Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

மகா சர்ச்சை

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    அத்தியாயம் 7 - கிறிஸ்துவின் காட்டிக்கொடுத்தல்

    பஸ்கா பண்டிகை பந்தியில் தமது சீடர்களோடு இயேசு புசித்த வேளைக்கு நான் எடுத்துச் செல்லப்பட்டேன் சாத்தான் யூதாசை வஞ்சித்திருந்தான். யூதாஸ் சிற்றின்பங்களில் லயித்திருந்தான். சாத்தானோ, அவனை, கிறிஸ்துவின் மெய்யான சீடன் என்று எண்ண வைத்திருந்தான். அவன், இயேசுவை மேசியா என்று ஏற்று, அவருடைய மகத்தான கிரியைகளைக்கண்டு, அவருடைய ஊழியத்தில் வெகுவாக பங்கு கொண்டிருந்த போதிலும், பேராசை அவனை பிடித்திருந்தது. பணத்தை மிகவும் நேசித்தான். இயேசுவின் மீது ஊற்றப்பட்ட தைலத்தின் விலையை குறித்து கோபப்பட்டான். மரியாள் கர்த்தரை நேசித்தாள். அவளுடைய திரளான பாவங்களை இயேசு மன்னித்திருந்தார். அவளது அன்பான சகோதரனை உயிரோடு எழுப்பியிருந்தார். எனவே, இயேசுவின் மீது ஊற்றப்படுவதற்கு எதுவும் தகுதி நிறைந்ததாக அவள் கருதவில்லை. யூதாசோ, தனது பணத்தாசையை மறைப்பதற்காக, அத்தைலத்தை விற்று ஏழைகளுக்கு கொடுத்திருக்கலாமே என்று கூறினான். ஏழைகள் மீது எவ்வித பாசத்தையும் அவன் வைத்திருக்கவில்லை. சுயநலம் நிறைந்த அவன், தன் வசம் ஒப்படைக்கப்பட்ட பல வேலைகளில் தனக்கு ஆதாயம் தேடிக்கொண்டான். இயேசுவின் தேவைகளில் கவனமே காட்டாத யூதாஸ், பல நேரங்களில் ஏழைகளை குறித்துப் பேசினான். தனது பேராசை எண்ணங்களிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்வதற்கு, ஏழைகளின் மீது அக்கறை கெண்டவன் போல் காட்டிக்கொண்டான். மரியாளின் தயாள குணத்தின் மீது யூதாசு கடிந்துக்கொண்டது, அவனது இக்குணத்தை தெளிவு படுத்தியது.GCt 16.1

    யூதாசின் இதயத்தில் சாத்தான் நுழைவதற்கு தக்க வழி உண்டாயிற்று. யூதர்கள் இயேசுவை வெறுத்தார்கள்; ஆனாலும் அவருடைய போதனைகளை கேட்பதற்கும், அவருடைய மகத்தான கிரியைகளை காண்பதற்கும் திரளான ஜனங்கள் வந்தார்கள். வாஞ்சையோடும், ஆவலுடனும் இயேசுவை பார்க்கவும், அவருடைய போதனைகளை கேட்கவும் திரண்டு வந்த கூட்டம், தவறாமல், பிரதான ஆசாரியரையும், மூப்பர்களையும் கவர்ந்திழுத்தது. அநேக தலைவர்கள் இயேசுவை விசுவாசித்தார்கள். ஆனால், யூத மத அமைப்பிலிருந்து நீக்கப்பட்டு விடுவார்கள் என்கிற பயத்தினால், அதனை வெளிக்காட்ட பயந்தார்கள். ஜனங்களின் கவனத்தை இயேசுவிடமிருந்து திருப்புவதற்காக ஏதாவது செய்யவேண்டும் என ஆசாரியர்களும் தலைவர்களும் யோசித்தார்கள். அனைத்து மக்களும் இயேசுவின் மீது நம்பிக்கை வைத்துவிடுவார்கள் என பயந்தார்கள். அவர்களுடைய பாதுகாப்பே கேள்விக் குறியாக இருந்தது. தங்களுடைய பதவியை இழக்கவேண்டும் அல்லது இயேசுவை கொலை செய்ய வேண்டும். அப்படியே இயேசுவை கொலை செய்தாலும், அவருடைய வல்லமையின் “வாழும் அத்தாட்சிகள்” தொடர்ந்து இருப்பார்களே! இயேசு லாசருவை மரணத்திலிருந்து எழுப்பினார். இயேசுவின் வல்லமையைக் குறித்து லாசரு சாட்சி கொடுப்பானே என்று பயந்தார்கள். மரணத்திலிருந்து எழுப்பப்பட்ட லாசருவைப் பார்க்க அநேகர் வந்ததினால், லாசருவையும் கொலைச் செய்ய திட்டமிட்டார்கள். அதன் பின் ஜனங்களின் கவனத்தை திருப்பி, மனித தத்துவங்களையும், சம்பிரதாய ஐதீகங்களையும் கவனிக்க வைக்க வேண்டும் என தீர்மானித்தார்கள். ஜனங்களின் மத்தியிலிருக்கும்போது இயேசுவை பிடித்தால், கல்லெறியப்படுவார்கள் என்பதை உணர்ந்த ஆசாரியர்கள், அவர் தனித்திருக்கும் போது பிடிக்க முடிவெடுத்தார்கள்.GCt 16.2

