதும் சீர்கெட்டு இழிவுக்கும் அழிவுக்கும் இடமாகிறது. ஒருவன் தன் அவயவங்களை உபயோகிக்கமாட்டேன் என்று சும்மா வைத்திருப்பானாகில் அவைகளை உபயோகிக்கும் சக்தியை விரைவில் இழந்து போவான். அவ்விதமே தேவன் அருளிய சத்துவங்களை அப்பியாசிக்காத ஒரு கிறிஸ்துவன், கிறிஸ்துவுக்குள் வளராமல் குறுகிப்போவது மாத்திரமல்ல தனக்குள்ளபலத்தையும் நாளடைவில் இழந்துவிடுகிறான்.SC 141.1

    கிறிஸ்து சபையானது மனிதருடைய இரட்சிப்புக்காக தேவன் ஏற்படுத்திய காரியக்காரனுக் கொப்பாயிருக்கிற்து. உலகத்தாருக்கு சுவிசேஷத்தை அறிவிப்பதே அதின் வேலை. கிறிஸ்தவர்கள் யாவர் மேலும் இக்கடமை சுமருகிறது. ஒவ்வொருவனுக்கும் அருளப்பட்டிருக்கிற வரத்துக்கும் தாலந்துக்கும் வசதிக்குந் தக்கபடி மீட்பருடைய கட்டளையை நிறைவேற்றி முடிக்கவேண்டியதிருக்கிறது. நமக்கு வெளிப்படுத்தப்பட்டிருக்கிற கிறிஸ்துவின் அன்பு நம்மை அவரை அறியாதவர்கள் யாவருக்கும் கடனாளிகள் ஆக்குகிறது. தேவன் வெளிச்சத்தை நமக்கு அருளிச் செய்திருக்கிறார், அது நமக்கு மாத்திரமல்ல; நம்மிடத்திலிருந்து மற்றவர்களுக்குப் பிரதிபிம்பிக்கும்படியாகத்தான்.SC 142.1

    கிறிஸ்துவைப் பின்பற்றுகிறவர்கள் தங்கள் கடமைகளை நிறைவேற்றுவதில் விழிப்புள்ளவர்களாயிருப்பார்களாகில், இப்போது ஒரு ஆள் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கிற அஞ்ஞானதேசங்களில் ஆயிரக்கணக்கானவர்கள் போயிருப்பார்கள். தாங்களே போய் இந்த வேலையைச் செய்யக்கூடாத யாவரும் அதற்கு தங்கள் பணத்தைக் கொடுப்பதினாலும், தங்கள் அனுதாபத்தைக் காட்டுவதினாலும், அதற்காக ஜெபஞ் செய்வதினாலும் நடந்தேறும்படி முயற்சிப் பார்கள். கிறிஸ்தவ தேசங்களிலும் ஆத்துமாக்கள் ஈடேற்றத்திற்காக இப்போது நடக்கிறதைவிட எவ்வளவோ அதிக ஊக்கமான வேலை நடந்தேறும் என்பதற்கு ஐயமில்லை.SC 142.2

    நாம் கிறிஸ்துவுக்காக வேலை செய்யும்படியாக இருக்குமானால். அஞ்ஞான தேசங்களுக்குப் போக வேண்டியதுமில்லை. நமக்கு அருமையும் பெருமையுமாயிருக்கிற பந்துக்களை விட்டு நீங்கவேண்டியதுமில்லை. இந்த வேலையை நம்முடைய இனத்தாரிடத்திலும், சபையிலும், நாம் சகவாசஞ்செய்கிற தோழரின் மத்தியிலும், தொழிற்சாலையில் உடன் தொழிலாளிகளிடத்திலும் செய்யலாம்.SC 143.1

