Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

சபைகளுக்கு ஆலோசனை

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    சகவாசம், சரியான பழக்க வழக்கங்கள்

    இரு பாலாரும் ஒருவரோடொருவர் பழகும்படி விடப்படும் போது, தங்க்ள் சகவாசத்தால், ஆசீர்வாதம் அல்லது சாபம் விளைவிப்பார்கள். தங்கள் நடத்தைப் போக்கு, அறிவு ஆகியவைகளை முன்னேறச் செய்வதால், அவர்கள் பக்தி விருத்தி பெருகச் செய்து, ஆசீர்வதித்துப் பிறரைப் பலப்படுத்தலாம்; அல்லது கவலையற்று, உண்மைக் குறைவுள்ளவர்களாக நடப்பதால், பிறரைக் கெடுக்கும் செல்வாக்கை செலுத்தலாம்.CCh 448.1

    தங்கள் நம்பிக்கையை அவர் பேரில் வைக்கும் யாவருக்கும் இயேசு உதவுகிறார். கிறிஸ்துவுடன் இணைக்கப்பட்டவர்களுடைய மகிழ்ச்சிக்கு அளவில்லை. தங்களை இரட்சகர் எவ்வழி நடத்துகிறாரோ அவ் வழி அவர்கள் நடந்து, சுயத்தையும் ஆசை இச்சைகளையும் அவர் நிமித்தம் சிலுவையில் அறைகிறார்கள். இவர்கள் தங்கள் நம்பிக்கைக் கிறிஸ்துவில் வைத்திருக்கிறார்கள். ஆதலால் அவர்களுடைய திட அஸ்திபாரத்தை அசைக்க உலக புயல் காற்றுக்களுக்கும் பலமில்லை.CCh 448.2

    வாலிபரே, கன்னிகைகளே, நீங்கள் நம்பிக்கை, நேர்மை, உண்மையான உபயோகமுள்ளவர்களாய் இருப்பீர்களோ இல்லையோ என்பது உங்களைப் பொறுத்ததாகும். எல்லாச் சூழ்நிலைகளிலும் நியாயத்திற்காக நிற்போமென நீங்கள் உறுதியோடு ஆயத்தமாயிருக்க வேண்டும். நமது கெட்ட பழக்க வழக்கங்களை நாம் நம்முடன் பரலோகத்திற்குக் கொண்டு போக முடியாது. நாம் அவைகளை வென்றாலன்றி, நம்மை நீதி வாசம் பண்ணும் அந்த இடத்திற்குப் போவதை அவை தடுக்கும். கெட்ட பழக்கங்களை ஒழிக்க முற்படும் போது, துர்ப் பழக்கங்கள் பலமாய் நம்மை எதிர்க்கும்; ஆனால் போரைத் தொடர்ந்து, ஊக்கமாய் நடத்தினால் அவைகளை மேற்கொள்ளலாம்.CCh 448.3

    நற் பழக்கங்களை உருவாக்க விரும்பினால், சுத்த சன்மார்க்கப் பிரியரையும், மார்க்க செல்வாக்குடையவர்களையும் நாம் சேர்ந்து பழக வேண்டும். 4T. 655.CCh 448.4

    இளைஞர்கள் சுத்தமும், நிதானமும் நற்குணமுமுள்ளவர்களோடு சகவாசஞ் செய்யும்படி ஏவப்படக் கூடுமானால், அதன் பலன் மிக ஆரோக்கியமாகயிருக்கும். கர்த்தருக்குப் பயப்படுகிறவர்களை நண்பர்களாக்குவார்களாயின் அதன் செல்வாக்கு சத்தியம், கடமை, பரிசுத்தம் ஆகியவைகளுக்கு வழி நடத்தும். மெய்யான கிறிஸ்தவ ஜீவியம் நன்மைக் கேதுவான சக்தி. ஆனால், சன்மார்க்கக் கேடு பாடுடையோரோடும், கெட்ட பழக்க வழக்கங்களையும் இலட்சியங்களையுமுடையோரோடும் கூடுகிற ஆண்கள், பெண்கள் சீக்கிரம் அதே வழி செல்வர். சுபாவ இருதயப் போக்கு கீழ் நோக்குடையது. ஐயவாதியுடன் உறவாடுகிறவன் ஐயவாதியாவான்; துஷ்டனோடு சகவாசஞ் செய்யத் தெரிந்து கொள்பவன் துஷ்டன் ஆவான். பாவிகளுடைய வழியில் நிற்கவும், பரியாசக்காரருடைய ஆசனங்களில் உட்காரவும், வழி நடத்தும் முதற்காரியம் துன்மார்க்கருடைய ஆலோசனைகளைக் கேட்பதாகும்.CCh 449.1

    சரியான குணங்கட்ட விரும்பும் யாவரும் ஆழ்ந்து சிந்திக்கும் மனமுடையோரையும், மார்க்கப்பற்றுடையோரையும் நண்பர்களாகத் தெரிந்து கொள்வார்களாக. கணக்குப் பார்த்து நித்தியத்திற்கென தங்களுக்குக் கட்ட ஆசிப்போர் தங்கள் கட்டடங்களில் நல்ல பொருட்களை வைத்துக் கட்டுவார்கள். கேடுபாடான மரங்களோடும், குறைபாடுள்ள குணத்தோடும் திருப்தியடைந்து விட்டால், கட்டடம் நாசமாகும். எப்படிக் கட்டுகிறார்களென யாவரும் கவனம் செலுத்துவார்களாக. சோதனைச் சூறாவளி பலமாய் மோதும்; கட்டடம் உறுதியாகவும் பலமாகவும் கட்டப்படாவிடில் பரீட்சைக்கு நிலைக்காது.CCh 449.2

    பொன்னை பார்க்கிலும், நற்கீர்த்தியே விலையேறப்பெற்றது. கீழ்த்தர மனசும் ஒழுக்கக் குறைவுமுடையோருடன் கூடுவது பொதுவாக இளைஞருக்குப் பிரியம். தன்னிஷ்டமாகப் பழகும் கீழ்த்தர நிலையுள்ள சிந்தை, உள்ளக் கிளர்ச்சி, நடத்தையோரிடமிருந்து என்ன மெய்யின்பத்தை ஒரு வாலிபன் பெறக் கூடும்? சிலர் இழிவான ஆசையும், கேவலப் பழக்க வழக்கங்களும் உடையோராயிருக்கும் போது, அப்படிப் பட்டவர்களை நட்புகொள்பவர்கள் அதே முன்மாதிரியைப் பின்பற்றுவார்கள். 4T. 587, 588.CCh 449.3

    சில்லறை சேஷ்டைகளுக்கும், சிற்றின்ப வேட்கைகளுக்கும் முதல் அடி எடுத்து வைக்கும் போது, தவறு செய்யுமுன் எப்படிச் சரியாக நடந்தாயோ, அப்படியே விரும்பிய போது இலகுவாகத் உன் போக்கை மாற்றிக்கொள்ளலாமென நினைப்பதில் இருக்கும் மெய் ஆபத்தை நீ உணருவதில்லை. ஆனால் இது தவறு. கெட்ட தோழர்களைத் தெரிந்து கொண்ட அனேகர் தாங்கள் ஆழ்ந்து போவோம் என்று நினையாத அளவில் அவ்வளவு தூரம் கீழ்ப்படியாமையிலும், ஆராதூரித்தனத்திலும், துர்நடத்தையிலும் அமுங்கிப் போயிருக்கிறார்கள். C. T. 224.CCh 450.1

    இங்கு நம் சந்தோஷத்திற்கான யாவையும் விட்டு விட வேண்டுமெனக் கடவுள் எதிர் நோக்குகிறாரென எண்ணாதே.CCh 450.2

    நம் நன்மைகளையும், சந்தோஷத்தையும் காக்காத யாவையும் விட்டுவிடும்படியே அவர் விரும்புகிறார். A. H. 502.CCh 450.3