Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

சபைகளுக்கு ஆலோசனை

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    மருந்துகளின் உபயோகம்

    நஞ்சு கலந்துள்ள மருந்துகளைத் தாராளமாக உபயோகிக்கும் பழக்கம் பெருவாரியாக நோய்கள் ஏற்படவும், நோயைப் பார்க்கிலும் அதிகமான தீங்கு விளையவும் அஸ்திபாரமிடுகின்றது. நோயினால் பாதிக்கப்படும் பொழுது நோயின் காரணத்தை ஆராய்ந்து அறிவதர்கு அனேகர் சிரமம் எடுத்துக்கொள்ளமாட்டார்கள். வேதனையும், அசெளகரியமும் நீங்க வேண்டுமென்பதே அவர்களுடைய பிரதான கவலை. நஞ்சு கலந்த மருந்துகளை உபயோகித்து, அனேகர் ஆயுள் காலம் முழுவதிலும் தங்களைப் பாதிக்கின்ற நோயை விலைக்கு வாங்குகிறார்கள். இயல்பாகவே சொஸ்தம் தரக்கூடிய முறைகளைப் பின் பற்றாததால் அனேக உயிர்கள் நீங்கிப் போகின்றன. இம் மருந்துகளின் அடங்கிய நச்சுப் பொடுர்கள் ஆன்மாவிற்கும் சரீரத்திற்கும், பெருங்கேட்டை உண்டு பண்ணுகின்ற பழக்கங்களையும், போஜனப் பிரியங்களையும் தோன்றச் செய்கின்றன. சரியான மருந்துகள் என்று அழைக்கப்பட்டு பிரபல்யமாக விளங்கும் அனேக போலி மருந்துகளும், டாக்டர்களால் அளிக்கப்படுகிற சில மருந்துகளும், குடிப்பழக்கம், அபினிப் பழக்கம், முதலிய மயக்கந்தரும் பழக்கம் ஏற்படவும் ஓரளவில் அஸ்திபாரமிடுகின்றது. இன்றைய சமுதாயத்திற்கு இப்பழக்கங்கள் பெரும் சாபமாக விளங்குகின்றன. MH 126, 127. மருந்தினால் குணமாக்கும் பொதுவான பழக்கம் சாபமானது. மருந்துகளை உபயோகிக்காமலிருக்கும்மடி கற்றுக் கொள்ளுங்கள். அவற்றின் உபயோகத்தை மிகவும் குறைத்து, ஆரோக்கியத்திற்கு மூலாதாரமான ஏதுக்கள் மீது சார்ந்து கொள்ளுங்கள். அங்ஙனம் செய்யும் போது, கடவுளுடைய வைத்தியர்களின் ஏவலுக்கு இயற்கையான பலன் ஏற்படும். சுத்தமான காற்று, சுத்த ஜலம், நல்ல தேகாப்பியாசம், குற்றமில்லாத ஒரு மனச்சாட்சி ஆகியவை இம் முறையைப் பயிலுவதற்கு அத்தியாவசியம். தேயிலை, காப்பி, இறைச்சி உணவு ஆகியவற்றை தொடர்ந்து உபயோகிப் போர் மருந்துப் பழக்கம் அவசியமென்று உணருவார்கள். ஆயினும் அவர்களில் பெரும் பாலோர் ஆரோக்கிய பிரமாணங்களுக்கு கீழ்ப்படிவார்களானால் ஒரு நெல் எடை மருந்து கூட சாப்பிடாமலே சுகமடையக் கூடும். மருந்துகளை அபூர்வமாகத்தான் உபயோகிக்க வேண்டும். CH 251.CCh 622.3