Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    THE PRIVILEGE OF PRAYER.

    ஜெபத்தின் சிலாக்கியம்.

    தேவனாகிய பிதாவானவர் உலக இயற்கை, வேத வெளிப்படுத்தல், காருண்ணிய பராமரிப்பு, அவருடைய ஆவியின் சொல் சக்தி ஆகிய இவைகளின் மூலமாய் நம்மிடத்தில் பேசுகிறார். ஆயினும் இவைகள் போதுமானதல்ல. நாம் நாம்முடைய இருதயங்களை அவரிடத்தில் ஊற்றிவிடவேண்டும். ஆவிக்குறிய ஜீவனும் ஊக்கமும் இருதயங்களை அவரிடத்தில் ஊற்றிவிடவேண்டும். ஆவிக்குறிய ஜீவனும் ஊக்கமும் இருக்கத்தக்கதாக, நம்முடைய பரம பிதாவினிடத்தில் நமக்கு நெருங்கிய சகவாசமிருக்கவேண்டும். நம்முடைய மனோதத்துவங்கள் அவருக்கு நேராக இழுக்கப்படலாம். அவரது திவ்ய கிரியைகள், இரக்கங்கள், ஆசீர்வாதங்கள் முதலியவைகளைக் குறித்தும் நாம் சிந்திக்காலாம். என்றாலும் இது முற்றிலும் அவரோடு சம்பாஷிப்பதல்லவே. நாம் தேவனேடு கலந்துறவாடுவதற்கு நம்முடைய அன்றாடக உண்மையான ஜீவியத்தைப்பற்றி ஏதாவது அவருக்குச் சொல்லத்தக்க காரியம் நமக்கிருக்கவேண்டும்.SC 161.1

    ஒர் நண்பனுக்கு நம்முடைய இருதயத்தை நாம் திறப்பதுபோல தேவனுக்கும் அதைத் திறந்து காட்டுவதுதான் ஜெபம். நாம் எப்படியிருக்கிறோம் என்று காட்டுவதற்கு அது அவசியமல்ல அவரை ஏற்றுக்கொள்ள நம்மைத் தகுதியுள்ளவர்கள் ஆக்குவதற்கே அவசியமாயிருக்கிறது. ஜெபம் தேவனை கீழே நம்மிடத்தில் கொண்டுவருகிறதில்லை, நம்மையே அவரண்டை மேலே கொண்டுபோகிறது.SC 162.1

    இயேசு பெருமான் இப்புவியில் அவதார புருஷனாய் எழுந்தருளிய காலத்தில் ஜெபிக்கவேண்டியதெவ்வாறு என்று தமது தொணடர்களுக்குப்போதித்தருளினார். அவர்கள் அன்றாடக தேவைகளை தேவசமுகத்தில் தெரிவிக்கவும், அவர்கள் கவலைகள் யாவற்றையும் அவர்மேல் சுமத்தவும் ஆக்கியாபித்தார். அவர்களுடைய வேண்டுதல்கள் கேட்யிருக்கிறது.SC 162.2

    இயேசு சுவாமி தாமுங்கூட மானிடர் மத்தியில் சஞசாரஞ் செய்தபொழுது அடிக்கடி ஜெபித்து வந்தார். இரட்சகர் தாமே நம்முடைய குறைகளையும் பலவீனங்களையும் ரூபகாரமாய் கண்டுணர்ந்து, நம்முடைய கடமையையும் பாட்டையும் சகிக்க இடைகட்டினவராய் வருவதற்கு தமது பிதாவிடத்தில் புதுபலத்தையும் சக்தியையும் நாடி அதிலே விண்ணப்பமும் மனுவும் செய்கிறவரானார். எல்லாக் காரியத்திலும் அவர் நமக்கு முன்மாதிரியாயிருக்கிறார். ” எல்லா வகையிலும் நம்மைப்போல சோதிக்கப்பட்ட” அவர் நம்முடைய குறைகளில் நமக்கு ஒர் சகோதரனாயிருக்கிறார்; அவர் பாவமற்றவராயிருந்தபடியால் அவருடைய சுபாவம் தீமைக்கு விலகி நின்றது. பாவம் நிறைந்த உலகத்திலே அவர் ஆத்துமா வேதனையையும் போராட்டத்தையும் சகித்தது. அவரது மனுஷீகத்தன்மை ஜெபத்தை அத்தியந்த அவசியமும் அநுகூலமான சிலாக்கியமுமாகச் செய்தது. தமது பிதாவின் அந்நியோந்நியத்தில் ஆறுதலையும் ஆநந்தத்தையும் ஆரோக்கியத்தையும் சுகித்தார். உலகரட்சகரும் தேவகுமாரனுமானவர் ஜெபம் இன்றியமையாத்தென்றுணருகிறதாயிருந்தால், பலவீனமும் பாவமுமுள்ள சாவுக்குரிய மனுஷர் ஊக்கமும் வைராக்கியமுமுள்ள ஜெபம் அவசியமென்று எவ்வளவு அதிகமாய் உணர்ந்தறிய வேண்டும்.SC 162.3