    சில வெள்ளிக் காசுகளுக்கு இயேசுவை பெற்றுக்கொள்ள ஆர்வமாக ஆசாரியர்கள் இருப்பதை யூதாசு அறிந்திருந்தான். அவனுடைய பண ஆசை, இயேசுவை, அவருடைய எதிரிகளிடம் காட்டிக்கொடுக்க அவனை ஏவியது. சாத்தான், யூதாசு மூலமாக துரிதமாக வேலை செய்துக் கொண்டு இருந்தான். யூதாசின் நிமித்தமாக, அன்றிரவு, யாவருமே வருந்தவேண்டும் என்பதை இயேசு பாரத்தோடு சீடர்களிடம் எடுத்துரைத்தார். பேதுரு அதற்கு எதிர்ப்பைத் தெரிவித்தான். ஆனால் இயேசுவோ அவனிடம், “கோதுமையைச் சுளகினால் புடைக்கிறதுபோலச் சாத்தான் உங்களைப் புடைக்கிறதற்கு உத்தரவு கேட்டுக் கொண்டான். நானோ உன் விசுவாசம் ஒழிந்து போகாதபடிக்கு உனக்காக வேண்டிக்கொண்டேன்; நீ குணப்பட்டபின்பு உன் சகோதரரை ஸ்திரப்படுத்து”, என்று கூறினார்.GCt 17.1

    பின்பு, இயேசு தனது சீடர்களோடு தோட்டத்தில் இருப்பதை நான் கண்டேன். சோதனைகளில் பிரவேசியாதபடி ஜாக்கிரதையாக இருந்து ஜெபிக்கும்படி இயேசு சீடர்களிடம் வேண்டிக்கொண்டார். அவர்களுடைய விசுவாசம் சோதிக்கப்படும் என்பதையும், நம்பிக்கை முறிந்துபோகும் என்பதையும், இயேசு அறிந்திருந்தபடியால், அவர்களை விழித்திருந்து ஜெபிக்கச் சொன்னார். மிகுந்த பாரத்தோடும் கண்ணீரோடும் இயேசு ஜெபித்தார். “பிதாவே, உமக்குச் சித்தமானால் இந்தப் பாத்திரம் என்னைவிட்டு நீங்கும்படி செய்யும்; ஆயினும் என்னுடைய சித்தத்தின்படியல்ல, உம்முடைய சித்தத்தின்படியே ஆகக்கடவது”, என்று ஜெபித்தார். தேவ குமாரன் மிகுந்த விசனத்தோடு ஜெபித்தார். குருதியைப் போல பெரிய வியர்வைத்துளிகள் அவருடைய முகத்திலிருந்து தோன்றி, நிலத்தில் விழுந்தன. இக்காட்சியை தூதர்கள் பார்த்து கொண்டிருந்தார்கள். ஆனாலும் ஒரு தூதன் மாத்திரமே இயேசுவுக்கு பணிவிடை செய்யும்படியாக நியமிக்கப்பட்டிருந்தான். பரலோகத்தின் தூதர்கள் தங்களுடைய கீரிடங்களையும், வாத்தியங்களையும் இறக்கி வைத்துவிட்டு இக்காட்சியை அமைதியாக கவனித்தார்கள். பரத்தில் மகிழ்ச்சி இல்லை. சூதவகுமாரனை சூழ்ந்து கொள்ள விரும்பினார்கள். அதிகாரத்திலிருந்த தூதர்கள் அவர்களை தடுத்துவிட்டார்கள். திட்டமிடப்பட்ட காரியம் நிறைவேறியாகவேண்டும்.GCt 17.2

    ஜெபித்த பின்பு, சீடர்களை பார்ப்பதற்காக இயேசு வந்தார். அவர்கள் தூங்கிக் கொண்டிருந்தார்கள். அத்துயரமான வேளையிலும், தனது சீடர்களின் ஜெபமும், ஆறுதலும் இல்லாதிருந்தது. சற்று நேரத்திற்கு முன் மிகுந்த ஆர்வமுடனிருந்த பேதுரு இப்பொழுது அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தான். இயேசு பேதுருவை நோக்கி, “சீமோனே, நித்திரைபண்ணுகிறாயா? ஒரு மணிநேரம் நீ விழித்திருக்கக்கூடாதா?” என வினவினார். யூதாஸ் தனது கூட்டத்தோடு இயேசுவை பிடிக்கவந்த வேளையில், இயேசு, மூன்று முறை ஜெபித்திருந்தார். யூதாஸ் வழக்கம்போல இயேசுவை வாழ்த்தினான். அக்கூட்டத்தினர் அவரை சூழ்ந்தபோது இயேசு, தனது வல்லமையை வெளிப்படுத்தி, “யாரைத் தேடுகிறீர்கள்? நான்தான்” என்று கூறினார். அவர்கள், இயேசு இப்படி சொன்னவுடனே, பின்னிட்டுத் தரையிலே விழுந்தார்கள். தமது வல்லமையை அவர்கள் அறியும்படியாகவும், தம்மால் அவர்களிடமிருந்து தப்பிக்க முடியும் என்றும் அவர்களுக்கு காட்டினார்.GCt 18.1

    கோல்களோடும் பட்டயங்களோடும் வந்திருந்த கூட்டம் இத்தனை துரிதமாக விழுந்ததை கண்ட சீடர்களுக்கு புது நம்பிக்கை. உண்டாயிற்று, மீண்டும் எழுந்து, இயேசுவை, அக்கூட்டத்தினர் சூழ்ந்தபோது, பேதுரு பட்டயத்தை உருவி ஒருவன் காதை வெட்டினான். இயேசு அவனை கடிந்து கொண்டு, “நான் இப்பொழுது என் பிதாவை வேண்டிக்கொண்டால், அவர் பன்னிரண்டு லேகியோனுக்கு அதிகமான தூதரை என்னிடத்தில் அனுப்பமாட்டாரென்று நினைக்கிறாயா?” என வினவினார். இவ்வார்த்தைகளை அவர் கூறியபோது, தூதர்களின் முகக்குறி உயிரடைந்ததை கண்டேன். தங்கள் தளபதியை சூழ்ந்து, அக்கூட்டத்திலிருந்து அவரை காப்பாற்றிவிட வேண்டும் என்று ஆசித்தார்கள். அவ்வேளையில் இயேசு, “அப்படிச் செய்வேனானால், இவ்விதமாய்ச் சம்பவிக்கவேண்டும் என்கிற வேதவாக்கியங்கள் எப்படி நிறைவேறும்?” என்றார். நம்பிக்கை கொண்டிருந்த சீடர்களின் இதயங்கள் மீண்டும் நம்பிக்கையிழந்து, மிகுந்த ஏமாற்றமடைந்தது.GCt 18.2

    தங்களது ஜீவனை காக்கும்படியாக, சீடர்கள், ஒருவர் ஒரு பக்கமாகவும் மற்றொருவர் வேறு பக்கமாகவும் சிதறி ஓடினார்கள். இயேசு தனித்து நின்றார். சாத்தான் ஜெயித்து நிற்பதை போல இருந்தது!! தேவதூதர்களுக்கோ எத்தகைய வருத்தம்!! அநேக பரிசுத்த தூதர்கள், குழுக்களாக பிரிந்து, இக்காட்சியை காண அனுப்பப்பட்டார்கள். மனிதர்கள், அவர்படும் கொடும்பாடுகள் அனைத்தையும் மெய்யாக அனுபவித்து காணவேண்டியதால், இயேசுவின் ஒவ்வொரு கஷ்டங்களையும் அவர்மீது சுமத்தப்படவிருக்கும் ஒவ்வொரு அவமானத்தையும் கொடுமையையும் தூதர்கள் குறித்து வைக்கும்படியாக அனுப்பப்பட்டார்கள்.GCt 18.3

    பார்க்க : மத்தேயு 26 : 1-56; மாற்கு 14 : 1-52;
    லூக்கா 22 : 1-46; யோவான் 11; 12 ; 1-11; 18 : 1-12