    நமது அருமை இரட்சகருடைய இவ்வுலக ஜீவியத்தின் மிகுதியான பாகம் நாசரேத்திலிருந்த தச்சுப் பட்டறையில் பொறுமையாய் வேலைசெய்வதில்தான் கழிந்தது. வேளாளர்களாலும் வேலையாட்களாலும் அறியப்படாதவருமாயும் மதிக்கப்படாதவருமாயும் அவர்கள் பக்கத்திலேகடந்துபோனபோது ஜீவாதிபதியாகிய அவரை பணிவிடையாட்களாகிய தூதர்கள் புடைசூழ்ந்து போனார்கள். அவர் பிணியாளிகளை குணமாக்கினபோதும், புசல் காற்றால் அடியுண்ட கலிலேயாக் கடலின் அலைகளின்மேல் அவர் நடந்தபோது மிருந்ததுபோலவே, தாழ்வான தம்முடைய தொழிலை செய்து வருங்காலத்திலும், அந்த வேலையை உண்மையோடு நிறைவேற்றி வந்தார். அவ்வாறே தாழ்வான ஊழியத்திலும், ஜீவியத்தின் மிக இழிவான நிலைமையிலுங்கூட நாம் இயேசுவோடு உலாவி வேலை நடப்பிக்கலாம்.SC 143.2

    “அவனவன் தான் அழைக்கப்பட்ட நிலைமையிலே தேவனுக்கு முன்பாக நிலைத்திருக்கக்கடவன்” (1 கொரி. 7 : 24) என்று அப்போஸ்தலன் சொல்லுகிறார். ஓர் வியாபாரி தன் நேர்மையினாலே தன் ஆண்டவனை மகிமைப்படுத்தத்தக்க விதமாக வியாபார தொழிலை நட்த்தலாம். அவன் கிறிஸ்துவை உண்மையாய்ப் பின்பற்றுகிறவனாயிருந்தால் செய்யப்படுகிற ஒவ்வொரு வேலையிலும் தன் மார்க்கத்தை காட்டி, கிறிஸ்துவின் ஆவியை யாவருக்கும் வெளிப்படுத்துவான். சிற்பி ஒருவன் கலிலேயாக் குன்றுகளுக்கிடையில் தனியாய் நடந்து வேலைசெய்து கொண்டிருந்த அவருக்கு ஜாக்கிரதையும் உண்மையுமுள்ள பிரதுநிதியாக இருக்கலாம். கிறிஸ்துவின் நாமத்தை தரித்திருக்கிற ஒவ்வொருவனும், தன்னுடைய நல்ல வேலையை கவனிக்கிற மற்றவர்கள் தங்கள் சிருஷ்டிகரையும் மீட்பரையும் மகிமைப் படுத்துகிறதற்கு வழியுண்டாகும்படி அவ்வளவு நன்றாய் அதைச் செய்யவேண்டும்.SC 144.1

    மேலான வரப்பிரசாதங்களையும் சிலாக்கியங்களையும் தங்களைப் பார்க்கிலும் மற்றவர்கள் உடையவர்களாயிருப்பதினால், கிறிஸ்துவின் ஊழியத்திற்கு தங்கள் கொடைகளைக் கொடுப்பதற்கு அநேகர் சாக்குப்போக்குச்சொல்லுகிறார்கள் விசேஷித்தபிர காரமாய் தாலந்துகளைப் பெற்றவர்கள் மாத்திரம் தங் கள் திறமைகளை தேவசேவைக்கு பிரதிஷ்டை செய்ய வேண்டுமென்கிற எண்ணம் பொதுவாய் பரவியிருக்கிறது. இந்த வேலைகளிலாவது பலாபலன்களிலாவது பங்கு பெறும்படி அழைக்கப்படாதவர்களைத் தள்ளி நண்பரான சில வகுப்பாருக்கு மாத்திரம் தாலந்துகள் அருளப்படுகிறதென்பது அநேகருடைய தாற்பரியம். உவமையிலோ அப்படிக்காட்டப்படவில்லை வீட்டெஜமான் தன் வேலைகாரரை அழைத்தபோது அவர்கள் ஒவ்வொருவருக்கும் தன் வேலையைக் கொடுத்தான்.SC 144.2

    இச்சீவியத்தின் மிகத்தாழ்வான பணிவிடைகளையும் “கர்த்தருக்கென்றே” (கொலோ. 3 : 23) அன்பு நிறைந்த ஆவியோடு செய்யலாம். தேவனுடைய அன்பு இருதயத்தில் இருந்தால் அது ஜீவியத்தில் வெளியரங்கமாய் காணப்படும் கிறிஸ்துவின் நன்மணம்நம்மைச் சுற்றிலும் வீசி, நம்முடைய செல்வாக்கை உயர்த்தி ஆசிர்வாத முள்ளதாக்கும்.SC 145.1

    நீ தேவனுக்கென்று வேலைசெய்யப் போகுமுன் விசேஷித்த சந்தர்ப்பங்களுக்காக காத்திருக்கவாவது அரிய திறமைகளை அடைய எதிர்ப்பார்க்கவாவது அவசியமில்லை. உன்னைக்குறித்து உலகம் என்ன நினைக்கும் என்கிற எண்ணமும் உனக்குக் கிஞ்சிற்றேனும் வர அவசியமில்லை. உன்னுடைய அன்றாடகஜீவியம் உன் விசுவாசத்துக்குத் தக்கபடி சுத்தமாகவும் யாதார்த்தமாகவும் இருப்பதாக சாட்சி பகருமானாலும், மற்றவர்களுக்கு நன்மை செய்ய விரும்புகிறாய் என்று அவர்கள் உணர்த்தப்படுவார்களானாலும் உன் பிரயாசங்கள் முற்றிலும் அவமாய் போகாது.SC 146.1

    இயேசுவின் அடியார்களுக்குள் மிகத்தாழ்ந்த நிலையையும் வறிஞருமாயிருக்கிறவர்களுங்கூட மற்றவர்களுக்கு ஆசிர்வாதமாய் ஜீவிக்கக்கூடும். ஏதோ ஓர் முக்கிய நன்மையைச் செய்வதாக அவர்கள் அறியாவிட்டாலும், தங்களுக்குத் தெரியாமலே நடந்தேறுகிற சொற்சக்தியினால் ஆழமும் அகலமுமான ஆசிர்வாதங்களைப் பொழியச் செய்கிறார்கள். தங்கள் பலன்களை அடையும் கடைசி நாள் மட்டும் நன்மையும் ஆசிர்வாதமும் இருக்கலாம். அவர்கள் ஏதோ பெரிய வேலையைச் செய்கிறதாக எண்ணுகிறதுமில்லை, உணருகிறதுமில்லை. தாங்கள் அடையவேண்டிய சித்தியைக் குறித்து ஏக்கங்கொள்ளவும், ஆயாசப்படவும் வேண்டியதில்லை. தெய்வீகமாக அவர்களுக்குக் கிடைத்திருக்கிற வேலையை உண்மையோடு செய்து, அமரிக் கையாய் முன்னேறிச் செல்லவேண்டியது தான்; அவர்கள் ஜீவியம் வீணாகவே கழிந்துபோகாது. அவர்களுடைய ஆத்துமாக்களும் அதிகமதிமாய் கிறிஸ்துவுக்கொப்பாய்வளர்ந்தேறும். இப்படிப்பட்டவர்கள் இச்சீவியத்தில் தேவனோடு சேர்ந்து உழைக்கிற ஊழியராகிறார்கள். இப்படியாக இவர்கள் இதைவிட மேலான உன்னத ஊழியத்துக்கும் வரப்போகிற ஜீவியத்திலுள்ள மறைக்கப்படாத சந்தோஷத்துக்கும் தகுதியுள்ளவர்களாகிறார்கள். நண்பனே நீயும் இந்த அமைதியும் வல்லமையுமுள்ள கிறிஸ்தவ சேவைக்கு உன்னை ஒப்புக்கொடுப்பாயாக.SC 146.2

    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents