Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

சபைகளுக்கு ஆலோசனை

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First
    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents

    மது மனிதனை அடிமைப் படுத்துகிறது

    வெறியுடைய சாராயத்தில் நாட்டங்கொள்ளும் போது, தெய்வ சாயலில் படைக்கப்பட்ட மனிதன் தன்னை மிருகத்தை விடவும் அதிகமாக ஈனமடையச் செய்கின்ற பாத்திரத்தை தன் இச்சையாகவே தன் உதடுகளில் வைக்கின்றான். புத்தியானது திமிர் அடைந்து, மூளைச் சக்தி மழுங்கி, மிருக இச்சைகள் அவனிலே கிளர்ந்தெழும்புகின்றன. அப்பொழுது மிகவும் கேவலமான தன்மையுடைய குற்றங்களைப் புரிகின்றான். 3T 561.CCh 617.1

    மதுவினால் மயங்கின மனிதர் வெறியூட்டும் மதுவை உருசிப்பார்த்திராத நிலையில் தாங்களே கண்டு அகோர பயங்கரமடையும் காரியங்களை செய்யுமாறு வழி நடத்தப் படுகின்றனர். மதுவாகிய நஞ்சின் செல்வாக்கிற்குட்படும் பொழுது சத்தான் அவர்களை கட்டுப்படுத்துகின்றான். அவன் அவர்களை ஆளுகின்றான். அவர்கள் அவனுடனே ஒத்துழைக்கின்றனர். Te 24.CCh 617.2

    மதுவிற்காக தன் ஆத்துமாவை விற்றுப்போடுவதற்கு மனிதரைச் சாத்தான் இசையச் செய்து, அவ்வாறு கிரியை நடப்பிக்கின்றான். சரீரத்தையும், மனதையும், ஆத்துமத்தையும் தன் ஆளுகையில் வைத்துக்கொள்கிறான். அப்பொழுது மதி மயக்கத்தின் மூலம் கிரியை செய்வது மனிதனல்ல, சாத்தானே. குடிகாரன், மரணம் தங்களைப் பிரிக்குமளவும் நேசிக்கவும், காப்பாற்றவும் வாக்கு கொடுத்திருக்கும் தன்னுடைய மனைவியை அடித்து வீழ்த்துவதற்கு கையை ஓங்குகின்ற போது, அது சாத்தானுடைய குரூர குணத்தின் வெளிப்பாடேயாகும். குடிகாரனின் செயல்கள் சாத்தானுடைய பலாத்கார செய்கையின் வெளிப்பாடே. MH 114.CCh 617.3

    மது உபயோகிக்கும் மனிதர் தங்களை சாத்தானின் அடிமைகளாக்குகின்றனர். புகை வண்டிகள், கப்பல்கள், விக்கிரகாரதனையான கேளிக்கைகளுக்கு திரண்டு செல்லும் ஜனத் திரளையுடைய கார்கள், படகுகளை இயக்கும் பொறுப்புடையவர்களா யிருக்கிறவர்களை சாத்தான் சோதித்து, அவர்களுடைய மாறுபட்ட போஜனப் பிரியத்தை இவ்வாறு செய்ய ஏவுகின்றான். இப்படியாக அவர்கள் கடவுளையும் அவருடைய பிரமாணங்களையும் மறுக்கிறார்கள். தாங்கள் செய்யப் போவதின்னதென்பதை அறியாதிருக்கிறார்கள். போக்கு வரத்துக்கு தவறான அடையாளங்களைக் காண்பிக்கிறார்கள். வாகனங்களும் ஒன்றோடொன்று மோதுகின்றன. அப்பொழுது பயங்கரமான விபத்துகள் ஏற்பட்டு, மரணங்கள் நேருகின்றன. இவ்வாறு குறிப்பிடத்தகுந்த பிரகாரமாக காரியங்கள் நடைபெறும் நிலை தொடர்ந்து அதிகரிக்கும். குடிகாரனின் சீர்கெட்ட இயற்கைத் தன்மை அவனுடைய சந்ததிக்கு அளிக்கப்பட்டு வரப்போகும் தலைமுறைகளும் பாதிக்கப்படுகின்றன. Te; 34, 38. CCh 618.1

    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents