Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

சபைகளுக்கு ஆலோசனை

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    இருவர் வாழ்க்கையும் இரண்டறக்கலத்தல்

    கஷ்டங்கள், மலைவுகள், மனத்தளர்ச்சிகள் உண்டான போதிலும், கணவனோ, மனைவியோ, தங்கள் விவாக ஐக்கியம் தவறு என்றாவது, ஏமாற்றமுள்ளது என்றாவது நினைக்கக் கூடாது. ஒருவருக்கொருவர் செய்யக்கூடியதெல்லாம் செய்துகொண்டு, ஆதி அன்பை விடாதிருங்கள். வாழ்க்கைப் போராட்டத்தில் ஒருவரை ஒருவர் ஊக்குங்கள். பிறர் சந்தோஷத்தைப் பெருக்க வழி தேடுங்கள். பரஸ்பர அன்பும் பரஸ்பர சகிப்பும் காணப்படுவதாக. அப்பொழுது திருமணம் அன்பின் முடிவாய் இராமல், அன்பின் ஆதித் தொடக்கமாய் இருக்கும். மெய் நட்பின் அனலும், இருதயத்துடன் இருதயத்தைப் பிணைக்கும் அன்பும், பரலோக இன்பத்தின் முன் சுவை ஆகும்.CCh 384.1

    அனைவரும் பொறுமையை அப்பியாசிப்பதினால் பொறுமையைப் பண்படுத்த வேண்டும். பட்சமாகவும் பொறுமையாகவும் இருப்பதினால், உள்ளத்தில் மெய்யன்பை அனலுடன் பாதுகாத்தல் கூடும்; ஆனால் கடவுள் அங்கீகரிக்கும் நற் குணங்கள் வளர்ச்சி அடையும்.CCh 384.2

    ஏதாவது ஒரு காரியத்தில் வேறுபாடு தோன்றுகின்ற போது, சாத்தான் அதைக் தனக்கு அனுகூலமாக்கிக் கொள்ளத் தயாராய் இருக்கின்றான். கணவனுக்கும் மனைவிக்கும் மரபு வழியே வந்துள்ள குணங்களின் தனிப் பண்புகளிலுள்ள விரும்பத்தகாதவைகளைக் கிளப்பி விட்டு, கடவுளுக்கு முன்பாகச் செய்து கொண்ட பயபக்தியான உடன்படிக்கை மீது தங்கள் நலன்களை இணைத்து வைத்திருக்கின்றவர்களைப் பிரித்து விட முயற்சிக்கிறான். விவாக நிபந்தனையில் மனைவி தன் கணவனை நேசிக்கவும் அவனுக்குக் கீழ்ப்படிந்து நடக்கவும் உடன்படிக்கை செய்து, கணவன் தன் மனைவியை நேசிக்கவும், ஆதரிக்கவும் வாக்களித்து, இருவரும் ஒருவராய் இருக்க ஒப்புக்கொண்டிருக்கின்றார்கள். கடவுள் கட்டளைக்குக் கீழ்ப்படிந்து நடந்தால், கலகப் பிசாசு குடும்பத்தை விட்டு, விலக்கப்படும்; இருவர் விருப்பங்களிலும் பிளவு ஏற்படாது; அவர்களுடைய நேச பாசத்தில் விகற்பம் ஏற்படாது.CCh 384.3

    ஆத்துமாக்களை இரட்சிக்கும் வேலையில் இருவர் தங்கள் விருப்பத்தையும், அனுதாபத்தையும், அன்பையும், உழைப்பையும் ஒன்றாக்கும்படி தெய்வ சமுகத்தில் வாக்குக் கொடுத்து வாழ்க்கை ஆரம்பித்த சமயம் அவர்களின் வாழ்க்கை சரித்திரக் கட்டத்தில் மிக முக்கியமாகும். திருமண உறவில் இருவர் வாழ்க்கையையும் இரண்டறக் கலந்து வைக்க மிகவும் முக்கிய நடபடி எடுத்துக்கொள்ளுகின்றார்கள். கணவனும் மனைவியும் கடவுள் திருப்பணியை நிறைவாகவும் தூய்மையாகவும் முன்னேற்றமாய் நடத்துவதற்குத் தங்களை அந்த முயற்சியில் பிணைத்துக்கொள்வது தெய்வ சித்தத்திற்கு இசைந்த செயலேயாம். அவர்கள் அது செய்தல் கூடும். CCh 385.1

    கணவனும் மனைவியும் இயேசு கிறிஸ்துவின் கீழ், அவருடைய கட்டுப்பாட்டுடனும், வழி நடத்தும் அவருடைய ஆவியுடனும், பரிசுத்த ஐக்கிய பந்தத்தில் தங்களைப் பிணைத்துக் கொள்வது ஆண்டவர் நியமித்துள்ள சித்தமாய் இருக்கின்றபடியால் இந்த ஐக்கியம் நிலை பெற்றிருக்கின்ற இல்லத்தில் கடவுள் ஆசீர்வாதம் வானத்தில் தோன்றுகின்ற சூரிய ஒளி போல் விளங்கும்.CCh 385.2

    பரலோக வீட்டிற்கு உகந்த மாதிரியான வீடு உலகில் மகா இன்பம் நிறைந்த இடமாக இருக்க வேண்டுமென்று கடவுள் விரும்புகின்றார். கணவனும் மனைவியும் இல்லத்தில் திருமணத்தின் பொறுப்புகளைத் தாங்கி, இயேசு கிறிஸ்துவுடனே தங்கள் நலன்களைப் பிணைத்து, அவருடைய மார்பிலும் அவருடைய வாக்குகளிலும் சார்ந்து, தேவ தூதர்கள் பாராட்டத்தக்க அளவில் புருஷனும் மனைவியும் இந்த இணைப்பின் சந்தோஷத்தைப் பெறலாம். A.H. 101-107.CCh 385.3