முகவுரை
“வேதத்தையும் சாட்சி ஆகமத்தையும் கவனிக்க வேண்டும்; இந்த வார்த்தையின்படியே சொல்லாவிட்டால், அவர்களுக்கு விடியற்காலத்து வெளிச்சமில்லை.” ஏசாயா 8:20.GCt iv.1
21ஆம் நூற்றாண்டின் துவக்கத்திலே, ஒவ்வொரு நபரும் ஒரு தீர்க்கதரிசியாக மாறிவிட்டது போல் தெரிகிறது. இன்டர்நெட்டில் கூட தீர்க்கதரிசன தளங்கள் இருக்கின்றன. ஆகிலும், சிலர் கூறும் காரியங்கள் விசித்திரமாக உள்ளன. அவர்கள் யாவரும் தேவ வார்த்தையை பெற்றவர்கள் என்று நாம் எவ்விதமாக அறிந்துக்கொள்ளலாம்? வேதத்தோடும் சாட்சி ஆகமத்தோடும் அவர்கள் சொல்வதை ஒப்பிட்டு பார்த்தால் மட்டுமே அது முடியும். நிச்சயமாகவே, கடந்த காலங்களில் தமது பிள்ளைகளுக்கு தேவன் அருளிய வார்த்தைகளை, அவரே முரணாகப் பேசமாட்டாரே!GCt iv.2
இறுதி காலங்களில் வாழ்பவர்களுக்கு இஃது ஒரு பெரிய சோதனையாக திகழும் என்பதால், இயேசுவே நேரிடையாக - “அநேகங் கள்ளத்தீர்க்கதரசிகளும் எழும்பி, அநேகரை வஞ்சிப்பார்கள். மத்தேயு 24:11.” என தீர்க்கதரிசனம் உரைத்தார். இதற்கு வலுவேலும் விதமாக யோவான், “பிரியமானவர்களே, உலகத்தில் அநேகங் கள்ளதீர்க்கதரிசிகள் தோன்றியிருப்பதினால், நீங்கள் எல்லா ஆவிகளையும் நம்பாமல், அந்த ஆவிகள் தேவனால் உண்டானவைகளோ என்று சோசித்தறியுங்கள். ஐ யோவான் 4:1” என்று வலியுறுத்தியுள்ளார். எலன் உவைட் இதற்கு விலக்கல்ல. இப்புத்தகத்தை எடுத்து பரிசுத்த வேதகாமத்தோடு ஒப்பிட்டுப் பாருங்கள். கிருபை நிறைந்த பரம பிதாவிடம் மன்றாடுங்கள். அவர் தமது ஆவியானவரை அனுப்பி, நம்மை சத்தியத்திற்குள்ளாக நடத்துவார்.GCt iv.3
20-ஆம் நுhற்றாண்டில் கடைசி பகுதியிலே , ‘கிறிஸ்தவர்கள்’ என்று தாய்களை அழைத்துகொண்டவர்கள் தேவனிடத்திலிருந்து தரிசனங்களை பெற்றுக்கொண்டோம் எனக்கூறிய யாவரையும் வன்மையாக எதிர்த்தார்கள் தங்களுடைய கூற்றை நிரூபித்துக்காட்டுவதற்காக வெளிப்படுத்துதல் 22: 18-19 ஐ உபயோகித்தார்கள்.GCt iv.4
ஆனால், யோவன் மரித்த பின்பு வேலு யாதொரு தீர்க்கதரசியும் எழும்ப மாட்டார்கள் என்றா இந்த வேதவாசகம் கூறுகிறது? அப்படியென்றால் ,“கள்ளதீர்க்கதரசிகளைக் குறித்து எச்சரிக்கையாயிருங்கள்” என்று இயேசு ஏன் கூறவேண்டும்? “சகல ஆவிகளையும் சோசிதித்தறியுங்கள்” என யோவான் மூலமாக பரிசுத்த ஆவியானவர் ஏன் உரைக்க வேண்டும்? யேவோனுக்கு பின்பு வங்த தேவதீர்க்கதரசிகள் யாவரையும் நாம் புறக்கணித்துவிட்டால், இக்குழப்பத்திலிருந்து தப்பித்துவிடலாமல்லவா? ஆனால் தேவத்திட்டம் அதுவல்ல. அவசியமான காலத்தில், தமது சித்தத்திற்கு ஏற்ப, புதிய சத்தியங்களை தேவன் விளம்புவார். இருதயங்களில் உண்மையுள்ளவர்கள் அதனை சோதித்தறிந்து, மனமகிழ்ச்சியுடன் அதனை ஏற்று, பின்பற்றுவார்கள். ஆம், சாத்தானும் கிரியை செய்ய அனுமதிக்கப்படுவான். இல்லாவிடில் தேவன் நியாயமானவரல்ல என்று பிசாசானவன் குற்றம் சாட்டுவானே!GCt iv.5
ஐ கொரிந்தியர் 12 மூலமாக பரிசுத்த ஆவியானவர் அநேக முக்கிய கேள்விகளை கேட்கிறார். அனைவரும் அப்போஸ்தலரா? அனைவரும் தீர்க்கதரசிகளா? யாவரும் அற்புதங்களை செய்யக்கூடிய ஊழியர்க்காரர்களா?GCt iv.6
சுகப்படுத்தும் வல்லமையை யாவரும் பெற்றவர்களா? இக்கேள்விகளை கேட்டபின், பவுல் மூலமாக ஆவியானவர், “இவைகளைக்காட்டிலும் மேன்மையான ஒன்றை ” நான் காட்டுவேன் என்று காறி அன்பில்லாவிட்டால் இவை அனைத்தும் உபயோகமற்றவை என தெளிவுபடுத்தினார். இன்னும் சற்று கூடுதலாகவே ஐ கொரிந்தியர் 14:1ல் “அன்பை நாடுங்கள். .... விஷேசமாய்த் தீர்க்கதரசின வரத்தை விரும்புங்கள்” என்று கூறினார் . மேலும், “ஆவியை அவித்துபோடாதிருங்கள். தீர்க்கதரிசனங்களை அற்பமாயெண்ணாதிருங்கள். எல்லாவற்றையும் சோதித்துப் பார்த்து, நலமானதைப் பிடித்துக்கொள்ளுங்கள். ஐ தெசலோனிக்கேயர் 15:19-21” என்று கூறுகிறார்.GCt v.1
எலன் உவைட்டுக்கு ‘மகா சர்சைசை’ யின் தரிசனம் 1858 ஆம் ஆண்டின் இளவேனிற் காலத்தில், லோவட்ஸ் தோப்பு, ஓஹாயோ என்கிற அமெரிக்கா மாகானத்தில் கொடுக்கப்பட்டது. இந்த தரிசனத்தின் பெரும்பான்மையான பகுதியை சுமார் 11 ஆண்டுகளுக்கு முன்பாகவே அவர்கள் பெற்றிருந்த போதிலும், இப்பொழுது அவைகளை எழுதும்படி ஏவப்பட்டார்கள். இந்த முயற்சியை சீரழிக்கும்படி சாத்தான் கடுமையாக முயற்சித்தான். சில பகுதிகள் (குறிப்பாக 30 ஆம் அத்தியாயம் ) 1847 ” சிறிய மந்தை” 1851 ” கிறிஸ்துவ அனுபவங்களும் நோக்கங்களும் ” , 1854 பிற்சேர்க்கை போன்ற சிறிய பிரசுரங்களாக வெளியிடப்பட்டன. இவை அனைத்தும் பரிசுத்த ஆவியானவரின் ஏவுதலினாலே முதலாவதாக 1858 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. பரிசுத்த வேதாகமத்தை அழித்துவிட வேண்டும் என்று கடுமையாக முயற்சித்த சாத்தான், இப்புத்தகத்தையும் அழித்துவிடும் படியாகவும், கெடுத்து விடும்படியாகவும் பல முயற்சிகளை மேற்கொண்டான். ஒரு தேவ பிள்ளைக்கு வேதகாமத்திற்கு அடுத்தபடியாக இப்புத்தகம் முக்கியம் வகிக்கிறது. தேவன் தமது வார்த்தையை காத்துக் கொண்டார்.GCt v.2
“யுத்தங்கள், குற்றங்கள், காமவிகாரங்கள், மதநம்பிகைகள் ஏன் இவையெல்லாவற்றிலும் எண்ணிலடங்கா பிரச்சனைகள்?”, எனக்கேட்போர் அநேகர். கிறிஸ்துவிற்கும் சாத்தானுக்கும் ஆதிமுதல் ஏற்பட்டிருக்கும் மகா சர்ச்சையை புரிந்துகொள்வதால், இக்கேள்விகளுக்குண்டான விடைகளின் அடிப்படை அமைந்திருக்கிறது.GCt v.3
பரிசுத்த வேதகாமத்தை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டிருக்கும் இப்புத்தகத்தை படிக்கும் அன்பான வாசகர்களே, தேவன் தாமே உங்களை ஆசீர்வதித்து நடத்துவாராக!GCt v.4
குறிப்பு : ஜீவிய சரித்திரத்தின் சுருக்கம், முகவுரை, வார்த்தை தொகுப்பு ஆகியவை எலன் உவைட்டால் எழுதப்பட்டவை அல்ல; மூல நுhலிலிருந்து எடுக்கப்பட்டவையும் அல்ல.GCt v.5