Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

சபைகளுக்கு ஆலோசனை

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    சிறுவர் பயபக்தியாயிருக்க வேண்டும்

    பெற்றோரே, உங்கள் குழந்தைகளின் மனதில் கிறிஸ்து மார்க்கத்தின் லக்ஷியங்களை உயர்த்துங்கள். அவர்கள் தங்கள் அனுபவத்தில் கிறிஸ்துவை இணைக்கும்படி அவர்களுக்கு உதவி செய்யுங்கள். தேவனுடைய வீட்டைப்பற்றி மிகுந்த பயபக்தியுடைவார்களாய் இருக்கவும், அதினுள் பிரவேசிக்கும்போது இருதயம் மிருதுவாக்கப்பட்டும், கீழ்ப்படுத்தப்பட்டும் “தேவன் இங்கே இருக்கிறார்; இது அவருடைய வீடு. என் இருதயத்தில் பரிசுத்த எண்ணமும், மகா புனிதமான நோக்கமும் இருக்க வேண்டும். என்னில் கர்வம், பொறாமை, காய்மகாரம், தீமையைப் பிணைத்தல், பகை, வஞ்சகம் காணப்படக்கூடாது. ஏனெனில், நான் தெய்வ சமுகத்தில் பிரவேசிக்கிறேன்; இங்கே தேவன் தமது ஜனத்தைச் சந்தித்து ஆசீர்வதிக்கிறார்; நித்தியமாயிருக்கிற உன்னதமானவரும், பரிசுத்தமானவரும் என் இருதயத்தையும், செய்கைகளையும், அந்தரங்க எண்ணங்களையும் அறிடிகிறார்” என்று அவர்கள் உணரும்படிச் செய்யுங்கள்.CCh 218.2

    மென்மையான, உணர்வுள்ள இளைஞர் மனதில் கடவுளின் ஊழியத்தைப்பற்றியும், ஊழியக்காரரைப்பற்றியும் உள்ள மதிப்பு, அவர்களின் பெற்றோர் ஊழியக்காரருக்குக் கொடுக்கும் மதிப்பைச் சார்ந்திருக்கும். அநேக குடும்பத் தலைவர்கள் தங்கள் வீடுகிளல் ஆராதனையைக் குறித்து, சிலவற்றை அங்கீகரித்தும், பலவற்றைக் கண்டித்தும் பேசுகின்றனர். இவ்விதமாகத் தேவன் மனிதருக்கு அருளிய தூது குறை பேசப்பட்டுகிறது. இவ்வித கவலைத்தாழ்ச்சியான, பயபக்தியற்ற கண்டனங்கள் இளைஞரின் மனதில் எவ்விதம் பதிகின்றது என்பதைப் பரலோகப் புத்தகங்கள் மட்டும் வெளிப்படுத்தும். பெற்றோர் எண்ணுவதை விட விரைவில் பிள்ளைகள் இவைகளைக் காணவும் விளங்கிக்கொள்ளவும் கூடி யவர்களாக இருக்கின்றனர். காலம் ஒருகாலும் மாற்றக் கூடாத அளவுக்கு அவர்களது சன் மார்க்க உணர்ச்சிகள் தப்பிதமான கோணத்தில் திருப்பப்படுகிறது. தேவனுடைய உரிமைகளுக்குப் பதிலளிப்பதற்கு பிள்ளைகளின் நல்லுணர்ச்சியைத் தட்டி எழுப்புவதில் உள்ள சிரமம் கண்டு, பெற்றோர் தங்கள் பிள்ளைகளின் இருதயக் கடினத்திற்காகப் புலம்புகின்றனர். 5 T.493-497.CCh 219.1

    தெய்வ நாமத்திற்குரிய பயபக்தி காண்பிக்கப்பட வேண்டும். அவருடைய நாமத்தை அற்பமாகவும், எண்ணமற்ற தாகவும் வழங்கக்கூடாது. “அவருடைய நாமம் பரிசுத்தமும் பயங்கரமுமானது” (சங். 111:9). அவர் நாமத்தைச் சொல்லும்போது, பரலோக தூதர்கள் தங்கள் முகத்தைச் மூடிக்கொள்ளுகிறார்கள். பாவத்தில் விழுந்தவர்களும், பாவமுடையவர்களுமாகிய நாம் எவ்வித பயபக்தியுடன் நமது உதடுகளால் அதை உச்சரிக்க வேண்டும்!CCh 220.1

    தேவனுடைய வசனத்தை நாம் கனம்பண்ண வேண்டும். வேத புஸ்தசத்தை நாம் சாதாரண பொருளாகவும் கவலைத் தாழ்ச்சியாகவும் கையாடாமல், அதை நன்கு மதிக்கவேண்டும்; வேத வசனத்தைப் பரியாசமாகவும், வேடிக்கைப் பேச்சுக்கு எடுத்துக்காட்டாகவும் உபயோகிக்கக்கூடாது. “தேவனுடைய வசனமெல்லாம் புடமிடப்பட்டவைகள்;” “ஏழுதரம் உருக்கி புடமிடப்பட்ட... சுத்த சொற்கள்.”(நீதி.30:5; சங்.12:6).CCh 220.2

    எல்லாவற்றிற்கும் மேலாக, மெய்யான பக்தி கீழ்ப்படிதலின் மூலமாக வெளிப்படுகிறது என்று பிள்ளைகளுக்குப் போதியுங்கள். அவசியமல்லாத எதையும் செய்வதற்குக் கர்த்தர் கட்டளையிடவில்லை. அவருக்குப் பிரியமான பயபக்தியைக் கீழ்ப்படிதலாலன்றி மற்றபடிக் காட்டமுடியாது.CCh 220.3

    தேவனுடைய பிரதிநிதிகள் அனைவரையும் கனம்பண்ண வேண்டும். கடவுளுக்குப் பதிலாக பேசவும், காரியங்களை நடப்பிக்கவும் இருக்கிற பெற்றோர், ஆசிரியர், போதகர்கள் அனைவருக்கும் இக்கனம் உண்டு. அவர்கள் கனம்பண்ணப்படும்போது, கடவுள் கனம்பண்ணப்படுகிறார். Ed. 236, 243, 244.CCh 220.4

    வயோதிபரும், வாலிபரும் கடவுகளின் விசேஷித்த பிரசன்னம் காணப்பட்ட இடங்கள் எவ்விதமாக மதிக்கப்பட வேண் டும் என்று காண்பிக்கிற வசனங்களை சிந்தித்துப்பார்ப்பது நன்மை தரும். “உன் கால்களில் இருக்கிற பாதரட்சையைக் கழற்றிப்போடு; நீ நிற்கிற இடம் பரிசுத்த பூமி” (யாத்.3:5.) என்று ஜுவாலித்து எரிந்து முட்செடியண்டையில் கர்த்தர் மோசேக்குக் கட்டளையிட்டார். “மெய்யாகவே கர்த்தர் இந்த ஸ்தலத்தில் இருக்கிறார், இதை நான் அறியாதிருந்தேன்... இது தேவனுடைய வீடேயல்லாமல் வேறல்ல, இது வானத்தின் வாசல்” (ஆதி.28:16,17) என்று தூதர்களின் தரிசனத்தை யாக்கோபு கண்டபோது கூறி ஆச்சரியப்பட்டான். G. W. 178,179.CCh 220.5

    போதனையினுலும், சாதனையினாலும், பரிசுத்த காரியங்களைப் பயபக்தியாய்ப் பேசுகிறீர்கள் என்றும், உங்கள் விசு வாசத்தை கனம்பண்ணுகிறீர்கள் என்றும் காட்டுங்கள். வேத வாக்கியங்களை எடுத்து பேசும்போது, அதற்கு மதிப்பளியாமலும், வேடிக்கையாகவும் ஒரு சிறு வார்த்தையாகிலும் பேச்ககூடாது. வேதத்தை உங்கள் கைகளிலேந்தும்போது, பரிசுத்த பூமியில் இருபபதாக நினைவு கொள்ளுங்கள். உங்கள் கண்கள் திறக்கப்பட்டால் உங்களைச் சூழத் தேவ தூதர்களைப் பார்ப்பீர்கள். நீங்கள் உறவாடுகிற அனைவரும் உங்களைச் சூழ சுத்தமான பரிசுத்த ஆகாயம் இருக்கிறது என்று உணரத்தக்கதாக உங்கள் நடத்தை இருக்கட்டும். வீணான வார்த்தையும், வேடிககைச் சிரிப்பும் ஒரு ஆத்துமாவைத் தப்பிதமான வழியில் திருப்பி விடலாம். கடவுளுடன் இடையறாத தொடர்வு இல்லாமற் போவதினால் ஏற்படும் விளைவுகள் பயங்கரமானவை. F.E. 194,195.CCh 221.1