    பரலோகத்திலிருக்கிற நம்முடைய பிதா தமது ஆசீர்வாதத்தின் நிறைவை நமக்கருளுவதற்காகக் காத்திருக்கிறார். எல்லையில்லா அன்பின் ஊற்றண்டையில் சென்று அதைத்திருப்தியாய்ப்பருகுவது நமது சிலாக்கியம். நாம் இவ்வளவு சொற்பமாய் ஜெபிப்பது எவ்வளவு ஆச்சரியம்! தேவன் தம்முடைய பிள்ளைகளில் தாழ்ந்தவர்கள் செய்கிற உண்மையான் விண்ணப்பத்தையுங்கேட்க விருப்பமும் ஆயத்தமுமாயிருக்கிறார். ஆனாலும் நமது குறைகளை தேவனுக்குத் தெரிவிக்க மிகவும் வெளிப்படையான பிரியமின்மை நமக்கு இருக்கிறதே. அளவில்லா அன்புள்ள தேவனுடைய இருதயம் மனிதருக்காகப் பரிதபிக்கிறபோதும், அவர்கள் கேட்கவும் நினைக்கவும் கூடியவகைகளுக்குமேலாக அருள ஆயத்தமாயிருக்கிறபோதும், அற்பசொற்பமாயும்சுருக்கமாயும் ஜெபித்து குறைந்த விசுவாசமுள்ளவர்களாயிருக்கிறபோதும், சோதனைக்குள்ளாயிருகிற நிர்ப்பாக்கியமும் நிப்பந்தமுமுள்ள நரஜீவிகளைப் பற்றி பரம சேனையின் திரள்கள் என்னதான் நினைப்பார்கள்? தேவதூதர்கள் தேவனுக்கு மன்பாகப் பணிந்து தொழுவதை விரும்புகிறார்கள். அவரண்டை நெருங்கி அவர் சமீபத்திலிருக்க ஆசைப்படுகிறார்கள். தேவனோடு ஐக்கியமாகவிருப்பதே அவர்கள் உன்னத இன்பம் என்று எண்ணுகிறார்கள். தேவன் மாத்திரம் அருளக்கூடிய உதவிக்கு எவ்வளவோ அதிகம் அவசியமுள்ளவர்களாயிருக்கிற இப்பிரபஞ்சத்தின் பிள்ளைகள் அவருடைய ஆவியின் ஒளியின்றியும், அவருடை சமுகத்தின் கூட்டுறவின்றியும் நடக்கிறதற்குத் திருப்தியுள்ளவர்களாயிருக்கிறதைக் காணலாம்.SC 163.1

    ஜெபத்தை அசட்டை செய்கிறவர்களைப் பொல்லாதவனுடைய காரிருள் மூடிக்கொள்ளுகிறது காதுக்குள் ஒதும் சோதனைகளினால் சத்துரு அவர்களைப் பாவஞசெய்யும்படி வசப்படுத்துகிறான். ஏனென்றால் அவர்கள் ஜெபத்தைப்பற்றிய திவ்ய ஏற்பாட்டில் தேவன் அவர்களுக்குக் கடாட்சித்திருக்கிற சிலாக்கியங்களை உபயோகிக்காமல் போவதினாலேதான். சர்வாதிகாரத்தினாலே அளவிறந்த பொக்கிஷசாலைத் திறப் பதற்கு விசுவாசம் என்னும் கையிலே ஜெபமானது திறவுகோலாயிருக்கும்போது, தேவனுடை குமாரரும் குமாரத்திகளுமாயிருப்பவர்கள் ஜெபிப்பதற்குப் பிரியமற்றிருப்பதேன்? இடைவிடாத ஜெபமும், ஜாக்கிரதையான விழிப்பும் நமக்கில்லா தபட்சத்தில், கவலையற்றவர்களாய் வளர்ந்து நேரான பாதையினின்று விலகிப்போகும் அபாயத்திற்குள்ளாவோம். ஊக்கமான வேண்டுதலினாலும் விசுவாசத்தினாலும் சோதனையை எதிர்க்கத்தக்க பலத்தையும் கிருபையையும் நாம் அடையாதபடி கிருபாசனத்துக்குப்போகும் வழியை மறிக்க சத்துருவானவன் இடைவிடாமல் வகை தேடுகிறான்.SC 164.1

    தேவன் நம்முடைய ஜெபங்களைக்கேட்டு, உத்தரவு அருளுவார் என்பாதாக நாம் எதிர்பார்க்கக்கூடிய சில நிபந்தனைகளுண்டு, அவருடைய சகாயம் நமக்கு அவசியமென்று உணர்வதே அவைகளில் முதன்மையானது. “தாகமுள்ளவன்மேல் தண்ணீரையும், வரண்டநிலத்தின்மேல் ஆறுகளையும் ஊற்றுவேன்” (ஏசாயா 44: 3) என்று வாக்கிருளியிருக்கிறார். நீதியின்மேல் பசிதாகமுள்ளவர்கள் தேவன்பேரில் வாஞ்சையுள்ளவர்களாகி, நிரப்பப்படுவார்கள் என்று நிச்சயிக்கலாம். இருதயமானது ஆவியானவருடைய நடத்துதலுக்கு உள்ளமையவேண்டும்; அல்லவென்றால் தேவாசீர்வாகத்தை அது அடையாது.SC 165.1

    நம்முடைய தீரா அவசியமே ஒர் விவகாரமாயும், நமக்காக மிக சாதுரியமாயப் பரிந்துபேசுகிறதுமா யுமிருக்கிறது. இக்காரியங்களை ஆண்டவர் நமக்குச் செய்யும்படி அவரைத்தேடிப் போகவேண்டும். “கேளுங்கள், அப்பொழுது உங்களுக்குக் கொடுக்கப்படும்” (மத். 7: 7)என்றும், “தம்முடைய சொன்ந்தக்குமாரன் என்றும் பாராமல் நம்மெல்லாருக்காகவும் அவரை ஒப்புக்கொடுத்தவர் அவரோடேகூட மற்ற எல்லாவற்றையும் நமக்கு அருளாதிருப்பதெப்படி:” (ரோமா 8: 32) என்றும் சொல்லுகிறார்.SC 165.2

    நாம் நம்முடைய இருதயத்திலே அக்கிரமத்தைப்பேணி வைத்தாலும், நாம் அறிந்த எவ்வித பாவத்தைப் பிடித்துக்கொண்டிருந்தாலும் ஆண்டவர் நமக்குச் செவிகொடார் நருங்குண்டதும் நொறுங்குண்ட்துமான் ஆத்துமாவினுடைய ஜெபம் எப்போதும் அங்கீக்ரிக்கப்படும். நாம் அறிந்த எல்லாத்தப்பிதங்களைம் சீர்ப்படுத்தும்போது தேவன் நம்முடைய விண்ணப்பங்களுக்கு விடையளிக்கிறார் என்று நம்ப இடமுண்டு. நம்முடைய சொந்த புண்ணியம் நம்மை தேவனுடைய தயவுக்குப் பாத்திரராக்கமாட்டாது. இயேசுவின் பாத்திரத்தன்மையே நம்மை ரட்சிக்கிறது: அவருடைய உதிரமே நம்மைச் சுத்திகரிக்கிறது. ஆயினும் ஏற்றுக்கொள்ளுதலின் நிபந்தனைகளுக்கு இணங்கிப்போகும் வேலை நமக்குண்டு.SC 166.1

    ஜெபம் பெறும் ஜெபத்தின் இன்னோர் குணம் விசுவாசம். “தேவனிடத்தில் சேருகிறவன் அவர் உண்டென்றும், அவர் தம்மைத் தேடுகிறவர்களுக்குப் பலன் அளிக்கிறவரென்றும் விசுவாசிக்கவேண்டும்” எபி. 11: 6. “நீங்கள் ஜெபம்பண்ணும்போது எவைகளைக்கேட்டுக்கொள்வீர்களோ அவைகளைப்பெற்றுக்கொள்ளுவோம் என்று விசுவாசியுங்கள். அப்பொழுது அவைகள் உங்களுக்கு உண்டாகும்” மாற் 11: 24 என்று இயேசுநாதர் தமது சீஷர்களுக்குச் சொன்னார். நாம் அவரை அவருடைய வார்த்தையினாலே ஏற்றுக்கொள்ளுகிறோமா?SC 166.2

    இந்த உறுதிவாக்கு அகல்மும் எல்லையற்றதுமாயிருக்கிறது. வாக்குத்தத்தம் செய்தவர் உண்மையுள்ளவராயிருக்கிறார். நாம் கேட்கிற அதே காரியங்களை நாம் அடையாதபோது, ஆண்டவர் ஜெபத்தைக் கேட்கிறரென்றும், நம்முடைய ஜெபத்திற்கு உத்தரவு அருளுவார் என்றும் விசுசாசிக்கவேண்டியவர்களாயிருக்கிறோம். நாம் எத்தனையோ தப்பிதங்களைச் செய்யக்கூடியவர்களாகவும், சொற்ப அறிவுள்ளவர்களாகவுமிருந்து நமக்கு ஆசீர்வாதமில்லாதவைகளைக் கேட்கிறோம் நம்முடைய பரம பிதாவானவர் நமது மேலான நன்மைகலுக்குச் சாதனமானவைகளை யருளிச்செய்து மிக அன்போடு நமது ஜெபங்களுக்கு உத்தரவருளுகிறார். எல்லாப்பொருள்களையும் உள்ளது உள்ளபடியே பார்க்க்க்கூடிய தேவனால் அருளப்பட்ட நேத்திரம் நமக்கிருக்குமானால், நாமே அவைகளை விரும்புவோம் நம்முடைய ஜெபங்களுக்கு உத்தரயு அருளப்படவில்லை என்று தோன்றும்போது, நாம் வாக்குத்தத்தத்தின் பேரில் உறுதியாயிருக்கவேண்டும். உத்தரவு அரு ளப்படுகிற காலம் நிச்சயமாய் வருமாதலால் நமக்கு மிக அவசியமான ஆசீர்வாத்த்தைப் பெற்றுக்கொள்ளக்கடவோம். நாம் விரும்புகிற ஒரு காரியம் நமக்கு எவ்விதமாய்க் கிடைக்கவேண்டுமென்று மன்றாடுகிறோமோ அதேவிதமாய்க் கொடுக்கப்பட வேண்டுமென்று உரிமை பாராட்டுவது துணிகரமாகும். தேவன் தப்பித்ஞ் செய்யக்கூடாதபடி ஞானமுள்ள வரும் நேர்மையானவர்களுக்கு எந்த நன்மையையும் அடக்கிவையாதபடி எவ்வளவு நன்மை மிகுந்தவருமாயிருக்கிறார். உங்களுடைய ஜெபங்களுக்கு உடனே விடை அருளப்படாதிருப்பதை நீங்கள் பார்க்கும்படி நேரிட்டாலும் அவரை நம்பப்பயப்பட்வேண்டாம். “கேளுங்கள் அப்பொழுது உங்களுக்குத் கொடுக்கப்படும்” என்னும் அவருடைய உண்மையான் வாக்குத்தத்தத்தின்பேரில் பற்றுதலாயிருங்கள்.SC 167.1

    நமக்கு விசுவாசமுண்டாவதற்கு முன்னே, நாம் நமது சந்தேகம், பயங்களிடத்தில் ஆலோசனை கேட்கும்படி போனாலும், அல்லது நமக்குத்தெளிவாய் வளங்காத ஒவ்வொரு காரியத்தையும் விடுவிக்கப் பிரயாசப்பட்டாலும் மனக்கல்க்கமும் குழப்பமுமாத்திரம் பெருகி அதிகரிக்கும். தமது சித்தத்தினாலும் வார்த்தையினாலும் ஒவ்வொன்றையும் ஆண்டு வருகிறவரும், சிருஷ்டிப்பிலே யாவற்றையுங் காண்கிறவரும், அளவற்ற ஞானமுள்ளவருமாகிய அவரிடத்தில் நாம் ஒத்தாசையற்றவர்களும் கீழ்ப்பட்டவர் களுமாயிருக்கிறோம் என்றெண்ணி நாம் இருக்கிறபடியே தாழ்மையோடும் விசுவாசத்தோடும் வந்து நம்முடைய குறைகளை தேவனுக்குச்சொல்லி அவரண்டை சேர்வோமானால், நாம் கூப்பிடும் சத்தத்துக்கு அவர் செவிகொடுத்து, நம்முடைய இருதயங்களில் ஒளி வீசும்படி செய்வார். ஊக்கமான ஜெபத்தின் மூலமாகவே முடிவு இல்லாதவருடைய மனதோடு சம்பந்தப்படுகிறவர்களாகிறோம். நம்முடைய மீட்பருடைய முகம் நம்மேல் பரிதாபத்தோடும் அன்போடும் நோக்கும் வேளையில், நமக்கு விசேஷித்த அத்தாக்ஷியில்லாதிருக்கலாம். ஆகிலும் அது நேராக இருக்கிறது. நாம் பார்க்கக்கூடிய அவருடைய தொடுதலை நாம் உணராதிருக்கலாம். ஆனாலும் அவருடைய கரம் அன்போடும் பரிதபிக்கும் தபையோடும் நம்மேலிருக்கிறது.SC 168.1

    நாம் இரக்கத்தையும் ஆசீர்வாத்த்தையும் தேவனிடத்தில் கேடக்கும்படி வருகிறபோது, நம்முடைய சொந்த இருதயங்கள் அன்பும் மன்னிப்பும்முள்ள ஆவி நிறைந்தவைகளாயிருக்கவேண்டும். எங்கள் கடனாளிகளுக்கு நாங்கள் மன்னிக்கிறது போல எங்கள் கடன்களை எங்களுக்கு மன்னியும்” என்று மன்னிக்கிறதற்குப் பிரியமற்ற ஆவியும் இளக்காரமும் நம்மில் குடிகொண்டிருக்கும்போது, நாம் எப்படிஜெபிக்கக்கூடும்? நம்முடைய சொந்த ஜெபங்கள் கேட்கப்படவேண்டுமென்று எதிர்பார்ப்போமானால், நாம் மன்னிக்கப்படும்படி எவ்வளவு விரும்பிகிற் றோமோ அவ்வளவு மாதிரியாயும் அளவாயும் மற்றவர்களுடைய தப்பிதங்களை நாம் மன்னிக்கவேண்டும்.SC 169.1

    ஜெபத்தில் விடாமுயர்ச்சியாயிருக்கவேண்டும் என்பது நாம் பெற்றுக்கொள்ளுவதற்கு இருக்கிற ஒரு நிபந்தனையாம். நாம் விசுவாசத்திலும் அநுபவத்திலும் வளர விரும்புவோமானால் எப்போதும் ஜெபஞ் செய்யவேண்டும். “இடைவிடாமல் ஜெபம்பண்ணி ஸ்தோத்திரத்துடன் ஜெபத்தில் விழித்திருப்பதற்கு” (மத். 6 : 12) நாம் “ஜெபத்தில் உறுதியாய்த் த்ரித்திருக்கவேண்டும்” (ரோ. 12 : 12; கொலொ 5 : 2) பேதுரு விசுவாசிகளைத் “தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருந்து ஜெபம்பண்ணுவதற்கு ஜாக்கிரதையுள்ளவர்களாயிருங்கள்” (1 பேதுரு 4 :7) என்று ஏவிவிடுகிறார். பவுல் “எல்லாவற்றையும் குறித்து உங்கள் விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடேகூடிய ஜெபத்தினாலும், வேண்டுதலினாலும் தேவனுக்குத் தெரியப்படுத்துங்கள்” பிலி. 4 : 6 என்று கட்டளையிடுகிறார். “நீங்களோ, பிரியமானவர்களே” பரிசுத்த ஆவிக்குள் ஜெபம்பண்ணி தேவனுடைய அன்பிலே உங்களைக்காத்துக்கொள்ளுங்கள் (யூதா. 20, 21) என்று யூதாவும் போதிக்கிறார். ஜீவன் தேவனிட்த்திலிருந்து நம்முடைய ஜீவனுக்குள் ஓடிவரத்தக்கதாக இடைவிடாத ஜெபம் தேவனுக்கும் நமது அத்மாவுக்கும் இடையறாத ஐக்கியமாயிருக்கிறது. நம்முடைய ஜீவியத்திலிருந்தோ தூய்மையும், பரிசுத்தமும் திரும்பவும் தேவனிட்த்திற்குப் போகிறது.SC 170.1

    ஜெபத்திற்கு சுறுசுறுப்பு அத்தியந்த அவசியம். ஒன்றும் உன்னைச் ஜெபஞ்செய்யத் தடுக்கப்படாது. இயேசுவுக்கும் உன் இருதயத்துக்குமுள்ள சம்பந்தம் திறக்கப்பட்டதாயிருக்கும்படி ஏற்ற முயற்சி செய்வாயாக வழக்கமாய் ஜெபம் எங்கே செய்யப்படவேண்டுமோ அங்கே போவதற்கு ஒவ்வொரு சமயத்தையுந் தேடு. தேவனிடத்தில் ஐக்கியமாயும் அந்நியோந்நியமாயும் இருக்கவேண்டுமென்று உண்மையாய் நாடுகிறவர்கள் எவர்களோ அவர்கள் ஜெபக்கூட்டங்களில் முதன்மையாயும் தங்கள் ஊழியத்தை உண்மையாகச் செய்கிறவர்களாயும் தாங்கள் பெறக்கூடிய நன்மைகள் யாவற்றயும் அறுப்பதற்கு வாஞ்சையும் ஊக்கமுமுள்ளவர்களாயும் நிற்பார்கள். பரலோகத்திலிருந்து ஒளியின் கிரணங்களை தாங்கள் அடையக்கூடியவிடங்களிலிருந்துகொண்டு தங்களுக்குக் கிடைக்கும் ஒவ்வொரு சமயத்தையும் ஆதாயப்படுத்திக்கொள்வார்கள்.SC 171.1

    நாம் குடும்பத்தோடு சேர்ந்தும் ஜெபிக்கவேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாயிருக்கிற தனி ஜெபத்தையும் நாம் கை நெகிழ விடப்படாது; ஏனேன்றால் இதுவே ஆத்மாவுக்கு ஜீவ நிலை. ஜெபம் அலட்சியஞ் செய்யப்ப்டுகையில் ஆத்மா செழிப்பும் காம்பீரமுமாயிருப்பது கூடாமை குடும்ப ஜெபமாவது பகிரங்க ஜெபமாவது போதுமானதல்ல. ஆத்துமாவானது தனித்தவிட்த்திலே தேவனுடைய கண்ணால் சோதிக்கப்பட திறந்து வைக்கப்பட்டிருக்கட்டும். அந்தறங்க தனி ஜெபமானது ஜெபத்தைக் கேட்கிற தேவனாலே மாத்திரம் கேட்கப்படவேண்டும். அப்படிப்பட்ட விண்ணப்பங்களுள்ள பாரத்தை என்னவென்று அறிய விரும்புகிற எந்தக் காதும் கேட்கலாகாது. அந்தரங்க ஜெபத்தில் ஆத்மாவானது தன்னைச் சூழவிருக்கும் பல காரியாஙகளால் தடைப்படமலும் எந்த விஷயத்தினாலும் கலக்கமடையாமலுமிருக்கிறது. அமைதலாயும் அதிவேகமாயும் தேவனை எட்டுகிறது. இருதயத்தினின்று கிளம்பும் ஜெபத்தைக் கேட்கும்படி திறந்த செவியோடிருக்கிறவரும், அந்தரங்கத்தில் பார்க்கிறவருமாகிய அவரிடத்திலிருந்து வருகிற சக்தியானது இன்பமும் நிலையுள்ளதுமாயிருக்கும். அமைதலும் சுத்தமுமான விசுவாசத்தினால் ஆத்மா தேவனோடு ஐக்கியப்பட்டு, சாத்தானுக்கு விரோதமாய்ச் செய்யவிருக்கும் போருக்காக தன்னை பலப்படுத்திக்கொள்ளவும் ஆயத்தப்படுத்திக்கொள்ளவுந்தக்கதாய் தெய்வ ஒளியின் கிரணங்களைத் தனக்குத் தானே சேர்த்துக்கொள்ளுகிறது. தேவன் தாமே நம்முடைய பலத்தில் கோபுரமாயிருக்கிறார்.SC 171.2

    நீ உன் உள்ளறையிலே ஜெபி, நீ உன் அன்றாட வேலைக்குப் போகிறபோதெல்லாம் உன் இருதயம் தேவனுக்கு நேராக உயர்த்தப்படட்டும், இவ்வண்ண மே ஏனோக்குப் தேவனோடு நடந்தான். இந்த இரகசிய தனி ஜெபங்கள் கிருபாசனத்திற்கு முன் அருமையான தூபவர்க்கம்போல கிளம்புகிறது. இப்படி தேவனிடத்தில் தரித்திருக்கும் ஒருவனுடைய இருதயத்தை சாத்தான் மேற்கொள்ள முடியாது.SC 172.1

    தேவனிடத்தில் விண்ணப்பஞ் செய்வதற்குத்தகாத நேரமாவது இடமாவது இல்லை. ஊக்கமான ஜெப் சிந்தையினால் நமதிருதயம் நிறைந்திருக்கையில் அதை உயர்த்தாதபடி தடுத்து வேறோன்றுமில்லை. வீதியின் ஜன நெருக்கத்திலும், மும்மர வேலையின் மத்தியிலும், நாம் தேவனுக்கு மனுப்பண்ணிக்கொள்ளலாம். நெகேமியா அர்தசஷ்டா ராஜாவின் முன்பாக வேண்டுதல் செய்த்துபோல ஆண்டவருடைய திவ்விய நடத்துதலுக்காக்வும் காப்பாற்றுதலுக்காகவும் கெஞ்சி பஞ்சரிக்கலாம். நாம் எங்கேயிருந்தாலும் தேவனோடு சம்பாஷிக்க்க்கூடிய ஒரு தனி இட்த்தைக் காணலாம். நம்முடைய இருதயத்தின் கதவு எப்போதும் திறந்த்தாகவும் இயேசுவைப் பரலோக விருந்தினராக நமது ஆத்துமாவில் வந்து வசிக்கும்படி வருந்தியழைக்கும் அழைப்பு மேலே அடிக்கடி செல்லத்தக்கதாகவும் நாம் பார்க்கவேண்டும்.SC 173.1

    நம்மைச் சுற்றிலும் கறையானதும் துருப்பிடித்ததுமான ஆகாய மிருந்தபோதிலும் நாம் அந்த விஷசுவாசத்தை சுவாசிக்கத் தேவையில்லை; பரலோகத்திலுள்ள சுத்தமான ஆகாயத்திலே வாசஞ்செய்யலாம். ஊக்கமான ஜெபத்தின் மூலமாய், தேவ சந்நிதானத்தில் இருதயத்தை உயர்த்துவதினால் அவபக்தியான எண்ணங்களும், அசுசியான நினைவுகளும் பிரவேசியாதபடி சுதவை அடைத்துவிடலாம். தேவனுடைய உதவியையும் ஆசீர்வாதங்களையும் பெற்றுக்கொள்ளும்படி திறந்த இருதயங்கள் உள்ளவர்களாயிருக்கிறவர்கள் பூமியின் ஆகாயத்தைப் பார்க்கிலும் பரிசுத்தமான ஆகாயத்தில் நடந்து, அடிக்கடி வானவரோடு சம்பாஷணை செய்கிறவர்களாயிருப்பார்கள்SC 173.2

    இயேசுவைப் பற்றி மிகத்தெளிவான அறிவும் நித்தியமாயுள்ள உண்மையான சத்தியங்களைப்பற்றிய மதிப்பும் திட்பமான தெளிவுமுள்ளவர்களாய் நாமிருக்கவேண்டும். பரிசுத்த அலங்காரம் தேவனுடைய பிள்ளைகளின் இருதயத்தை நிரப்பவேண்டியதாயிருக்கிறது. இக்காரியம் நிறைவேறும் பொருட்டு பரலோக்காரியங்களைப்பற்றிய தெய்வீக பிரசங்கங்களாகிய வெளிப்படுத்தல்களை நாம் தேடவேண்டும்.SC 174.1

    தேவன் நமக்குப் பரலோக ஆகாயத்தை சுவாசிக்கத் தரும்படியாக இருதயமானது வெளியேயும் மேலேயும் இழுக்கப்படட்டும், புஷ்பமானது சூரியனுக்கு நேராய்த் திருபுமாப்போல நாம் எதிர்பாராத ஒவ்வொரு சோதனையிலும் நம்முடைய எண்ணங்கள் இயல்பாகவே தேவனுக்கு நேராய்த் திரும்பும்படி தேவனண்டை அவ்வளவு நெருங்கிச் சேர்வோமாக.SC 175.1

    உன் குறைகள், சந்தோஷங்கள், துக்கங்கள், கவலைகள், நடுக்கங்கள் யாவற்றையும் தேவனுக்கு முன்னிலையில் வைப்பாயாக. நீ அவரை இளைப்படையச்செய்யவும், பாரமுள்ளவராக்கவுமுடியாது. உன்சிரசின் ரோமங்களை எல்லாம் கணக்கிட்டிருக்கிற அவர் தமது பிள்ளைகளின் அவசியங்களைப் பற்றி கவலையற்றவரல்ல. “கர்த்தர் மிகுந்த உருக்கமும் இரக்கமுமுள்ளவராயிருக்கிறார்” (யாக். 5: 11) அன்பினால் நிறைந்திருக்கிற அவருடைய உள்ளம் நம்முடைய துக்கங்களினாலும், அவைகளைப்பற்றிச் சொல்லும் நம்முடைய வார்த்தைகளினாலுங்கூட தொடப்படுகிறது. உன் மனதைக் குழப்புகிற ஒவ்வொன்றையும் அவரிடத்தில் கொண்டுபோய் வை, அவர் இப்பிரபஞ்சத்தின் காரியாதிகலையெல்லாம் ஆண்டு உலகங்களைக் கையில் ஏந்தி தாங்கிக்கொண்டிருக்கிறபடியால், அவர் சுமக்கிறதற்கு மிகப்பெரிதானது வேறோன்றுமில்லை. நம்முடைய சமாதானத்துக்கானவைகள் எவைகளோ அவைகளை மிகச் சிறிதானவைகள் என்று அவர் எண்ணுகிறதுமில்லை. நம்முடைய அநுபோகத்தில் அவர் வாசிக்கக்கூடாதபடி கருகலான ஒரு அதிகாரமுமில்லை. எந்தக் குழப்பத்தையும் சமாதானப்படுத்தி அமர்த்துவது அவருக்கு வருத்தமானதல்ல. அவர் பிள்ளைகளில் கடையானவர்களுக்கும் ஆபத்தெதுவும் நேரிடுவதையும் எந்த வியாகுலமும் ஆத்துமாவை உபாதிப்பதையும் கவனிக்காதபடி எந்த சந்தோஷமும் அவரைத்தடை செயவதில்லை, ஊக்கமான எந்த ஜெபமும் உதட்டை விட்டு நீங்கிப் போவதில்லை. அவைகளை நமது பரமபிதா கவனியாமல் விடுகிறதுமில்லை. அல்லது அவர் உடனே பிரியங்காட்டாமல் இருக்கிறதுமில்லை. “அவர் இருதயம் நொறுங்குண்டவர்களைக் குணமாக்குகிறார். அவர்களுடய காயங்களைக் கட்டுகிறார்” சங். 147 : 3. தேவன் தமது நேசகுமாரனைக் கொடுக்கவும், அவருடைய பாதுகாப்பில் பங்கடையவும், இப்பூமியில் ஒரே ஒரு ஆத்துமா தவிர, வேறொருவனும் இல்லாதிருந்தால், அந்த ஒரு ஆத்துமாவுக்கும் தேவனுக்கும் எவ்வளவு விசேஷித்த நெருங்கின பூரணசம்பந்தம் இருக்குமோ அவ்வளவு சம்பந்தம், தேவனுக்கும் ஒவ்வொரு ஆத்துமாவுக்கும் இருக்கிறது.SC 175.2

    “நீங்கள் என் நாமத்தினாலே வேண்டிக்கொள்வீர்கள் உங்களுக்காகப்பிதாவை நான் கேட்டுக்கொள்வேனேன்று உங்களுக்குச் சொல்லுவேண்டியதில்லை, ஏனென்றல் பிதாதாமே உங்களைச் சிநேகிக்கிறர்” நீங்கள் என் நாமத்தினாலே பிதாவை கேட்டுக் கொள்வதெதுவோ, அதை அவர் உங்களுக்குக் கொடுக்கத்தக்கதாக, நான் உங்களைத் தெரிந்துகொண்டேன். (யோ. 16: 26, 27; 15: 16) என்று இயேசு சொன்னார். இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறதாவது:- ஜெபத்தின் துவக்கத்திலும் முடிவிலும் மாத்திரம் அந்தப்பேரை உச்சரிக்கிறதைப் பார்க்கிலும் இயேசுவின் வாக்குத்தத்தங்களை நம்பி, அவருடைய கிருபையின்பேரில் சார்ந்து, அவருடைய ஊழியத்தைச் செய்கிறபோது கிறிஸ்துவின் ஆவியினாலும் மனதினாலும் ஜெபிப்பதுதான் மேலானது.SC 176.1

    நாம் அவரைத் தொழுகிற ஊழியத்திற்காகவேண்டி உலகத்தைமுழுவதுமாய் விட்டுவிடாவாவது நம்மில் யாராவது சந்நியாசியாகவும் ரிஷியாகவும் ஆகவேண்டும் என்றாவது தேவன் விரும்புகிறதில்லை. கிறிஸ்துவின் ஜீவியம் மலைகளுக்கும் திரள் ஜனங்களுக்கு மூடே சென்றதுபோல நம்முடைய ஜீவியமுமிருக்கவேண்டும். ஜெபஞ் செய்வதைத்தவிர வேறோன்றையுஞ் செய்யாதவன் கடைசியில் ஜெபத்தையும் அடியோடே விட்டு விடுவான்; அல்லது அவனுடைய ஜெபங்கள் கடமைக்காகச் செய்யும் ஜெபமாகிவிடும். மனிதர் கிறிஸ்தவ கடமையை நிறைவேற்றுவதிலிருந்தும் சிலுவை சுமப்பதிலிருந்தும் தூரமாக விலகி இல்லற ஜீவியத்தினின்று தங்களைப் பிரித்துக்கொள்ளும் போதும், தங்களுக்காக ஊக்கத்தோடு ஊழியம் நடப்பித்த எஜமானுக்காக அவர்கள் உற்சாகமாய் கிரியை நடப்பிக்காமல், நிறுத்தி விடுகிறபோதும் ஜெபிக்க வேண்டிய பொருளை முழுவதுமாய் இழந்து, பக்திக்குரிய எழுப்புதலும் அடையாமற் போகிRaaறார்கள். அவர்களுடைய ஜெபங்கள் தன்னயமுள்ளவைகளாகவும் தங்களை யடுத்தவைகளாகவு மாறிவிடுகிறது. வேலை செய்வதற்குப் பலத்துக்காகக் கெஞ்சவும், கிறிஸ்துவின் இராஜ்யம் ஸ்தாபிக்கப்பட்டு பிரபலமாக மன்றாடவும் மனுக்குலத்திற்குத் தேவையானவைகளுக்காக வேண்டவும் அவர்களால் முடியாது.SC 177.1

    தேவனுடைய ஊழியத்தில் ஒருவரோடொருவர் பலப்படுத்தப்படவும் உற்சாகப்படுத்தப்படவும் ஒன்றாய்க்கலந்து உறவாடும் சிலாக்கியத்தை நாம் அசட்டை செய்யும்போது பெரும் நஷ்டத்தையடைகிறவர்களாகிறேம். அவருடையவார்த்தையின் சத்தியங்கள் நம்முடைய மனதில் தங்கள் கருக்கையும் முக்கியத்தையும் இழந்துவிடுகின்றன. நம்முடைய இருதயமானது பரிசுத்தப்படுத்தும் சக்தியினால் எழுப்பப்பட்டு பிரகாசிக்கப்படுவதிலிருந்து விழுந்து போகிறதுண்டு, அப்போது நாம் ஆவியில் குன்றிப்போகிறேம். கிறிஸ்தவர்களாயிருக்கிற நம்முடைய ஐக்கியத்திலுள்ள நம்முடைய அநுதாபக்குறைவினால் ஜெபத்தை அதிகமாய் இழந்து விடுகிறோம் தன் காரியத்தைத் தனக்குத் தானே வைத்துக்கொள்ளுகிறவன் தேவன் அவனுக்கு நியமித்திருக்கிற நிலைமையை நிறைவேற்றாமலே போகிறான். ஜனதார சக்திகளை நாம் தக்கவாறு விருத்தி செய்வோமாகில் ஒருவருக்கொருவருள்ள அனுதாபம் வளரும். மேலும் அது தேவனுடைய சேவையில் பலத்தையும் விருத்தியையும் கொடுக்கிறதுமாயிருக்கிறது.SC 178.1

    கிறிஸ்தவர்கள் ஒன்றாய்க்கூடி தேவனுடைய அருமையான அன்பைப்பற்றியும், இரட்சிப்பின் மேலான சத்தியங்களைப்பற்றியும் ஒருவரோடொருவர் சம்பாஷிப்பார்களானால், அவர்களுடைய சொந்த இருதயங்கள் முசிப்பாற்றப்படுவதுமன்றி மற்றவர்களுடைய இருதயங்களும் முசிப்பாற்றப்படும். அவருடைய கிருபையின் புது அநுபவத்தையடைவதினால் நம்முடைய பரமபதாவைப்பற்றி இன்னும் அதிகம் அதிகமாய் அன்றாடம் அறிகிறவர்களாயிருப்போம். அப்போது அவருடைய அன்பைப்பற்றி பேசுவதற்கும் ஆசை கொள்வோம். நாம் இதைச் செய்கிறபோதே நம்முடைய இருதயம் அனல் மூண்டு உற்சாகத்தையும் ஊக்கத்தையுமடையும் நம்மைக் குறித்து கொஞ்சமாய் நினைத்து இயேசுவைக் குறித்து அதிகமாய் ஞாபகங்கொண்டு பேசுவோமானால், அவருடைய சமுகம் அதிகம் அதிகமாய் நம்மோடிருக்கும்.SC 179.1

    அவர் நம்மேல் கொண்ட கவலையைக் குறித்து நாம் சாட்சி கூறும்போதெல்லாம் தேவனையே ஞாபகங்கொள்ளவேண்டும். அவரைப்பற்றிப் பேசுவதில் மகிழ்ச்சியும் அவருக்குத் துதியும் இருக்கவேண்டும். நாம் உலககாரியங்களில் அதிகப் பற்றுள்ளவர்களாயிருப்பதினால், அவைகளைக் குறித்து அடிக்கடிப்பேசுகிறேம். நம்முடைய சிநேகிதர்களை நேசிக்கிறதினால் அவர்களைப்பற்றி பேசுகிறேம். நம்முடைய சந்தோஷமும் துக்கமும் அவர்களோடு இணைந்திருக்கிறது.SC 179.2

    நமது உலகசிநேகிதர்களை நேசிப்பதைப் பார்க்கிலும் தேவனை அதிகமதிகமாய் நேசிப்பதற்கு அளவற்ற ஒர் பெரிய காரணமுண்டு. அவருடைய வல்லமையையும் நன்மையையும்பற்றிப் பேசுவதும், நம்முடைய நினைவுகளிலெல்லாம் அவரை முதலாவது வைத்துக்கொள்வதும் இயற்கையான காரியமாயிருக்கவேண்டும். நமக்கு அவர் அளித்திருக்கிற ஈவுகள் அவரை அடிக்கடி நமக்கு நினைப்பூட்டுகின்றன. நம்மை அன்பின் கட்டினால் கட்டி நம்முடைய பரம உபகாரிக்கு நன்றி செலுத்தும்படி செய்கின்றன். பூமியின் தாழ்விடங்ளுக்கு அதிக சமீபமாய் வசிக்கிறோம். நாம் மேலே பரிசுத்தஸ்தலத்தில் திறந்திருக்கிற வாசலுக்கு நேராய் நம்முடைய கண்களை ஏறெடுப்போமாக. அங்கே கிறிஸ்துவின் முகத்தில் தேவனுடைய மகிமையின் ஜோதி வீசுகிறது. “இயேசுவின் மூலமாய் தேவனிட்த்தில் சேருகிறவர்களை முற்று முடிய இரட்சிக்க வல்லவராயிருக்கிறர்.” எபி, 7:25.SC 180.1

    “அவருடைய கிருபையினிமித்தமும் மனுப்புத்திரருக்கு அவர் செய்கிற அதிசயங்களினிமித்தமும்” சங். 107:8. நாம் அவரை அதிகமதிகமாய்த் துதிக்கவேண்டும். நம்முடைய தேவபக்திக்குரிய காரியங்கள் முழுவதுமாய் கேட்டுக்கொள்வதிலும் பெற்றுக்கொள்வதிலும் மாத்திரம் அடங்கினவைகளாயிருக்கலாகாது. நாம் பெற்று சுகித்து வருகிற நன்மைகளையன்றி நமக்குள்ள குறைகளைப்பற்றி மாத்திரம் எப்போதும் சிந்தியாதிருப்போமாக. நாம் அதிகமாய் ஜெபிக்கிறதில்லை. நன்றி செலுத்துவதிலுங்கூட அதிகக் குறைவுள்ளவர்களாயிருக்கிறேம். தேவனுடைய கிருபைகளையோ அடிக்கடிப் பெறுகிறவர்களாயிருக்கிறோம். அப்படியிருந்தாலும் எவ்வளவு கொஞ்சமாய் அதற்கு நனிகாட்டுகிறோம். அவர் நமக்குச் செய்திருக்கிறவைகளுக்காக எவ்வளவு கொஞ்சமாய் அவரைத் துதிக்கிறேம். பூர்வத்தில் இஸ்ரவேலர் கர்த்தருடைய வேலையைச் செய்வதற்கு ஒன்றாய்க் கூடினபோது, கர்த்தர் அவர்களுக்குக்கட்டளையிட்ட தென்னவென்றால், “உங்கள் தேவனாகிய கர்த்தருடைய சன்னிதியிலே புசித்து, நிங்கள் கையிட்டுச் செய்ததும், உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களை ஆசீர்வாதித்ததுமான யாவுக்காகவும், நீங்களும் உங்கள் குடும்பத்தாரும் சந்தோஷப்படுவீர்களாக” உபா. 12:7. என்பதே. தேவனுடைய மகிமைக்காகச் செய்யப்படுகிற காரியம் துக்கத்தோடும், மனவருத்தத்தோடுமல்ல, களிப்போடும், துதித்தலின் கீதங்களோடும், நன்றியறிதலோடும் செய்யப்படவேண்டும்.SC 180.2

    நம்முடைய தேவன் மன உருக்கமும் இரக்கமு ள்ள பிதா. அவருடைய ஊழியம் சங்கடமும் மனவருத்தமுமாக எண்ணப்படலாகாது. கர்த்தரை வணங்குவதும் அவருடைய சேவையில் பங்கு பெறுவதும் சந்தோஷகரமானதாக விருக்கவேண்டும். தேவன் தம்முடைய பிள்ளைகளுக்காக அவ்வளவு பெரிதான இரட்சிப்பை சம்பாதித்து வைத்திருக்கும்போது, அவர்கள் அவரைக் கடினமானவரும், வேலைவாங்கும் ஆளோட்டியுமாகப் பாவித்து நடப்பதற்கு இடங்கொடார். அவரே அவர்களுடைய உற்ற நண்பன். அவர்கள் அவரைத் தொழுகிறபோது அவர்களை ஆசீர்வதிக்கவும் தேற்றவும், அவர்கள் இருதயத்தை சந்தோஷத்தினாலும் அன்பினாலும் நிரப்பவும் அவர்களோடிருக்கவும் விரும்புகிறார். தம்முடைய பிள்ளைகள் தமது ஊழியத்தில் ஆறுதலடையவும், தமது வேலையில் கஷ்டத்தைவிட அதிக சந்தோஷத்தையேகாணவும் வேண்டுமென்று கர்த்தர் விரும்புகிறார். அவரைத்தொழுதுகொள்ளும்படி வருகிறவர்கள், எல்லா விஷயங்களிலும் உண்மையும் நேர்மையுமாய் நடந்துகொள்ளும்படி அவருடைய கிருபையைப் பெற்றுக்கொள்ளவும், தங்கள் அன்றாடக ஜீவியத்தை யடுத்த ஊழியங்களிலெல்லாம் சந்தோஷ முள்ளவர்களாயிருக்கவுந்தக்கதாக, அவருடைய அக்கரையையும் அன்பையும் குறித்த மேலான எண்ணங்களை அவர்கள் உடையவர்களாயிருக்க வேண்டுமென்று விரும்புகிறார்.SC 181.1

    நாம் சிலுவையைச் சுற்றிக் கூடி நிற்கவேண்டும். சிலுவையில் அறையப்பட்டவரும் கிறிஸ்துவுமாகிய அவரே நமது யோசனைக்கும் சம்பாஷணைக்கும், அகக்களிப்புக்கும் ஆதிகாரணராயிருக்கவேண்டும். தேவனிடத்தினின்று நாம் பெற்றுக்கொள்ளுகிற ஒவ்வொரு ஆசீர்வாதத்தையும் நம்முடைய மனதில் பத்திரப்படுத்தவேண்டும். நாம் அவருடைய பெரிதான அன்பை உணர்ந்தறிகிறபோது, நமக்காக சிலுவையில் ஆணி அடிக்கப்பட்ட அந்த கரத்திலே எல்லாவற்றையும் ஒப்புவித்து விடும்படி விருப்பமுள்ளாவர்களாயிருக்கவேண்டும். SC 182.1

    நம்முடைய ஆத்மாவானது துதியாகிய சிறகுகளினால் பரலோகத்திற்கு சமீபமாயேறும். உன்னதத்திலே தேவன் பாட்டினாலும் வாத்தியத்தினாலும் தொழுது கொள்ளப்படுகிறார். நாம் நம்முடைய நன்றியைக் காட்டும்போது அந்தப் பரம சேனையின் வணக்கத்திற்குச் சமீபிக்கிறவர்களாயிருக்கிறோம். “ஸ்தோத்திரப் பலியிடுகிறவன் தேவனை மகிமைப்படுத்துகிறான்” (சங் 50:23) துதியோடும் கீத சத்தத்தோடும் (ஏசா 51:3) பணிவான சந்தோஷத்தோடும் நாம் நமது சிருஷ்டி கர்த்தாமுன் சேரக்கடவோம்.SC 183.1