Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

சபைகளுக்கு ஆலோசனை

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    வாசிப்போருக்கு தெய்வீக வெளிச்சம் வாக்களிக்கப்பட்டிருக்கிறது

    தேவனுடைய வசனம், அதன் தெய்வீக ஆக்கியோன் குணத்திற்கு ஒப்பாக இருந்து, அநித்தியமானவர்கள் ஒருபோதும் சரிவர அறிந்துகொள்ளக்கூடாத இரகசியங்களை வெளிப்படுத்துகிறதாயிருக்கிறது. ஒருவரும் சேரக்கூடாத ஒளியிம் வாசம் பண்ணுகிற (1 தீமோ.6:16) சிருஷ்டிகரிடம் நமது மனதை அது திருப்புகிறது. மானிட சரித்திரத்தின் சகல யுகங்களை ஒட்டிய அவரது நிகித்தங்கள் நித்தியமாயுள்ள முடிவிலா ஆயுள் சக்கரத்தில் நிறைவுறும் என்பதை அது நமக்குத் தெரியக் காட்டுகின்றது-----மேலும் அது, மனிதனுடைய இறுதி நிலை, தேவனுடைய ராஜரீகம் போன்ற எல்லையில்லா ஆழமும் முக்கியமுமான பொருள்களின்பேரில் நமது கவனத்தைத் திருப்புகிறது.CCh 293.2

    உலகில் பாவம் பிரவேசித்தல், கிறிஸ்துவின் அவதாரம், மறு பிறப்பு, உயிர்த்தெழுதல் மற்று முதலான பல விஷயங்கள் வேதாகமத்தில் கொடுக்கப்பட்டிருக்கின்றன. அவைகள் மனிதரால் முழுவதுமாக விளங்கிக்கொள்ளப்படாததும் விவரிக்கப்ப்டாததுமான மகா ஆழமான இரகசியங்கள். அவைகளின் தெய்வீக குணங்களை அறிந்துகொள்ள வேத வாக்கியங்களில் போதுமான அத்தாட்சிகளை தேவன் கொடுத்திருக்கிறார். அவரது தெய்வீக நடத்துதல்களின் இரகசியங்களை நாம் அறிந்துகொள்ளக்கூடாததினாலே, அவரது வார்த்தையை சந்தேகிக்ககூடாது.CCh 294.1

    சிருஷ்டிக்கப்பட்டவர்கள் தேவனையும் அவர் கிரியைகளையும் பற்றிய பூரண அறிவைப் பெறக்கூடுமானால், அதைப் பெற்றப்பின் அவர்கள் மேற்கொண்டு கண்டு பிடிப்பதற்கான சத்தியமோ, அறிவு வளர்ச்சியோ, மனதுக்கும் இருதயத்திற்குமான அபிவிருத்தியோ இராது. மனிதன் அறிவு வளர்ச்சியின் உச்சத்தை கிட்டிவிட்டப்பின் முன்னேற்றம் இராது; கடவுள் மேலானவராக இருக்க முடியாது. அது அவ்விதம் இல்லாமைக்காகக் கடவுளுக்கு நன்றி செலுத்தக்கடவோம். கடவுள் அளவிடப்படாதவர், அவருக்குள் எல்லா ஞானம், அறிவு இவைகளின் ஐசுவரியம் இருக்கின்றன. சதா காலங்களிலும் மனிதர் சதா ஆராய்ச்சி செய்கிறவர்களாகவும், சதா கற்கிறவர்களாகவும், இருந்த போதிலும் அவருடைய ஞானம், நன்மை, வல்லமை இவைகள் ஒருபோதும் வற்றாத பொக்கிஷங்களாக இருக்கின்றன்.CCh 294.2

    பரிசுத்த ஆவியின் நடத்துதல் இல்லாமல் நாம் சதா வேத வாக்கியங்களைப் புரட்டி அவைகளைத் தப்பாய் அர்த்தப்படுத்துகிறவர்களாக இருப்போம். வேதத்தைப் பயனற்ற வகையில் அதிகமாய் வாசிப்பது, அனேகருக்குத் தீமையை விளைக்கக்கூடியது. தேவனுடைய வசனத்தை பய பக்தி, ஜெபம் இன்றி திறப்பதால், எண்ணங்களும், பாசங்களும் தேவன் பேரில் வைக்கப்பட்டிராவிட்டால், அவை அவரது சித்தத்தோடு இசைந்திராவிட்டால் மனம் சந்தேகத்தால் குழப்பமடையும்; இப்படி வேதத்தைப் படிப்பதில் சந்தேகம் பெலப்படும். சத்துரு எண்ணங்களை ஆட்கொண்டு, தப்பு அர்த்தங்களை மனதில் எழுப்புவான். 5T. 699-705.CCh 294.3