Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

சபைகளுக்கு ஆலோசனை

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First
    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents

    “உங்களுடைய இரட்சிப்பு சமீபமாயிருக்கிறது”

    வாரந்தோறும் நடைபெறும் பயங்கரமான நிகழ்ச்சிகளைக் குறித்து நான் கேள்விப்படும் பொழுது இவற்றிற்கெல்லாம் அர்த்தம் என்னவென்று என்னை நானே வினவிக்கொள்கிறேன். ஒன்றன் பின் ஒன்றாக மிகுந்து பயங்கரமான நாசங்கள் அடுத்தடுத்து நிகழ்கின்றன. பூமியதிர்ச்சிகளையும், கடும் புயல்களையும், நெருப்பினாலும், வெள்ளத்தினாலும் ஏற்படுகின்ற அழிவுகளையும் பெருஞ் சொத்தும், திரளான உயிர்களும் அழிந்த்தையுங் குறித்து எவ்வளவு அதிகமாகக் கேள்விப்படுகின்றோம். இந்த ஆபத்துகள் கட்டுப்பாட்டிற்குட்படாத, ஒழுங்குபடுத்தப்படாத, விளங்கிக்கொள்ள முடியாத சக்திகளின் வெளிப்பாடு என்று நாம் எண்ணுகின்றோம். ஆயினும், கடவுளுடைய நோக்கத்தை இவைகளில் நாம் காண்கின்றோம். ஸ்திரீகளையும் புருஷர்களையும் தங்கள் ஆபத்தை உணருமாறு செய்வதற்கு அவர் கையாளும் ஒரே சாதனம் இது.CCh 751.1

    நாம் விசுவாசிகளான போது, கிறிஸ்துவானவர் வருகை சமீபமாய் இருந்ததைப் பார்க்கிலும் இப்பொழுது அது அதிக சமீபமாய் இருக்கிறது. பெரும் போராட்டம் அதின் முடிவை நெருங்குகிறது. தேவனுடைய நியாயத்தீர்ப்புகள் பூமியின் மேல் வந்திருக்கின்றன. அவை பக்தி வினயத்துடனே “நீங்கள் நினையாத நாழிகையிலே மனுஷகுமாரன் வருவார். ஆதலால், நீங்கள் ஆயத்தமாய் இருங்கள்” என்று கூறி எச்சரிக்கின்றன. மத்தேயு 24 : 44.CCh 752.1

    ஆயினும், இக் காலத்திற்குரிய சத்தியத்தின் மெய்யான பொருளைச் சிறிதேனும் அறிந்துகொள்ளாத அனேகர் நம்முடைய சபைகளிலே இருக்கின்றனர். முடிவு சமீபமென்று தெளிவாக கூறுகின்ற காலங்களின் அடையாளங்களின் நிறைவேற்றத்தை இவர்கள் அசட்டை செய்ய வேண்டாமென்று நான் அவர்களை வேண்டிக்கொள்கிறேன். ஐயோ, தங்களுடைய ஆத்துமாக்களின் இரட்சிப்பைத்தேடாத எத்தனை பேர் கசப்புடனே பின்வருமாறு புலம்புவார்கள்: ” அறுப்புக்காலம் சென்றது, கோடைக்காலமும் முடிந்தது, நாமோ இரட்சிக்கப்படவில்லை.” எரே. 8 : 20.CCh 752.2

    உலக சரித்திரத்தின் முடிவான காலங்களின் நடுவே நாம் வாழ்கின்றோம். தீர்க்கதரிசனங்கள் துரிதமாக நிறைவேறுகின்றன; கிருபையின் மணி நேரங்கள் துரிதமாக கடந்து செல்லுகின்றன. நமக்கு நேரமே இல்லை--ஒரு க்ஷணத்தைக்கூட நாம் இழந்துவிடக் கூடாது. காவல் காத்து நிற்கையிலே தானே நித்திரை செய்கிறவர்களாக நாம் காணப்படக்கூடாது. ஒருவனும் தன்னுடைய இருதயத்திலாவது அல்லது கிரியைகளிலாவது “என் ஆண்டவன் வர நாள் செல்லும்” என்று சொல்லாதிருப்பானாக. கிறிஸ்துவானவரின் துரிதமான வருகையின் தூது வாஞ்சையுடைய எச்சரிப்பின் வசனங்களாக முழங்கட்டும். மனந்திரும்பி, வருங் கோபத்திற்குத் தப்பி ஓடுமாறு ஸ்திரீ புருஷரை நாம் தூண்டுவோமாக. நமக்கு முன்பாக என்ன இருக்கிறதென்று நாம் அறியாதபடியால், அவர்கள் உடனடியாக ஆயத்தம் செய்யுமாறு அவர்களை எழுப்புதலடையச் செய்வோமாக. பயிர் முதிர்ந்திருக்கும் வயல்களிலே போதகரும் சபை அங்கத்தினர்களும் சென்று, அசட்டையாயிருக்கிறவர்களையும், சிரத்தையில்லாதவர்களையும் கர்த்தரைக் கண்டடையத்தக்கச் சமயத்தில் அவரைத் தேடுமாறு கூறுவோமாக. மறக்கப்பட்டுப்போன வேதாகம சத்தியங்களை எங்கெங்கே ஊழியர்கள் கூறியறிவிக்கிறார்களோ அங்கெல்லாம் அவர்கள் அறுவடையைக் காண்பார்கள். சத்தியத்தை ஏற்று தங்கள் வாழ்வை கிறிஸ்துவுக்கென்று ஆத்தும ஆதாயஞ் செய்வதற்காகத் தத்தம் செய்கிறவர்களை அவர்கள் காண்பார்கள்.CCh 752.3

    கர்த்தர் சீக்கிரமாக வருவார். நாம் அவரைச் சமாதானத்துடனே சந்திக்க ஆயத்தப்பட வேண்டும். நம்மைச்சூழ இருப்பவர்களுக்கு வெளிச்சத்தைக் கொடுப்பதற்கு நம்மால் இயனற யாவையும் உறுதியுடனே செய்வதற்கு நாம் தீர்மானிப்போமாக. நாம் துக்கமடையாமல், கர்த்தராகிய இயேசுவை எப்பொழுதும் நமக்கு முன்பாக வைத்து, தெம்புடையவர்களாயிருப்போம். அவர் சீக்கிரம் வருகிறார். அவருடைய பிரசன்னமாகுதலுக்காக நாம் ஆயுத்தமுடனே காத்திருக்க வேண்டும். அவரைப் பார்த்து மீட்படைந்த அவருடையவர்களால் வரவேற்கப்படுவது எத்தனை மகிமையாயிருக்கும். நீண்ட காலமாய் நாம் காத்திருந்தோம், என்ற போதிலும் நம்முடைய நம்பிக்கை மங்கிவிடக் கூடாது. ராஜாவை அவர் மகிமை பொருந்தினவராக நாம் காணக் கூடுமானால், நாம் என்றுமாக ஆசிர்வாதமடைவோம். “வீட்டைக் கிட்டிச் சேர்ந்தோம்” என்று சத்திமிட்டுக் கூறுவதற்கு நான் வாஞ்சிக்கிறேன். கிறிஸ்துவானவர் வல்லமையோடும் மிகுந்த மகிமையோடும் தோன்றி, மீட்கப்பட்ட தம்முடையவர்களைத் தம்முடைய நித்திய வாசஸ்தலத்திற்கு அழைத்துச் செல்லும் வேளையை நெருங்கிவிட்டோம்.CCh 753.1

    முடிவான பெரும் அலுவலை நிறைவேற்றும் பொழுது நாம் எவ்வாறு அதைச் செய்வதென்று அறியக் கூடாத பிரகாரமாக இக்கட்டுகளை நாம் சந்திக்க வேண்டியதாகும். அவ்வாறு நேர்ந்தால், பரத்திலிருந்து மூன்று பெரு ம் வல்லமைகள் அலுவல் புரிகின்றன என்றும். தெய்வ கரம் யாவற்றையும் நடப்பிக்கிறதென்றும் தம்முடைய வாக்குத்தத்தங்களைத் தெய்வம் நிறைவேற்றுவார் என்றும் நினைவில் இருத்துவோமாக. தம்மை நீதியுடனே சேவிக்கும் ஒரு ஜனத்தை அவர் உலகினின்று பிரித்தெடுப்பார். சேவிக்கும் ஒரு ஜனத்தை அவர் உலகினின்று பிரித்தெடுப்பார். 8T 252-254.CCh 754.1

    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents