Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

சபைகளுக்கு ஆலோசனை

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    சபை உத்தியோகஸ்தரைத் தெரிந்தெடுத்தலும் அபிஷேகமும்

    அப்போஸ்தலனாகிய பவுல் தீத்துவுக்கு: நீ குறைவாயிருக்கிறவைகளை ஒழுங்கு படுத்தும்படிக்கும், நான் உனக்குக் கட்டளையிட்டபடியே, பட்டணங்கள் தோறும் மூப்பரை ஏற்படுத்தும்படிக்கும்.....உன்னை ஏற்படுத்தினேன்: குற்றம் சாட்டப்படாதவனும், ஒரே மனைவியையுடைய புருஷனும், துன்மார்க்கர் என்றும் அடங்காதவர்களென்றும் பேரெடுக்காத விசுவாசமுள்ள பிள்ளைகளை உடையவனுமாகிய ஒருவனிருந்தால் அவனையே ஏற்படுத்தலாம்....கண்காணியானவன் குற்றம் சாட்டப்படாதவனும்... உண்மையான வசனத்தை நன்றாய்ப் பற்றிக் கொள்ளுகிறவ்னுமாயிருக்க வேண்டும் என்று எழுதுகிறார். (தீத்து 1:5-7.) ஒருவன்மேலும் சீக்கிரமாய்க் கைகளை வையாதே (1 தீமோ. 5:22).CCh 208.3

    நமது சபைகள் சிலவற்றில் சரியான காலம் வருமுன் சபை ஸ்தாபனம் செய்து, மூப்பர்களை அபிஷேகம் பண்ணுகின்றேம். வேத சட்டம் அவமதிக்கப்பட்டதின் பயனாக, கொடிய உபத்திரவம் சபையின் மேல் கொண்டுவரப்படுகிறது. எந்த விதத்திலும் பொறுப்பான வேலையைச் செய்யத்தகுதியற்றவர்களைத் தலைவர்களாகத் தெரிந்தெடுத்து அபிஷேகம் பண்ணுவதற்கு அவசரப் படக்கூடாது. அவர்கள் எவ்வகை ஊழியத்திலும் தேவனுக்குத் தொண்டு செய்வதற்கு முன் மனந்திரும்பி, சுத்திகரிக்கப்பட்டு, மேன்மையடைந்து, உயர்வடைவது அவசியம். 5T. 617,618.CCh 209.1